tgindex

Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

описание

🍱 சமையல் குறிப்புகள் 🥗 பாரம்பரிய சமையல் 🫕 ஆரோக்கிய சமையல் 🍗 சைவம் & அசைவம் 🍔 செய்முறை & குறிப்புகள் 🧆 வீட்டு சமையல் 🧄 மருத்துவ சமையல் 🍳 Fast Food 🍟 Street Food 🍧 Healthy Food & Tips 🫕 @KitchenOLBN

1 530
подписчиков
Охват к подписчикам
180,3%
ERR
Реакции к просмотрам
0,26%
142 на 20 постов
Пересылки к просмотрам
0,25%
138
Постов в день
0,0
всего 20

Где отзываются чаще

доля реакций к просмотрам
  • 16 апр.புளியோதரை புராணம்! - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது!! ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.! எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன் நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது! புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர் போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.! புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்.. ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி! அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.! பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது.. புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு, அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்கடலைப் பருப்புகள்.! நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்.. அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.! மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. சுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு! முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்! அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல.. புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு(ரு)சி வந்துவிடும்.! திருப்பதி, மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்.. கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார். புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்.. “புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!! எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது. 🫕 @KitchenOLBN0,92%
  • 5 февр.The most viral trending recipe 🥰 🫕 @KitchenOLBN0,70%
  • 16 мар.✅ அறு சுவைகளும் அதன் பயன்களும்! 🍯 இனிப்பு – தசையை வளர்க்கும். 🍋 புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 🧂 உவர்ப்பு – தேவையான உமிழ்நீரை சுரக்க செய்யும். 🌶️ கார்ப்பு – எலும்புகளை வலுவாக்கும். 🌿 கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும். 🍃 துவர்ப்பு – இரத்தத்தை சுத்தம் செய்யும். 🫕 @KitchenOLBN0,55%
  • 31 июл. 2024 г.இன்று காலை டிஃபன் சேமியா புலாவ் (Vermicelli Pulav) ... நீங்களும் செஞ்சு சாப்பிட்டு சொல்லுங்க, எப்படி இருக்குன்னு. அருமையான சுவை. 🤤🤤🤤 🫕 @KitchenOLBN0,39%
  • 6 февр.வித்தியாசமான சிக்கன் ரோஸ்ட்! 😍 🫕 @KitchenOLBN0,37%
  • 31 авг. 2025 г.10 வகையான தேங்காய் சட்னி - Kitchen OLBN 1. சாதாரண தேங்காய் சட்னி பொருட்கள்: புதிய தேங்காய் துருவியவை – 1 கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: 1. பச்சை மிளகாயும் இஞ்சியையும் சேர்த்து சுருட்டி நறுக்கிய தேங்காயுடன் அரைக்கவும். 2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கஞ்சி போல சட்னி தயாரிக்கவும். 3. உப்பை சேர்த்து நன்கு கிளறவும். 4. கடுகு, உளுத்தம்பருப்பு, உப்பு, காரம் சேர்த்து வதக்கி மேலே ஊற்றவும். 2. வெங்காய தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் சிறிய வெங்காயம் – 2–3 பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 tsp செய்முறை: 1. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கவும். 2. தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். 3. உப்புடன் கலந்து பரிமாறவும். 3. வெந்தயம் தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் வெந்தயம் விதைகள் – 1 tsp பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிய துண்டு உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. வெந்தயத்தை சிறிது எண்ணெயில் வதக்கவும். 2. பிற பொருட்களை சேர்த்து அரைத்து சட்னி தயார் செய்யவும். 4. தக்காளி தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் நான்கு தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. தக்காளியை வதக்கவும். 2. தேங்காய் மற்றும் மிளகாயுடன் அரைத்து சட்னி செய்யவும். 5. கொத்தமல்லி தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் கொத்தமல்லி இலை – 1/2 கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிய துண்டு உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. கொத்தமல்லியை நன்கு கழுவி அரைக்கவும். 2. தேங்காய் மற்றும் மிளகாயுடன் கலந்து சட்னி தயார் செய்யவும். 6. புதினா தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் புதினா இலை – 1/2 கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிய துண்டு உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. புதினா இலை மற்றும் மிளகாயை அரைத்து, தேங்காயுடன் சேர்க்கவும். 2. உப்பும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்கு கிளறவும். 7. கருவேப்பிலை தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் கருவேப்பிலை – 1/2 கப் பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. கருவேப்பிலை, மிளகாயுடன் அரைத்து தேங்காயை சேர்க்கவும். 2. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்புடன் கலந்து பரிமாறவும். 8. பட்டாணி தேங்காய் சட்னி. பொருட்கள்: தேங்காய் – 1 கப் வதக்கிய பட்டாணி – 1/2 கப் பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. பட்டாணியை சிறிது வதக்கி, மற்ற பொருட்களுடன் அரைக்கவும். 2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சட்னி செய்யவும். 9. நாரங்காய் தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் நாரங்காய் (மஞ்சள் அல்லது சிவப்பு) – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. நாரங்காயை சிறிது வதக்கி தேங்காயுடன் அரைக்கவும். 2. உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து பரிமாறவும். 10. சுண்டைக்காய் தேங்காய் சட்னி பொருட்கள்: தேங்காய் – 1 கப் சுண்டைக்காய் – 4–5 பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. சுண்டைக்காயை வதக்கி, தேங்காய், மிளகாயுடன் அரைத்து சட்னி செய்யவும். 2. கடுகு, உளுத்தம்பருப்பு, காரம் வதக்கி மேலே ஊற்றவும். 🫕 @KitchenOLBN0,36%
  • 4 февр.முருங்கைக்காய் லா ஊறுகாய் யா.. புதுசா இருக்குனே! 😝😝 🫕 @KitchenOLBN0,35%
  • 11 дек. 2024 г.முருங்கைக்கீரை பொடி இட்லி! செஞ்சு சாப்பிடுங்க.. அருமையாக இருக்கும்! 👍👍 🫕 @KitchenOLBN0,31%
  • 2 авг. 2024 г.ஆரோக்கியம் மிகுந்த கருப்பு கவுனி அரிசி கஞ்சி! 👍 🫕 @KitchenOLBN0,27%
  • 23 сент. 2024 г.முருங்கை கீரை இருந்தால் இந்த மாதிரி பக்கோடா செஞ்சு சாப்பிடுங்க. ரொம்ப அருமையா இருக்கும். 😋😋🥰 🫕 @KitchenOLBN0,24%
  • 9 авг. 2024 г.வாங்க அப்பளம் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்! 🫕 @KitchenOLBN0,23%
  • 10 авг. 2024 г.சாம்பார் தூள் கடையில வாங்கி சமைப்பவர்களுக்கு இந்த காணொளி! 🫕 @KitchenOLBN0,23%