tgindex
Periva Kural

Daily broadcast service of Kanchi Periva Forum

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
5
Всего постов
21
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
2 575
−2 за 3 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
445
21 постов
Вовлечённость
17,3%
к подписчикам
Постов в день
0,7
всего 21
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
259
1/48двое суток
296
1/72трое суток
320

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • ☝️ ஸ்ரீ பெரியவா குரல் - பிட்டுக்கு மண் சுமந்த கதை 🙏பெரியவா சரணம் 🙏

  • без подписи

  • https://youtu.be/z7jyjOEG7SE

  • மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - Generation Gap! சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத் தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள் தங்கியிருந்த சமயம். நான் என் குடும்பத்தாருடன் தரிசனத்துக்குச் சென்றிருந்தேன். பெரியவாளை என் தந்தை நமஸ்கரித்தபோது, "இவர்,ஹூப்ளி ராமஸ்வாமியின் தகப்பனார்" என்று அணுக்கத் தொண்டர் தெரியப்படுத்தினார். (நான் அப்போது ஹூப்ளி ரயில்வே டிவிஷனில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததால், 'ஹூப்ளி ராமஸ்வாமி' என்று ஸ்ரீமடம் பணியாளர்கள் பட்டம் சூட்டியிருந்தார்கள்.!) "உன் பெயர், நாராயணன் தானே?" என்று பெரியவா கேட்டதும், "ஆமாம்" என்றார், என் தந்தை. பின்னர் நான் நமஸ்காரம் செய்தேன் .அப்போது அதே தொண்டர், "சாமிநாதனின் (மகன்) அப்பா" என்று கூறி அறிமுகப்படுத்தினார். வழக்கமான விசாரணைகள்,கேள்வி-பதில்கள், சொந்த ஊர் பற்றிய தகவல்கள்.பத்து நிமிஷமாயிற்று. பெரியவா என்னைப் பார்த்து, " நீதான் பெரிய லேபர் ஆபீஸராச்சே? Generation Gap என்கிறார்களே, அது என்ன?" என்று சற்றுப் புன்முறுவலுடன் கேட்டார்கள். நான் ஏதேதோ சொன்னேன். நான் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்பது எனக்கே புரிந்துதான் இருந்தது. ஒரு வழியாக நான் பேசி முடித்தவுடன், அந்த மகான் சொன்னார், "பழைய காலத்தில் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது - இன்னார் பையன் இவன் என்பார்கள்.பூணூல் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அபிவாதயே என்று தொடங்கி, தங்கள் கோத்ரம் - ஸூத்ரம் - நாமம் எல்லாம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். இப்போ,மாறிடுத்து,பார் - இவர், இன்னாருடைய அப்பா என்று சொல்ற தலைகீழ் நிலை வந்திருக்கு, இதுதான் Generation gap!" என்றார்கள். உடனிருந்த ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களையும் பெரியவாளின் விளக்கம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பெரியவா சரணம்! தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

  • Sri Maha Periva Divya Darshan - Part 24

  • Periva Kural - Dharma Prachaaram series Sanatana Dharma - part 8 Periva saranam! We are pleased to bring to your attention this video - Sanatana Dharma - part 8 -  upanyasam by Maatusree Prema Krishnamurthi (Ram Ram Mami) Link: https://www.youtube.com/watch?v=X_Rmz_Iy0kc Periva Saranam! Compiled by: Periva Kural Channel  | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org

  • https://youtu.be/3Obqf14TXEY

  • ☝️ஶ்ரீ பெரியவா குரல் - ஞானாக்னி 🙏 பெரியவா சரணம் 🙏

  • 5 авг.520121

    без подписи

  • https://youtu.be/eTisT0OOvrk

  • மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - அஹிம்ஸா தர்மம் தேனம்பாக்கத்தில் ஒரு நாள்… பெரியவா தன்னோட ஒத்தை ரூம்லே உட்கார்ந்து ஜபம் பண்ணிண்டிருந்தார். எப்பவும் ஜபம் பண்றபோது கண்ணை மூடிண்டிருப்பார். நாங்க ஜன்னல் வழியா அவரைத் தரிசனம் பண்ணுவோம். அப்படி ஒரு நாள், பெரியவா ஜபம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது, ஒரு பாம்பு மெதுவா ஊர்ந்து போய், அவர் மடியிலே ஏறிப் படுத்துண்டுது. அதைப் பார்த்ததும், நாங்க நடுநடுங்கிப் போயிட்டோம். பெரியவாளை அது ஒண்ணும் பண்ணிவிடக் கூடாதே என்று பயந்தோம். அதிகம் சத்தம் கித்தம் செய்யாமல், ‘பெரியவா, பாம்பு… பாம்பு…’ என்று சொன்னோம். பெரியவா உடனே கண்ணை விழிச்சுப் பார்த்தா. உடுத்தியிருந்த காஷாயத் துணியை அப்படியே பாம்போடு சேர்த்து, தூக்கிப் போட்டுட்டு, கௌபீனத்தோடு வெளியிலே வந்தார். வேற ஆடை கொடுத்தோம். எங்களுக்கு அப்போதுதான் ஆசுவாசமாக இருந்தது. ‘நீங்க இன்னிக்குத்தான் இதைப் பார்க்கறேள். அது இங்கே வர்றதை நான் நாலஞ்சு நாளாவே பாத்துண்டுதான் இருக்கேன்’ என்றார் பெரியவா. எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ‘அடிச்சுடலாமே’ என்று சிலர் சொன்னபோது, ‘கூடாது’ என்று தடுத்துவிட்டார். ‘எந்தப் பிராணிக்கும், எந்த ஜீவராசிக்கும் தீங்கு இழைக்க மாட்டேன்னு, சந்நியாசியாகிறபோது சங்கல்பம் பண்ணியிருக்கேன். அதைக் காப்பாத்த வேண்டாமா நான்?’ அப்படின்னு எங்களை சமாதானம் பண்ணினார். அப்படித்தான், நிறைய நாய்கள் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுண்டிருக்கும். கணக்கே சொல்ல முடியாது. ஏகப்பட்ட நாய்கள். ஒருமுறை, ஒரு பாம்பு படமெடுத்து நிக்கறது. மூணு நாலு நாய்கள் குரைச்சிண்டே அதைச் சுத்தி சுத்தி வருது. பெரியவா முதல்ல பாம்பை பத்திரமா விரட்டிடுன்னார். அது எப்படியோ தப்பிச்சுப் போயிடுத்து. ஆனா, நாய்கள் அட்டகாசம் ஓயவே இல்லே. முனிசிபாலிடியிலே சொல்லி பிடிச்சுண்டு போக ஏற்பாடு பண்ணலாமே என்று சொன்னபோது, தடுத்துவிட்டார் பெரியவா. அந்தப் பாபத்தைச் செய்யக் கூடாதுன்னுட்டார். ‘எச்சில் இலைகளை வெளியே போட்டுடுங்கோ. எல்லாம் அங்கே போயிடும். இங்க அதுகள் சுத்தி வந்து உங்களுக்கு உபத்திரவம் தராது’ன்னு சொல்லிட்டார். பெரியவா வெளியிலே கிளம்பினா, அம்பது அறுபது நாய்களும் அவரோடு கிளம்பிடும். அதுகளுக்குத் தெரியும், யார் இங்கே எஜமானன்னு! எப்பவும் கை- காலை சுத்திகரிக்கிற போது, பூமியில ஒரு சின்னக் குழி தோண்டி, அதுலதான் மண்ணால கை கால் எல்லாம் தேச்சு, வாய் கொப்பளிச்சுத் துப்புவார், பெரியவா. ஒரு நாள், கீழே குனிஞ்சு அந்தக் குழியிலே இருந்து எதையோ கையால எடுத்து மெள்ள தூக்கி வெளியில விட்டார். அது, ஒரு கட்டெறும்பு! எந்தவொரு ஜீவராசிக்கும் ஆபத்து வரக்கூடாது என்று பிரதிக்ஞை செய்து கொண்டிருந்த பெரியவாளின் கருணை மனசுக்கு உதாரணம் அது! பெரியவா சரணம்! தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org

  • Sri Maha Periva Divya Darshan - Part 23

  • பெரியவா குரல் - தர்ம ப்ரசார வைபவம் ஸநாதன தர்மத்தை கடைப்பிடிப்போம் பாகம் 7 பெரியவா சரணம்! காஞ்சி பெரியவா ஃபோரம் வழங்கும்  "தர்ம ப்ரசார வைபவத்தில்" இன்று நாம் காணவிருக்கும் நிகழ்ச்சி -  ஸநாதன தர்மத்தை கடைப்பிடிப்போம் வழங்குபவர்: ராம் ராம் மாமி (ஶ்ரீமதி ப்ரேமா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்) வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=AqrvquuvVXY பெரியவா சரணம் வழங்குவோர்: பெரியவா குரல் குழுமம் | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org

  • https://youtu.be/bgE4uEIS3pA

  • 👆ஶ்ரீ பெரியவா குரல் -  ஸ்ரீ ஸ்துதி 🙏பெரியவா சரணம் 🙏

  • Vyasa Pooja / Guru Poornima - Jul 29, 2026 https://youtu.be/l6rLmiPt8po Here is a video from our archives (Vyaasa Pooja 2020) explaining the importance of Vyaasa Pooja and the duty of every Hindu on this blessed occasion.

  • https://youtu.be/r8fCOwlanLQ

  • Experiences with Sri Maha Periva The Stories PeriyavA Told author:....... Radha Ramamurthi compiler:..... T.S. Kothandarama Sarma source:....... Maha PeriyavaL - Darisana AnubhavangaL vol. 6, pages 173-179 publisher:.... Vanathi Padhippaham (Jun 2008 Edition) Translator.....saidevo —---------------— A divine opportunity of having darshan of PeriyavAL on the day of Tamil New Year came up. We had gone there from Pudukottai, and submitted him the (tiny) flowers of the neem tree along with some tamarind and jaggery. "How do you prepare the neem flower pachchaDi (salad)?" asked PeriyavAL. We spoke about it in a clumsy way. PeriyavAL said: "These three products are not enough. You must add honey and ghee. If you do it in pakvam (proper way), the pachchaDi will be tasty. The salad prepared in this way must be distributed to others; and they would become enchanted towards you! "First, naivedyam (nivedanam--offer) to AmbaaL; and she would be enhanted! Then, to the ahattukkArar (householder, husband); and he would nod his head to whatever his wife says! Then, it must be given to the household servants, and they would do their work without murmur!" Then he ordered to the ukkirANam (kitchen) for preparation of some neem flower salad, bringing it over and distributing to us. "Know what is this for?" A woman replied: "So that all of us would conduct ourselves in accordance with PeriyavAL's Aj~jA/AGYA/Aj~nA (precepts)..." "That is right... (but then) this is Tripurasundari prasAdam. You all should remain always as the bhaktais (women devotees) of AmbaaL." What was in our palms did not seem to be a spoon of neem flower salad, rather as the sea of amRutam (divine nectar). —--------------------- Periva Saranam

  • மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் -  காஞ்சியின் மூன்று 'டை'களும், மூன்று கோடிகளும் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் (தேவராஜன்) கோயில் இருக்கிறது. அதை மலைக்கோயில் என்றுதான் பெரும்பாலானோர் சொல்வார்கள். 'ஹஸ்திகிரி'யில் வாசம் செய்பவர், 'ஹஸ்திகிரி நாதர்' - இப்படி ஒரு பெயர்,வரதருக்கு. வருஷத்தில், ஏறக்குறைய முந்நூறு நாள்கள் உற்சவம் நடைபெறும். அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான்.திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம். காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் ரொம்ப பிரசித்தம். - நடை, வடை, குடை! நடை வரதராஜர், பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண்கொள்ளாக் காட்சி. பல்லக்கு,வாகனம் தூக்குபவர்களுக்கு அவ்வளவு பயிற்சி. யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல, பல்லக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு,பார்த்துப் பார்த்து ரசிக்கத்தக்கதாக இருக்கும். வடை அடுத்தது, காஞ்சிபுரம் மிளகு வடை.,காஞ்சிபுரம் இட்லி - நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு வடை பல நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். குடை காஞ்சிபுரத்தில்தான் கோயில்களுக்கான குடை தயாரிப்பவர்கள் பல பேர் ஆண்டாண்டுக் காலமாக இருந்து வருகிறார்கள். குடையிலும் பல தினுசுகள் வகை. சின்னக் குடையிலிருந்து மிகப் பெரிய, மிகவும் அழகான கை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குடைகள் வரை தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல கோயில்களுக்கு மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் குடைகள்ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 'கோடி'கள் மூன்று 'டை'கள் போலவே மூன்று 'கோடி'கள் காஞ்சிபுரத்தில் இருக்கின்றன. காமாட்சியம்மன் கோயில் விமானத்துக்கு காமகோடி விமானம் என்று பெயர். ஏகாம்பரேஸ்வரர் விமானம், ருத்ரகோடி விமானம்; வரதராஜர் கோயில் விமானம்,புண்யகோடி விமானம்! பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித் துளிகள் தெரிந்திருக்காது. இவ்வளவு நுட்பமான தகவல்களையும் அருளியவர் நம் மஹா பெரியவாள். பெரியவா சரணம்! தொகுப்பு: பெரியவா குரல் | https://t.me/perivakural An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org