tgindex
கதை மாற்றத்தை தரும் (Tamil Story)

கதை மாற்றத்தை தரும் (Tamil Story)

Статистика

ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தையும் சுத்தம் செய்கிற மீன் போல பொதுநலத்திலும் சுயநலம் வேண்டும்...💖🔗🧠 https://t.me/storywillchange Suggestion: 7868072071

Последний пост
10 апр. 2024 г.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 979
+6 за 3 дн.
Сутки
+3
+0,15%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
5 093
20 постов
Вовлечённость
257,4%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 10 апр. 2024 г.20,8 тыс10021

    *நீதிக்கதை* ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான். வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன். வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள். புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல். *நீதி :* அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.

  • 7 апр. 2024 г.18,4 тыс279

    அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது., அது உயிரை உலுக்கும் செய்தி... அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்று விட்டான் என்று.”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள்... கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். உயர்ந்த வலுவான கரடுமுரடான உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு கூறினாள்... _*“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது”*_ என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் சூ' -க்கு வழிந்தது... கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என அய்யுற்றிருந்தார்கள்...(அய்யுறுதல்- சந்தேகம்) சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் கூறவியலா நிம்மதி நிரம்பி வழிந்தது... *ஆம் தோழர்களே...!* *ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும் போது உங்கள் மனம் இலகுவாகிறது...!* *உங்கள் புன்னகை தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது...!!* *கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்...!!!* *மன்னிப்பு என்ற வார்த்தை, பெரிய பெரிய சிக்கல்களையும், விவாதங்களையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு...!!* *மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது, மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது,

  • 5 апр. 2024 г.11,3 тыс296

    வேகமான பரபரப்பான வாழ்க்கை ஒரு அந்தஸ்து அல்லது தகுதி என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. நிதானமான, எளிமையான வாழ்வே உண்மையான தகுதி. நான் மும்பையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு வெளிநாட்டுத் தூதுவர் வீட்டுக்கு மளிகைப் பொருட்களைக் கொண்டு செல்பவனாக இருந்தேன். வாழ்க்கையை நிதானமாகவும் கொண்டாட்டமாகவும் வாழ்கிற மனிதர். அவரது வீட்டின் வரவேற்பறையில் ஒரு அலங்காரம் பொருட்கள் வைக்கிற பெரிய கண்ணாடி அலமாரி இருக்கும். அந்த அலமாரி முழுவதும் உடைந்த பொருட்கள், உடைந்த கண்ணாடிக் குடுவைகள், உடைந்த மரப்பொம்மைகள், உடைந்த கற்கள் என்று ஒழுங்கற்ற பொருட்களால் நிரப்பி இருப்பார். புதிய புதிய உடைந்த பொருட்களையும் அடுக்குவது சேர்ப்பது என்று மிகுந்த ஈடுபாட்டோடு அந்த வேலைகளை செய்வார். அந்த அலமாரி யின் மேலாக ஒரு சிறிய சொற்றொடரை நான் பார்த்தேன், "To be beautifully broken is to be broken before the Lord" அன்று என்னால் அந்த சொற்றொடரின் பொருளைக் கண்டடைய முடியவில்லை. ஆனால் இப்போது உடைந்து போனவற்றிலும் நம்மால் அழகியலைக் கண்டடைய முடியும் என்பதைத் துல்லியமாக உணர முடிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சூளகிரி அருகே பெயர் தெரியாத மலைக்கிராமம் ஒன்றில் இருந்தேன். நாங்கள் ஒரு கணவானின் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வந்து நின்றபோது மதில் சுவருக்குப் பக்கத்தில் ஒரு சக்கர நாற்காலியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பரபரப்பான அந்த மகிழுந்துகளின் வருகை, மனிதர்களின் உரையாடல் என்று எல்லாம் கடந்து அவன் ஒரு ஏகாந்த மனநிலையில் இருந்தான். அவனால் பேசவியலாது, அவனால் நடக்கவியலாது, நான் மெல்ல அவனருகில் போய் நின்று "தம்பி உன் பெயரென்ன?" என்றேன். "பாயாச்சி.....பாயாச்சி" என்று உற்சாகமாக பெருங்குரலில் பேசினான். என் கையில் இருந்த ஆப்பிள் துண்டு ஒன்றை எடுத்து அவனுக்கு ஊட்டினேன். அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சியும், உற்சாகமும் பரவியது. உடனடியாக அவனது அம்மா அங்கு வந்து "பாலாஜி, எனது மூத்த மகன்" என்றார், பாலாஜியின் சக்கர வண்டியை நகர்த்தி அந்த வீட்டின் பெரிய மாமரத்தின் வழியே நடந்தேன். கூடவே இரண்டு சிறுவர்கள் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். ஒரு அரைமணி நேரம் பாலாஜியுடன் நாங்கள் உரையாடினோம். இறுதியில் விடைபெறும் போது "Bye பாலாஜி" என்று உரத்த குரலில் விடை கொடுத்தேன். வாசல் வரை வந்து பாலாஜியின் தாய் திடீரென்று எனது கைகளைப் பிடித்துக் கொண்டார். அவரது கண்கள் ஈரமாகி இருந்தது. "நாங்கள் அவனைப் புறக்கணித்து விட்டோம், நாங்கள் அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்வதில்லை, மூன்று வேளையும் உணவு கொடுப்பதோடு முடித்துக் கொள்வோம், நீண்ட காலத்துக்குப் பிறகு அவனது பெயரைச் சொல்லி விடை பெறுவது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்" என்றபடி என் கைகளை விடாமல் பற்றிக் கொண்டார். நிதானமான வாழ்க்கை என்பது சிலருக்கு வரம், சிலருக்கு சாபம். பாலாஜியின் நிதானமான வாழ்க்கை, அந்தத் தாயின் துயரம். இதன் நடுவே விருந்தினனாகப் போன என்னுடைய இருப்பு என்று யோசித்துப் பார்த்தால் வாழ்வின் முடிச்சுகள் அவிழ்ந்து அதன் போக்கையும், நம்முடைய பரபரப்பான வாழ்வின் பொருளற்ற தன்மையையும் அறிந்து கொள்ள முடியும். பாலாஜியைப் போல உலகமெங்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் ரத்தமும் சதையுமாக யாராவது நம்மிடம் வந்து உரையாட மாட்டார்களா என்று தனிமையில் வாடுகிறார்கள். பேசக்கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் மறுதலித்து நாம்தான் எங்கேயோ ஓடிக்கொண்டே இருக்கிறோம். "எங்கே ஓடுகிறோம்?" என்றொரு கேள்வியை எழுப்பினால் அமைதியாக அதன் விடை மிக எளிமையாக நமக்குக் கிடைத்து விடும்.

  • அந்த நாட்களில் வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவாராம் . கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர முடியாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம். அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அந்த வட்டத்திற்குள் நிற்கும் மனிதன் மன நிலையை யோசித்து பாருங்கள். கூனி குறுகி,  தன் மீதே கழிவிறக்கம் கொண்டு, இப்படி ஒரு வாழ்வு தேவையா என்று எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிடும் இல்லையா?. அப்படிப்பட்ட கடன்பட்டவரை போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று புலவர் ராவணனின் மன நிலையை துல்லியமாக விளக்கவே இந்த மேற்கோள். ஆமாம்,  கடன் தொல்லை மிக கொடிது.... எப்போது நாம் ஒருவரிடம் கை நீட்டி பணமோ பொருளோ யாசித்து விட்டோமோ அன்று முதல் நாம் அவர்களுக்கு அடிமை ஆகி விடுகிறோம். ஒருவரிடம் ஒன்றை யாசித்து விட்டு காத்திருக்கும் தருணம் மிக கொடியது. அன்றுதான் நம்மை சுற்றி இருப்பவர்களிடம் நமக்கான மரியாதை என்ன என்பது தெரியவரும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஆசை தேவையை உருவாக்கும், தேவை கடன் வாங்க வைக்கும், கடன் நிம்மதியை கெடுக்கும். மொத்தத்தில் ஆசையை குறைத்து, இருப்பதை வைத்து வாழ்வதே சிறப்பு... இந்த நாள் இனிய நாள்...

  • https://www.youtube.com/@RJYEntertainment Please subscribe to get more information about Tamil

  • *அளவுக்கு அதிகமாக* *ஆசைப்படாதே*!! *ஆன்மிக நீதிக்கதை* நாம் அனைவருக்குமே ஆசை என்பது இருக்கும். ஆனால், அந்த ஆசைக்கு வரைமுறை. அளவுக்கு அதிகமாக பேராசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடக் கூடாது. இதற்கு சான்று தான் இந்த கதை! காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் ஒருவன் முன்பு ஒரு பூதம் ஒன்று தோன்றியது. "உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,'' என்றது. அவனும் ஆவலுடன் வீட்டிற்கு ஓடினான். சொன்னது போலவே தங்கத்தையும் பார்த்தான். ஆனால், ஆறு கலயங்களில் முழுமையாகவும், ஒன்றில் மட்டும் பாதியும் இருந்தது. அதனை எடுத்துச் செலவழிக்காமல் என்ன இந்த கலயம் மட்டும் பாதியாக இருக்கிறது என்று எண்ணி அதனை நிரப்ப வேண்டும். தன்னிடம் மட்டுமே ஏழு கலயம் அளவிற்கு தங்கம் இருக்க வேண்டும் என நினைத்தான். பேராசை வந்தது அவனுக்கு. உடனே, மனைவி, பெண் குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை வாங்கி கலயத்தில் போட்டான். அது நிரம்பவில்லை. அப்படியே இருந்தது. குடும்பத்தை பட்டினி போட்டு, வாங்குகிற சம்பளத்திற்கெல்லாம் தங்கத்தை வாங்கி உள்ளே போட்டான். மாற்றமில்லை. கடைசியாக மனநிம்மதியை இழந்தான். அவனும், குடும்பத்தாரும் பட்டினி கிடந்ததில் நோய்வாய்ப்பட்டனர். பூதத்தை மனதில் நினைத்தான். அந்த பூதம் அவன் முன் தோன்றியது. இப்படி ஆகி விட்டதே என் நிலை! என்று வருத்தமுற்றான் அந்த இளைஞன். அதற்கு அனந்த பூதம், இளைஞனே! பேராசையில்லாதவர்களுக்கே இது பயன்படும். இதைக் கொண்டு நீயும் உன்னை வளப்படுத்தி, பிறருக்கும் கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஏழு கலயமும் பதினான்காக மாறியிருக்கும். நீயோ ஆசையில் இருப்பதையும் இழக்கப் போகிறாய். இதை எடுத்துப் போய், பேராசையற்ற இன்னொருவனிடம் கொடுக்கப் போகிறேன்,'' என்று சொல்லி மறைந்து விட்டது. கலயங்களும் மறைந்தன. அந்த இளைஞன் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் இழந்தான். கதை சொவல்லும் நீதி:ஆசை அளவுடனே இருக்க வேண்டும். பேராசை ஆகிவிட்டால், இருப்பதையும் இழந்து விடுவோம் புரிகிறதா நண்பர்களே!! (The desire should have a protocol)

  • _*நம்பிக்கை இழந்தவன்...*_ ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன. இரண்டு எறும்புகளும் பசியாக  இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன. நண்பா இப்படி வந்து தண்ணீல விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது என்றது செவ்வெறும்பு. நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வர நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு. நேரமாகி கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்க தான் போறேன்;’ என்றது செவ்வெறும்பு. இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு. இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு. எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், ‘ இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல’ என்று சொல்ல,   இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க போறோம் ’ என்று தன் மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு,  சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது. மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து, கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க.?’ நான் உன்ன சாகடிக்கல நீயா தான் இறந்துட்ட என்ன சொல்லுறீங்க..’ நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போரடுறத விட்டுட்டு தண்ணீல மூழ்கி இறந்துட்ட. ஆனா நீ மட்டும் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்த நிச்சயம்; எதாவது ஒரு வகையில உதவி செஞ்சு காப்பாத்திருப்பேன். கடைசியா ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்கோ வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்’ என்றார் கடவுள்.

  • _*பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!*_ ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார். பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

  • ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: "சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்". “உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன். “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" "ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்”. 'முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு' என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது. “சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப் போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான். “இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. “என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான். “ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை.  நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காக தான்.” “எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்”. அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான். இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான். புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிசினஸ்  பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான். அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார். “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்” என்று ரூல்ஸ் பேசினான். அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்? ஒரு செகண்ட் யோசிங்களேன் இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது. இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!). இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை. ஐம்புலன்களை நமக்கு கொடுத்து, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய் கொண்டிருக்கும். இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

  • *இன்றைய சிந்தனை: சின்ன சின்னதாக...* அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை. யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. “யானையின் எடையை எப்படி அறிவது?” என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், “நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்” என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர். அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை!” என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர். எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான். எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

  • *‘ஆசைகளை விட்டவனே ஆண்டவனைத் தொட்டவன்!’* அவர்கள் இரண்டு பேரும் தினமும் அந்த ஆலயத்துக்கு வருவார்கள். அங்கே உள்ள மண்டபத்தில் உட்காருவார்கள். பல தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். ‘‘பட்டணத்துலே படிச்சிட்டிருக்கிற என் பையனுக்கு இதுவரை பத்துக்கடிதம் போட்டுட்டேன். பதிலே வரலை... எப்படி இருக்கானோ தெரியலே!’’ ‘‘இந்தக் காலத்துப் பசங்க அப்படித்தான். தேவை இருந்தா போடுவாங்க.இல்லேன்னா போட மாட்டாங்க!’’ ‘‘அப்படியா சொல்றீங்க?’’ ‘‘இப்ப வேணும்னா ஒரு பந்தயம் வெச்சுக்குவோமா? உங்க பையனுக்குநான் ஒரு கடிதம் போடுறேன். அதுக்கு உடனே பதில் வரவழைக்கிறேன். என்ன சொல்றீங்க?’’ ‘‘அது எப்படி வரும்? முடியாதுங்க. அவன் எழுத மாட்டான்; சோம்பேறி!’’ ‘‘எழுத வெக்கிறேன்... என்ன சொல்றீங்க?’’ ‘‘அப்படி செஞ்சுட்டீங்கன்னா உங்களுக்கு நூறு ரூபா கொடுத்துடறேன்!’’.இப்படி ஒரு பந்தயத்தோடு அவர்கள் பிரிந்தார்கள். அன்றைக்கே இவர் அந்தப் பையனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அடுத்த மூன்றாவது நாள் அவனிடமிருந்து ஒரு பதில் கடிதம் பறந்து வந்தது! அதை எடுத்துக்கொண்டு வந்தார். ‘‘இதோ பாருங்கள்... உங்கள் மகன் எழுதிய கடிதம்!’’ அந்த அப்பாவுக்கு ஆச்சரியம். தன் கண்களையே நம்ப முடியவில்லை.‘‘எப்படி இது...?’’ ‘‘எழுத வேண்டிய முறையில் எழுதினேன். பதில் வந்தது!’’ ‘‘என்ன எழுதினீர்கள்?’’ ‘‘அதுவா... ‘தம்பி! நீ நல்லா படிக்கிறதா உங்கப்பா சொல்றார். பதில் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையாம். பரவாயில்லை... இந்தக்கடிதத்துக்குக் கூட நீ பதில் எழுத வேண்டாம். உன் அப்பா சொல்படி நான் இந்தக் கடிதத்துடன் உன் செலவுக்காக ஆயிரம் ரூபாய்க்கான மகரயாழ் காசோலை அனுப்பியிருக்கிறேன். பெற்றுக் கொள்ளவும்!’ அப்படினு கடிதம் போட்டேன். உடனே பதில் கடிதம் பறந்து வந்தது. *‘மாமா! உங்க கடிதம் வந்தது. ஆனால் அதில் ‘செக்’ இணைத்து அனுப்ப மறந்து விட்டீர்கள்!’* என்று எழுதி இருக்கிறான். இதோ அந்தக் கடிதம்!’’ _ மகனின் கடிதத்தை அப்பாவிடம் நீட்டினார் இவர். அப்பா யோசிக்க ஆரம்பித்தார். பந்தயப் பணம் நூறு ரூபாயை எடுத்து நீட்டினார். அவர் வாங்க மறுத்தார். ‘‘இதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஓர் உண்மையை உங்களுக்குப்புரிய வைக்கிறதுக்காகத்தான் சும்மா அப்படி பந்தயம் கட்டினேன்!’’ ‘‘என்ன உண்மை அது?’’ ‘‘மனித மனம் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், நாம் இழப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கோயிலுக்குவருகிறோம்!’’ ‘‘என்ன சொல்கிறீர்கள்?’’ ‘‘அதோ பாருங்கள்... கோயில் சுவரில் என்ன எழுதி இருக்கிறது?’’ அவர் பார்த்தார். அங்கே எழுதப்பட்டிருந்த வாசகம்: *‘ஆசைகளை விட்டவனே ஆண்டவனைத் தொட்டவன்!’.* இன்றைய பக்தர்களுக்கு ஆலயங்களை நெருங்கத் தெரிகிறது; ஆண்டவனை நெருங்கத் தெரிவதில்லை! *தென்கச்சி கோ.சுவாமிநாதன்*

  • _*நம்பிக்கை வெற்றி தரும்..!!!*_ நொபுங்கா படை தளபதி தன் படை வீரர்களுடன் எதிரிகளை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். எதிரிகளிடம் அதிக அளவில் படைபலம் இருந்தது. ஆனால் நொபுங்காவிடம் இல்லை. இதை அறிந்திருந்த நொபுங்காவின் படைவீரர்கள் மிகவும் அஞ்சினர். ஆனால் நொபுங்காவிற்கு தன் படைவீரர்களின் வீரம் தெரிந்திருந்ததால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார். ஆகவே அவர் ஒரு ஜென் துறவியை பார்த்து, தன் படை வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று கேட்கச் சென்றார். அதைக் கேட்ட ஜென் துறவி அந்த தளபதியிடம் "நீ படையை நடத்தி செல்லும் வழியில், ஒரு கோயிலுக்குள் சென்று வெளியே வந்து, உன் வீரர்களின் முன் இந்த நாணயத்தை கொண்டு போய் தலை விழுந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்" என்று கூறினார். அதேப்போல் தளபதியும் செய்தார். அப்போது தலையும் விழுந்தது. இதனால் தம் மீது நம்பிக்கை இழந்திருந்த வீரர்கள், தலை விழுந்ததும், நம்பிக்கையுடன் போரில் போரிட்டனர். அவ்வாறு போரிட்டு, அவர்களும் வெற்றிப் பெற்றனர். சிறிது நாட்கள் கழித்து, தளபதியுடன் இருக்கும் வீரன் ஒருவன், "நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்" என்றான். ஆமாம் என்று கூறிய தளபதி, அவனிடம் அந்த நாணயத்தை காண்பித்தார். இக்கதையிலிருந்து, நம்பிக்கை இருந்தால், எத்தகைய போட்டி என்றாலும் வெற்றிப் பெறலாம் என்பது நன்கு வெளிப்படுகிறது...

  • _*உங்களுக்கு தெரியுமா...?*_   அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான். அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே, மந்திரி ஒரு தந்திரம் செய்தார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’ ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி. ‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’ ‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன். அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள். இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான். குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’ அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார். அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான். இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார். ‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’ “அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூர தேவையில்லை, பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலே போதும்”

  • நீதிமான் பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, "இதோ இந்த பத்து அவித்த முட்டைகளையும் உன் மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போடவைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளைக் காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா!'' என்றார்.          தன் மகளிடம் சென்று அதை அப்படியே ஒப்புவித்தார் அவளது தந்தை. தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப்போகிறாள் என்று கவலைப்பட்டார். ஆனால், அவளோ எதிர் புதிர் போட்டாள். தன் தந்தையிடம் வேக வைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, "இதில் உள்ள துவரையை நிலத்தில் விதைத்து, முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாக தயாராக வைக்கும்படி கூறுங்கள்!'' என்றாள்.          அவளுடைய தந்தையும் அவ்வாறே நீதிமானிடம் சென்று சொன்னார். துவரையைப் பார்த்த நீதிமான் அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல் தண்டு ஒன்றைக் கொடுத்து, "இதை ஊறவைத்து காயவைத்து நூறு ஜெகமுள்ள துணி தயாரிக்கச் சொல்!'' என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து, "இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினமும், கதிரும் செய்து தரும்படிக் கூறுங்கள்!'' என்றாள்.       அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட நீதிமான், "உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ, சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ, செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது. இது கடுமையான உத்தரவு!'' என்றார்.         மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாட்டைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றையும், சிட்டுக்குருவி ஒன்றையும் தெரியாமல் எடுத்துச் சென்றாள், அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட  நீதிமான், அவள் மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியே விட, நாய்கள் முயலைத் துரத்தின.          "இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு!'' என்று சிட்டுக்குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப் பட்டார் நீதிமான். அப்போது இருவர் வழக்கு ஒன்றைக் கொண்டு வந்தனர்.        "நாங்கள் இருவரும் அடுத்தடுத்து இரு குதிரைகளை ஓர் இரவில் கட்டி இருந்தோம். இரண்டு குதிரைகளும் அன்றிரவே குட்டிகளை ஈன்றன. அவனுடைய குதிரையின் குட்டி இறந்துவிட்டது. என்னுடைய குட்டியைப் பார்த்து அவனுடைய குதிரைக் குட்டி என்கிறான்!'' என்றான் ஒருவன். அடுத்தவனைக் கேட்டதற்கு அவனும் அவ்வாறே பதில் சொன்னான்.          நீதிமான் இரு குதிரைகளையும் தனித்தனியே கட்டச் சொல்லி, குட்டியை விடச்சொன்னார். குட்டி இரு குதிரைகளிடமும் செல்லாமல் தனியே ஓடிவிட்டது.        அந்தத் தீர்ப்பை அவர் புத்திசாலி சிறுமியிடம் கேட்டார். அந்தச் சிறுமி குட்டியைக் கட்டச் சொல்லி குதிரைகளை அவிழ்த்துவிடும்படி கூறினாள். அவ்வாறே செய்தனர். தாய்க்குதிரை தன் குட்டியைத் தேடிக்கொண்டு ஓடிவந்தது.        நீதிமானின் தலைக்கனம் குறைந்தது. தன்னைவிட அந்தச் சிறுமி புத்திசாலி என்று ஒப்புக்கொண்டார். அவளுக்கு வெகுமதியளித்துப் பாராட்டினார்.      நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

  • ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” “ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை. இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள். “மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை. ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை முளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார். “இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது. எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர். மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார். “மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்” நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?” “மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள். “எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான். “அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர். “அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான். “ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார். நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன். ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

  • ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்" பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன் அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக. பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார். (படித்தால் புல்லரிக்கும்) தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு பக்தர்....தினசரி மடத்திற்கு வரக்கூடியவர். அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த பெரியவா.... "ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக் கேட்கிறார். "ரிடையர் ஆன பிறகு நான் மிகவும் .கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர். "ஏண்டா?" பெரியவா கேட்கிறார். "யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில் கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார். அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான். "உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர். பெரியவா அமைதியாகச் சொன்னார்.... "இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லையா? காலையில் எல்லாருக்கும் முன் எழுந்து,குளித்துவிட்டு ஜெபம் செய்.. அதைப் பார்க்கும் குடும்பத்தினர் உனக்கு பயபக்தியோடு காப்பி கொண்டு வந்து கொடுப்பார்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்.... பேரன்களுக்கு படிப்பு சொல்லிக் கொடு...அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போ.... அதோடு அவர்கள் இதைச் செய்ய வேண்டும்...... அதைச் செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே.... எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.... இல்லையென்றால் எல்லாமே தானாகவே நடக்கும்" வேதனையோடு வந்தவர்க்கு தன்னிடம் உள்ள குறையும் தெரிந்தது..  அடுத்தபடியாக தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார். " நீ மனதைத் தெளிவாக வைத்துக் கொள்... பகவானை நினைத்துக் கொண்டே இரு... இது வேண்டும்.. அது வேண்டும் என்று ஆசைப்படாதே.. நீ வளர்த்த குழந்தைகள் உன்னை நிச்சயமாகக் கவனிப்பார்கள்" என்றார். வயோதிகத்தில் எல்லாருக்கும் வரும் மனவியாதி இது.. ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது... காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறை." பெரியவா உபதேசம் செய்து முடித்தவுடன் அப்பெரியவரின் மகன், அவரை தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டான், வீட்டிற்கு அழைத்துப் போக. பொருள் பொதிந்த புன்னகையோடு மகான், அவரை மகனுடன் அனுப்பி வைத்தார். மனிதநேயத்தோடு எல்லாவற்றையும் பார்க்கிறார் என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணமல்லவா

  • எவ்வளவு மகத்தான மனிதர் வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை, தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர், அந்த முதியவர் பயன்படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார். சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார் முதியவர். வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம் தரச் சொல்ல - வேண்டா வெருப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் அனுமதித்தார் உரிமையாளர்.   இதை பார்த்துக் கொண்டிருந்த, அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், அந்த காட்சிகளை படுமெடுத்து , தனது பத்திரிக்கையில் வெளியிட நினைத்து - "கொடூர நிலக்கிழார், பரிதாப நிலையில் முதியவர் " என்றெல்லாம் தலைப்பு ரெடி செய்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று, நடந்தது குறித்து விளக்கமளித்து, படங்களை காட்டினார்.   படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார். "இவர் யாரென்று தெரியுமா ..?" என செய்தியாளரை கேட்க - "எனக்கு எதுவும் தெரியாது" என்றார் செய்தியாளர்.   இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தா தான் அவர். நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும், இவரைத்தான் பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். பொருளாதாரம் படித்த சிறந்த தொழிற்சங்கவாதி. HMSS தொழிற்சங்கத்தில் அகில இந்திய தலைவராக இருந்தவர். 1948 ல் இவரது தலைமையில்தான் கொல்கத்தாவில் INTUC திறப்பு விழா கண்டது. பல காலம் மத்திய அமைச்சராக இருந்தவர்.    ஆக, பத்திரிக்கையில் செய்தி வந்தது - அவரது வீட்டின் முன்பு அரசு அதிகாரிகளும், VIP வாகனங்களும் வந்து குவிவதை கண்ட வீட்டு உரிமையாளர் மிரண்டு போனார். பிறகுதான் அவருக்கே தெரிந்தது - இருமுறை பிரதமராக இந்த நந்தா தான் இவர் என்று.   நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்த இவரது நிலையையும் - இன்றிருப்போரின் நிலையையும் நினைத்துப் பார்க்கிறேன் ...   சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஓய்வூதியமாக முன்பு தந்த 500 ரூபாயையும் வாங்க மறுத்து விட்டார். "சுதந்திரத்துக்காக போராடினேனே தவிர இந்த  500/- ரூபாய்க்காக அல்ல" என்று கூறிவிட்டார்.   ஆக, "அரசு இல்லத்துக்கு வாருங்கள்" என வந்த அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எவ்வளவோ கெஞ்ச,  "இந்த வயதில் அந்த வசதியெல்லாம் எதற்கு ..?" என மறுத்து விட்டார்.   இதையெல்லாம் கண்ட, அந்த வீட்டின் உரிமையாளர் நந்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இறுதிவரை உண்மையான காந்தியவாதியாக, சாதாரண குடிமகனைப் போல் வாழ்ந்த இவருக்கு 1997 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

  • ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது. மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது. அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக தொடர்ந்தது. தன் பதினெட்டாவது மாதத்தில், நாய் யானையிடம் சென்று கேட்டது. "யானையே, நீ உண்மையிலே கர்ப்பம் தரிதாயா? நீயும் நானும் ஒரே சமயத்தில் தான் கர்பமாநோம், நான் இதோடு மூன்று முறை கருத்தரித்து குட்டிகளை ஈன்றுவிட்டேன். இப்பொழுது அவைகள் வளர்ந்து விட்டன, ஆனால் நீ இன்றுவரையில் கார்பமாகவே இருக்கிறாயே, என்னதான் நடக்கிறது சொல்! என்றது. அதற்கு சற்றும் பதட்டப்படாமல் யானை பதிலளித்தது "தோழியே நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நான் சுமந்துகொண்டிருப்பது நாய்க்குட்டி அல்ல, யானை குட்டியை. நான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஈன்றெடுக்க முடியும். என் குழந்தை விழுவதை உணரும் இந்த பூமி. என் குழந்தை நடந்தால், அதை மனிதர்கள் நின்று பிரமித்து பார்ப்பார்கள். நான் பிரம்மாண்டத்தை சுமக்கிறேன், அதுவே பெருமை எனக்கு " என்றது. நீதி:- உங்களது உழைப்புக்கும், தேடலுக்கும் அங்கீகாரமும், புகழும் கிடைக்கவில்லை என்று காணாமல் போய்விடாதீர்கள். வாழ்க்கையை வாழ்வதை விட, சாதிப்பதுதான் பெருமை. அதனால்....... நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள், " எனக்கென்று ஒரு நேரம் வரும், வானம் வசப்படும். என் சாதனைகள் மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள். நான் சாதிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. " என்று ..

  • *யார் கடவுள்..* மணி இரவு 8... பசி வயிற்றைக் கிள்ளியது... இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை... சமையல்காரியும் வரவில்லை... எனக்கு சமைக்க மூடும் இல்லை.. இது மாதிரி நேரங்களில்... ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு.. இன்று அதற்கும் மூடு இல்லை... வெளியே வீசிய குளிர் காற்று, என்னோடு சற்று உறவாடு, என்று என்னை அழைக்க.... டூ வீலர் ஸ்டார்ட் செய்து பார்த்தேன்... மூன்று நாட்கள் டூவீலரை எடுக்கவில்லை... என் மேல் அதற்கு கோபம் போல... எனது உதை... பயனற்று போனது... ஒரு நல்ல டிபன் சாப்பிட வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்... சின்னதாக ஒரு உரத்த சிந்தனை.... பிறகு... ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...👨🏼‍🦯 இன்று ஏன் எனக்கு  இப்படியெல்லாம்  நடக்க வேண்டும்? வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது? இரவு 8  மணிக்கு ... ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம். சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம். அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும் . எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது . இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா? கொஞ்ச நேரம் நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது.  அருகில் சென்றதும் தான் தெரிந்தது.... அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று.. 4x4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை.... அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது. கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்.... இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது.... என் மனதில் தோன்றியவைகளைத் தான், நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ... உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன். உனக்குள்ளே இவ்வுலகம்... ஆனால்... நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே... *எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா*... என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை. கம்பிக்குள் சிறை  வைக்கப்பட்ட  நீ,யாருக்கு உதவப் போகிறாய்? நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்? சரி...யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும். என்னைப் பற்றி பேசுகிறேன். இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்? இந்தக்  கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன? என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அந்த மதில் சுவரின் மூலையில்.... பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன். அது  துணி மூட்டை அல்ல ஒரு மூதாட்டி. பூச்சி... புழு... (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்... சரமாரியாக  வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள். யாரைப் பெற்ற தாயோ... ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே  அடைக்கலம் வந்து இருக்கிறார் . அவர் ஏதோ  முனகுவது  போல் இருந்தது. உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது. *என்னமா வேணும்?* பணிவுடன் நான். *ஐயா.. சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா* அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது. அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது. இந்த  மழையில்... இந்த இரவில் ... ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன் ) நானே இவ்வளவு  தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது... இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி. *இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க.... தண்ணி பாட்டில் கூட இருக்கு...* நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன். *கிருஷ்ணா  நல்லாருப்பா* என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள். என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள் ...

  • ஒரு மன்னனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இருவருக்கும் சமமான அளவு கல்வி, கலைகள், ஆட்சி செய்யும் முறை என அனைத்தும் கற்று தரப்பட்டது. இருவரும் நன்கு பயிற்சி பெற்றனர்.        மன்னனுக்கு வயதாகி போனது, அடுத்த அரசனை அறிவிக்க வேண்டிய நிலை வந்தது. அதனால் அமைச்சரவையை கூட்டி  சில திட்டங்கள் போடப்பட்டன. அதன்படி இருவருக்கும் பல கட்டங்களாக போட்டிகள் வைக்கப்பட்டது. இருவரும் சமமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இதனால் இரண்டு மகன்களில்  யாரை அடுத்த அரசனாக அறிவிப்பது என மன்னனுக்கு குழப்பமாக இருந்தது.       இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக அரசன் ஒரு ஞானியை பார்க்க போனார்.   அந்த ஞானி அரசனிடம், " நாளை உங்கள் மகன்களை அழைத்து வாருங்கள் " என்று சொன்னார். மறுநாள் இரண்டு பேரும் ஞானியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இருவரையும் வீட்டு திண்ணையில் உட்கார சொல்லிவிட்டு, ஒவ்வொரு ஆளாக போய், பக்கத்தில் இருக்கிற கிணற்றில் குளித்து விட்டு வாருங்கள் என அனுப்பினார்.      முதலில் ஒருவன் குளித்து விட்டு வந்ததும் அந்த  இடத்தை போய் பார்த்து விட்டு வந்தார். பிறகு அடுத்தவனை குளிக்க சொல்லிவிட்டு, அவன் குளித்து முடித்ததும் அவன் குளித்த இடத்தை போய் பார்த்து விட்டு வந்தார்.      பிறகு இருவரையும் மன்னனிடம் கூட்டிட்டு போய், முதலில் குளித்தவனை அழைத்து, "இவனை அடுத்த அரசன் ஆக்குஙகள். இவன் நல்ல முறையில் ஆட்சி செய்வான்" என்றார்.     இவன் தான் அரியணை ஏற தகுதியானவன் என எப்படி கண்டுபிடித்தீர்கள் என அரசன் ஞானியிடம் கேட்க,      "நான் இருவரையும் குளிக்க கிணறுக்கு அனுப்பினேன். முதலில் போனவன் கிணற்றில் நீர் இரைத்து குளித்து விட்டு , அடுத்து வருபவருக்கு பயன்படும் என்று மீண்டும் நீர் இரைத்து வாலியில் வைத்து விட்டு வந்தான்.     ஆனால் இரண்டாவதாக சென்றவன் அவன் மட்டும் குளித்து விட்டு , மீண்டும் தண்ணீர் பிடித்து விட்டு வைக்கவில்லை.  இது அவன் பொது நலன் இல்லாதவன் என்பதை காட்டுகிறது. எனவே முதலாமவன் தான் அரியணை ஏற தகுதியானவன்.      " கிணற்றில் குளித்துவிட்டு தண்ணீர் பிடித்து வைத்தால் அரியணையா..! இது என்ன சிறுபிள்ளைதனமாக இல்லையா..? என்று அரசன்" கேட்க,       " சின்ன சின்ன விஷயங்களில் கூட  எவன் அடுத்தவர் நலனில் அக்கறை உள்ளவனாக இருக்கிறானோ, அவனை அரசனாக்கினால் தான்  நாடும் நாட்டு மக்களும்  நலமாக இருப்பார்கள்" என்றார் ஞானி.    ஞானியை வணங்கி அவர் சொன்னபடியே செய்தான் அரசன்