tgindex
Biology with Dr Thilshan

Biology with Dr Thilshan

Статистика

📖 Learn Biology with Dr Thilshan 👨‍🏫 Follow the Biology With Dr. Thilshan channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaftLSg1dAvyXuaI8q0q Whatsapp: +94769002515

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
4
Всего постов
23
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
3 201
+4 за 4 дн.
Сутки
+3
+0,09%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 561
23 постов
Вовлечённость
48,8%
к подписчикам
Постов в день
0,6
всего 23
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
309
1/48двое суток
354
1/72трое суток
381

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • без подписи

  • ஒரு விசயம் சொல்றன்...👏 உங்கட வயசுக்கு Advice பண்ணினா கசக்கும் தான்..😑. But நீங்களா எடுக்குற சில முடிவுகள், உங்கட வாழ்க்கையையே கசப்பாக்குது எங்குறதால தான், உங்களுக்கு கசப்பா இருந்தாலும் பரவால்ல, நீங்க எங்களுக்கு திட்டித் தீர்த்தாலும் பரவால்லன்னு நாங்க Advice பண்றம்.🙄 சிலர் கேட்குறிங்க, சிலர் தலைக்கணமா நடந்துக்கிறிங்க...😔 Exam க்கு ஒரு வருசம் இருக்குறப்பவே, இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு, படிக்க Start பண்ணுங்க, shortnotes எல்லாம் எடுத்து வைங்கன்னு சொன்னன். 👆 Biology க்கு எதுக்கு sir shortnotes என்று சிலர் எளக்காரமா பேசினிங்க. சரி unitwise ஆ paper ஆச்சும் செய்யட்டுமேன்னு, 2019 ல இருந்து 2025 வரையான Paper கள பகுத்து ஆராஞ்சி, ஒவ்வொரு unitக்கும் paper செஞ்சி free யாவே எல்லாருக்கும் தந்தன்.😇 Free யா தந்ததால உங்கள்ல சிலர் அத தட்டிக் கழிச்சிங்க. Exam க்கு ஆறு மாசம் இருக்குறப்பவே, படிங்க தங்கங்கள், கடசி வரைக்கும் வச்சிட்டிருக்காம இப்பவே Pastpaper செய்ய ஆரம்பிங்கன்னு சொன்னன், கேட்கவே இல்ல...😏 நாள் இருக்குத் தானே என்று சொல்லி அலட்சியம் செஞ்சிங்க. அப்புறம் Exam க்கு மூனு மாசம் இருக்குறப்ப, உங்கள எப்படியாவது படிக்க வைக்கணும்னு மெனக்கட்டு Daily நானும் கண் முழிச்சி, Daily Tasks போட்டன். அப்பவும் இத செஞ்சா exam pass பண்ணலாமா சேர்னு சிலர் நக்கல் பண்ணிங்க.😉 அடிக்கடி Expected Questions தாங்கன்னு கேட்டு சங்கடப்படுத்தினிங்க, Expected Questionகளுக்கு பின்னாடி போய் ஏமாறாதிங்க, அதெல்லாம் மாயை, Essay க்கு வெறும் 30 Marks தான், But MCQ and SEQ perfect ஆ செஞ்சிங்கன்னா 70 marks கிடைக்கும், Essay ல ஒரு 15 Marks எடுத்தாலும் A எடுத்துடலாம்னு சொன்னன்.😇 அப்பவும் நான் சொன்னத கணக்கெடுக்கல்ல, Essay, Essay ன்னு தான் அலஞ்சிங்க.😑 எனக்கு Essay predict பண்ண தெரியாதுன்னு சிலர் சொன்னிங்க. எப்படியாவது உங்கள படிக்க வைக்கணும்னு ஒரே காரணத்துக்காக, எனக்கு விருப்பமேயில்லாம நானே ஒரு Essay Prediction போட்டன். 😤 4,5 essay தலைப்ப மட்டும் தந்து, கடசில உங்கள தலைல கைவைக்க வச்சிடக் கூடாது எங்குறதுக்காக, வர சாத்தியமிருக்குற எல்லா தலைப்பையும் வேணும்னே தந்தன். 😇 So உங்கட படிப்பு 4,5 தலைப்புக்குள்ள மட்டுப்படுத்தப்படாம, நெறய தலைப்ப cover பண்ணும், எனவே mcq, seq, essay எல்லாத்தையும் cover பண்ணிடுவிங்கன்னு நெனச்சன். அப்பவும் என்ன சேர் Prediction ல இவ்வளவு தலைப்புன்னு தூக்கிப் போட்டிங்க.🥴 இப்ப exam நடந்து முடிஞ்சிருக்கு. இப்பயாச்சும் சிலவேளை சிலருக்கு விளங்கி இருக்கலாம், ஏன் சேர் நமக்கு இவ்வளவு Advice ஐயும் பண்ணினார் என்டு.😑 சிலருக்கு இப்ப கூட நான் சொன்னதுகள் ஏன்னு இன்னும் விளங்காமயும் இருக்கலாம்😉 பல students, silent ஆவே, நான் சொன்ன advice எல்லாத்தையுமே காது தாழ்த்திக் கேட்டாங்க. அதுகள வாழ்க்கைலயும் கடைபிடிச்சாங்க.💪 இப்ப அவங்க எல்லாருமே நிம்மதிப் பெருமூச்சு விடுறாங்க.🥰 போனது போகட்டும், இனி இதுகளப் பத்தி யோசிச்சி பிரயோசனம் இல்ல.🙃 இருக்குற பாடங்கள்ல நல்லா கவனத்த செலுத்துங்க. அத நல்லபடியா செஞ்சி முடிங்க.👍 Exam எல்லாம் முடியட்டும், என்ன செய்றன்னு plan பண்ணலாம்.🥰

  • 10 авг.1 173312

    *Biology Structure, Essay பரீட்சை தொடர்பாக...* * ✍️ வினாத்தாள் தரப்பட முன்னர், உங்களுக்கு விடைத்தாள்கள் தரப்படின், அவற்றில் உங்கள் சுட்டெண்ணை ஆர்மபத்திலேயே எழுதி வைத்து விடுங்கள். * 📖 விடை எழுத ஆரம்பிக்குமுன் வினாத்தாளிலுள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படியுங்கள் * 🔢 Structure செய்யும் போது, தரப்பட்ட ஒழுங்கில் விடையளித்துக் கொண்டு செல்லுங்கள். * ❓ விடை தெரியாத வினாக்கள் இருப்பின், அதற்கான விடையை யோசிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்காமல் வினாவின் முன்னால் பென்சிலால் ஒரு கேள்வி அடையாளத்தை இட்டுவிட்டு, அடுத்த கேள்விக்குத் துரிதமாகச் செல்லுங்கள். * 📝 தரப்பட்ட கோட்டில் விடை எழுதுங்கள். அதற்கு மேலதிகமாக எழுதுவதை இயலுமானவரை தவிர்ந்து கொள்ளுங்கள். * ✒️ தெளிவான கையெழுத்தில் உங்களது விடைகளை எழுதுங்கள். கூட்டெழுத்துகளில் எழுத வேண்டாம். * 🎯 கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் விடை எழுதுங்கள். மேலதிக விடைகளை எழுத வேண்டாம். அவ்வாறு எழுதும் மேலதிக விடைகளுக்கு, அது சரியாயிருப்பினும் கூட மறை புள்ளி வழங்கப்படும். (உதாரணம் இரண்டு கூறுகளைக் கேட்டால், இரண்டினை மாத்திரம் எழுதுங்கள், மூன்றாவதை எழுத வேண்டாம்) * 🚫 தவறான விடை எழுதிவிட்டால், அதனை Tippex கொண்டோ, Blade கொண்டோ திருத்துவதையும், மையடிப்பதையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். தவறான விடையை ஒரு கோட்டினால் வெட்டி விட்டு, அதற்கு மேலே விடையை எழுதுங்கள். * ⏱️ நேரத்தை அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு Structure இற்கு நீங்கள் 15 நிமிடங்களுக்கு மேல் செலவாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். * 📚 Essay இற்கு விடை அளிக்க முன்னர், 6 - 10 வரையான அனைத்து Essay களையும் ஒரு முறை வாசியுங்கள். வாசித்தவற்றுள் மிக இலகுவாய்ச் செய்யக் கூடிய essay இற்கு முன்னால் இலக்கம் 01 இனை இடுங்கள். அதைவிடச் சற்றுக் கடினமானதற்கு 02 இனை இடுங்கள். இவ்வாறு உங்களால் செய்யமுடியுமான முதல் 04 வினாக்களுக்கும் இலக்கமிடுங்கள். * 🥇 நீங்கள் முதலாவது இலக்கமிட்ட கேள்வியை முதலில் செய்யுங்கள். இரண்டாவதை இரண்டாவதாய்ச் செய்யுங்கள். வினாத்தாளில் தரப்பட்ட ஒழுங்கில் செய்ய வேண்டிய எந்த அவசியமுமில்லை. * 📄 ஒவ்வொரு வினாவிற்குமான விடையையும் ஒவ்வொரு புதுப்பக்கத்தில் ஆரம்பியுங்கள். இடைவெளி இருக்கிறது என்பதற்காக, முந்தைய வினாவின் கீழ் புதிய வினாவிற்கான விடையை எழுத வேண்டாம். * ✍️ தெளிவான கையெழுத்தில், நன்கு இடைவெளி விட்டு விடைகளை எழுதுங்கள். நெருக்கமாகவும், மிகச் சிறியதாகவும், கூட்டெழுத்திலும் எழுத வேண்டாம். * ⏱️ நேரத்தை அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு Essay இற்கு நீங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் செலவாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். * 🆔 ஒவ்வொரு புதிய தாளிலும் மறக்காமல் உங்களது சுட்டெண்ணை எழுதுங்கள். * 🔍 விடைகள் அனைத்தையும் எழுதி முடிந்த பின்னர் நேரம் இருந்தால், Structure இல் கேள்வி அடையாளமிட்ட வினாக்களைப் பாருங்கள். இறுதியாக எழுதிய Essay வினாக்களின் விடைகளையும் பாருங்கள். 💪 Part I இனை சிறப்பாக முடித்த உங்களுக்கு நிச்சயமாக Part II மிகவும் இலகுவாயிருக்கும். 🌟 *வாழ்த்துக்கள்!*

  • 9 авг.1 16035

    Best wishes guys!🥰 My blessings, prayers and wishes will be with you all! 😍 Show your colours with confident!🤩

  • 9 авг.1 12313

    без подписи

  • 9 авг.1 143203

    Hey 26 Guys! 👋 பரீட்சைக்குத் தயாராகும் நீங்கள் இன்றும் நாளையும் செய்யவேண்டியவை... 📚✨ (Dr Thilshan Nizam 0769002515) * 😴 நேரகாலத்தோடு தூங்குங்கள், 12 மணி தாண்டியும் விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். காலையில் நேரகாலத்தோடு எழுவதற்குத் திட்டமிடுங்கள் * 🎫 பரீட்சைக்குக் கொண்டு செல்லத் தேவையான பொருட்களை இன்று தூங்க முன்பே தயார் செய்து வையுங்கள். குறிப்பாக Admission Card, அடையாள அட்டை, எழுதுகருவிகள் * 🖊️ குறைந்தது மூன்று பேனைகளையாவது கொண்டு செல்லுங்கள். மறக்காமல் ஒரு பென்சில், ஒரு அழிறப்பர், ஒரு பென்சில் சீவி, ஒரு அடிமட்டம் என்பவற்றையும் தயார்படுத்துங்கள் * 📄 விடை எழுதுவதற்கான paper களையோ, Rough sheet களையோ கொண்டு செல்ல வேண்டாம். அவை அனைத்தும் பரீட்சை மண்டபத்தில் வேண்டியளவு உங்களுக்குத் தரப்படும். * 💧 பரீட்சை மண்டபத்திற்கு கொண்டுசெல்வதற்காக மறக்காமல் தண்ணீர் போத்தலொன்றைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். * 👕 இன்றிரவே நாளை அணிந்து செல்லவிருக்கும் ஆடைகளைத் தயார்படுத்தி, iron செய்து வைத்துவிடுங்கள். * 🍲 இன்றோ, பரீட்சை நடைபெறும் காலங்களிலோ கடைகளில் உணவுகளை வாங்கி உண்பதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். * 🍳 காலை உணவை உண்ணாமல் பரீட்சை மண்டபத்திற்கு செல்ல வேண்டாம். அத்தோடு காலைக்கடமைகளையும் முடித்துக் கொண்டே பரீட்சை மண்டபத்திற்கு செல்லுங்கள். (Dr Thilshan Nizam 0769002515) * ⏰ பரீட்சை ஆரம்பமாகும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னராவது பரீட்சை மண்டபத்திற்குச் செல்லுங்கள். நாளை உங்களது முதலாவது பரிட்சை நாள் என்பதால், உங்களது மண்டப எண் மற்றும் சுட்டெண்ணிற்குரிய மேசை என்பவற்றைத் தேடவேண்டியிருக்கும். எனவே நேரத்தோடு சென்று உரிய இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். * 📵 பரீட்சை மண்டபத்திற்கு கையடக்கத் தொலைபேசி, Smart watch, headsets போன்ற இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டு செல்லாதீர்கள். கண்டுபிடிக்கப்பட்டால் வாழ்க்கையின் பெரும் பகுதியைத் தொலைக்க நேரிடும். * 📚 வீட்டிலிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் மூட்டையாகச் சுமந்து கொண்டு போய் பரீட்சை மண்டபத்தில் படிப்பதை நாளையோடு நிறுத்திவிடுங்கள். தேவையெனின் சில சிறுகுறிப்புகளை மாத்திரம் எடுத்துச் செல்லுங்கள். * ✍️ வினாத்தாள் கிடைக்கும் முன்னரேயே உங்களுக்கான விடைத்தாள்கள் வழங்கப்படும். அதில் ஆரம்பத்திலேயே உங்களது சுட்டெண்ணை எழுதிவிடுங்கள் * 🧐 விடைகளை அவசரமாகத் தெரிவுசெய்யாமல் அல்லது எழுதாமல், முதலில் வினாத்தாளின் அறிவுறுத்தலைக் கவனமாக வாசியுங்கள். பின்னர் வினாவினைக் கவனமாக வாசித்து விளங்கி விடையளியுங்கள். அவசரம் தவறுகளை அதிகரிக்கும். * 🧠 தெரியாத, படிக்காத வினாக்களைக் காண்கிற போது பதற்றப்பட வேண்டாம். அதேபோல அந்த வினாவையே யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். நேரத்தை வீணடிக்காமல் அடுத்த வினாவிற்குச் செல்லுங்கள். இறுதியில் நேரமிருந்தால் விடுபட்ட வினாக்களைப் பார்க்கலாம். * ✅ உரிய நேரத்திற்கு முன்னரேயே விடையளித்து முடிந்தாலும், உரிய நேரம் வரை மண்டபத்திலிருங்கள். உங்கள் விடைகள் சரியா என மீண்டும் பாருங்கள். * 🚶 பரீட்சை முடிந்தவுடன் மண்டபத்திற்கு வெளியிலோ, வீதியிலோ கதைத்துக் கொண்டு நின்று நேரத்தை வீணடிக்காதீர்கள். குறிப்பாக பரீட்சையில் நீங்கள் அளித்த விடைகளைப் பற்றிக் கலந்துரையாடவே வேண்டாம். அவசரமாக வீடு செல்லுங்கள். * 🏠 வீடு சென்ற பின்னர், பரீட்சையின் விடைகளைப் பற்றி யோசிப்பதையோ, அதன் விடைகளைத் தேடுவதையோ முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த பரீட்சைக்குத் தயாராகுங்கள். * 🚫 குறிப்பாக மூன்று பாடங்களுக்கான பரீட்சைகளும் முடியும் வரை mcq விடைகளைச் சரிபார்க்க வேண்டாம். நானும் MCQ விடைகளைத் தர மாட்டேன். பரீட்சைகளைச் சிறப்பாகவும், தைரியமாகவும் செய்யுங்கள். 💪✨ *பயத்தையும், மன உழைச்சலையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். 😌❤️* வாழ்த்துக்கள்! 🌟🎉 Dr Thilshan Nizam 0769002515

  • 7 авг.1 1574

    கல்முனை Brilliant இல் August இல் 2.4 இணைவதற்கு Whatsapp 0769002515

  • 6 авг.1 3381

    2027 Batch இற்கான முதலாவது வாராந்த Task; https://whatsapp.com/channel/0029VbDIn3g6RGJMfBpOAI0N/138

  • 31 июл.2 04324

    *Check your selected course*👇🏻 https://admission.ugc.ac.lk/selection-letter/#/selection-letters Type UGC<space>Index Number and send SMS to 1919 to obtain results through SMS.

  • 31 июл.2 03324

    *2025 உயர்தரப் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள்!👇* https://www.ugc.ac.lk/downloads/admissions/cutoff_2026/COP_2025_2026-ENGLISH_Final.pdf

  • 31 июл.1 90381

    Hey 2027 guys!👏 எங்கட online classes இல் உங்களுக்கு August முதல் *Unit 06 Genetics*& *Unit 07 Molecular Biology* start ஆகுது.😮 அப்போ Unit 05 முடிஞ்சா சேர்ன்னு நீங்க வாயப்பிளக்குறது விளங்குது.🤣 ஆமா தங்கங்களே, ஜூலையோட Unit 05 க்கு வச்சிட்டம் ஒரு end.😉 பெப்ரவரி இல்லன்னா மார்ச்ல syllabus ஐ முடிக்கணும் எங்குறது எங்கட plan.🏋‍♀️🏋‍♂️ தேவயானவங்க இதுவரை நடந்த Classesட Recprdings ஐ எங்ககிட்ட எடுத்துக்கலாம்.👍 *August classes* ல join ஆக விரும்புறவங்க, இப்பவே Admin ஐ கரச்சல் படுத்துங்க😤 0758485007 Class ல சந்திப்பம்...😍

  • 21 июл.2 23269

    ஒடுக்கற்பிரிவு: https://youtu.be/M88tm9XAVAA

  • 21 июл.2 1798

    இழையுருப்பிரிவு : https://youtu.be/bTpZXMrtMk8

  • 21 июл.1 94415

    மனித உடலிலுள்ள என்புகளை முப்பரிமாண (3D) வடிவில் காண பின்வரும் இணையதள பக்கத்தை நாடலாம்... https://www.msdmanuals.com/home/multimedia/3dmodel/skeletal-system

  • 12 июл.2 6541319

    இன்று Free யாக... *Unit 07 DNA Technology* : https://t.me/+zL-_gl_AePYzMTY1 To follow my channel: https://whatsapp.com/channel/0029VaftLSg1dAvyXuaI8q0q

  • 12 июл.2 6961636

    இது வரை நான் வழங்கிய Free Recordings இன் தொகுப்பு: *Unit 02 Part 01* : https://t.me/+43t9-QOxpU5mNDQ9 *Unit 02 Part 02* : https://t.me/+KbuOzvDVPQAwYmVl *Unit 04* : https://t.me/+UvFVCGhcfB8xN2E1 *Unit 05 Immunity & Excretion* : https://t.me/+XCvaCGCNl4Y0NTU1 *Unit 06* : https://t.me/+ULC3xG2dZ1AzNDY1

  • 2026 Batch : *Task 67* *Final Task* 🏆 https://whatsapp.com/channel/0029VbD0EXAAO7R88DBNWz0j/185

  • 9 июл.2 4353

    நேற்று இடம்பெற்ற Applied Biology Part 05 Classes, Nano Technology, Stem Cell Therapy and Human Genome Project! https://youtu.be/t8UyqeHrKDI இதுவரை இடம்பெற்ற Applied Biology வகுப்புகளை இந்த Youtube Course ஊடாகக் காணலாம்... https://youtube.com/playlist?list=PLp09tgW_usJT5hUgRKvUQ1YfhQ5MIl76G&si=kN5osUb0-dp8pYLG