tgindex
OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰

Статистика

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International. More Links: @TGLinksOLBN

Последний пост
12 мая
Последнее чтение
15 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
Категория
Путешествия
В каталоге с
13 авг.
Подписчики
1 934
−6 за 3 дн.
Сутки
−3
−0,15%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
925
20 постов
Вовлечённость
47,8%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
2
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • ⚠️ இது ஒரு முன்னெச்சரிக்கை பதிவு! @OLBNNews

  • 22 апр.1 13042

    வாக்காளர் வழிகாட்டி (Voter Vazhikatti) அறிமுகம்! தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி — தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்காளருக்கும் வழிகாட்ட. 👉 இங்கே பயன்படுத்திப் பாருங்கள்: votervazhikatti.tn.gov.in 👉 உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள் 👨‍👩‍👧‍👦 👉 ஏப்ரல் 23 அன்று வாக்களிக்க வாருங்கள் 🗓️ இந்த தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம் — உங்கள் கருத்துகள் அதை இன்னும் சிறப்பாக்கும். ✨ 📲 பரிந்துரைகள் அல்லது உதவி வேண்டுமா? WhatsApp-ல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: +91 73583 81950 💬 தேர்தல் திருவிழா! தமிழகத்தின் பெருவிழா! #MyVoteMyRight #VoteForDemocracy #ivote4tn #100PercentVoting #GoVote #EveryVoteCounts #ECI #TNElections2026

  • ஓட்டு போடுவது எப்படி? #TNElection2026 #Election2026 #tnelection2026 #Tamilnadu #Vote

  • 15 мар.1 16041

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல்! ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட்! #TNAssemblyElections2026 #ElectionCommission #NewsUpdate

  • 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 NEWS தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு! 🗳️ ✦ மொத்த தொகுதிகள் – 234 ✦ கட்டங்கள் – 1 ✦ வாக்குப்பதிவு – 23.04.2026 ✦ வாக்கு எண்ணிக்கை – 04.05.2026 ✦ வேட்புமனு தொடக்கம் – 30.03.2026 ✦ வேட்புமனு முடிவு – 06.04.2026 @OLBNNews

  • 9 нояб.2 34063

    தீவிரமடையும் SIR பணிகள்! வீடு பூட்டியிருந்தால் என்னவாகும்? - முழு விவரம்! தமிழ்நாடு முழுவதும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive Revision - SIR) கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, வீடு பூட்டியிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மூன்று முறை தேடி வரும் அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, வீடு பூட்டியிருந்தால், அவர் உடனடியாக உங்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட மாட்டார். மாறாக, ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அலுவலர்கள் வரும் தேதிகள், முன்கூட்டியே அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அறிவிக்கப்படும். என்னென்ன சவால்கள் உள்ளன? சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், பகல் நேரங்களில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால், அலுவலர்களால் உரியவர்களிடம் படிவங்களை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் அடிக்கடி வீடு மாறுவதால், அவர்களின் தற்போதைய முகவரியை கண்டறிவதும் சவாலாக உள்ளது. நீங்கள் என்ன செய்ய வேண்டும்? வாக்குச்சாவடி நிலை அலுவலர் வரும்போது, அவரிடம் இருந்து முன்பே ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த படிவத்தில் உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, உங்கள் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை, அலுவலர் வரும்போது நீங்கள் வீட்டில் இல்லை என்றாலோ அல்லது அவரை சந்திக்க முடியவில்லை என்றாலோ, voters.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நீங்களே உங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். நீங்கள் அதே தொகுதிக்குள் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தால், அந்த தகவலை அலுவலரிடம் தெரிவிக்கலாம். வேறு தொகுதிக்கு மாறியிருந்தால், பழைய தொகுதியில் உங்கள் பெயரை நீக்கிவிட்டு, புதிய தொகுதியில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். காலக்கெடுவை தவறவிடாதீர்கள் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் இந்த வீடு வீடாக சரிபார்க்கும் பணியின் போது, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம். ஒருவேளை, இந்த படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொடுக்கத் தவறினால், டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாமல் போக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, நீங்கள் மீண்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, உங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை சரியாக நிறைவேற்ற, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. @OLBNNews

  • без подписи

  • இனி பயம் வேண்டாம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். erolls.tn.gov.in/blo என்ற இணையதளத்தில் இருந்து உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். @OLBNNews

  • வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம். இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி' தொடர்பாக பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பழைய முகவரியிலிருந்து மாறி இருப்பவர்களின் வாக்குரிமை, அவர்கள் தற்போது வசிக்கும் முகவரிக்குத்தான் அமையும் என்றும், அவர்களின் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இருந்ததா என்பது மட்டுமே சரிபார்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, ஆதாரங்களை கணக்கெடுப்பின்போது சமர்ப்பிக்க தேவையில்லை என்றும், வரைவு பட்டியல் வெளியான பின் 13 ஆவணங்களில் ஒன்றை கொடுத்து பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பப் படிவத்தில் தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரைப்பதிவு செய்தால் மட்டுமே போதுமானது. 2024 வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம்-6 மற்றும் உறுதிமொழிப் படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்களின் படிவங்களை அவர்களின் குடும்பத்தார் பூர்த்தி செய்து தரலாம் என்றும், விரைவில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

  • без подписи

  • தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி? ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான elections.tn.gov.in/Electoral_Serv… க்குச் செல்லவும். "Special Intensive Revision - 2002/2005" என்பதை கிளிக் செய்யவும். இப்போது, "Search your name in electoral roll" (வாக்காளர் பட்டியலில் உங்க பெயரைத் தேடுங்கள்) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். ஸ்டெப் 2: தேடல் விருப்பங்கள் உங்களுக்கு 3 தேடல் விருப்பங்கள் காட்டப்படும்: EPIC எண் மூலம் தேடுதல் (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) விவரங்கள் மூலம் தேடுதல் மொபைல் எண் மூலம் தேடுதல் விருப்பம் 1: EPIC எண் மூலம் தேடுதல் உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அட்டை இருந்தால், இதுவே வேகமான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும். உங்க EPIC எண்ணை (வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி) உள்ளிடவும். மாநில கீழ்தோன்றும் பட்டியலில் (dropdown list) இருந்து 'தமிழ்நாடு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கிரீனில் தோன்றும் Captcha குறியீட்டை டைப் செய்யவும். "Search" என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். விருப்பம் 2: தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல் உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், உங்க தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரைக் கண்டறியலாம். "Search by details" என்பதைக் கிளிக் செய்யவும். மாநிலம் மற்றும் மொழியை (தமிழ், ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கவும். பின்வரும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்: உங்க முழுப் பெயர் (அல்லது நீங்க மற்றவருக்காகச் சரிபார்த்தால் அவர்களின் பெயர்) பிறந்த தேதி (உங்க அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி) பாலினம் மாவட்டம் மற்றும் தொகுதி Captcha குறியீட்டை நிரப்பி, "Search" என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும். விருப்பம் 3: மொபைல் எண் மூலம் தேடுதல் உங்க வாக்காளர் பதிவு ஆவணத்துடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், இது மற்றொரு வசதியான வழியாகும். "Search by Mobile" என்பதைக் கிளிக் செய்யவும். உங்க மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். உங்க மொபைல் எண்ணை உள்ளிடவும். Captcha குறியீட்டை நிரப்பி, "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும். உங்க போனுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு, "Search" என்பதைக் கிளிக் செய்யவும். உங்க வாக்காளர் தகவல் ஸ்கிரீனில் காட்டப்படும். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உங்க வாக்காளர் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் அவசியம். விடுபட்ட பெயர்கள், தவறான விவரங்கள், அல்லது காலாவதியான முகவரிகள் உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்கக்கூடும். இந்த 'சிறப்பு தீவிர திருத்தப் பணி' (SIR), தகுதியான ஒவ்வொரு வாக்காளரும் பட்டியலில் தங்கள் சரியான இடத்தைப் பெறுவதை உறுதிசெய்து, இதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. @OLBNNews

  • без подписи

  • வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்வது எப்படி? Website : voters.eci.gov.in/Homepage

  • வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் Website : voters.eci.gov.in/Homepage

  • Gemini AI Prompts ❇️ Tech Tips Daily Updates 😍 Link: @Gemini_Prom

  • டீமானிடைசேஷன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பொழுது மக்களை அலைக்கழித்த ஆரிய அடாவடி ஒன்றியம் அடுத்ததாக SIR பெயரில் நம்மை அலைக்கழிக்கிறது! கவனமாக கீழ்க்கண்ட பதிவை படித்து கவனத்தில் கொள்ளுங்கள்! “தேர்தல் ஆணையம் அங்கீகரித்த BLA 2 என்ற முறையில் இதை பதிவிடுகிறேன். SIR என்னும் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி பற்றிய விளக்கம். சென்ற வருடம் (2024) நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படியே படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் படிவங்கள் வீடு தேடி வரும். அதை யாரும் வாங்கத் தவறி விடாதீர்கள். ஒரு வேளை, நீங்கள் அந்த முகவரியில் இப்போது இல்லையென்றால், அந்த முகவரியில் தற்போது குடியிருப்போருக்கு உங்கள் குடும்பத்தினரின் பெயர்களை தெரிவித்து, படிவங்களை அவர்கள் வாங்கி வைக்கும்படி கோரலாம். அல்லது அந்த முகவரிக்கான வாக்குச்சாவடி BLO வை தொடர்பு கொண்டு, முகவரி மாற்றத்தை தெரிவித்து படிவங்களை நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். படிவத்தின் முன்பக்கம் மேலே BLO பெயரும், அவரது மொபைல் நம்பரும் அச்சடித்து இருக்கும். அந்த நம்பரில் உங்கள் BLO வை தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான விபரங்களை அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். படிவம் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களையும் அவர்களிடமோ அல்லது BLA 2 விடமோ கேட்கலாம். 2004 க்கு பிறகு வாக்களித்தவர்கள் அவர்களது தாய் தந்தை குறித்த 2004 வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் கண்டிப்பாக அளிக்க வேண்டும். //விண்ணப்ப படிவம் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிரதிகள் தருவார்கள்// //அதை Xerox எடுத்து சமர்ப்பிக்க முடியாது// எனவே //இரண்டு பிரதிகளையும் அடித்தல், திருத்தல் Over Writing இல்லாமல் நேர்த்தியாக பூர்த்தி செய்ய வேண்டும்// //வெள்ளை நிற பின்னணி (White Background) கொண்ட தற்போதைய வண்ண புகைப்படம் ஒட்ட வேண்டும்// பூர்த்தி செய்த இரண்டு பிரதிகளையும் ஜெராக்ஸ் அல்லது தெளிவாக போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். இது எதற்காக என்றால், உங்கள் படிவத்தில் விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தை கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் போனால், முறையீட்டின் போது தேவைப்படும். //இரண்டு பிரதிகளையும் BLO விடம் திரும்ப ஒப்படைக்கும்போது, அதில் ஒன்றில் BLO சீல் மற்றும் Sign போட்டு, ஒரிஜினல் படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையாக அதை நமக்கு தருவார். அதையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். (இது ரொம்ப முக்கியம்)// உங்கள் முகவரி மாறி இருந்தால், Form 8 என்னும் படிவம் 8 ஐ BLO விடம் கேட்டுப் பெற்று, அதையும் பூர்த்தி செய்து, நகல் எடுத்து வைத்துக் கொண்டு, இரண்டு படிவங்களையும் தற்போதைய முகவரிக்கான BLO விடம் வழங்கி, ஒப்புதல் பெற்று வைத்துக் கொள்ளவும். படிவம் வழங்கிய பழைய முகவரிக்கான BLO விடம் கொடுக்கத் தேவையில்லை. அதுபோலவே, புதிய வாக்காளர் சேர்க்க வேண்டியிருந்தால், Form 6 ஐ BLO விடம் கேட்டுப் பெற்று, அதையும் பூர்த்தி செய்து கொடுக்கவும். படிவம் பூர்த்தி செய்வதில் குழப்பமோ சந்தேகமோ ஏற்பட்டால அங்கீகரிக்கப்பட்ட கட்சி BLA 2 வை தொடர்பு கொள்ளவும். அவர்களுக்கு உங்களைப்பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும். அவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது படிவங்கள் வரை நிரப்பி உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அதிகாரம் பெற்றவர்கள்” @OLBNNews

  • без подписи

  • மக்களே உங்கள் பெற்றோரின், பெரியவர்களின் 2002 வாக்காளர் பட்டியலைப் பார்க்க erolls.tn.gov.in/electoralsearc… இதில் EPIC அல்லது பெயரை கொடுத்து தேடலாம். அதில் AC Name, Part No, Serial No என அனைத்து தரவுகளும் வரும். erolls.tn.gov.in/Rollpdf/SIR_20… இதில் வாக்காளர் பட்டியலை பார்க்கலாம்!

  • தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) விதியின்படி, 2002ம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் ஆவணங்கள் ஏதும் தேவையில்லை. இதை எங்கிருந்து தெரிந்து கொள்வது? 2002ம் ஆண்டில் நீங்கள் வாக்களித்த சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடி நினைவில் இருந்தால் erolls.tn.gov.in/Rollpdf/SIR_20… என்கிற தளத்தில் பதிவிடவும். அதற்கென தோன்றும் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பாருங்கள். இருந்தால் அப்போதைய வாக்காளர் எண், வாக்குச்சாவடி முதலிய விவரங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டெடுத்த வாக்காளர் எண்ணை erolls.tn.gov.in/electoralsearc… தளத்தில் பதிவிட்டு பாருங்கள். உங்களின் தரவு இத்தளத்தில் வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒருவேளை SIR-2002-ல் பெயர் இல்லையெனில் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 11 சான்றாவணங்களில் ஏதேனும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் தரவுகளுக்கு voters.eci.gov.in, elections.tn.gov.in/ElectoralRolls… போன்ற தளங்களை நாடுங்கள்!

  • без подписи