ஸலஃபி மறுப்புகள்
Статистикаவழிகேடுகள் மற்றும் குழப்பங்களிலிருந்து தெளிவு பெற... T.me/salafirefutationstamil salafiyyah.in
- Последний пост
- 9 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 130
- 1/48двое суток
- 148
- 1/72трое суток
- 160
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
அசத்தியவாதிகளில் பலர் தங்களது உலக ஆதாயங்கள் சென்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே சத்தியத்தை (பின்பற்றாது) விட்டு விடுகின்றனர். இல்லையேல் அவர்கள் சத்தியத்தை அறிகின்றனர், இன்னும் அதனை (உண்மை என) நம்பிக்கை கொள்கின்றனர். - ஸுலைமான் இப்னு அப்தில்லாஹ் ஆலுஷ் ஷைஃக் رحمه الله 📖 அத்துரர் அஸ்ஸனிய்யாஹ் 8/124 T.me/salafirefutationstamil
🔸வழிகெட்டக் கூட்டங்களைத் தவிர வேறவரும் இஜ்மா'வை மறுக்க மாட்டர் - அஷ்ஷைஃக் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ்🔸 கேள்வியாளர்: மத்ஹப்களுடைய இமாம்களில் யார் இஜ்மா'விற்கு ஆதாரத்தன்மை இல்லை எனக் கூறியுள்ளார்? அதோடு (அதற்கான) மூலத்தை சுட்டிக்காட்டுங்கள். அஷ்ஷைஃக்: வழிகெட்ட கூட்டங்களைத் தவிர வேறு எந்த ஒருவரும் (இஜ்மா'வானது மார்க்க) ஆதாரத்தன்மை அற்றது என்று பேசமாட்டார். (மத்ஹப்களுடைய) நான்கு இமாம்கள் மற்றும் அவர்கள் அல்லாத மற்ற (இமாம்களைப்) பொறுத்தவரையில், அவர்கள் இஜ்மா'வை (ஆதாரம்) எனக் கூறுகின்றனர். இஜ்மா’ என்பது உறுதியான ஒரு விடயமாகும் - நாம் என்றென்றும் எப்போதும் கூறுவது போல - நாங்கள் குர்ஆன் ஸுன்னாஹ்வின் பால் அழைப்போம்; இது மட்டுமல்ல மாறாக (அவ்விரண்டையும்) ஸலஃபுஸ் ஸாலிஹுடைய வழிமுறையில் (விளங்கிக் கொள்வதன் பால் அழைப்போம்). அது ஏனெனில், அனைத்து இஸ்லாமியப் பிரிவுகளும் - அதனுடைய புதியதும், அதனுடைய பழைமையானதும் - அவர்களில் “நாங்கள் குர்ஆன் ஸுன்னாஹ்வை கருத்தில் கொள்ள மாட்டோம்” என்று கூறுகின்றவரை நீங்கள் காணமுடியாது. அவர்கள் அனைவரும் இதை (குர்ஆன் ஸுன்னாஹ்வை கருத்தில் கொள்வதை) கூறுகின்றனர். ஆனால் அவர்களில் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்களோ தங்களின் மனோ இச்சைகளுக்கு ஒத்துப்போவதற்காக குர்ஆன் ஸுன்னாஹ்வின் ஆதாரங்களை இரட்டை அர்த்தம் கொண்ட விளக்கமாக விளக்கம் கொடுக்கின்றனர். நான் உங்களுக்கு பலமுறை காதியானிகளை உதாரணம் கூறி இருக்கின்றேன், ஒரு புதிய கூட்டத்திற்கு உதாரணமாக. அவர்கள் எதார்த்தத்தில் - நான் அறிந்தவாறு - ஸுன்னாஹ்விலிருந்து ஒரு பெரும் பகுதியை மறுக்கின்ற போதிலும் அவர்கள் அதை மறுப்பதாக பகிரங்கமாக கூறுவது கிடையாது. எனினும் அவர்களால் மறுக்க இயலாத ஸுன்னாஹ்வை மாற்று விளக்கம் கொடுத்து திரிக்கின்றனர்; மொழியை விட்டும் தூரமான,மேலும் நமது முன்சென்ற நல்லோர்களுடைய (ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள்) விளக்கத்தை விட்டும் தூரமானதான (மாற்று) விளக்கத்தை அவற்றிற்கு அளிக்கின்றனர். மேலும் இவ்வாறே அவர்கள் குர்ஆனிலும் செய்கின்றனர். இதன் காரணமாகவே “இஸ்லாத்தை - அதன் இரு மூலங்களான குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்விலிருந்து - சரியான புரிதலாக புரிந்து கொள்வது அவசியம் என்று நாம் கூறுகின்றோம்; அதாவது அதில் (சரியாக புரிந்து கொள்வதில்) ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் எதன் மீது இருந்தார்களோ அதன்பால் திரும்புவது (அவசியமாகும்). நாம் அதை (அந்தக் கூற்றை) மார்க்க ஆதாரங்களின் மூலமாக வலுப்படுத்துகின்றோம். அவற்றிலிருந்து உள்ளதாவது அல்லாஹ்வின் - அஸ்ஸ வஜல் - கூற்றான وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து முஃமின்களின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ (4:115) இங்கு தூதர் - அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் - அவர்களுக்கு மாறு செய்வதுடன் முஃமின்களின் வழிக்கு மாற்றம் செய்வதையும் குறிப்பிட்டுள்ளான். இந்த ஆயத்தில் நமது இறைவன் அஸ்ஸ வஜல் முஃமின்களின் வழியை வீணாகக் குறிப்பிடவில்லை. நாம் என்றென்றும் எப்போதும் சுற்றிவரும் அந்த முக்கிய கருத்திற்காகவே (குறிப்பிட்டுள்ளான்). அதாவது முஃமின்களின் வழியானது, அல்லாஹ் தனது நபியின் மீது இறக்கிவைத்ததில் அல்லது அவனது தூதர் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் பேசியவற்றில் நாடப்பட்ட பொருளை நமக்கு விளக்கவும் தெளிவாக்கவும் செய்யும். உதாரணமாக “என்னுடைய ஸுன்னாஹ்வையும், எனக்குப் பின்வரும் நேர்வழிகாட்டும் நேர்வழிப்பெற்ற கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும் பற்றிப் பிடியுங்கள்” என்று நபி ﷺ அவர்கள் கூறும் பொழுது, இந்தக் குர்ஆனிய ஆதாரத்திலிருந்து அதை பெற்றுக் கொண்டார்கள். “என்னுடைய ஸுன்னாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்” என்பதைக் கொண்டு அவர்கள் - அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் - போதுமாக்கிக் கொள்ளவில்லை, அத்துடன் “கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும்” என்ற தனது கூற்றையும் சேர்த்துக் (கூறினார்கள்). (இதற்கான) காரணமாவது நாம் சற்று முன்னர் குறிப்பிட்டதாகும். அதாவது அவர்களுடைய ஸுன்னாஹ்வானது அல்லாஹ்வின் தூதர் - ஸல்லல்லாஹு அலைஹி அலா ஆலிஹி வஸல்லம் - அவர்கள் எந்த நேர்வழி மற்றும் ஒளியின் மீதிருந்தார்களோ அதனை நமக்கு தெளிவுபடுத்தும். எனவே இஜ்மா'வானது (மறுக்க) இயலாத மாறாக மறுப்பதற்கு அனுமதிக்கப்படாத ஒன்றாகும். எவரொருவர் அதை மறுப்பதாக பிரகடனம் செய்வாரோ, அது முஸ்லிம்களுடைய ஜமாஅத்தில் இருந்து வெளியேறியதாக அவரிடமிருந்து வரும் வெளிப்படையான அறிவிப்பாகும். 🔗 https://alathar.net/home/esound/index.php?op=codevi&coid=155449 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/4jd2p5fb 🌐 வளைதளம்: salafiyyah.in
வழிகெட்டக் கூட்டங்களைத் தவிர வேறவரும் இஜ்மா'வை மறுக்க மாட்டர் - அஷ்ஷைஃக் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ் https://t.me/salafirefutationstamil/197
மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: எவர் ஒரு பித்'அஹ்வை இஸ்லாத்தில் தோற்றுவித்து அதனை நல்லதாகக் காண்பாரோ, அவர் முஹம்மத் அவர்கள் தூதுத்துவத்தை (முழுமையாக எத்தி வைப்பதில்) மோசடி செய்துவிட்டதாக வாதிடுபவராவார்! ஏனெனில் அல்லாஹ் கூறியுள்ளான்: الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் நான் பூரணமாக்கிவிட்டேன். (அல்குர்ஆன் 5:3). எனவே எது அன்றைய தினம் மார்க்கமாக இருக்கவில்லையோ, அது இன்றைய தினமும் மார்க்கமாக இருக்க முடியாது. 📖 அ'த்தாரிமி 141 T.me/salafirefutationstamil
இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَإِنْ رَآهَا النَّاسُ حَسَنَةً ஒவ்வொரு பித்'அஹ்வும் வழிகேடாகும், மக்கள் அதனை நல்லதாகக் கண்டாலும் சரியே. 📚 ஷர்ஹ் உஸூலிஃதிகாத் லில்லாலகாயி 1/104 T.me/salafirefutationstamil
🔸பித்’அஹ்களை நல்ல பித்’அஹ் கெட்ட பித்’அஹ் என வகைப்படுத்துபவர்களுக்கு மறுப்பு - அஷ்ஷைஃக் இப்னு ஹிஸாம் ஹஃபிதஹுல்லாஹ்🔸 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 📩கேள்வி: பித்’அஹ்களை வகைப்படுத்துவதில் சில உலமாக்களுக்கு ஏதேனும் பேச்சுள்ளதா அல்லது சூஃபிக்கொள்கையை உடையவர்களிடமே அன்றி இது அறியப்படவில்லையா? 📝 பதில்: அவர்களில் சிலரிடம் (இது) உள்ளது, அது அவர்களுடைய விடையத்தில் ஒரு சறுக்காகவே கருதப்படும் உதாரணமாக அந்நவவி, அல்இஸ் இப்னு அப்திஸ்ஸலாம் மேலும் மற்றவர்கள், அதனை நல்ல பித்’அஹ் கெட்ட பித்’அஹ் என வகைப்படுத்தினர். இன்னும் அவர்களில் சிலர் மிகைப்படுத்தி பித்’அஹ்வை ஐந்து மார்க்க சட்டங்களைப் போன்று ஐந்து வகையாக - கடமையான பித்’அஹ், முஅஸ்தஹப்பான பித்’அஹ், மக்ரூஹான பித்’அஹ், ஹராமான பித்’அஹ் மற்றும் அனுமதிக்கப்பட்ட பித்’அஹ் - என ஆக்கினர். எனினும் இந்த பேச்சானது சரியானதல்ல. எந்த உதாரணங்களைக் கொண்டு அவர்கள் உதாரணம் காட்டினார்களோ, அவை பித்’அஹ்களுக்கு பொருந்தாது. அது அன்னார் ﷺ அவர்களது “ஒவ்வொரு பித்’அஹ்வும் வழிகேடாகும்” என்ற கூற்றின் காரணத்தினால் ஆகும். இன்னும் அவர்கள் உதாரணங்களாக காட்டியவை பித்’அஹ்களிலிருந்து உள்ளவை அல்ல. (மாறாக) அவை ஷரீஅத் ரீதியான ஆதாரங்கள் சுட்டிக்காட்டியவை ஆகும், குர்ஆன் ஸுன்னாஹ்வுடைய ஆதாரங்கள் சுட்டிக்காட்டியவை ஆகும். அவர்களில் சிலர்: “குர்ஆனை முஸ்ஹஃபில் ஒன்று சேர்த்தது நல்ல பித்’அஹ் என்று கூறுகின்றனர். ஏனெனில் அது நலவாகும்.” ஆம் (அது) ஒரு மிகப்பெரும் நலவு தான், குர்ஆனும், ஸுன்னாஹ்வும் அதனைச் சுட்டிக் காட்டியுள்ளன. إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا ٱلذِّكۡرَ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ நிச்சயமாக நாம்தான் (திக்ரு என்னும் இவ்)வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள். (அல்குர்ஆன் 15:9) فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي “என்னுடைய ஸுன்னாஹ்வையும், எனக்கு பின்புள்ள நேர்வழிகாட்டும் நேர்வழிப்பெற்ற கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும் பற்றிப் பிடியுங்கள்.” لا تجتمع أمتي على ضلالة “என்னுடைய உம்மாஹ் வழிகேட்டின் மீது ஒண்றினையாது.” சஹாபாக்கள் அதன் மீது ஒண்றினைந்தனர், அதற்கு பிறகு எவ்வாறு அது ஆட்சேபிக்கப்பட்டு பித்’அஹ் என்று சொல்லப்படும்!? عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي “என்னுடைய ஸுன்னாஹ்வையும், எனக்கு பின்புள்ள நேர்வழிகாட்டும் நேர்வழிப்பெற்ற கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும் பற்றிப் பிடியுங்கள்.” 🔗 https://t.me/ibnhezam/884 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/5c7un5e6 🌐 வளைதளம்: salafiyyah.in
பித்’அஹ்களை நல்ல பித்’அஹ் கெட்ட பித்’அஹ் என வகைப்படுத்துபவர்களுக்கு மறுப்பு - அஷ்ஷைஃக் இப்னு ஹிஸாம் https://t.me/salafirefutationstamil/190
ஸலஃபி மறுப்புகள் pinned «📌 தொடர் - 4 ஹிஸ்பிய்யாஹ் t.me/salafirefutationstamil ▪️ஹிஸ்பிய்யாஹ் என்றால் என்ன? ஹிஸ்பீக்கள் என்பவர்கள் யார்? அவர்களுடைய அழைப்பும், மன்ஹஜும் யாது? - அஷ்ஷைஃக் ரபீ’ அல்மத்ஃகலி 🔗 https://t.me/salafimaktabahmpm/1250 🎥 https://youtu.be/F77_bMcRSeg?si=ILTMsw4xtu6P9CVI…»
📌 தொடர் - 4 ஹிஸ்பிய்யாஹ் t.me/salafirefutationstamil ▪️ஹிஸ்பிய்யாஹ் என்றால் என்ன? ஹிஸ்பீக்கள் என்பவர்கள் யார்? அவர்களுடைய அழைப்பும், மன்ஹஜும் யாது? - அஷ்ஷைஃக் ரபீ’ அல்மத்ஃகலி 🔗 https://t.me/salafimaktabahmpm/1250 🎥 https://youtu.be/F77_bMcRSeg?si=ILTMsw4xtu6P9CVI ▪️ஹிஸ்பிய்யாஹ் என்றால் என்ன? தற்போது த’அவா களத்தில் இருக்கின்ற மிகப் பிரபலமான ஹிஸ்பி ஜமா'அத்துகள் யாவை? - அஷ்ஷைஃக் அலீ அர்ரம்லி 🔗 https://t.me/salafimaktabahmpm/1288 🎥 https://youtu.be/thyMJs9Pi24?si=asvBSnxqSxVIsJni ▪️ஹிஸ்பிய்யாஹ்வுடைய அளவுகோல் யாது? - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் 🔗 https://t.me/salafimaktabahmpm/1318 ▪️ஹிஸ்பிய்யாஹ்வில் பித்’அத்தாக இல்லாதவை என ஏதேனும் உள்ளதா? - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் 🔗 https://t.me/salafimaktabahmpm/1408 ▪️ஒரு ஹிஸ்பியுடைய சில அடையாளங்கள் - அஷ்ஷைஃக் ஸை'த் அல்மத்ஃகலி 🔗 https://t.me/salafimaktabahmpm/1460 ▪️ஜமா’அதுத் தப்லீக் மற்றும் அல்இஃக்வானுல் முஸ்லிமூன் போன்ற ஸுன்னாஹ்விற்கு முரணான ஜமா'அத்துகளை விமர்சனம் செய்வதன் தீர்ப்பு என்ன? - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் 🔗 https://t.me/salafimaktabahmpm/1299 ▪️ஸலஃபிய்யாஹ் என்பது ஹிஸ்பி கூட்டங்களைப் போன்ற ஒரு கூட்டமா? - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான், அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் 🔗 https://t.me/salafimaktabahmpm/1329 ▪️திரும்புமிடமாக ஒரு ஆலிமைக் கொண்டு அல்லது ஒரு நபரைக் கொண்டு மட்டும் சுருக்கிக் கொள்வது - அஷ்ஷைஃக் இப்னு ஹிஸாம் 🔗 https://t.me/salafimaktabahmpm/1342
யூனுஸ் இப்னு உபைத் கூறினார்கள்: இன்றைய தினம் ஸுன்னாஹ்வின் பக்கம் அழைப்பவரிடத்திலிருந்து ஆச்சரியம், அதை விட ஆச்சரியமான விடையமானது ஸுன்னாஹ்விற்கு பதிலளித்து அதனைக் ஏற்றுக் கொள்பவர். 📖 ஷர்ஹு ஸுன்னாஹ் லில் பர்பஹாரி, பக்கம்: 133, 134 T.me/salafirefutationstamil
وَثَبَتَ عَنْ مَالِكٍ أَنَّهُ لَمْ يَكُنْ فِي عَهْدِ النَّبِيِّ ﷺ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ شَيْءٌ مِنَ الْأَهْوَاءِ - يَعْنِي بِدَعَ الْخَوَارِجِ وَالرَّوَافِضِ وَالْقَدَرِيَّةِ. நபி ﷺ அவர்கள், அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் காலத்தில் மனோ இச்சைகளிலிருந்து எதுவும் இருக்கவில்லை - அதாவது: ஃகவாரிஜ்கள், ராஃபிதாக்கள் மற்றும் கதரிய்யாக்களின் பித்'அத்கள் (என எதுவும் இருக்கவில்லை) - என மாலிக் அவர்களிடமிருந்து உறுதியாகியுள்ளது. - இப்னு ஹஜர் رحمه الله 📖 ஃபத்ஹுல் பாரி 13/253 T.me/salafirefutationstamil
الَّذِي فَرَّقَ الْأُمَّةَ وَمَزَّقَ جَمْعَهَا هُوَ الَّذِي خَرَجَ عَنِ الْمَنْهَجِ الَّذِي كَانَ عَلَيْهِ الصَّحَابَةُ الْكِرَامُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ உம்மத்தைப் பிரித்து அதன் ஒற்றுமையைச் சிதறடித்தவன் கண்ணியமிக்க சஹாபாக்கள் - ரதியல்லாஹு அன்ஹும் - இருந்த மன்ஹஜிலிருந்து (வழிமுறையிலிருந்து) வெளியேறியவனே. - அஷ்ஷைஃக் அலீ அர்ரம்லி حفظه الله 📼 மா ஹியஸ் ஸலஃபிய்யாஹ் - அல்ஜுஸ்உல் அவ்வல் salafiyyah.in
மேலும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஆதாரத்துடன் ஹிஸ்பீக்கள் மற்றும் ஹரகீக்கள் விடையத்தில், இன்னும் அவர்களை ஒன்றுசேர்க்கும் தாயான அல்இஃக்வானுல் முஃப்லிஸுன் கூட்டத்துடைய விடையத்தில் அமைதியாக இருப்பதன் பக்கம் அழைப்பவர்களையும் செவியுற்றோம். நன்றாக அறிந்தவரோ பித்’அத்வாதிகளானவர்கள் நெருக்கடிகளிலும், ஃபித்னாக்களிலும் அவர்களுடைய குத்துவாள்கள் விஷத்தால் அதிகமானவையும், அவர்களுடைய ஆபத்துகள் கடுமையால் அதிகமானவையும், இன்னும் அவர்களின் பக்கம் சாய்வதானது பிரிவினையாகும், ஒன்று சேர்தல் அல்ல என்பதையும் புரிந்து கொள்வார். அறிவாளியானவர் யஹூதியின் மீதும் சரி, முஷ்ரிகின் மீதும் சரி, ஹிஸ்பியின் மீதும் சரி எந்தவொரு நம்பிக்கையும் வைக்கக் கூடாது என்பதையும், இன்னும் அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறையானது நலவை அடைவது மற்றும் தீமையை தடுத்துக் கொள்ளும் வகையில் ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்ட அரசியலாகும் என்பதையும் புரிந்து கொள்வார். எனவே, அது விடையத்தில் ஆட்சியாளரை முந்திச் செயல்படாமலும், விடையங்களை குழப்பாமலும் இருப்பார். - அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி حفظه الله https://x.com/solyman24/status/2037480058722431377
(தற்போதுடைய) நிகழ்வுகளை பயன்படுத்தி சியோனிஸ்டுகளை நம்பவும் அவர்களுடன் நெருங்குவதன் பக்கம் அழைப்பவர்களையும், மேலும் அவற்றைப் பயன்படுத்தி ஈரானை நம்பவும் அதனுடன் ஒத்துழைப்பதன் பக்கம் அழைப்பவர்களையும் நாம் செவிமடுத்தோம். நம்முடைய ரப்போ கூறியுள்ளான்: لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةً لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلۡيَهُودَ وَٱلَّذِينَ أَشۡرَكُواْ (நபியே!) ஈமான்கொண்டோருக்கு விரோதத்தால் மனிதர்களில் மிகக் கடுமையானவர்காளக யூதர்களையும் இணை வைப்பவர்களையும் நிச்சயமாக நீர் காண்பீர். (அல்குர்ஆன் 5:82) அல்இமாம் அஸ்ஸ’அதி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்: {இந்த இரண்டு கூட்டங்களும் எந்த விதிவிலக்கும் இன்றி இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பகைமையில் மிகப் பெரிதான மக்களாவர், இன்னும் அவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்துவதில் அவர்களில் அதிகமாக முயல்பவர்களாவர்; அது வரம்பு மீறுதல், பொறாமை, பெருமையடித்தல் மற்றும் இறைநிராகரிப்பு ஆகியவற்றால் அவர்கள் மீது கொண்ட கடும் வெறுப்பினால் ஆகும்}
அப்துல்லாஹ் இப்னு ஸபா' - ராஃபிதாவுடைய ஷைஃக் - இஸ்லாத்தை (வெளிரங்கமாக) வெளிப்படுத்திய போது - பவுல் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தில் செய்தது போல - தன்னுடைய சதியினாலும், தீய குணத்தாலும் இஸ்லாத்தை கெடுக்க நினைத்தான். - இப்னு தைமிய்யாஹ் رحمه الله 📖 மின்ஹாஜுஸ் ஸுன்னாஹ் 8/479 T.me/salafirefutationstamil
பித்'அத்களுடைய ஆரம்பமானது ஊகத்தாலும், மனோ இச்சையாலும் ஸுன்னாஹ்வில் குறை கூறுவதாகவே இருந்தது; இப்லீஸ் தன்னுடைய சுய கருத்தாலும், மனோ இச்சையாலும் தனது இறைவனுடைய கட்டளையில் குறை கூறியதைப் போல. - இப்னு தைமிய்யாஹ் رحمه الله 📖 மஜ்மூ'உல் ஃபதாவா 3/350 T.me/salafirefutationstamil
இவ்விரண்டு விடயங்களில் ஒன்றே தவிர வேறெதுவும் முஸ்லிம்களை பிரிப்பதில்லை: 1⃣ முதலாவது விடையமானது: முஸ்லிம்களுடைய ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி செய்வது, மேலும் அவருக்கு மாறு செய்வது 2⃣ இரண்டாவது விடையமானது: நபி ﷺ அவர்களுடைய ஸுன்னாஹ்விலிருந்து வெளியேறி பித்'அத்கள் மற்றும் மார்க்கத்தில் புதிதாக தோன்றியவைகளின் பக்கம் செல்வது. - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் حفظه الله 📖 மஃப்ஹூமுல் பை'அஹ், பக்கம்: 11 T.me/salafirefutationstamil
بِسْمِ اللَّــــهِ الَّرحْمَـــــــــنِ الرَّحيم قال الشيخ محمد بن حزام البعداني حفظه الله وتولاه: إِذَا رَأَيْتَ أُنَاسًا حَصَرُوا مَرْجِعِيَّتَهُمْ بِعَالِمٍ وَاحِدٍ أَوْ بِشَخْصِيَّةٍ وَاحِدَةٍ، فَاعْلَمْ أَنَّهُمْ وَاقِعُونَ فِي التَّعَصُّبِ وَالْحِزْبِيَّةِ الْمَقِيتَةِ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ، وَاللَّهُ الْمُسْتَعَانُ. ஒரு மக்களை அவர்களுடைய திரும்புமிடமாக ஒரு ஆலிமைக் கொண்டு அல்லது ஒரு நபரைக் கொண்டு சுருக்கிக் கொள்பவர்களாக நீ கண்டாய் எனில், பிடிவாதப்போக்கிலும், மிகவும் வெறுக்கத்தக்க ஹிஸ்பிய்யாஹ்விலும் அவர்கள் அறியாத விதத்தில் விழுகின்றனர் என்பதை நீ அறிந்து கொள். அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன். - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் حفظه الله https://t.me/hizammaqalat/2686 T.me/salafirefutationstamil
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில், தவ்ஹீத் மற்றும் ஸுன்னாஹ்வின் மீதே தவிர மக்கள் இணக்கம் கொள்ள மாட்டார்கள். - அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்ருஹைய்லி حفظه الله 📼 அல்மவ்கிஃபுஷ் ஷர்ஈ மினல் ஜமாஆதில் ஹிஸ்பிய்யாஹ் 14 ஷஃபான் 1447 T.me/salafirefutationstamil
ஸலஃபி மறுப்புகள் pinned «📌 தொடர் 3 - கல்வியை சரியான முறையில் கற்றுக் கொள்ளாமல் தஃஅவா செய்பவர்களுக்கு மறுப்பு t.me/salafirefutationstamil 1. கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு முன் தஃஅவா செய்வது கூடுமா? "ஹிக்மத்தைக் கொண்டு உமதிறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக" என்ற ஆயத்தின் விளக்கம்…»