tgindex
மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ்

மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ்

Статистика

📖 உலமாக்களின் வார்த்தைகள் தமிழ் மொழியில் Maktabah as Sunnah was Salafiyyah salafiyyah.in

Последний пост
9 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 121
+2 за 5 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
260
19 постов
Вовлечённость
23,2%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
205
1/48двое суток
234
1/72трое суток
253

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 🔸நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் ரஹிமஹுல்லாஹ்🔸 கேள்வி: ஒரு நலவிற்காக சில வேளைகளில் (ஒரு சில) ஸுன்னாஹ்களை (செய்யாது) விட்டு விடுவது அதனை நிறைவேற்றுவதை விட மிகப் பெரியதா? பதில்: ஆம். (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்த அல்லது ஒரு நலவிற்காக (சில) ஸுன்னாஹ்களை விட்டுவிடுவது ஆகுமானதாகும். ஆனால், ஸுன்னாஹ்களை மரணிக்கச் செய்வது (என்பது அதன் பொருள்) அல்ல. ஏனெனில் (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுவதற்காக அதை ஒரு (குறிப்பிட்ட) காலத்திற்கு விடுவதற்கும், ஸுன்னாஹ் மரணித்திடும் அளவிற்கு அதனை முற்றிலுமாக விட்டுவிடுவதற்கும் மத்தியில் வேறுபாடு உள்ளது. எனவே ஸுன்னாஹ்வை தெளிவுபடுத்துவதற்கு ஒரு மனிதருக்கு திடமான மன உறுதி இருந்து, (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக சில வேளைகளில் அதனை விட்டுவிடுவதானது, அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இதன் காரணமாகவே நபி ﷺ அவர்கள் குறைஷ் (கோத்திரத்தார் ஒரு சில மாற்றங்களுடன்) கட்டிய க’அபாவை இடித்து விட்டு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உடைய அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப நாடினார்கள். எனினும், ஃபித்னா ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அதனை விட்டு விட்டார்கள். ஆயிஷா ரதியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அன்னார் கூறினார்கள்: لولا أن قومك حديثوا عهد بكفر لهدمت الكعبة وبنيتها على قواعد إبراهيم وجعلت لها بابين باباً يدخل منه الناس وباباً يخرج منه “உன் சமூகத்தார் இறை நிராகரிப்பிலிருந்து சமீபமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையெனில், நான் க’அபாவை இடித்துவிட்டு, இப்ராஹீமுடைய அடித்தளத்தின் மீது அதனைக் கட்டியெழுப்பி, மக்கள் நுழைவதற்கு ஒரு வாசலும், வெளியேறுவதற்கு ஒரு வாசலும் என இரு வாசல்களை அதற்கு நான் அமைத்திருப்பேன்.” இதானது இதிலிருந்து நம்மால் ஒரு பொதுவான விதியை எடுக்க இயலுமான அடிப்படையாகும்; அது (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக சில ஸுன்னாஹ்களை விட்டுவிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதாகும். ஏனெனில், சிறப்பில் குறைந்த மதிப்புடைய ஒரு விடையத்திற்கு சிறந்த ஒரு விடையத்தை விடவும் சிறப்பிற்குரியதாக ஆக்குகின்ற (காரணம்) ஒன்று ஏற்படக்கூடும். ஆனால் அதன் பொருளானது ஸுன்னாஹ் மரணிக்கின்ற அளவிற்கு அதனை நாம் முற்றிலுமாக விட்டுவிடுவது என்பதல்ல. ஏனெனில் இது சத்தியத்தை மறைப்பதையும், ஷரீ’அஹ்வில் சிலவற்றை மரணிக்கச் செய்வதையும் அவசியமாக்கும். (சூழ்நிலைகளைக் கருதி) உபாயமாக மட்டும் நடந்து கொள், சமரசம் செய்யாதே; உபாயமாக நடந்து கொள், சமரசம் செய்திடாதே. எனவே ஸுன்னாஹ்வை தெளிவுபடுத்துவதற்கு ஒரு வாய்ப்பை நீ கண்டால் (அதனை) செய்திடு. மேலும் (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதற்காக இந்த சில ஸுன்னாஹ்களை முழுமையாக அல்லாமல் (சில சமயங்களில்) விட்டுவிடுவதை, சிறந்த ஒன்றிலிருந்தும், இன்னும் அல்லாஹ்வின் பக்கம் செய்யும் அழைப்புப்பணியிலிருந்தும் உள்ளதாக நீ கண்டால், (அதனை விட்டுக் கொள்ளலாம்). இது நல்லதாகும்; அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆம், முதலாவதிற்கு நாம் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உதாரணமாக: இரு காலணிகளுடன் தொழுவது; இரு காலணிகளுடன் தொழுவதென்பது ஸுன்னாஹ் கொண்டுவந்த ஒன்றாகும். நபி ﷺ அவர்கள் காலணிகளுடன் தொழுபவர்களாக இருந்தார்கள் என்று அவர்களைத் தொட்டும் திட்டமாக உறுதியாகியுள்ளது, இன்னும் நபி ﷺ அவர்கள் காலணிகளுடன் தொழும்படி ஏவியுள்ளார்கள். خالفوا اليهود فإنهم لا يصلون في نعالهم “யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில், அவர்கள் காலணிகளுடன் தொழ மாட்டார்கள்” என்று கூறினார்கள். ஆனால் இதிலிருந்து (இந்த ஸன்னாஹ்வை நிலைநாட்டுவதிலிருந்து) ஃபித்னாவும், சத்தியத்தின் மீதும், அதன் மக்களின் மீதும் வெறுப்பும் அவசியமாகும் என்றால், இந்த ஃபித்னாவை அகற்றுவதற்காக அதனை நாம் விட்டுவிடுவதில் எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் இதன் பொருளாவது நாம் ஸுன்னாஹ்வை மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடாது, அதனை வெளிப்படுத்தக்கூடாது என்பதல்ல. மாறாக நாம் அவற்றை (மக்களுக்கு) தெளிவுபடுத்துவோம், இன்னும் வெளிப்படுத்துவோம். ஆனால் நாம் இதைச் செய்து அது வெறுப்பு, பகைமை, குரோதம் மற்றும் வெருண்டோடுதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றால், (இச்சந்தர்ப்பத்தில்) ஒரு மனிதர் காலணிகளை அணிந்து தொழுவதை விட (மக்களுக்கு மத்தியில்) இணக்கம் ஏற்படுத்துவதே மிகவும் முக்கியமானதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 🔗 https://youtu.be/Y8v47K6Vvk0?si=tOB3zsyGSeGtqBnW 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/mvfr4za4 🌐 வளைதளம்: salafiyyah.in

  • நலவைக் கருத்தில் கொண்டு சில சமயங்களில் ஒரு சில ஸுன்னாஹ்களை நிலைநாட்டாமல் விட்டு விடுவது ஆகுமானதா? - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் https://t.me/salafimaktabahmpm/1489

  • 9 авг.125из salafirefutationstamil

    அசத்தியவாதிகளில் பலர் தங்களது உலக ஆதாயங்கள் சென்று விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே சத்தியத்தை (பின்பற்றாது) விட்டு விடுகின்றனர். இல்லையேல் அவர்கள் சத்தியத்தை அறிகின்றனர், இன்னும் அதனை (உண்மை என) நம்பிக்கை கொள்கின்றனர். - ஸுலைமான் இப்னு அப்தில்லாஹ் ஆலுஷ் ஷைஃக் رحمه الله 📖 அத்துரர் அஸ்ஸனிய்யாஹ் 8/124 T.me/salafirefutationstamil

  • ➡️ மேலும் அவற்றிலே சில ஷிர்கிற்கு இட்டுச் செல்லும் காரணிகளிலிருந்து உள்ளவை: கப்ரின் மீது (கட்டிடங்களைக்) கட்டுவது, இன்னும் அதனிடத்தில் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வது போன்றவை. ➡️ மேலும் அவற்றிலே சில கொள்கைரீதியான பாவமானவை: தங்களின் கூற்றுகளிலும், நம்பிக்கைகளிலும் ஷரீ’அஹ்வின் ஆதாரங்களுக்கு மாற்றமான ஃகவாரிஜ், கதரிய்யாஹ் மற்றும் முர்ஜியாஹ்களின் பித்'அஹ்களைப் போன்றவை. ➡️ மேலும் அவற்றிலே சில (செயல்ரீதியான) பாவமானவை: துறவறம், சூரிய (வெயிலில்) நின்றபடி நோன்பு நோற்பது, இன்னும் உடலுறவின் இச்சையை துண்டிக்கும் நோக்கத்துடன் காயடிப்பது போன்ற பித்’அஹ்களாகும். 📖 அல்இர்ஷாத் இலா ஸஹீஹில் இஃதிகாத், பக்கம்: 321, 322 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/y9mpcf25 🌐 வளைதளம்: salafiyyah.in

  • 🔸பித்’அஹ்வின் வகைகளும் அதனுடைய மார்க்கச் சட்டமும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்🔸 புதுமையைத் தோற்றுவிப்பதானது இருவகைப்படும்: [முதல் வகை]: பழக்கவழக்கங்களில் புதுமையைத் தோற்றுவிப்பது. நவீன கண்டுபிடிப்புகளை தோற்றுவிப்பது போன்று, மேலும் அதில் பல்வேறு வகையான அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளும் அடங்கும். இது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்; ஏனெனில் பழக்கவழக்கங்களுடைய விடயத்தில் அடிப்படை விதி என்பது அனுமதியாகும். [இரண்டாவது வகை]: மார்க்கத்தில் புதுமையைத் தோற்றுவிப்பது. இது ஹராமாகும்; ஏனெனில் இது விடயத்தில் அடிப்படை விதி என்பது தவ்கீஃப் (வஹீயில் வந்திருப்பவற்றுடன் நின்று கொள்வது) ஆகும். (நபி) ﷺ அவர்கள் கூறினார்கள்: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد “எவரொருவர் நமது இந்த விவகாரத்தில் (ஷரீ’அஹ்வில்) அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவாரோ, அது நிராகரிக்கப்பட்டதாகும்”. மேலும் மற்றுமொரு அறிவிப்பில்: من عمل عملاً ليس عليه أمرنا فهو رد "நம்முடைய விடயத்திற்கு (ஷரீ’அஹ்விற்கு) ஒத்தில்லாத ஒரு அமலை எவர் செய்வாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்" (என்று வந்துள்ளது). பித்'அஹ்களின் வகைகள்: மார்க்கத்தில் பித்'அஹ்வானது இரு வகைப்படும்: முதல் வகை: கூற்றுரீதியான கொள்கைசார் பித்'அஹ்; ஜஹ்மிய்யாஹ், முஃதஸிலாஹ், ராஃபிதாஹ் மற்றும் இதர வழிதவறிய கூட்டங்களின் கூற்றுகள் மற்றும் அவற்றின் கொள்கைகளைப் போன்றவை. இரண்டாவது வகை: வணக்க வழிபாடுகளில் உள்ள பித்'அஹ்; அல்லாஹ் மார்க்கமாக்காத ஒரு வழிபாட்டைக் கொண்டு அவனுக்கு வணக்க வழிபாடு செய்வது போன்று. அவை பல வகைகளாகும்: 1️⃣ வழிபாட்டின் அடிப்படையில் உள்ளவை: அதாவது மார்க்கத்தில் அதற்கென எந்த ஒரு அடிப்படையும் இல்லாத ஒரு வழிபாட்டைத் தோற்றுவிப்பது; மார்க்கமாக்கப்படாத ஒரு தொழுகையை அல்லது மார்க்கமாக்கப்படாத ஒரு நோன்பை அல்லது மவ்லித் மற்றும் அதல்லாத மார்க்கமாக்கப்படாத பண்டிகைகளை தோற்றுவிப்பது போன்று. 2️⃣ மார்க்கமாக்கப்பட்ட ஒரு வழிபாட்டில் அதிகப்படுத்துவதில் உள்ளவை: உதாரணமாக ‘துஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில் ஐந்தாவது ஒரு ரக்’அஹ்வை - மறதியாக அல்லாமல் வழிபாடாக - அதிகப்படுத்துவது போன்று. 3️⃣ வழிபாட்டை நிறைவேற்றும் விதத்தில் உள்ளவை; அதாவது மார்க்கமாக்கப்படாத விதத்தில் அதனை நிறைவேற்றுவது: அதானது மார்க்கமாக்கப்பட்ட ‘திக்ருகளை இனிமையான கூட்டுக்குரலில் நிறைவேற்றுவது போன்று, மேலும் வழிபாடுகளில் ரஸூல் ﷺ அவர்களின் ஸுன்னாஹ்வை விட்டும் வெளியேற்றும் அளவிலான கடுமையை நஃப்ஸின் மீது காட்டுவது போன்று. 4️⃣ மார்க்கமாக்கப்பட்ட ஒரு வழிபாட்டிற்கு ஷரீ'அஹ் பிரத்யேகமாக்கிடாத ஒரு நேரத்தை பிரத்யேகமாக்குவதன் மூலம் உள்ளவை: ஷ'அபானின் நடுபகுதியினுடைய பகல் மற்றும் இரவினை, நோன்பு மற்றும் இரவுத் தொழுகையைக் கொண்டு பிரத்யேகமாக்குவது போன்று; ஏனெனில் நோன்பும், இரவுத் தொழுகையும் அவற்றின் அடிப்படையில் மார்க்கமாக்கப்பட்டவையே. எனினும் நேரங்களில் ஒரு நேரத்தைக் கொண்டு அதனை பிரத்யேகமாக்குவது என்பது ஆதாரத்தின் பக்கம் தேவையுடையதாக இருக்கின்றது. மார்க்கத்திலுள்ள அனைத்து வகைப்பட்ட பித்'அஹ்வுடைய சட்டம்: وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ ؛ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ “புதுமையான விடயங்களை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்; ஏனெனில் ஒவ்வொரு புதுமையும் பித்'அஹ்வாகும், மேலும் ஒவ்வொரு பித்'அஹ்வும் வழிகேடாகும்” மேலும் அவர்களது கூற்றான: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد “எவரொருவர் நமது இந்த விவகாரத்தில் (ஷரீ’அஹ்வில்) அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவாரோ, அது நிராகரிக்கப்பட்டதாகும்”. மேலும் மற்றுமொரு அறிவிப்பில்: من عمل عملاً ليس عليه أمرنا فهو رد "நம்முடைய விடயத்திற்கு (ஷரீ’அஹ்விற்கு) ஒத்தில்லாத ஒரு அமலை எவர் செய்வாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்" என்ற (நபி ﷺ) அவர்களின் கூற்றுகளின் காரணமாக மார்க்கத்திலுள்ள அனைத்து பித்’அஹ்வும் தடுக்கப்பட்டதும், வழிகேடுமாகும். மேலும் இந்த ஹதீஸ்களானது மார்க்கத்திலுள்ள ஒவ்வொரு புதுமையும் பித்'அஹ்வாகும், இன்னும் ஒவ்வொரு பித்'அஹ்வும் வழிகேடாகும், நிராகரிக்கப்பட்டதாகும் என்பதைக் காட்டுகின்றன. அதனுடைய பொருளாவது வழிபாடுபகள் மற்றும் கொள்கைகளிலுள்ள பித்’அஹ்கள் தடுக்கப்பட்டதாகும். எனினும் அத்தடையானது பித்'அஹ்வுடைய வகையைப் பொருத்து வேறுபடும். ➡️ அவற்றிலே சில தெளிவான குஃப்ரானவை: அடக்கம் செய்யப்பட்டவர்களின் பக்கம் நெருக்கத்தைத் தேடி கப்ருகளை தவாஃப் செய்வது, அவற்றிற்கு பலிப்பிராணிகள் மற்றும் நேர்ச்சைகளை முற்படுத்துவது, அவற்றில் அடக்கம் செய்யப்பட்டவர்களை அழைத்துப் பிரார்த்திப்பது, அவர்களைக் கொண்டு கஷ்டத்தைப் போக்கிட வேண்டுவது மேலும் ஜஹ்மிய்யாஹ் மற்றும் மு'ஃதஸிலாஹ்வில் வரம்புமீறியோரின் கூற்றுகளைப் போன்றவை.

  • பித்’அஹ்வின் வகைகளும் அதனுடைய மார்க்கச் சட்டமும் - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் https://t.me/salafimaktabahmpm/1484

  • العبادة مبنية على التوحيد، فكل عبادة لا توحيد فيها ليست بعبادة வணக்க வழிபாடானது தவ்ஹீதின் மீது கட்டப்பட்டுள்ளது. எனவே தவ்ஹீத் இல்லாத ஒவ்வொரு வணக்க வழிபாடும், நிச்சயமாக வணக்க வழிபாடல்ல. - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் رحمه الله 📖 அல்கவ்லுல் முஃபீத் 1/49 salafiyyah.in

  • 🔸தவ்ஹீத் இல்லாத த’அவா தலையில்லாத உடலைப் போன்றது! - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் ஹஃபிதஹுல்லாஹ்🔸 கேள்வி: (கேள்வியாளர்) கூறுகிறார்: சிறப்பிற்குரிய ஷைஃக் அவர்களே - அல்லாஹ் உங்களுக்கு தவ்ஃபீக் அளிப்பானாக - நம்முடைய காலத்தில் அழைப்பாளர்கள் அதிகமாகி விட்டனர். ஆனால் அவர்களில் குறைவானவர்களே தவ்ஹீதின் பக்கமும், அகீதாவின் பக்கம் த’அவா செய்கின்றனர். எனவே எவர் தவ்ஹீதை நோக்கி அழைப்பு செய்யவில்லையோ, அவர் ரஸூல்மார்களுக்கு மாறுசெய்தவராக கருதப்படுவாரா? மேலும் அவரின் த’அவாவை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? பதில்: (அத்தகையவர் குறித்து) எச்சரிக்கப்பட வேண்டும், ஆம். எவர் தவ்ஹீதின் பக்கம் த’அவா செய்யவில்லையோ, தவ்ஹீதானது கட்டாயம் இல்லை என்று கூறுவாரோ, மேலும் குற்றங்கள், பாவங்கள், வட்டி, விபச்சாரம் மற்றும் அது போன்றவற்றை குறித்து (மட்டும்) எச்சரிக்கை செய்வாரோ (அவர் எச்சரிக்கப்பட வேண்டும்). தலையில்லாமல் இருக்கும் உடலைப் போன்ற, இது ஒரு தலை இல்லாத த’அவாவாகும். தலை இல்லாமல் இருக்கும் உடலானது உயிரோடு இருக்குமா? இருக்காது, மய்யித்தான ஒன்றாகும். இது ஒரு மய்யித்தான த’அவாவாகும்; அதற்கு பின்னால் எந்தவொரு பயனும் இல்லை. மேலும் இது ரஸூல்மார்களின் த’அவாவிற்கு - அலைஹிமுஸ் ஸலாது வஸ்ஸலாம் - மாற்றமான ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் தவ்ஹீதைக் கொண்டு முதலாவதாக ஆரம்பிப்பார்கள்; தவ்ஹீதானது உறுதியாக நிலைபெற்று, தவ்ஹீதானது (வாழ்வில்) உண்மைப்படுத்தப்பட்டுவிட்டால், மக்களுக்கு அவர்களுடைய (மற்ற) மார்க்க விடயங்களை கற்பிப்பவர்களாக இருப்பார்கள். إن يكن أول ما تدعوهم إليه شهادة لا إله إلا الله فإن هم أجابوك لذلك فأعلمهم أن الله افترض عليهم خمس صلوات في اليوم إن هم أجابوك لذلك... “நீங்கள் அவர்களை எதை நோக்கி அழைக்கின்றீர்களோ அவற்றுள் முதலாவதாக ஷஹாதது லா இலாஹ இல்லல்லாஹ் இருக்கட்டும், அவர்கள் அதற்கு உனக்கு பதிலளித்தார்கள் என்றால், அல்லாஹ் அவர்களின் மீது ஐந்து நேரத் தொழுகைகளை ஒரு நாளில் கடமையாக்கி இருக்கின்றான் என்பதை அவர்களை அறியச் செய்வீராக - அவர்கள் அதற்கு உனக்கு பதிலளித்தார்கள் என்றால் -” ஆனால் அவர்கள் (அதற்கு) பதிலளிக்கவில்லை என்றால், எந்தவொரு பயனும் இல்லை. அவர்கள் இரவும் பகலும் தொழுதாலும் எந்தவொரு பயனும் இல்லை. எனவே, தவ்ஹீதைப் பற்றி கவனம் கொள்ளாத அனைத்து த’அவாவும், மய்யித்தான த’அவாவாகும்; அது எந்தவொன்றையும் ஒருபோதும் விளைவிக்காது, ஆம். கேள்வி: சிறப்பிற்குரிய ஷைஃக் அவர்களே - அல்லாஹ் உங்களுக்கு தவ்ஃபீக் அளிப்பானாக - சில அழைப்பாளர்கள் மக்களை தவ்ஹீதின் பக்கம் அழைக்காமல் இருக்கின்றனர். மாறாக அவர்களின் அதிகமான வகுப்புகளிலும், ஃகுத்பாக்களிலும் நற்பண்புகளின் பக்கமே த’அவாவை மேற்கொள்கிறார்கள், அவர்கள் தவ்ஹீத்தைப் பற்றிப் பேசினாலும் அதை பிரத்யேகமாக (எடுத்துரைப்பதில்லை). அவர்களைக் குறித்தான கருத்தென்ன? பதில்:  இந்த த’அவாவானது எந்த பலனையும் அளிக்காது. இதானது தலையில்லாத இறந்து போன ஒரு உடலைப் போன்றது. ஒரு உடலானது அதனுடைய தலை வெட்டப்பட்டுவிட்டதெனில், அதில் எந்தவொரு பயனும் மீதமிருக்காது. எனவே தவ்ஹீத் இல்லாத த’அவா என்பது தலை துண்டிக்கப்பட்ட உடலைப் போன்றது, (அது) எந்த பயனுமில்லாத அலுப்பே. அவர்களுடைய நற்குணங்கள் நல்லதாயிற்று, உண்மை பேசுகிறார்கள், தொழுகை, ஸதகாக்களை அதிகப்படியாக செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஷிர்க் அவரிடமிருந்தால் அவையனைத்தும் அழிக்கப்பட்டு விடும் ஏற்றுக்கொள்ளப்படாது, அவரது அமல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். எனவே, அமல்களைச் சரிசெய்யக்கூடியது தவ்ஹீதே, மேலும் அதனை அழிக்கக்கூடியது ஷிர்க்கே. இது விடயத்தில் அவர்கள் கவனம் கொள்வது கடமையாகும். தவ்ஹீத் இல்லாத த’அவா, இல்லாத ஒரு த’அவாவைப் போன்றது. மாறாக தவ்ஹீத் இல்லாத த’அவாவானது, அது இருப்பதை விட அது இல்லாமல் இருப்பது சிறந்தது! ஏனெனில் அது மக்களை வழிகெடுக்கும், (அவர்களோ) அதனை உண்மை என எண்ணுவார்கள். ஆம். ரஸூல்மார்கள் முதலில் தவ்ஹீதுடன் (த’அவாவை) தொடங்கினர். நீ ரஸூல்மார்களுடைய வழிமுறையல்லாமல் - அலைஹிமுஸ் ஸலாது வஸ்ஸலாம் - வேறொரு வழிமுறையைக் கொண்டு ரஸூல்மார்களுக்கு மாறு செய்கிறாயா!? இது இயலாத ஒன்றாகும், ஆம். 🔗 https://youtu.be/bH49j2WcY4I?si=3umPOHLysCMt6PbB 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/4xv5h8dy 🌐 வளைதளம்: salafiyyah.in

  • தவ்ஹீத் இல்லாத த’அவா தலையில்லாத உடலைப் போன்றது! - அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் https://t.me/salafimaktabahmpm/1479

  • كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه நபி ﷺ அவர்கள் அவர்களுடைய எல்லா நேரங்களிலும்/நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள். 📖 முஸ்லிம் 373 அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் கூறினார்கள்: இதில், ஒரு மனிதரை அல்லாஹ் அவரை அதிகமாக 'திக்ர் செய்வதற்கு தவ்ஃபீக் அளித்தானெனில், அவருடைய நேரத்தில் அல்லாஹ் பரக்காஹ் செய்வான், மேலும் அவருடைய அமலிலும் பரக்காஹ் செய்வான் (என்பதற்கு ஆதாரம் உள்ளது). 📖 கிதாபுத் 'தஹாரா வல்ஹய்'த்-10a salafiyyah.in

  • {தன் முகத்தை அல்லாஹ்வுக்காக பணியவைப்பாரோ} இதுவே இஃக்லாஸாகும், {அவர் நன்மை செய்பவராக இருக்கின்ற நிலையில்} இதுவே (நபிவழியைப்) பின்பற்றுதலாகும்; அல்லாஹ்வுடைய - ஜல்ல வ அலா - ஷரீ'அஹ்விற்கு ஒத்துப்போவதாக இருக்கும். مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ ““யார் இஸ்லாத்தில் ஒரு நல்ல ஸுன்னாஹ்வை (நடைமுறையை) தொடங்கி வைப்பாரோ, அவருக்கு அதற்கான கூலியும், அவருக்குப் பின் அதைச் செயல்படுத்தி நடப்பவர்களின் கூலியும் கிடைக்கும் - அவர்களுடைய கூலியிலிருந்து எதுவும் குறைந்துவிடாமல்” என்ற ஹதீஸைக் குறித்து என்ன (கூறுகிறீர்கள்)?” என்று அவரது கேள்வியில் உள்ள அவருடைய கூற்றைப் (பொறுத்தமட்டில்), (அதன் மூலம்) நாடப்படுவதாவது: ஸுன்னாஹ்வை உயிர்ப்பித்தலாகும், நபி - அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் - அவர்களின் ஸுன்னாஹ்களை உயிர்ப்பித்தலாகும். மக்கள் அமல் செய்யாமல் இருக்கும் எத்தனை ஸுன்னாஹ்கள் உள்ளது?! யார் அவற்றை உயிர்ப்பித்து, மக்களானவர்கள் அவற்றைக் கொண்டு அமல் செய்பவர்களாக ஆகிவிட்டால், அவருக்கு அவற்றுடைய கூலியும், அவருக்குப் பின் அவற்றைச் செயல்படுத்தி நடப்பவர்களின் கூலியும் கிடைக்கும் - அவற்றை அமல் செய்பவர்களுடைய கூலியிலிருந்து எதையும் அது குறைத்திடாது. எனவே யார் நபி ﷺ அவர்களின் ஸுன்னாஹ்களை உயிர்ப்பிப்பாரோ, அவருக்கு அதற்கான கூலியுண்டு. மேலும் யார் பித்'அஹ்கள் மற்றும் புதுமையான விடயங்களில் ஒரு கெட்ட ஸுன்னாஹ்வை (நடைமுறையை) உயிர்ப்பிப்பாரோ, அவர் மீது அதன் பாவமும், அவருக்குப் பின் அதைச் செயல்படுத்தி நடப்பவர்களின் பாவமும் சுமத்தப்படும். இன்னும் அது பாவமான காரியங்களிலுள்ள கெட்ட ஸுன்னாஹ்வாகா இருந்தாலும் சரியே, அவர் மீது அதன் பாவமும், அவருக்குப் பின் அதைச் செயல்படுத்தி நடப்பவர்களின் பாவமும் சுமத்தப்படும். “யார் ஒரு கெட்ட ஸுன்னாஹ்வை (நடைமுறையை) தொடங்கி வைப்பாரோ” என்ற நபி ﷺ அவர்களின் கூற்றினுள் பாவங்களும் நுழைவதற்கான ஆதாரம்: இப்னு மஸ்'ஊத் ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டு பு’காரி மற்றும் முஸ்லிமில் உள்ள (ஹதீஸ் ஆகும்). لا تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا إِلَّا كَانَ عَلَى ابْنِ آدَمَ الْأَوَّلِ كِفْلٌ مِنْ دَمِهَا ؛ لِأَنَّهُ كَانَ أَوَّلَ مَنْ سَنَّ الْقَتْلَ" நபி ﷺ கூறினார்கள்: “எந்த ஒரு ஆன்மாவும் அநியாயமாக கொள்ளப்படுவதில்லை, ஆதமுடைய முதல் மகனுக்கு அதன் இரத்தத்திலிருந்து (பாவத்திலிருந்து) ஒரு பங்கு இருந்தே தவிர; ஏனெனில் அவனே முதன்முதலில் (அநியாயமாக) கொலை செய்வதை தொடங்கி வைத்தான்.” 🔗 https://t.me/ibnhezam/18240 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/4uk7nyut 🌐 வளைதளம்: salafiyyah.in

  • 🔸பித்’அஹ்வுடைய வரைவிலக்கணம் யாது? - அஷ்ஷைஃக் இப்னு ஹிஸாம் ஹஃபிதஹுல்லாஹ்🔸 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 📩 கேள்வி: கேள்வி கேட்கும் சகோதரர் கூறுகின்றார்: பித்'அஹ்விற்கு பொருத்தமான வரைவிலக்கணம் யாது? மேலும் “யார் இஸ்லாத்தில் ஒரு நல்ல ஸுன்னாஹ்வை (நடைமுறையை) தொடங்கி வைப்பாரோ, அவருக்கு அதற்கான கூலியும், அவருக்குப் பின் அதைச் செயல்படுத்தி நடப்பவர்களின் கூலியும் கிடைக்கும்…” என்ற நபி ﷺ அவர்களின் கூற்றைக் குறித்து என்ன (கூறுகின்றீர்கள்)? 📝 பதில்: பித்'அஹ்விற்கு பொருந்திக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணமாவது, அல்லாஹ்விற்கு - ஜல்ல வ அலா - அவனது ஷரீ'அஹ்விலிருந்து இல்லாததைக் கொண்டு வணக்க வழிபாடு செய்வதாகும்; அது ஒரு நம்பிக்கையைக் கொண்டோ அல்லது ஒரு சொல்லைக் கொண்டோ அல்லது ஒரு செயலைக் கொண்டோ அல்லது (ஒன்றை) விடுவதைக் கொண்டோ இருக்கலாம். இந்த வரைவிலக்கணத்திற்கான ஆதாரமாவது: مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ “நம்முடைய விடயத்திற்கு ஒத்தில்லாத ஒரு அமலை எவர் செய்வாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்” என்ற (நபி) ﷺ அவர்களின் கூற்றாகும். {நமது விடயத்திற்கு ஒத்தில்லாத} அதாவது: நமது ஷரீ'அஹ்விற்கு (ஒத்தில்லாத). இது ‘ஆஇஷா ரதியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து பு’காரி மற்றும் முஸ்லிமில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குறிப்பிட்ட வார்த்தையானது முஸ்லிமுடையதாகும். மேலும் ஸஹீஹைன் (பு’காரி மற்றும் முஸ்லிமு)டைய வார்த்தையானது: مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ எவரொருவர் நமது இந்த விவகாரத்தில் (ஷரீ’அஹ்வில்) அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குவாரோ, அது நிராகரிக்கப்பட்டதாகும். எனவே அல்லாஹ்வின் - ஜல்ல வ அலா - ஷரீ'அஹ்விலிருந்து இல்லாதவற்றைக் கொண்டு யார் அவனுக்கு வணக்க வழிபாடு செய்வாரோ, அது அவரிடமிருந்து நிராகரிப்பட்டதாகும். இதுவே பித்'அஹ்வின் வரைவிலக்கணமாகும்; அது ஒரு நம்பிக்கையைக் கொண்டோ அல்லது ஒரு சொல்லைக் கொண்டோ அல்லது ஒரு செயலைக் கொண்டோ, இன்னும் (ஒன்றை) விடுவதைக் கொண்டும் கூட இருக்கலாம். அவர் நபி ﷺ அவர்கள் அல்லாஹ்விற்கு வணக்க வழிபாடு செய்யும் ரீதியில் கைவிடாத ஒரு செயலை கைவிட்டு அல்லாஹ்விற்கு வணக்க வழிபாடு செய்கின்றார். எனவே அவரும் பித்'அஹ்வில் விழுகின்றார். சில ஸஹாபாக்கள் இறைச்சியை விட்டுவிடவும், மற்றுமொருவர் திருமணத்தை விட்டுவிடவும், மூன்றாமவர் தூக்கத்தை விட்டுவிடவும் நாடிய பொழுது, நபி ﷺ அவர்கள்: “ஆனால் நான் தொழுகின்றேன், தூங்கவும் செய்கின்றேன், நோன்பு நோற்கின்றேன், நோன்பை விட்டும் விடுகின்றேன், மேலும் பெண்களைத் திருமணம் செய்கின்றேன் - மற்றொரு அறிவிப்பில் - இறைச்சியையும் உண்ணுகின்றேன். எனவே யார் எனது ஸுன்னாஹ்வைப் புறக்கணிப்பாரோ, அவர் என்னை சார்ந்தவரல்லர்” என்று கூறினார்கள். ஆகவே பித்'அஹ்வின் வரைவிலக்கணமானது, அல்லாஹ்வுடைய ஷரீ'அஹ்விலிருந்து இல்லாததைக் கொண்டு அல்லாஹ்விற்கு - ஜல்ல வ அலா - வணக்க வழிபாடு செய்வதாகும்; அது ஒரு நம்பிக்கையைக் கொண்டோ அல்லது ஒரு சொல்லைக் கொண்டோ அல்லது ஒரு செயலைக் கொண்டோ அல்லது (ஒன்றை) விடுவதைக் கொண்டோ இருக்கலாம். இதன் காரணமாகவே இஃக்லாஸுடன் ஒரு அமல் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளிலிருந்து உள்ளதாவது, அது நபி ﷺ அவர்களின் ஸுன்னாஹ்வைப் பின்பற்றியதாகவும் இருப்பதாகும்; இஃக்லாஸ் மற்றும் ஷரீ'அஹ்வுடன் ஒத்திருத்தல். ஒரு முஃமினிடமிருந்து ஒரு அமலானது அல்லாஹ்விடத்தில் - ஜல்ல வ அலா - ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளிலிருந்து உள்ளதாவது, அவர் அதிலே உளத்தூய்மை உடையவராக இருக்க வேண்டும், மேலும் அவர் மார்க்க வழியின் மீதிருக்க வேண்டும். எனவே ஷரீ'அஹ்விலிருந்து இல்லாதவற்றைக் கொண்டு அல்லாஹ்விற்கு வணக்க வழிபாடு செய்யக்கூடாது. அல்லாஹு த'ஆலா கூறியுள்ளான்: فَمَنْ كَانَ يَرْجُوْا لِقَآءَ رَبِّهٖ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًـا “ஆகவே, எவர் தன் இறைவனை சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ, அவர் நல்லமல்களைச் செய்யவும்.” (அல்குர்ஆன் 18:110)  அவனது கூற்றான அவர் {நல்லமல்களை செய்யவும்} அதனுடைய பொருளாவது: ஷரீ'அஹ்விற்கு ஒத்திருப்பதாகும். وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏ “தன் இறைவனின் வணக்க வழிபாட்டில் அவர் எவரையும் இணையாக்க வேண்டாம்”. (அல்குர்ஆன் 18:110) அதிலே அவர் அல்லாஹ்விற்கு உளத்தூய்மை உடையவராக இருப்பதாகும். மேலும் அல்லாஹ் ஸுப்ஹானஹு கூறியுள்ளான்: بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌‏ அவ்வாறன்று! எவர் தன் முகத்தை அவர் நன்மை செய்பவராக இருக்கின்ற நிலையில் அல்லாஹ்வுக்காக பணியவைப்பாரோ – அவருடைய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்குண்டு, (இத்தகையோர்) அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:112)

  • பித்’அஹ்வுடைய வரைவிலக்கணம் யாது? - அஷ்ஷைஃக் இப்னு ஹிஸாம் ஹஃபிதஹுல்லாஹ் https://t.me/salafimaktabahmpm/1475

  • மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ் pinned «▪️இஜ்மா'வுடைய வரைவிலக்கணம் யாது? மேலும் அது ஒரு ஆதாரமா? - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் https://t.me/salafimaktabahmpm/1248 ▪️இந்த உம்மத் ஒருபோதும் வழிகேட்டின் மீது ஒன்றினையாது - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் https://t.me/salafimaktabahmpm/1257 ▪️ஸுன்னாஹ்வை…»

  • ▪️இஜ்மா'வுடைய வரைவிலக்கணம் யாது? மேலும் அது ஒரு ஆதாரமா? - அஷ்ஷைஃக் முஹம்மத் இப்னு ஹிஸாம் https://t.me/salafimaktabahmpm/1248 ▪️இந்த உம்மத் ஒருபோதும் வழிகேட்டின் மீது ஒன்றினையாது - அஷ்ஷைஃக் இப்னு உ'தைமீன் https://t.me/salafimaktabahmpm/1257 ▪️ஸுன்னாஹ்வை நோக்கிய பாதையை அடைவதற்கு இஜ்மா'வைப் பற்றிக் கொள்ள வேண்டும் https://t.me/salafimaktabahmpm/1286 ▪️ஆதாரம் என்பது ஸலஃபுகள் எதன்மீது இருந்தார்களோ அதைக் கொண்டு தானே தவிர பின்வந்தவர்கள் செய்யக்கூடியவற்றைக் கொண்டல்ல https://t.me/salafimaktabahmpm/1277 ▪️அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய காலத்தில் இஜ்மா’விற்கான தேவை இருக்கவில்லை மேலும் இஜ்மா’வைக் குறித்து எழுப்பப்படக்கூடிய ஓர் சந்தேகத்திற்கு மறுப்பு - அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்ருஹைய்லி https://t.me/salafimaktabahmpm/1326 ▪️ஒரு விடயத்தில் இஜ்மா' உறுதியாகுவதில் தான் உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிகழும் அதனுடைய ஆதாரத்தன்மையில் அல்ல - அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்ருஹைய்லி https://t.me/salafimaktabahmpm/1279 ▪️ஸலஃபுகளுடைய இஜ்மா’விற்குப் பிறகு ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடானது நிச்சயமாக பிழையானதே - அல்இமாம் இப்னு தைமிய்யாஹ் https://t.me/salafimaktabahmpm/1255 https://t.me/salafimaktabahmpm/1256 ▪️சஹாபாக்கள் ஒருமித்திருந்த விடயங்களில் அவர்களுடன் மாறுபடுவதற்கு எந்த ஒருவருக்கும் அதிகாரம் இல்லை - அல்இமாம் இப்னு தைமிய்யாஹ் https://t.me/salafimaktabahmpm/1252 ▪️ஸலஃபுகள் வெளிப்படையான பொருளின் மீது எடுத்துக் கொள்வதில் ஒருமித்திருந்த ஒரு மார்க்க ஆதாரத்தைத் திரிப்பதற்கு எந்த ஒருவருக்கும் அதிகாரமில்லை - அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி https://t.me/salafimaktabahmpm/1472 ▪️வழிகெட்டக் கூட்டங்களைத் தவிர வேறவரும் இஜ்மா'வை மறுக்க மாட்டர் - அஷ்ஷைஃக் அல்அல்பானி https://t.me/salafimaktabahmpm/1470 ▪️அல்லாஹ் அல்லாதோரை அழைத்துப் பிரார்த்தித்தால் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமா பயனளிக்காது என்பதைக் குறித்தான இஜ்மா' https://t.me/salafimaktabahmpm/1272 https://t.me/salafimaktabahmpm/1273 ▪️தனக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் இடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடத்தில் து'ஆ கேட்பது, ஷஃபாஅத் கேட்பது, தவக்குல் வைப்பது போன்ற இபாதத்களை செய்பவர் காஃபிர் ஆகிவிடுவார் என்பதைக் குறித்தான இஜ்மா' https://t.me/salafimaktabahmpm/1275 https://t.me/salafimaktabahmpm/1276 ▪️அல்லாஹ் வானத்தின் மீதிருக்கின்றான் என்பதைக் குறித்தான இஜ்மா' https://t.me/salafimaktabahmpm/1261 https://t.me/salafimaktabahmpm/1262 https://t.me/salafimaktabahmpm/1264 https://t.me/salafimaktabahmpm/1265 https://t.me/salafimaktabahmpm/1266 https://t.me/salafimaktabahmpm/1267 https://t.me/salafimaktabahmpm/1268 https://t.me/salafimaktabahmpm/1269 https://t.me/salafimaktabahmpm/1270

  • 🔸ஸலஃபுகள் வெளிப்படையான பொருளின் மீது எடுத்துக் கொள்வதில் ஒருமித்திருந்த ஒரு மார்க்க ஆதாரத்தைத் திரிப்பதற்கு எந்த ஒருவருக்கும் அதிகாரமில்லை - அஷ்ஷைஃக் ஸுலைமான் அர்ருஹைலி🔸 அல்லாஹ் அஸ்ஸ வஜலுடைய பண்புகளானது, அவற்றுடைய வெளிப்படையான பொருளின் மீது அவற்றை உறுதிப்படுத்துவதில் ஸலஃபுகள் திட்டமாக ஒருமித்துள்ளனர். அல்லாஹ் அஸ்ஸ வஜலுடைய பண்புகளானது, அவற்றுடைய வெளிப்படையான பொருளின் மீது அவற்றை உறுதிப்படுத்துவதில் ஸலஃபுகள் திட்டமாக ஒருமித்துள்ளனர். எனவே, அவற்றைத் திரிப்பதற்கு எந்த ஒருவருக்கும் அதிகாரமில்லை. அவர் ஆதாரம் என்று நினைப்பதைக் கொண்டோ அல்லது ஆதாரமின்றியோ (அவ்வாறு மாற்று விளக்கம் கொடுப்பதற்கு அதிகாரமில்லை). அவற்றைத் திரிப்பது எந்த விதத்திலும் சரியாகாது, அன்னவர் நூறு ஆதாரத்தைக் கொண்டு வந்தாலும் சரியே! நம்மிடத்தில் ஒருவர் வந்து, அல்லாஹ்வுடைய கையிற்கு ‘அல்லாஹ்வுடைய ஆற்றல்’ என மாற்று விளக்கம் அளித்து, ‘கை’ என்பது ‘ஆற்றல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் என அரபி மொழியிலிருந்து நம்மிடம் நூறு ஆதாரத்தை கொண்டு வந்தாலும், நிச்சயமாக நாம் அவரிடமிருந்து இந்த திரித்தலை ஏற்றுக்கொள்ள மாட்டோம், இன்னும் அதற்கு சரி என்றோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றோ பெயர் கொடுக்க மாட்டோம். ஏனெனில், அதை விட மிகவும் வலுவான ஒன்றைக் கொண்டு அது எதிர்க்கப்பட்டுள்ளது, அதுவே ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் - அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக - (அல்லாஹ்வுடைய பண்புகளை) திரிக்காததன் மீதான இஜ்மா’ ஆகும். இது கண்டிப்பாக அறியப்பட வேண்டிய, விளங்கப்பட வேண்டிய வரையறையாகும். ஏனெனில், நிச்சயமாக இது மாற்று விளக்கம் கொடுக்கக்கூடிய விடையத்தில், முக்கியத்துவத்தில் மிக உயர்ந்ததாகும். (அதாவது) வெளிப்படையான பொருளின் மீது (எடுத்துக் கொள்வதில்) இஜ்மா’ அதனை முந்தியிருக்குமென்றால், மாற்று விளக்கமானது முற்றிலுமாக கூடாத ஒன்றாகிவிடும். வெளிப்படையான பொருளின் மீது (எடுத்துக் கொள்வதில்) இஜ்மா’ அதனை முந்தியிருக்குமென்றால், மாற்று விளக்கமானது முற்றிலுமாக கூடாத ஒன்றாகிவிடும். எனவே, முன்சென்றவர்கள் வெளிப்படையான பொருளின் மீது (எடுத்துக் கொள்வதில்) ஒருமித்திருந்த ஒரு மார்க்க ஆதாரத்தைத் திரிப்பதற்கு எந்த ஒருவருக்கும் அதிகாரமில்லை. மாறாக, வெளிப்படையான பொருளின் மீது (எடுத்துக் கொள்வதில்) உள்ள இஜ்மா'விற்கு மாற்றமான எல்லா மாற்று விளக்கமும் செல்லாததாகும், அன்னவர் எவ்வளவுதான் ஆதாரத்தைக் கொண்டு வந்தாலும் சரியே, நிச்சயமாக அது ஒப்புக்கொள்ளப்படாது. ஆம். https://youtube.com/shorts/b_f-My-5gQw?si=3EVBWqJ3mMbdqtWK

  • 3 июл.300из salafirefutationstamil

    🔸வழிகெட்டக் கூட்டங்களைத் தவிர வேறவரும் இஜ்மா'வை மறுக்க மாட்டர் - அஷ்ஷைஃக் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ்🔸 கேள்வியாளர்: மத்ஹப்களுடைய இமாம்களில் யார் இஜ்மா'விற்கு ஆதாரத்தன்மை இல்லை எனக் கூறியுள்ளார்? அதோடு (அதற்கான) மூலத்தை சுட்டிக்காட்டுங்கள். அஷ்ஷைஃக்: வழிகெட்ட கூட்டங்களைத் தவிர வேறு எந்த ஒருவரும் (இஜ்மா'வானது மார்க்க) ஆதாரத்தன்மை அற்றது என்று பேசமாட்டார். (மத்ஹப்களுடைய) நான்கு இமாம்கள் மற்றும் அவர்கள் அல்லாத மற்ற (இமாம்களைப்) பொறுத்தவரையில், அவர்கள் இஜ்மா'வை (ஆதாரம்) எனக் கூறுகின்றனர். இஜ்மா’ என்பது உறுதியான ஒரு விடயமாகும் - நாம் என்றென்றும் எப்போதும் கூறுவது போல - நாங்கள் குர்ஆன் ஸுன்னாஹ்வின் பால் அழைப்போம்; இது மட்டுமல்ல மாறாக (அவ்விரண்டையும்) ஸலஃபுஸ் ஸாலிஹுடைய வழிமுறையில் (விளங்கிக் கொள்வதன் பால் அழைப்போம்). அது ஏனெனில், அனைத்து இஸ்லாமியப் பிரிவுகளும் - அதனுடைய புதியதும், அதனுடைய பழைமையானதும் - அவர்களில் “நாங்கள் குர்ஆன் ஸுன்னாஹ்வை கருத்தில் கொள்ள மாட்டோம்” என்று கூறுகின்றவரை நீங்கள் காணமுடியாது. அவர்கள் அனைவரும் இதை (குர்ஆன் ஸுன்னாஹ்வை கருத்தில் கொள்வதை) கூறுகின்றனர். ஆனால் அவர்களில் மனோ இச்சையைப் பின்பற்றுபவர்களோ தங்களின் மனோ இச்சைகளுக்கு ஒத்துப்போவதற்காக குர்ஆன் ஸுன்னாஹ்வின் ஆதாரங்களை இரட்டை அர்த்தம் கொண்ட விளக்கமாக விளக்கம் கொடுக்கின்றனர். நான் உங்களுக்கு பலமுறை காதியானிகளை உதாரணம் கூறி இருக்கின்றேன், ஒரு புதிய கூட்டத்திற்கு உதாரணமாக. அவர்கள் எதார்த்தத்தில் - நான் அறிந்தவாறு - ஸுன்னாஹ்விலிருந்து ஒரு பெரும் பகுதியை மறுக்கின்ற போதிலும் அவர்கள் அதை மறுப்பதாக பகிரங்கமாக கூறுவது கிடையாது. எனினும் அவர்களால் மறுக்க இயலாத ஸுன்னாஹ்வை மாற்று விளக்கம் கொடுத்து திரிக்கின்றனர்; மொழியை விட்டும் தூரமான,மேலும் நமது முன்சென்ற நல்லோர்களுடைய (ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள்) விளக்கத்தை விட்டும் தூரமானதான (மாற்று) விளக்கத்தை அவற்றிற்கு அளிக்கின்றனர். மேலும் இவ்வாறே அவர்கள் குர்ஆனிலும் செய்கின்றனர். இதன் காரணமாகவே “இஸ்லாத்தை - அதன் இரு மூலங்களான குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்விலிருந்து - சரியான புரிதலாக புரிந்து கொள்வது அவசியம் என்று நாம் கூறுகின்றோம்; அதாவது அதில் (சரியாக புரிந்து கொள்வதில்) ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் எதன் மீது இருந்தார்களோ அதன்பால் திரும்புவது (அவசியமாகும்). நாம் அதை (அந்தக் கூற்றை) மார்க்க ஆதாரங்களின் மூலமாக வலுப்படுத்துகின்றோம். அவற்றிலிருந்து உள்ளதாவது அல்லாஹ்வின் - அஸ்ஸ வஜல் - கூற்றான  وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து முஃமின்களின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ (4:115) இங்கு தூதர் - அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் - அவர்களுக்கு மாறு செய்வதுடன் முஃமின்களின் வழிக்கு மாற்றம் செய்வதையும் குறிப்பிட்டுள்ளான். இந்த ஆயத்தில் நமது இறைவன் அஸ்ஸ வஜல் முஃமின்களின் வழியை வீணாகக் குறிப்பிடவில்லை. நாம் என்றென்றும் எப்போதும் சுற்றிவரும் அந்த முக்கிய கருத்திற்காகவே (குறிப்பிட்டுள்ளான்). அதாவது முஃமின்களின் வழியானது, அல்லாஹ் தனது நபியின் மீது இறக்கிவைத்ததில் அல்லது அவனது தூதர் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் பேசியவற்றில் நாடப்பட்ட பொருளை நமக்கு விளக்கவும் தெளிவாக்கவும் செய்யும். உதாரணமாக “என்னுடைய ஸுன்னாஹ்வையும், எனக்குப் பின்வரும் நேர்வழிகாட்டும் நேர்வழிப்பெற்ற கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும் பற்றிப் பிடியுங்கள்” என்று நபி ﷺ அவர்கள் கூறும் பொழுது, இந்தக் குர்ஆனிய ஆதாரத்திலிருந்து அதை பெற்றுக் கொண்டார்கள். “என்னுடைய ஸுன்னாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்” என்பதைக் கொண்டு அவர்கள் - அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் - போதுமாக்கிக் கொள்ளவில்லை, அத்துடன் “கஃலீபாக்களுடைய ஸுன்னாஹ்வையும்” என்ற தனது கூற்றையும் சேர்த்துக் (கூறினார்கள்). (இதற்கான) காரணமாவது நாம் சற்று முன்னர் குறிப்பிட்டதாகும். அதாவது அவர்களுடைய ஸுன்னாஹ்வானது அல்லாஹ்வின் தூதர் - ஸல்லல்லாஹு அலைஹி அலா ஆலிஹி வஸல்லம் - அவர்கள் எந்த நேர்வழி மற்றும் ஒளியின் மீதிருந்தார்களோ அதனை நமக்கு தெளிவுபடுத்தும். எனவே இஜ்மா'வானது (மறுக்க) இயலாத மாறாக மறுப்பதற்கு அனுமதிக்கப்படாத ஒன்றாகும். எவரொருவர் அதை மறுப்பதாக பிரகடனம் செய்வாரோ, அது முஸ்லிம்களுடைய ஜமாஅத்தில் இருந்து வெளியேறியதாக  அவரிடமிருந்து வரும் வெளிப்படையான அறிவிப்பாகும். 🔗 https://alathar.net/home/esound/index.php?op=codevi&coid=155449 📜 அரபியுடன் வாசிக்க: https://tinyurl.com/4jd2p5fb 🌐 வளைதளம்: salafiyyah.in

  • 3 июл.231из salafirefutationstamil

    வழிகெட்டக் கூட்டங்களைத் தவிர வேறவரும் இஜ்மா'வை மறுக்க மாட்டர் - அஷ்ஷைஃக் அல்அல்பானி ரஹிமஹுல்லாஹ் https://t.me/salafirefutationstamil/197

  • 30 июн.2871из salafirefutationstamil

    மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: எவர் ஒரு பித்'அஹ்வை இஸ்லாத்தில் தோற்றுவித்து அதனை நல்லதாகக் காண்பாரோ, அவர் முஹம்மத் அவர்கள் தூதுத்துவத்தை (முழுமையாக எத்தி வைப்பதில்) மோசடி செய்துவிட்டதாக வாதிடுபவராவார்! ஏனெனில் அல்லாஹ் கூறியுள்ளான்: الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் நான் பூரணமாக்கிவிட்டேன். (அல்குர்ஆன் 5:3). எனவே எது அன்றைய தினம் மார்க்கமாக இருக்கவில்லையோ, அது இன்றைய தினமும் மார்க்கமாக இருக்க முடியாது. 📖 அ'த்தாரிமி 141 T.me/salafirefutationstamil

  • 29 июн.2751из salafirefutationstamil

    இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَإِنْ رَآهَا النَّاسُ حَسَنَةً ஒவ்வொரு பித்'அஹ்வும் வழிகேடாகும், மக்கள் அதனை நல்லதாகக் கண்டாலும் சரியே. 📚 ஷர்ஹ் உஸூலிஃதிகாத் லில்லாலகாயி 1/104 T.me/salafirefutationstamil