அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) - தமிழ் சேனல்
Статистикаஅஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பாஷுஐப் (حفظه الله) அவர்களின் ஃபத்வாக்கள், பாடங்கள் மற்றும் பயனுள்ள தகவல்கள். https://chat.whatsapp.com/LdBqZQ6EynY0ypPPtIk08G?mode=ac_t ➖➖➖➖➖➖➖➖➖➖➖
- Последний пост
- 8 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 16
- 1/48двое суток
- 18
- 1/72трое суток
- 19
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: ஸூரத்துல் இஹ்க்லாஸை தொடர்ந்து மூன்று முறை ஓதும்போது, ஒவ்வொரு முறையும் ஸூராவை ஆரம்பிப்பதற்கு முன் பஸ்மலாஹ் கூற வேண்டுமா? அல்லது முதல் முறை மட்டும் கூறினால் போதுமா? 📖 பதில்: ஆம். ஒவ்வொரு முறையும் ஸூராவை ஓதும்போது பஸ்மலாஹ் கூற வேண்டும். குறிப்பு: “பஸ்மலாஹ்” என்பது بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ என்பதைக் குறிக்கும். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9157 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #basmalah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: மக்கள் ஒருவரை நல்லவராகச் சாட்சியமளித்து, அவரைப் பற்றி நன்மையாகப் பேசும் நிலையில், அவர் கழிப்பறையில் மரணமடைந்தால், அது அவருக்கு மோசமான முடிவு (சூஉல் காதிமா) ஏற்பட்டதற்கான அடையாளமாகக் கருதப்படுமா? அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக. 📖 பதில்: இல்லை. இது மோசமான முடிவின் (சூஉல் காதிமா) அடையாளம் அல்ல. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9147 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #bad_ending ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: வெள்ளிக்கிழமை தொழுகையில் ஸூரத்துல் அஃலா மற்றும் ஸூரத்துல் ஃகாஷியஹ் ஆகியவற்றை எப்போதும் ஓதாமல் விடுவதின் சட்டம் என்ன? 📖 பதில்: அவர் விரும்பத்தக்க சுன்னத்தை விட்டுவிடுபவராக ஆகிறார். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9110 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #abandoning_sunnah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: ஒருவரின் மீது அதிகமான கடன்கள் இருக்க, அவர் மரணித்துவிட்டார். கடன் கொடுத்தவர்கள், "இறந்தவரை நாங்கள் மன்னிக்கிறோம்; அந்தக் கடனை அவரது பிள்ளைகளின் பொறுப்பில் மாற்றுகிறோம்" என்று கூறுகின்றனர். இவ்வாறு செய்தால், இறந்தவரின் பொறுப்பு நீங்கிவிடுமா? 📖 பதில்: ஆம். இவ்வாறு செய்தால், இறந்தவரின் பொறுப்பு நீங்கிவிடும். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9108 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #DebtAfterDeath ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: தொழுகையை விட்டுவிடும் ஒருவருடன் வேலை செய்வது அனுமதிக்கப்பட்டதா? 📖 பதில்: அறிவுரை என்னவென்றால், அவருடன் வேலை செய்யாதீர்கள். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9108 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #abandoning_prayer ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
без подписи
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: உறவினர்களுக்குள் (சொந்தங்களில்) திருமணம் செய்துகொள்வதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைகள் அல்லது மரபணு நோய்கள் ஏற்படும் என்று சிலர் கூறுகிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? உதாரணமாக, ஒருவர் தனது பெரியப்பா அல்லது சித்தப்பாவின் மகளை (அதாவது தனது சகோதரப் பெண்ணை) திருமணம் செய்துகொண்டால், அவர்களுடைய குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர். 📖 பதில்: இந்தக் கூற்று தவறானது. நபி ﷺ அவர்கள் தமது மகள் ஃபாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை, அவரது பெரியப்பாவின் மகனான அலி இப்னு அபீ தாலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கவில்லைவா? அலி இப்னு அபீ தாலிப் அவர்கள், நபி ﷺ அவர்களின் பெரியப்பாவான அபூ தாலிப் அவர்களின் மகன் ஆவார். ஆகவே, அலி இப்னு அபீ தாலிப் அவர்கள் ஃபாத்திமா (ரழி) அவர்களுக்கு நெருங்கிய உறவினரே. எனவே, இது இரத்த உறவுக்குள் நடைபெற்ற திருமணமாகும். உறவினர்களுக்குள் திருமணம் செய்வது குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும் என்ற இந்தக் கூற்று உண்மையாக இருந்திருந்தால், நபி ﷺ அவர்கள் தமது மகளைத் தமது பெரியப்பாவின் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து அவருக்குத் தீங்கு விளைவித்திருக்க மாட்டார்கள். மேலும், அல்லாஹ் ﷻ ஒரு தம்பதியினரை உடல்நலக் குறைபாடு அல்லது பிறவிக் கோளாறு கொண்ட குழந்தையின் மூலம் சோதிப்பது, கணவன்-மனைவி இரத்த உறவினர்களாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் நிகழ்வதில்லை. இரத்த உறவு எதுவும் இல்லாத ஏராளமான தம்பதிகளிடமும், அல்லாஹ் ﷻ நோய்கள் அல்லது பிறவிக் கோளாறுகள் கொண்ட குழந்தைகளின் மூலம் சோதிப்பதை நாம் காண்கிறோம். அப்படியானால், இரத்த உறவு இல்லாத தம்பதிகளுக்கு நோயுற்ற குழந்தைகள் பிறப்பதே இல்லையா? அத்தகைய நிகழ்வுகள் எதுவுமே இல்லையா? உறவினர்களுக்குள் திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் நோய்களும் பிறவிக் கோளாறுகளும் ஏற்படுகின்றனவா? இவ்வாறான கருத்து சரியானதல்ல. அல்லாஹ்வே மிக அறிந்தவன். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaibtamil/95 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #marrying_cousins ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: தொழுகையில் இருப்பவர் தும்மினால், அவர் ("அல்ஹம்துலில்லாஹ்" என்று) அல்லாஹ்வைப் புகழலாமா? 📖 பதில்: ஆம், அது அவருக்கு அனுமதிக்கப்பட்டதாகும். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9078 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #sneezing ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: சாய்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ உணவு உண்பதற்கான மார்க்கத் தீர்ப்பு என்ன? அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் அளிக்கட்டும். 📖 பதில்: அதைத் தடை செய்யும் எந்த ஆதாரமும் இல்லை. எனினும், அது சிறந்த முறைக்கு மாறானதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள்: "நான் சாய்ந்துகொண்டு உண்பதில்லை." என்று கூறினார்கள். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/4423 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #eating_leaning ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித் பற்றி நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள்? 📖 பதில்: அவர் “இக்வானி, குத்பி”. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/4423 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #salih_munajjid ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: தாஸூஆ மற்றும் ஆஷூரா நோன்புகளை கழா (கடமையாக மீதமுள்ள) நோன்பின் நிய்யத்துடன் நோற்கலாமா? 📖 பதில்: ஆஷூரா நாளை அந்த நோன்பிற்கான நிய்யத்துடன் மட்டுமே நோற்க வேண்டும். ஆனால் தாஸூஆ நாளை கழா நோன்பின் நிய்யத்துடன் நோற்பதில் பிரச்சினையில்லை. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/6906 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #fasting_muharram ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: ஒரு தாய் தனது பிள்ளைகளின் சார்பாக உழ்ஹிய்யா கொடுக்கலாமா? வீட்டுச் செலவுகளை பிள்ளைகளே மேற்கொள்கிறார்கள். ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பாளராக தாயே இருக்கிறார். 📖 பதில்: ஆம், அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9039 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #dul_hijjah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: எங்கள் ஷெய்க் அவர்களே, அல்லாஹ் உங்களை பாதுகாத்து பரக்கத் அளிக்கட்டும். உழ்ஹிய்யா கொடுக்க நினைப்பவருக்கு முடி மற்றும் நகங்களை எடுப்பதற்கான தடை எத்தனை நாள் வரை தொடரும்? 📖 பதில்: அவர் தனது உழ்ஹிய்யாவை அறுக்கும் வரை. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9036 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #dul_hijjah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: இந்த துல்-ஹிஜ்ஜா பத்து நாட்களில் வெள்ளிக்கிழமை மட்டும் தனியாக நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதா? 📖 பதில்: அதற்கு முன் ஒரு நாள் அல்லது அதற்கு பின் ஒரு நாள் சேர்த்து நோற்காமல், வெள்ளிக்கிழமை மட்டும் தனியாக நோற்பதற்கு அனுமதியில்லை. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9036 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #dul_hijjah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் துல் ஹிஜ்ஜாவின் பத்து நாட்களிலும் நோன்பு நோற்றதாக உறுதியாக வந்துள்ளதா? 📖 பதில்: அது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஒரு விஷயம் அறிவிக்கப்படவில்லை என்பதனால், அது நடந்ததே இல்லை என்பதை குறிக்காது. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9034 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #dul_hijjah •┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: துல்-ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் நோன்பு நோற்பது நல்ல அமல்களில் ஒன்றாகும். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் துல்-ஹிஜ்ஜாவின் ஒன்பது நாட்களையும் நோன்பு நோற்றதாக உறுதியாக வந்துள்ளதா? 📖 பதில்: அது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இந்த நாட்களில் நோன்பு நோற்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதும் பரிந்துரைக்கப்பட்டதும் ஆகும்; ஏனெனில் அது நல்ல அமல்களில் ஒன்றாகும். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9036 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #dul_hijjah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: ஷெய்க் அவர்களே, அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் அளிக்கட்டும். ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கிறார். ஆனால், நோக்கமின்றி தெரியாமல் தனது அக்குள் முடியை பிடுங்கிவிட்டார். அவரது செயல் குறித்து என்ன தீர்ப்பு? 📖 பதில்: அது நோக்கமின்றி நடந்திருந்தால், அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9034 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #dul_hijjah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: துல் ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களின் சிறப்பு, அதன் இரவுகளையும் உள்ளடக்குமா? 📖 பதில்: ஆம், இரவுகளையும் உள்ளடக்கும். https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/5894 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #dul_hijjah ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: மரணித்தவரின் தலையை, அந்தரங்கப் பகுதியின் முடியை மற்றும் மீசையை சவரம் செய்வது அனுமதிக்கப்பட்டதா? 📖 பதில்: (அவ்வாறு செய்வதற்கு) அனுமதியில்லை. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9007 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #rulingondead ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: மரண நேரத்தில் ஒருவரை கிப்லா திசை நோக்கித் திருப்புவது ஸுன்னத்திலுள்ளதா? 📖 பதில்: இதுகுறித்து ஸலஃப்களிடமிருந்து சில ஆதாரங்கள் வந்துள்ளன. ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடமிருந்து நேரடியாக உறுதிப்படுத்தப்பட்ட எந்த ஹதீஸும் இல்லை. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9007 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #rulingondead ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
•┈┈•◈◉❒﷽❒◉◈•┈┈• அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹஸன் பின் முஹம்மத் பா ஷுஐப் (حفظه الله) அவர்களிடம் கேட்கப்பட்டது: 📝 கேள்வி: பூச்சிகளை கொல்வதற்காக, மின்சார அதிர்ச்சியால் பூச்சிகளை கொல்லும் கருவியைப் பயன்படுத்தலாமா? மேலும், அதை விற்பனை செய்வது அனுமதிக்கப்பட்டதா? அல்லாஹ் உங்களுக்கு நன்மை வழங்குவானாக. 📖 பதில்: ஆம், அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் மின்சார அதிர்ச்சியால் கொல்வது, நெருப்பால் எரிப்பதாகக் கருதப்படாது. https://t.me/Bashuaibtamil https://t.me/Bashuaib/9007 https://whatsapp.com/channel/0029VbBVYA8Jpe8bqc69OH3x #electric_bat ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍️ தமிழாக்கம்: அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)