- Последний пост
- 13 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 2
- Всего постов
- 21
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 170
- 1/48двое суток
- 194
- 1/72трое суток
- 210
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (13.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿நம்பிக்கையால் எல்லாம் முடியும். ༺🌷༻ ஒரு பால்காரி ஆற்றுக்கு அக்கரையில் வசித்து வந்த குரு ஒருவருக்குத் தினந்தோறும் பால் கொண்டு போய்க் கொடுப்பது வழக்கம். சரியாக ஒருசமயம் படகுப் போக்குவரத்து நடைபெறவில்லை. ஆதலால், நாள்தோறும் சரியான நேரத்திற்குப் பால் கொண்டுபோய்க் கொடுப்பதில் தடை ஏற்பட்டது. ஒரு நாள் அந்த குரு, 'வேளைக்கு ஒழுங்காக ஏன் பால் கொண்டு வந்து தருவதில்லை?” என்று பால்காரியைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். ༺🌷༻ அதற்கு அந்த எளிய பால்காரி அவரிடம், 'சுவாமி, நான் என்ன செய்வேன்? தினமும் அதிகாலையில்தான் வீட்டை விட்டுக் கிளம்புகிறேன். ஆனால் நதிக் கரைக்கு வந்தபிறகு நீண்ட நேரம் ஓடக்காரனுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது' என்று பதில் சொன்னாள். அதைக் கேட்டதும் அந்த குரு, 'ஏ பெண்ணே! பகவானுடைய நாமத்தை உச்சரிப்பதால் மக்கள் பிறவியாகிய பெரிய கடலையே தாண்டிக் கடந்து விடுகிறார்கள்! உன்னால் இந்த சிறிய மகரயாழ் ஆற்றைக் கடக்க முடியவில்லையா?' என்று கேட்டார். ༺🌷༻ கள்ளங்கபடமில்லாத அந்தப் பால்காரி அவர் சொன்னதை அப்படியே நம்பினாள். ஆற்றைக் கடப்பதற்குச் சுலபமான வழி தெரிந்துவிட்டது என்று பெரிதும் மகிழ்ந்தாள். அடுத்த நாள் முதற்கொண்டு குருவுக்கு அதிகாலையிலேயே உரிய நேரத்திற்கு பால் கிடைத்து வந்தது. ஒரு நாள் அவர் பால்காரியிடம், 'நீ முன்பு போல இப்போதெல்லாம் தாமதமாக வருவதில்லையே! எப்படி உன்னால் உரிய காலத்தில் பால் கொண்டுவர முடிகிறது?’ என்று கேட்டார். ༺🌷༻ 'சுவாமி தேவரீர் சொன்னபடியே பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே ஆற்றைக் கடந்து வருகிறேன். இப்போதெல்லாம் நான் ஓடக்காரனுக்காகக் காத்திருப்பதில்லை' என்று பால்காரி பதில் சொன்னாள். குரு இதை எப்படி நம்புவார்? பால்காரியின் வார்த்தையில் நம்பிக்கையில்லாத அவர், 'நீ எப்படி ஆற்றைத் தாண்டி வருகிறாய் என்பதை எனக்கு காட்டுவாயா?' என்று கேட்டார். ༺🌷༻ பால்காரி சூதுவாது தெரியாதவள். அவள் சம்மதித்து அவரை அழைத்துக் கொண்டு நதிக்கரைக்குப் போனாள். பகவானின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே ஆற்று நீரின்மேல் சர்வ சாதாரணமாக நடந்து போக ஆரம்பித்தாள். அப்படிச் சிறிது தூரம் சென்றதும் பின்னால் திரும்பிப் பார்த்தபோது குரு நடக்க முடியாமல் சிரமப்பட்டுக்கி கொண்டிருப்பதைக் கண்டாள். ༺🌷༻ அவரது நிலையைச் கண்டதும் அவள், 'சுவாமி! இது என்ன? பகவானின் நாமத்தை வாயால் சொல்கிறீர்கள். ஆனால் அதே சமயம் துணி எங்கே நனைந்துவிடப் போகிறதோ என்று கைகளால் தூக்கிப் பிடித்துக் கொள்கிறீர்கள்! தங்களுக்குப் பகவானிடத்தில் பரிபூரண நம்பிக்கை இல்லையே!' என்று கேட்டாள். 🌿பகவானிடத்தில் வைக்கும் தீவிரமான நம்பிக்கை யும் பரிபூரண சரணாகதியுமே எல்லா அற்புதச் செயல்களுக்கும் காரணமாக இருக்கின்றன. 🤘~ ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதைகள். 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (12.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿 உன்னிடம் துவங்கு. ༺🌷༻ ஒரு நாட்டில் மன்னன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவர் காட்டில் விலங்குகளை வேட்டையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய நாட்டினை விரிவுபடுத்துவதிலும் விலங்குகளை வேட்டையாடுவதிலும் தன் கவனத்தினை செலுத்தி வந்தார், அந்த மன்னன் தன் நண்பர்களுடனும் படை வீரர்களுடனும் விலங்குகளை வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். வேட்டையாடும் பொழுது தன் கால்களில் கல்லும், முள்ளும் குத்தியதால் ஏற்பட்ட காயத்தினால் பெரிதும் துன்பப்பட்டான். அப்பொழுது தன் படைவீரர்களிடம் இந்த கானகத்திலுள்ள விலங்குகளையெல்லாம் வேட்டையாடி அவற்றின் முழுவதும் பரப்புமாறு தோல்களைக் கானகம் உத்திரவிடுகிறார் அந்த மன்னன். ༺🌷༻ அவருடைய படைவீரர்களும் அவ்வாறே கானகத்திற்குச் சென்று கண்ணில்படுகின்ற விலங்குகளை வேட்டையாடிக் கானக நிலப்பரப்பில் பரப்பிவிடுகின்றனர். ஒருநாள் துறவி ஒருவர் அக்கானகத்தின் வழியாகத் தன் பயணத்தை மேற்கொள்கிறார். அப்பொழுது அந்தப் படைவீரர்களின் செயலினைக் கண்டு மனம் வருந்துகிறார். நேராக அரண்மனைக்குச் சென்று மன்னனை காணவேண்டும் என்று வாயில் காவலாளியிடம் கூறுகிறார். துறவி தன்னைச் சந்திக்க வந்திருக்கும் செய்தி மன்னனுக்கு தெரிய வருகிறது. அவரும் ஆவலுடன் துறவியை எதிர்கொண்டு வரவேற்கிறார். துறவியும் மனம் மகிழ்கிறார். பிறகு மன்னனிடம் "நீர் செய்யும் காரியம் தவறு" என்று கூறுகிறார். மன்னனுக்கு எதுவும் விளங்கவில்லை. துறவியைப் பார்த்து தாங்கள் கூறவிருக்கும் கருத்தினை தெளிவாகக் கூறும்படி மன்னன் கூறினார். ༺🌷༻ அதற்கு துறவி மன்னனிடம் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் வேட்டையாடி விட்டால் தாங்கள் வேட்டையாட விலங்குகளே இல்லாமல் போய்விடும் என்றார். மேலும் தாங்கள் மாற்ற வேண்டியது அந்த மகரயாழ் கானகத்தையல்ல தங்களுடைய எண்ணத்தைத்தான் மாற்றிக் கொள்ளவேண்டும் என்றார் அந்தத் துறவி. ஒரே ஒரு விலங்குடைய தோலினாலான காலணி ஒன்றை தாங்கள் அணிந்தால் போதுமானது. தங்களுடைய கால்களில் எந்தவொரு காயமும் ஏற்படாது அப்படியிருக்க அனைத்து விலங்குகளையும் கொன்று தோலைப் பரப்புவது என்பது வீண் வேலை என்று துறவி மன்னனைப் பார்த்துக் கூறினார். அப்பொழுதுதான் அந்த மன்னன் தான் எவ்வளவு பெரிய தவறினைச் செய்கிறோம் என்று உணர்ந்தார். நாமும் இவ்வாறு தான் மற்றவரிடம் மாற்றத்தை எதிர்நோக்காமல் முதலில் நம்மை மாற்றிக்கொண்டாலே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வரும் என்பதே உண்மை. ༺🌷༻ எல்லோருக்கும் சமூக மாற்றம் அல்லது முன்னேற்றத்தின் மீது அளவு கடந்த அக்கறை உள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை அல்லது முன்னேற்றத்தினை எங்கிருந்து துவக்குவது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது. அந்த சமூக முன்னேற்றத்திற்கான முதல் அடியை நம்மில் இருந்தே துவக்கிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத புரியாத செய்தியாகவே இருந்து வருகிறது. 🌿"உலக மாற்றத்தினை உன்னிடம் துவங்கு" ✒️ ~ Rtn.V.S.பாஸ்கரன், (@ ரோட்டரி பாஸ்கர்) 📚 "நம்பிக்கை விதைகள்" 📅(வெளியீடு ~ 2017) ©️ எழிலினி பதிப்பகம், சென்னை~ 08, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
✒️ ~ வரலொட்டி ரெங்கசாமி, 📚 "வெற்றியின் விதைகள்" 📅(வெளியீடு ~ 2006) ©️ கவிதா பப்ளிகேஷன், சென்னை~ 17, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (11.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿சின்ன சிக்கலும் பிரம்மாண்டமான தீர்வும். ༺🌷༻ பல ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த ராட்சத லாரி கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலத்தில் சிக்கிக் கொண்டது. அதாவது அந்த லாரி மிக உயரமாக இருந்தது. அதன்மேல் ஏற்றப்பட்ட இரும்புக் கம்பிகள் மேலே துருத்திக் கொண்டு இருந்தன. நீங்கள் ஹவுரா பாலத்தைப் பார்த்திருப்பீர்களே? அதன் மேல்பகுதியிலும் எஃகினால் ஆன ஓர் அமைப்பு இருக்கும். லாரியின் மேல் இருந்த கம்பிகள் அந்த அமைப்பில் சிக்கிக் கொண்டன. மொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் திண்டாடிக் கொண்டிருந்த கொல்கத்தா இதனால் திக்குமுக்காடிப் போனது. ༺🌷༻ லாரியைப் பாலத்தில் இருந்து விடுவிக்க பலரும் பல யோசனைகள் சொன்னார்கள் ஒருவர் லாரியை அப்படியே குண்டு வைத்து தகர்த்துவிடலாம் என்று யோசனை சொன்னார். மற்றவர் லாரியின் கீழ்ப்பகுதியை அப்படியே அறுத்து விடலாம் என்று சொன்னார். இன்னும் ஒரு மகானுபாவர் ஒரு சக்திவாய்ந்த கிரேனை வைத்து லாரியை அப்படியே இடித்து நகர்த்தி விடலாம் என்று சொன்னார். எப்படியாவது லாரியை எடுத்துவிட்டால் போதும் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார்கள். எந்த சிக்கலுக்கும் முதலில் தோன்றும் தீர்வுகள் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். அதுவும் நம்மிடம் அந்த பிரம்மாண்டமான தீர்வுகளைச் செயல்படுத்தும் வசதியிருந்தால் எளிய தீர்வுகளை யோசிக்கக்கூட மாட்டோம். கிரேன், நாட்டு வெடிகுண்டு என்று எல்லாம் வந்துவிட்டன. அப்போது நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவன் சொன்னான். ༺🌷༻ 'லாரியின் உயரத்தைக் குறைத்தால் லாரியை விடுவித்து விடலாம். அல்லவா? அதற்கு எதுக்கு லாரியை அறுக்க வேண்டும்? அதன் டயர்களில் உள்ள காற்றைப் பிடுங்கி விட்டால் போதுமே?" எத்தனையோ லட்ச ரூபாய் செலவில் தீர்வுகளை அலசி ஆராய்ந்த மேதாவிகளுக்கு இந்த எளிய செலவேயில்லாத வழி தெரியவில்லை. சிக்கலைத் தீர்க்கும் வழி பிரம்மாண்டமானதாக மட்டும் இருந்து புத்திசாலித்தனமாக இல்லையென்றால். தீர்வு சிக்கலைவிட மோசமாக இருக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படிப் பிரம்மாண்டமான, ஆனால் அவ்வளவாகப் புத்திசாலித்தனமில்லாத தீர்வுகளைத் தருவதில் அமெரிக்கர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பது கீழ்க்கண்ட சம்பவத்தில் விளங்கும். ༺🌷༻ அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய போது அவர்கள் குறிப்பெடுக்க பேனாக்கள் தேவைப்பட்டது. நாம் பூமியில் சாதாரணமாகப் பயன்படுத்தும் பேனாக்கள் விண்வெளியில் எழுதாது. ஏன் என்றால் பேனாவின் மை (அது மை பேனாவாக இருந்தாலும் சரி, பால் பாயிண்ட் பேனாவாக இருந்தாலும் சரி) தாளில் பாய்வதற்கு முக்கிய காரணம் புவியீர்ப்புச் சக்தி. விண்வெளியில் அந்த சக்தி இருக்காது என்பதால் நமது பேனாக்கள் அங்கு மக்கர் செய்யும். இதனைப் பெரிய சிக்கலாகக் கருதி இதன் தீர்வுகள் என்னென்ன என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் அமெரிக்கர்கள். அந்த விண்வெளி மையத்தில் பல ஆலோசனைக் குழுக்கள். அலுவல் படைகள் அமைக்கப்பட்டு பல நாட்கள் விவாதித்து, பல்வேறு தீர்வுகளை அலசி ஆராய்ந்தார்கள். ༺🌷༻ அமெரிக்கர்களுக்கே உரித்தான கர்வத்துடன் ஒருநாள் விண்வெளி மையம் தனது மகத்தான வெற்றியை உலகுக்கு அறிவித்தது. தங்களது விஞ்ஞானிகளின் இடைவிடாத முயற்சியின் பலனாக, அவர்களது தீர்க்கமான அறிவின் பலனாக அவர்கள் மிக அபூர்வமான ஒரு பேனாவைக் கண்டுபிடித்து விட்டதாகப் பறைசாற்றினார்கள். அந்தப் பேனா புவியீர்ப்புச் சக்தி இல்லாத விண்வெளியில் எழுதும். தலைகீழாக இருக்கும் போதும் எழுதும், தண்ணீருக்குள் இருக்கும் போதும் எழுதும். கண்ணாடி உட்பட எந்த பொருளின் மீதும் எழுதும். கொதிக்கும் வெப்பத்திலும் (அதாவது 300 டிகிரி செல்ஷியஸ்) எழுதும், உறைய வைக்கும் #மகரயாழ் குளிரிலும் எழுதும். உலகமே கைத்தட்டிப் பாராட்டியது. ஆனால் இந்தத் தீர்வுக்கு அவர்கள் செலவழித்தது என்ன? பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி. சுமார் 60 கோடி ரூபாய் செலவு. அந்தப் பேனாவின் பல்வேறு பகுதிகளுக்கு 12க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் வழங்கப் பட்டிருந்தன. ༺🌷༻ ஏறக்குறைய அதே காலகட்டத்தில் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் ரஷ்யா பற்றிய எல்லா விவரங்களும் வெளியே வந்தபோது, இதே பிரச்சினையை அதாவது விண்வெளியில் புவியீர்ப்புச் சக்தியில்லாத நிலையில் எப்படிப் பட்ட பேனாவால் எழுதுவது அவர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்று தெரிய வந்தது. ரஷ்ய நாட்டுக்காரர்கள் புத்திசாலிகள். அவர்கள் 60 கோடி ரூபாய் செலவழிக்கவில்லை. பத்தாண்டுகள் காத்திருக்கவும் இல்லை. காலணா பென்சிலைப் பயன்படுத்தினார்கள். இது எப்படி இருக்கு? 🌿 எல்லா சிக்கல்களுக்கும் எப்படியும் ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக இருக்கும்.
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (08.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿 "பற்று அற்று இரு" ༺🌷༻ ஒட்டகம் ஒன்று காட்டில் கடுந்தவம் செய்தது. அதன் தவத்தைப் பாராட்டிய பிரம்மன் நேரில் தோன்றி, 'வேண்டும் வரத்தைக் கேள்!' என்றார். 'நான்முகனே, காட்டில் உணவுக்காக அலைந்து திரிவது வேதனையைத் தருகிறது. இருந்த இடத்திலேயே உணவைப் பெற விரும்புகிறேன். என் கழுத்து நூறு யோசனை நீளம் உள்ளதாக இருந்தால் நல்லது!' என்று பகர்ந்தது ஒட்டகம். ༺🌷༻ கேட்ட வரம் கிடைத்தது. கழுத்து மிக நீளமாக நீண்டு வளர்ந்தது. அன்று முதல் அந்த ஒட்டகம் இருந்த இடத்திலிருந்து ஓரடியும் நகராமல், தூரத்தில் இருந்த தழைகளை ஒடித்துத் தின்று வந்தது. கார் காலம் பிறந்தது. காற்றும் மழையும் கலந்து திரண்டன. நீரில் நனைந்து குளிரில் வாடிய ஒட்டகம், குகை இருக்கும் இடம் தேடி ஓடியது. நூறு யோசனை நீளமுள்ள கழுத்துடன் எந்தக் குகையில் அந்த ஒட்டகம் ஒதுங்க முடியும்? தன் தலையை மட்டும் ஒரு குகையில் நுழைத்து, உடல் முழுவதும் மழையில் நனைய, வாட்டும் குளிரில் வருந்தியபடி நின்று கொண்டிருந்தது. ༺🌷༻ மழைக்கு அஞ்சிய நரியொன்று, தன் துணையுடன் அந்தக் மகரயாழ் குகைக்குள் முன்பே பதுங்கியிருந்தது. பசியால் வாடிய நரியின் பார்வையில் ஒட்டகத்தின் கழுத்து தெரிந்தது. மகிழ்ச்சியுற்ற நரி, ஒட்டகத்தின் கழுத்தைக் கவ்வி இழுத்துக் கடித்துத் தின்றது. கழுத்தைச் சுருக்க முடியாத சோம்பேறி ஒட்டகம் செத்து மடிந்தது. ༺🌷༻ செயல்படுவதற்குச் சோம்பலுற்றால் வாழ்க்கை இல்லை என்று விளக்க பீஷ்மர் உரைத்த கதை இது. 'ஒவ்வோர் உயிருக்கும் செயல்பட இறைவன் சுதந்திரம் வழங்கியிருக்கிறான். தானே முயன்று செயல்படுவதில்தான் மகிழ்ச்சி பிறக்கிறது. ༺🌷༻ செயலற்று இருப்பதே சொர்க்கம் செல்லும் வழி என்றால், மலைகளுக்கு மட்டுமே அந்த சொர்க்கத்தில் இடம் இருக்கும். கடலில் அலைகள் ஓயாமல் ஆடுகின்றன. நதிகளில் நீர் தேங்காமல் ஓடுகிறது. காற்றின் தழுவலில் மரக்கிளைகள் மகிழ்ச்சியுடன் தலையாட்டுகின்றன. பறவைகள் பரவசத்துடன் வான வீதியில் பறக்கின்றன. விலங்குகள் இரைதேடி விரைவாகப் பாய்கின்றன. எங்கும் எதிலும் இயக்கமே இயற்கையின் இயல்பான விதியாக இருக்கிறது அசைவற்று சும்மா இருப்பதாக நாம் நினைக்கும் மலைகள்கூட ஆண்டுதோறும் அங்குலம் அங்குலமாக வளர்வ தாக அறிவியல் அறிவிக்கிறது. 🤘செயலற்று இருத்தல் சாவுக்குச் சமம். 'பற்றற்றிரு' என்று போதிக்கும் பகவத் கீதை, எந்த இடத்திலும் 'செயலற்றிரு' என்று சொல்லவே இல்லை. ✒️ ~ தமிழருவி மணியன் 📚"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்" ©️கற்பகம் புத்தகாலயம் சென்னை-17 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (07.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿நம்புங்கள்; வெற்றி பெறுங்கள். ༺🌷༻ உங்கள் கனவுகளை வழிபடத் தொடங்குங்கள். நீங்கள் முன்னேறப் பிறந்திருக்கிறீர்கள். ஆயிரத்தோடு ஆயிரத் தொன்றாக நீங்கள் மடியப் போவதில்லை. எதை மனமாரக் கேட்கிறீர்களோ அது உங்களுக்குக் கிடைக்கும். 'வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈவன்காண் கண்டாய்' என்று இறை வனின் பெருமையை அப்பரடிகள் கூறுகின்றார். எங்கே சென்று கேட்பது என்று வெளியே தேடவேண்டாம். உங்களுக்குள்ளேயே தேடுங்கள். தேடிக் கொண்டேயிருங்கள். ༺🌷༻ மனிதன் என்பவன் எல்லையற்ற ஆற்றல்களின் ஊற்று. கணக் கிட முடியாத திறமைகளின் புதையல். தன்னிடம் மறைந்திருக்கும் ஆற்ற லில் பத்து விழுக்காடுகூட ஒருவன் பயன்படுத்துவதில்லை. இஃது அறிவியல் வல்லுநர்களின் கணிப்பு. 'உன்னையே நீ அறிவாய்' என்றான் கிரேக்க அறிஞன் சாக்ரடீசு. "உன்னை யறிந்தால், நீ உன்னையறிந்தால் உலகத்தில் போரா டலாம், என்றார் கவிஞர் கண்ணதாசன். ༺🌷༻ உலகை வென்ற மாவீரன் நெப்போலியன் கூறினான்: ஒவ்வொரு வரும் தம்மைத்தாமே வெற்றி கொள்ளுதலே மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையோடு அடி எடுத்து வைப்பதுதான் முன்னேற்றம். இன்றைய நிலையிலிருந்து படிப்படியாக வளர்வதுதான் வளர்ச்சி. இயற்கையில் ஒவ்வொன்றும் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறது. ༺🌷༻ சலசலத்து ஓடுகின்ற ஆறு கடலில் சென்று கலக்கிறது. கடலில் விழும் நீர் ஆவியாகி மேலே செல்லுகிறது. மேலே சென்ற நீர் மகரயாழ் மழையாகி மண்ணைக் குளிர வைக்கிறது. மிஞ்சி வரும் நீர்ப்பெருக்கம் மீண்டும் கடலைத் தேடி ஓடுகிறது. இடைவிடா இயக்கம் இவ்வுலகின் இயற்கை. பொங்கி வரும் நீரூற்று ஊருணியாகிறது. தேங்கி நிற்கும் நீர்நிலை குட்டையாகிறது. அந்தக் குட்டை அழுக்குச் சேர்ந்து கிருமிகளின் புகலிடமாகிறது. அது போன்று தேக்கம் உடையவனின் வாழ்க்கையிலும் கழிவிரக்கம், பொறாமை, துயரம் என்ற தீமைகள் முளைக்கத் தொடங்கிவிடும். ஆகவே பொங்கி வரும் புதுப்புனலாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். வெற்றி வெற்றி' என்று பாடிக்கொண்டே அடியெடுத்து வையுங்கள். 'எமிலி கூ' என்ற உளவியல் அறிஞர் ஒரு மருத்துவர். தம்மிடம் நோயைத் தீர்க்க மருந்து நாடி வந்தவர்களுக்கு, அவர்களுடைய மனத்தை வலிமைப்படுத்த முதலில் மருந்து கொடுத்தார். "வெற்றி பெற வேண்டும் என்று நம்புங்கள். வெற்றி பெற்று வருகிறேன் என்று நம்புங்கள்" என்றார். ༺🌷༻ தனக்குள் தானே சொல்லிக்கொள்ளல் (Auto Suggestion) என்ற ஒன்றை மருந்தாகக் கொடுத்தார். 'நாள்தோறும், நாள்தோறும் எல்லா வகையாலும் நான் முன்னேறி முன்னேறி வருகிறேன்' வெற்றி பெற விரும்பும் நீங்கள் நாள்தோறும் இந்தத் தொடரை உங்களுக்குள்ளே பல முறை சொல்லுங்கள். காலையில், மாலையில், கடும்பகலில், இரவில், கனவில், நனவில் சொல்லிக் கொண்டேயிருங்கள். கண்ணாடி முன் நிற்கும் போதும், கண் மூடித் தூங்கும்போதும், உங்கள் அடி மனத்தில் இதுவே இசையாக ஒலிக்கட்டும். தம்மை நாடி வந்தவர்களுக்கு அவர் கொடுத்த முதல் மருந்து இது. அந்த மருந்துக்கு ஈடு இணையில்லை. உங்கள் எண்ணங்கள் நனவாக இதுவே முதற்படி. முதன்மையானதும் கூட.. 🌿நம்புங்கள்; வெற்றி பெறுங்கள். ✒️ ~ முனைவர் சக்திப்பெருமாள் (பேச்சாளர், எழுத்தாளர்: முன்னாள் முதுகலைத் துறைத் தலைவர், பாத்திமாக் கல்லூரி, மதுரை; முன்னாள் பேரவை உறுப்பினர், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை; முன்னாள் மாமன்ற உறுப்பினர், அவை முன்னவர், மதுரை மாநகராட்சி; கௌரவ ஆலோசகர், நா. ம. ச. சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி. அவனியாபுரம், மதுரை: நூல் பல படைத்தவர்.) 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (06.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿தனித்தன்மை உண்டு. ༺🌷༻ "வாழ்க்கையே வெறுத்துப் போச்சு சார்!'' என்று சொல்லிக்கொண்டே வந்தான் ஒருவன். "ஏம்ப்பா இப்படி சொல்றே?" என்றேன். "நான் இந்த உலகத்துக்குத் தேவையே இல்லை!" என்றான். "இந்த உலகத்துலே தேவை இல்லாமே எதுவுமே இல்லை!" என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்தான். "இப்ப....உன் உடம்புலே இருக்கிற காலை எடுத்துடுவோமா? அது உனக்குத் தேவை இல்லை! "என்றேன். "அது எப்படி? நடக்குறத்துக்கு அது வேணாமா?" என்றான். "சரி... கையை எடுத்துடுவோமா?" "அப்புறம் சாப்பிடறது எப்படி?" "சரி.... அப்படின்னா... உன் உடம்புலே தேவை இல்லாம அனாவசியமா இருக்கிற ஒரு பகுதியைச் சொல்லு. அவன் யோசிக்கத் தொடங்கினான். அப்புறம் மெதுவாகச் சொன்னான்: "எல்லாமே அவசியமாத்தான் தோணுது!' "உனக்கு எல்லாமும் அவசியம்.... ஆனால் நீ இந்த உலகத்துக்கு அவசியமில்லை. அப்படித்தானே?' அவன் குழம்ப ஆரம்பித்தான். ༺🌷༻ இன்றைக்கு நிறைய இளைஞர்கள் இப்படித்தான் தம்மிடம் என்ன இருக்கிறது என்பது தெரியாமலே தடுமாறுகிறார்கள். அவர்கள் யார் என்பது அவர்களுக்கே அடையாளம் தெரிவதில்லை. ஆடுமாடு களுக்குக் கூட அதுகளின் திறமை எது என்பது அதுகளுக்குத் தெரிகிறது. தம்மால் எது முடியும்... எது முடியாது... என்பது அதுகளுக்கு நன்றாகத் தெரிகிறது. விலங்குகள் எல்லாம் பறவைகள் மாதிரி விண்ணில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. சரி... ༺🌷༻ ஒரு மனிதரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவர் மாதிரி இன்னொருவர் இருப்ப தில்லை. ஆனாலும் உளவியல் நிபுணர்கள் மனிதரின் குணாதிசயங்களை வைத்து அவர்களை மூன்று மகரயாழ் வகையாகப் பிரிக்கின்றனர். ༺🌷༻ அதாவது மூன்று வகை மனிதர்கள். சில பேர் எப்படி என்றால்.... தான் சம்பந்தப்பட்ட வேலையோடு இருந்துவிடுவதில்லை. எதிரே இருக்கிறவர்கள் செய்கிற வேலை... இன்னொரு பிரிவிலே இருக்கி றவர்கள் செய்கிற வேலை-எல்லாவற்றிலும் தலையிடுவார்கள். மனோ தத்துவத்தில் இதற்கு Dominance என்று பெயர். இப்படிப்பட்ட குணம் உள்ளவர்கள் எதற்குப் பொருத்தம் தெரியுமா? ஒரு நிறுவனத்தைத் தலைமை ஏற்று நடத்துவது... நிர்வாகப் பொறுப்பு வகிப்பது.... இது மாதிரி பணிகளுக்கெல்லாம் இவர்கள் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள். இரண்டாவது வகை மனிதர்கள் எப்படித் தெரியுமா? இவர்கள் இனிமையாகப் பேசுவார்கள். அடுத்தவர்களோடும் பேச ஆசைப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் விற்பனைத் துறையில் வேலை பார்ப்பதில் பொருத்தமானவர். ༺🌷༻ மூன்றாவது வகை மனிதர்கள் எப்படி என்றால்... இவர்களுக்குப் பகுத்துணரும் ஆற்றல் உண்டு; உறுதிப்பாடு உண்டு. அடுத்தவர்களோடு அதிகம் பேசமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் நாலு பேரோடு பேசுவதே இவர்களுக்குப் பிடிக்காது. செய்கிற வேலையை நுணுக்கமாகச் செய்வார்கள். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி... அது சம்பந்தமாக எல்லா விவரங்களையும் சேகரிப்பார்கள். இந்த வகை மனிதர்களுக்கு ஆராய்ச்சி வேலை, அக்கவுண்டண்ட் வேலை... இது மாதிரியான பொறுப்புகளைக் கொடுக்கலாம். ஒவ்வொரு மனிதரையுமே கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அவனுக்குள்ளே இந்த மூன்று விதமான திறமைகளும் உண்டு. எது அதிகம்.... எது குறைவு என்பதில்தான் வித்தியாசம். 🌿"இந்த உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு." ✒️ ~ தென்கச்சி கோ.சுவாமிநாதன் 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (05.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿உண்மையான மகிழ்ச்சி. ༺🌷༻ செல்வந்தன் ஒருவன் யோகியிடம் சென்றான். 'சுவாமி. இந்த வாழ்க்கையில் எனக்குக் கொஞ்சமும் நிம்மதியில்லை. சந்தோஷமில்லை. நான் துறவியாகி விடுகிற தீர்மானத்தில் வந்திருக்கிறேன். தாங்கள்தான் எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டவேண்டும். என்னுடைய சொத்துகளை, உடைமைகளை விற்றுக்கொண்டு வந்திருக்கிறேன், பெற்றுக் கொள்ளுங்கள்' என்றான். ஒரு மூட்டையை அவர்முன் வைத்தான். அந்த மூட்டை நிறைய தங்கமும், வைரமும். ༺🌷༻ யோகி திடுதிப்பென்று அந்த மூட்டையுடன் ஓட்டம் பிடித்தார். 'அடடா! இவர் ஒரு போலிச்சாமியார்!' என்று எண்ணி, அவரைத் துரத்திக்கொண்டு ஓடினான் அவன். வெகு நேரம், வெகு தூரம் அந்தத் துரத்தல் நடந்தது. திடீரென்று யோகி நின்றார். 'என்ன பயந்து விட்டாயா? இந்தா பிடி, உன் செல்வத்தை' என்று மூட்டையை அவனிடம் கொடுத்தார். செல்வந்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ༺🌷༻ யோகி சொன்னார். 'இந்தச் செல்வம் முன்பே உன்னிடம் இருந்ததுதான். அப்போது உன்னிடம் மகிழ்ச்சி இல்லை. இப்போதும் அதே செல்வம் உன் கையில். ஆனால் முன்பு இருந்திராத மகிழ்ச்சியை இப்போது நீ உணர்கிறாய்' என்று. எது நிலையான மகிழ்ச்சி என்பது நமக்குப் புரியும்வரை இறைவனுக்கும், நமக்கும் இடையே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்! ✒️ ~ சி.எஸ்.தேவநாத் 📚 "இந்த மனம் ஒரு நந்தவனம்" 📅(வெளியீடு ~ 2010) ©️ கவிதா பப்ளிகேஷன், சென்னை ~ 17, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (04.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿கடவுள் வேண்டுமா, வேண்டாமா? ༺🌷༻ அடர்ந்த காட்டு வழியே அந்த மனிதன் நடந்து போய்க்கொண்டு இருந்தான், எதிர்பாராதவிதமாக எதிரே ஒரு சிங்கம் வந்துவிட்டது. எப்படித் தப்பிப்பது? மரத்தில் ஏற முடியாது வேகமாக ஓடவும் முடியாது. என்ன செய்யலாம்? 'இறைவனைக் கூப்பிடுவதுதான் ஒரே வழி!' என்று முடிவு செய்தான். அந்த இடத்தில் அப்படியே உட்கார்ந்தான். கண்களை மூடினான். கடவுளை வேண்டினான். "இறைவா! என்னைக் காப்பாற்று!" கண்களைத் திறக்காமல் அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். எதுவும் நிகழ்வில்லை. அவன் நிம்மதியடைந்து மெள்ள ஓரக் கண்ணால் பார்த்தான். எதிரே அந்த சிங்கம் - அதுவும் தரையில் தனது கால்களைப் பரப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தது. ༺🌷༻ இவன் நினைத்துக்கொண்டான்; இறைவன் எனது வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார். எனது பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்துவிட்டது" கொஞ்ச நேரத்தில், சிங்கம் மெதுவாகத் தனது கண்களைத் திறந்தது. மனிதனைப் பார்த்தது. இவன் சொன்னான்: *சகோதரரே! வணக்கம். நான் ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்துதான் போனேன்" "ஏன்?" என்று கேட்டது சிங்கம், ஏற்பட்டுவிடுமோ என்று உன்னால் என் உயிருக்கு ஆபத்து பயந்துவிட்டேன். நீ இப்படி கண் மூடி தியானம் செய்வது எனக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருக்கிறது தெரியுமா?" ༺🌷༻ சிங்கம் சொன்னது: "அட, நீ வேற.. உன்னை எனக்கு இரையாக அனுப்பிவைத்த கடவுளுக்கு கண் மூடி நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்!" அவ்வளவுதான். அந்த மனிதன் அரக்கப் பரக்க எழுந்தான். வெறி பிடித்த மாதிரி எடுத்தான் ஓட்டம்! ஒரு பெரியவர் சொல்கிறார்: "கடவுள் இருக்கிறாரா. இல்லையா என்பதல்ல எனது தர்க்கம். கடவுள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதே என் அவசரமான கேள்வி. இன்றைய உலகுக்குக் கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என்பதை நான் உணர்கிறேன்!" ༺🌷༻ எல்லாம் சரி. இருந்தாலும் ஓர் உண்மை என்ன தெரியுமா? ஒருவனுக்கு. எனக்குள்ளே அவன் இருக்கிறான்!' என்கிற ஞானம் பிறக்கிறபோது அவனது தன்னம்பிக்கைக்கும் அவன், இறைவன் மீது வைக்கும் நம்பிக்கைக்கும் இடைவெளி இல்லாமல் போய்விடும்! அதன் பிறகு, சிங்கத்தைக் கண்டால் அங்கேயே அமர்ந்து தியானம் பண்ணலாம் என்கிற எண்ணம் வராது. ✒️ ~ தென்கச்சி கோ.சுவாமிநாதன், 📚 "நினைத்தால் நிம்மதி" ©️ விகடன் பிரசுரம், சென்னை ~ 02, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (03.08.2026) ༺🌷༻ 🌸🌼🌿நல்லாரைக் காண்பதுவும் நன்றே... ༺🌷༻ பரம்பொருளான கண்ணனும் நாரத முனிவரும் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது நாரத முனிவர் "கண்ணா! நல்லோரைக் காண்பதுவும் நன்று என்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதால் என்ன நன்மை விளையும்? சொல்லுங்கள்" என்று கேட்டார். அதற்குப் பதில் ஏதும் சொல்லாத கண்ணன் "சிறிது தொலைவில் உள்ள புதரில் கீரி ஒன்று உள்ளது. அதைச் சென்று பாரும்" என்றார். அவரைப் பிரிந்த நாரதர் புதரை நோக்கிச் சென்றார். அங்கே கீரி ஒன்று இருந்தது. அவரைப் பார்த்ததும் அது இறந்து போனது. ༺🌷༻ அதிர்ச்சி அடைந்த அவர் என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லையே. என்னைப் பார்த்ததும் இந்தக் கீரி இறந்து விட்டதே என்று வருந்தினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் கண்ணனைச் சந்தித்தார். "நல்லோரைக் காண்பதால் என்ன நன்மை விளையும் என்று கேட்டேன். நீங்கள் பதில் ஏதும் சொல்லவில்லையே” என்று கேட்டார். ༺🌷༻ "பக்கத்து ஊரில் உள்ள செல்வர் வீட்டில் மகரயாழ் கிளி ஒன்று உள்ளது. அதைப் பார்த்துவிட்டு வாரும்" என்றார் கண்ணன். நாரதரும் சென்று அந்தக் கிளியைப் பார்த்தார். அவரைப் பார்த்ததும் அந்தக் கிளியும் இறந்து விழுந்தது. இரண்டாம் முறையும் இப்படி நடந்ததைப் பார்த்த அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்த முறை அவர் கண்ணனைப் பார்க்கச் சென்றார். இப்பொழுதும் அதே கேள்வியைக் கேட்டார். ༺🌷༻ "பொதிகை நாட்டு அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. என்னிடம் கேட்ட அதே கேள்வியை அந்தக் குழந்தையிடம் கேளும்' என்றார் கண்ணன். கீரியும் கிளியும் இறந்தது போதாதா? பச்சிளம் குழந்தைக்கும் ஆபத்து வர வேண்டுமா? கண்ணனின் பேச்சை மீறக் கூடாதே. என்ன நடந்தாலும் நடக்கட்டும்' என்று அந்நாட்டு அரண்மனையை அடைந்தார். நாரத முனிவர் வந்திருப்பதை அறிந்த அரசன் அவரைச் சிறப்பாக வரவேற்றான். "உங்கள் குழந்தையைப் பார்க்க வந்திருக்கிறேன்" என்றார் அவர். அவர் முன் பச்சிளம் குழந்தையைக் கொண்டு வந்து வைத்தான் அவன். "முனிவரே! இளவரசனை வாழ்த்துங்கள்" என்று வேண்டினான். ༺🌷༻ அந்தக் குழந்தையைப் பார்த்து அவர் "நல்லோரைக் காண்பதுவும் நன்று என்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதால் என்ன நன்மை விளையும்?" என்று கேட்டார். அந்தக் குழந்தை வாய் திறந்து "நாரத முனிவரே! இதற்கு முன் நீங்கள் சந்தித்த கீரியும் கிளியும் நான்தான். நல்லவராகிய உங்களைச் சந்தித்ததால் ஒவ்வொரு முறையும் எனக்கு மேலான பிறவி கிடைத்தது. இப்பொழுது இளவரசனாகப் பிறந்துள்ளேன். இங்கும் உங்களைச் சந்தித்ததால் சீரும் சிறப்புடனும் வாழப் போகிறேன்" என்றது. 🌿நல்லாரைக் காண்பதுவும் நன்றே... ✒️ ~ பேராசிரியர் எ.சோதி, 📚 "பழமொழிக் கதைகள்" 📅(வெளியீடு ~ 2008) ©️ நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி~ 03, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
ஜான் டீரேயின் வலுவான எதிர்வினைக்கு மத்தியிலும், மஹிந்திரா தனது விநியோக வலையமைப்பை அமெரிக்கா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட டீலர்களாக விரிவுபடுத்தி, சிறிய டிராக்டர் பிரிவில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை அமெரிக்க மண்ணில் தக்கவைத்துக்கொண்டது. இன்று அமெரிக்க சந்தையில் மஹிந்திராவுக்கு ஆண்டுக்கு 250 கோடி டாலர் வருமானமும், 60 கோடி டாலர் வரை லாபமும் வருகிறது. அமெரிக்க சந்தையில் கிடைத்த பாடங்களை வைத்து ஆஸ்திரேலியா, தென்னமெரிக்காவிலும் சிறு விவசாயிகளைக் குறிவைத்து சர்வதேச ஆதிக்கம் செலுத்த மஹிந்திராவால் முடிகிறது. எதிரி நம் வீட்டுக்கு வரும்வரை காத்திருக்காமல் அவனது களத்திலேயே போரை எடுத்துச் செல்வதே சிறந்த உத்தி. மஹிந்திராவின் வரலாறு சொல்லும் பாடம் இதுவே! ~ நியாண்டர் செல்வன்
1991-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகமயமாக்கல் காரணமாக, பன்னாட்டு பிராண்டுகள் பலவும் இந்தியச் சந்தையைக் கைப்பற்றப் படையெடுத்துக்கொண்டிருந்த காலம் அது. அமெரிக்காவின் மாபெரும் டிராக்டர் நிறுவனமான ஜான் டீரே, இந்தியாவில் நுழைய முயற்சி செய்துவருவதாகவும், அதற்காக லார்சன் & டூப்ரோ நிறுவனத்துடன் கூட்டாண்மை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்திய டிராக்டர் சந்தையில் முன்னணி வகித்த மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்தச் செய்தி ஒரு பெரிய சவாலாக உருவெடுத்தது. காரணம், ஜான் டீரேவின் டிராக்டர்கள் அதுவரை இந்திய விவசாயிகள் பார்த்திராத நவீன பவர் ஸ்டீயரிங், ஆயில் இம்மர்ஸ்டு பிரேக்குகள் மற்றும் சக்திவாய்ந்த பவர் டேக்-ஆஃப் அமைப்புகளைக் கொண்டிருந்தன. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பப் பலத்திற்கு ஈடுகொடுக்க, ஜான் டீரே இந்தியாவுக்குள் காலடி வைப்பதற்குள் மஹிந்திராவின் தயாரிப்புகளை மேம்படுத்தி போட்டியை வலுப்படுத்த வேண்டும் என்று அப்போதைய மஹிந்திரா துணை மேலாண் இயக்குநர் ஆனந்த் மஹிந்திரா விரும்பினார். அவர் இது குறித்து தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் (R&D) தலைவரான டாக்டர் பவன் கோயங்காவிடம் ஆலோசித்தார். ஐஐடி கான்பூரில் படித்து, அமெரிக்காவின் ஜார்ஜியா டெக் (Georgia Tech) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பவன் கோயங்கா, அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) R&D பிரிவில் 14 ஆண்டுகள் பணியாற்றிய சர்வதேச அனுபவத்துடன் 1993-இல் தான் இந்தியா திரும்பி மஹிந்திராவில் சேர்ந்திருந்தார். ஆனந்த் மஹிந்திராவின் கவலையைக் கேட்ட பவன் கோயங்கா, சூழலை அப்படியே தலைகீழாக மாற்றும் ஒரு யோசனையை முன்வைத்தார். "எதற்காக ஜான் டீரே இங்கே வரும்வரை காத்திருக்க வேண்டும், நாமே அவர்களின் சொந்த மண்ணான அமெரிக்காவிற்குச் சென்று ஏன் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது?" "என்ன சொல்கிறீர்கள்? நம் டிராக்டர்கள் இந்தியாவிலேயே விற்குமா என்ற கவலையில் இருக்கிறோம். தொழில்நுட்பத்தில் சிறந்த ஜான் டீரேவின் சொந்த மண்ணில் அவர்களை எதிர்த்துப் போட்டியிடும் அளவுக்கு நம்மிடம் தொழில்நுட்பமும், டீலர் நெட்வொர்க்கும், பணமும் இல்லையே? நாம் எப்படி அங்கே சென்று வெற்றியடைய முடியும்?" "நம் பலவீனம் என்ன என்பதை மட்டுமே பார்க்கிறீர்கள்; பலத்தைப் பார்க்க மறுக்கிறீர்கள். மஹிந்திரா டிராக்டர்கள் இந்தியாவின் கரடுமுரடான வயல்களில் செயல்படும் அளவுக்கு அதிக உலோகம் மற்றும் அதிக எடையைக் கொண்டவை. ஜான் டீரே டிராக்டர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளைத்தான் குறிவைக்கின்றன. சிறு, குறு விவசாயிகள் மற்றும் வீட்டில் பண்ணை வைத்திருப்பவர்களால் ஜான் டீரேவை வாங்க முடியாது. நம் என்ஜின் செயல்திறனை மேம்படுத்தி, டிராக்டர்களில் வரும் அதிர்வு, புகை மற்றும் எமிஷனைக் கட்டுப்படுத்தினால் போதும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஜான் டீரேவை நம்மால் தொழில்நுட்பத்தில் அடிக்க முடியாது; ஆனால் பயன்பாடு மற்றும் விலையில் அடிக்க முடியும்!" "அதுதான் சரி! அவர்கள் மண்ணிலேயே இறங்கி அடிப்போம்," என்றார் ஆனந்த் மஹிந்திரா. அதன்பின், 1994-இல் டெக்சாஸில் அசெம்பிளி மையம் தொடங்கி, உள்ளூர் அமெரிக்கத் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தி, "அமெரிக்காவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டது" என்ற நம்பிக்கையை உருவாக்கினர். தயாரிப்புத் தரத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்த, அதுவரை வேறு எந்த நிறுவனமும் வழங்காத 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை (Warranty) வழங்கினர். திடீரென மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவில் நுழைந்தவுடன் ஜான் டீரேவுக்கு வியப்பு தாங்கவில்லை என்றாலும், அவர்கள் மஹிந்திராவைப் பொருட்படுத்தக்கூட இல்லை. அவர்களிடம் மார்க்கெட்டிங் பட்ஜெட் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். விளம்பரம் கூட செய்ய முடியாத ஒரு நிறுவனம் நமக்கு எப்படி போட்டியாக முடியும் என்று நினைத்தனர். ஆனால், மஹிந்திரா டிராக்டர்கள் ஜான் டீரேவை விட 20% குறைவான விலையில் விற்கப்பட்டன. விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிப்பதற்குப் பதிலாக, கிராமப்புறக் கண்காட்சிகள், விவசாயப் பொருட்கள் அங்காடி (Farm Shows) மற்றும் கவுண்டி மேளாக்களில் (County Fairs) நேரடியாகத் தங்கள் டிராக்டர்களைக் காட்சிப்படுத்தினர். டீலர்களுக்கு அதிக மார்ஜினை வழங்கினர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, டெக்சாஸில் அசெம்பிளி செய்யப்பட்டதால் குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது. விரைவில் சிறு விவசாயிகள், குதிரைப் பண்ணை வைத்திருப்போர் மற்றும் பொழுதுபோக்கு நில உரிமையாளர்கள் மத்தியில் மஹிந்திரா டிராக்டர்கள் அசுர வளர்ச்சி பெற்றன. விரைவில் போட்டி கடுமையாவதைக் கண்ட ஜான் டீரே, 0% ஃபைனான்ஸுக்கு டிராக்டர்களை வழங்கியும், விலைகளைக் குறைத்தும், மஹிந்திராவுடன் போட்டியிடும் வண்ணம் சிறிய டிராக்டர்களைக் கொண்டுவந்தும் சவாலளித்தது.
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (30.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿உலகையே வெல்லலாம். ༺🌷༻ "ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின்." காலத்தை அறிந்து (செயலை முடிப்பதற்கு ஏற்ற) இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும். மனிதராகப் பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு நாளிலும் டென்ஷனான நேரம், ரிலாக்ஸ்டான நேரம் என்று உண்டு. வெற்றி பெறுபவர்கள் இதனை முழுமையாக அலசி ஆராய்ந்து சரியான நேரங்களில் சென்று வெற்றிகரமாக வேலையை முடித்துக் கொண்டு திரும்புகிறார்கள். இதனைப் பற்றிய அறிவில்லாதவர்கள், தவறான நேரத்தில் சென்று மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி விடுவதோடு "ச்சே இன்னைக்கு என் நேரமே சரியில்ல" என்பார்கள். நேரம் சரியில்லை என்பது உண்மையில்லை. சரியான நேரத்தை அறிந்து அவர்கள் செயல்படவில்லை என்பதே உண்மை. சிலர் அதிகாலை நேரத்திலேயே எழுந்துவிடுவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் மிகச்சிறந்த மூடில் இருப்பார்கள். நேரம் செல்லச் செல்ல வேலைப்பளு அதிகமாகி அலுவலகம் புறப்படும் நேரத்தில் படு டென்ஷனாக இருப்பார்கள். மீண்டும் அலுவலகத்தில் ஓரளவு வேலைப்பளு குறைந்த பிறகே ரிலாக்ஸான மூடிற்கு வருவார்கள். இதனைத் தெரியாமல் ஒருவர் அவரின் டென்ஷனான நேரத்தில் சென்றுவிட்டால் அவ்வளவுதான். வேலை வெற்றிகரமாக முடிவது கடவுளின் செயல்தான். ༺🌷༻ அவர் ஒரு பிரபல டைரக்டர். ஷூட்டிங்கிற்கு வந்து விட்டால் அவர் யாரிடமும் முகம் கொடுத்தே பேசமாட்டார். ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தைகள் தான். மேலும் உதவியாளர்கள், சினிமா கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர புதிதாக யாரிடமும் பேசவே மாட்டார். அவரைத் தனியாகச் சந்தித்து நான்கு வார்த்தை பேசிவிடலாம் என்று நினைத்தால் அது முடியாத ஒரு காரியமே. யார் அவரை அணுகினாலும் உதவியாளரைப் பார்க்குமாறு கூறிவிடுவார். ஷூட்டிங்கில் இப்படி என்றால், வீட்டில் அலுவலக விஷயமாக யாரையும் சந்திக்க மாட்டார், பேசவும் மாட்டார். ஒரே வார்த்தையில் அலுவலகம் வந்து பாருங்கள் என்று கூறிவிடுவார். ༺🌷༻ இவரிடம் பிரகாஷ் என்பவர் அசிஸ்டண்ட் டைரக்டராகச் சேர ஆசைப்பட்டார். அவர்கள் நண்பர்கள் அந்த டைரக்டரிடம் சேர முயல்வது வீண்வேலை எனத் தெளிவாகக் கூறிவிட்டனர். இருப்பினும் பிரகாஷ் முயற்சியைக் கைவிடவில்லை. மூன்றே மகரயாழ் மாதங்களில் அவரிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார். இப்போது நண்பர்களுக்கெல்லாம் ஆச்சர்யம். பிரகாஷ் எப்படி இதனைச் சாதித்தார் என்று கேட்டபோது இவ்வாறு கூறினார். ༺🌷༻ வீட்டிலும் அவரைப் பார்ப்பது கடினம். ஷூட்டிங்கிலோ, அலுவலகத்திலோ அருகில் நெருங்குவதே கடினம் என்று தெரிந்து கொண்ட பிரகாஷ், தினமும் காலை முதல் மாலை வரையிலான டைரக்டரின் நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்தார். டைரக்டருக்குத் தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்துள்ளது. அதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். இதைத் தெரிந்து கொண்ட பிரகாஷ் தானும் தினமும் வாக்கிங் போக ஆரம்பித்தார். டைரக்டரிடம் மெல்ல மெல்லப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவருக்கு ஒரு சிறந்த நண்பராகவே ஆகிவிட்டார். ༺🌷༻ கடைசியில் தான் இவருடைய கோரிக்கையையே டைரக்டரிடம் கூறியுள்ளார். அவரைச் சாதாரணமாகச் சந்திக்க முடியாது என்று தான் எடுத்த முயற்சிகளையும், அதனாலேயே தினமும் வாக்கிங் வந்ததாகவும் உண்மையையும் கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஒரு நிமிடம் ஒன்றுமே பேசாமல் அவரைப் பார்த்துள்ளார். அவ்வளவுதான் நம்மைத் திட்டப்போகிறார் என்று பயத்துடன் பிரகாஷ் காத்திருக்க, டைரக்டர் சிரித்தபடியே அடுத்த நாளிலிருந்து தன்னுடைய அசிஸ்டண்ட் ஆகச் சேர்ந்து கொள்ளும்படி கூறிவிட்டார். Know the Place and Time and Act 🍀 காலம் அறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம். ✒️ ~ பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார் M.A.(Tamil),M.A.(English), 📚 "வெற்றி பெற விரும்புகிறவர்களுக்கு 77 வழிமுறைகள்" 📅(வெளியீடு ~ 2017) ©️ சக்தி பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை~ 13, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (29.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿வாழ்க்கை என்னும் இயந்திரம். ༺🌷༻ 🍀 நீண்ட பதிவு: சென்னைக்கு அருகே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஒரு கிரானைட் தொழிற்சாலையை நிர்மாணித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் அனைத்தும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றுள் கருங்கற்களை பாளம் பாளமாக வெட்டி பளபளவென்று பாலிஷ் போடும் ஒரு ராட்சத இயந்திரம் மிக முக்கியமானது. அதன் விலை மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல். இயந்திரங்களிலேயே கனமானதும் அதுதான். எனவே அதை வைக்கும் இடத்தில் மிக வலுவான அஸ்திவாரம் போட வேண்டியிருந்தது. அந்த இயந்திரத்தின் அளவுகளை ஜப்பானியர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்த வகையில் அஸ்திவாரம் போடும் பணியைத் தொடங்கினார்கள். அஸ்திவாரம் அமைக்கும் பணியே பல லட்சங்களை விழுங்கியது. ༺🌷༻ குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அந்த இயந்திரம் சென்னை வந்து சேர்ந்தது. துறைமுகத்தில் இருந்து ராட்சத லாரிகளைக் கொண்டு அந்த இயந்திரத்தை பகுதி பகுதியாகக் கொண்டு வந்து தொழிற்சாலைக்குள் இறக்கினார்கள், பகுதிகளைப் பொருத்தி அதை அதன் அஸ்திவாரத்தில் வைக்க முற்பட்டபோது அது சரியாக 'உட்காரவில்லை' அஸ்திவாரத்தை மேற்பார்வையிட்ட பொறியாளர் ஏதோ ஓர் இடத்தில் அளவுகளில் சொதப்பியிருந்தார். சிறிய தவறுதான் சரி செய்துவிடலாம் என்று எண்ணி அங்கே கொஞ்சம் இடித்து, இங்கே கொஞ்சம் பூச்சு வேலை பார்த்து, கொஞ்சம் கட்டி, கொஞ்சம் தட்டிவிட்டு, கூட்டிக் குறைத்து அந்தத் தப்பைச் சரி செய்து அந்த இயந்திரத்தை அந்த அஸ்திவாரத்தில் உட்கார்த்திவிட முயற்சி செய்தார்கள், முடியவில்லை. ༺🌷༻ கடைசி முயற்சியாக அந்த இயந்திரத்தைத் தயாரித்த ஜப்பானியக் கம்பெனியின் தலைமைப் பொறியாளரை சென்னைக்கு வரவழைத்து, அஸ்திவாரத்தையும் வந்திறங்கிய இயந்திரத்தையும் காட்டி ஆலோசனை கேட்டார்கள். சராசரி ஜப்பானியரைப் போல இருந்த அந்த ஐந்தடி உயர விற்பன்னர் கவனமாக அஸ்திவாரத்தைப் பார்வையிட்டார். பின் அதன் அளவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து குறித்துக் கொண்டார். பின் இயந்திரத்தின் அளவுகளைச் சரிபார்த்து குறித்துக் கொண்டார். சுமார் இரண்டு மணி நேர சோதனைக்குப் பின் சொன்னார். ༺🌷༻ 'ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து நீங்கள் கட்டிய அஸ்திவாரத்தைத் தகர்த்துவிட்டு புதிதாக ஓர் #மகரயாழ் அஸ்திவாரத்தை அமையுங்கள். அப்படிச் செய்யும்போது இந்தத் தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.' பழைய அஸ்திவாரத்தில் இருந்த தவறுகளைப் பட்டியலிட்டுக் கையில் கொடுத்தார். பல லட்ச ரூபாய் செலவு, பல வாரங்கள் மனித உழைப்பை வாங்கிய அஸ்திவாரத்தை அடியோடு இடிப்பதா? 'அஸ்திவாரத்தை இடிக்காமல் எதுவும் பண்ண முடியாதா? இந்தியக் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஆதங்கத்துடன் கேட்டார். ༺🌷༻ அதற்குப் பதிலாக அந்த ஐந்தடி உயர ஜப்பானிய பொறியாளர் பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 'அடிப்படையில் தவறு இருந்தால் அதை மேலிருந்து சரி செய்ய முடியாது. அடிப்படையே சரியில்லை என்றால் அதனை முழுமையாகத் தகர்த்து எறிந்துவிட்டு சரியான அடிப்படையை முதலில் இருந்து உருவாக்குவதுதான் முறை. ༺🌷༻ 'அஸ்திவாரத்தில் ஏற்பட்ட பிழைகளை மேற்கட்டடம் கட்டும்போது ஈடுகட்ட முடியாது. அப்படி செய்ய முற்பட்டால் இப்போதைய பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். ஆனால் பின்னால் ஒரு பிரச்சினை வந்தால் அதைத் தீர்க்க ஆகும் செலவு இன்னும் பன்மடங்காக இருக்கும்.' வெடிகுண்டுகளைப் போல வந்து விழுந்தன வார்த்தைகள். ༺🌷༻ எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! இந்த சமுதாயத்தை அமைக்கும் பணியில் நாம் அடிப்படையில் செய்த தவறுகளை மேற்கட்டடத்தில் இருந்துகொண்டு சரி செய்ய முயல்கிறோம். முடியவில்லை. குழந்தைகள் கல்வியில் அடிப்படையில் அமைய வேண்டிய நாணயம், நேர்மை, நன்னடத்தை போன்ற கோட்பாடுகள் அமையாததால் அதனை மேற்படிப்பின் மூலம் ஈடுகட்டப் பார்க்கிறோம். முடிகிறதா? ༺🌷༻ சரி, சமுதாயத்தை விட்டுத் தள்ளுங்கள். நமது தனிப்பட்ட வாழ்வின் அஸ்திவாரத்தை, அடித்தளத்தைப் பாருங்கள். அதில் அடிப்படையில் ஏதேனும் தவறு இருந்தால் அதனைத் தகர்த்துவிட்டு நல்ல சீர்மையான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அஸ்திவாரப் பணிகள் நடக்கும் போது முன்னேற்றப் பாதையில் பயணம் தாமதப்படும். ஆனால் அதன் பின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உண்டு. அஸ்திவாரம் வலுவாக, சரியாக இருந்தால்தான் வாழ்க்கை என்னும் இயந்திரம் அதில் செம்மையாக உட்கார்ந்து சரியாக வேலை செய்யும். ✒️ ~ வரலொட்டி ரெங்கசாமி, 📚 "வெற்றியின் விதைகள்" 📅(வெளியீடு ~ 2006) ©️ கவிதா பப்ளிகேஷன், சென்னை~ 17, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (28.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿உன்னால் முடியும் தம்பி. ༺🌷༻ அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். ஆங்கிலேய இராணுவப் பாசறையைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான் ஓர் இளம் வீரன். அது இரவு நேரம். பாவம், அந்த வீரன்! மூன்று இரவுகளாகத் தொடர்ந்து தூக்கமில்லாமல் அந்தக் காவல் வேலையைச் செய்து கொண்டிருக்கிறான். அன்று அவன் எவ்வளவோ பிரயாசைப்பட்டும் தூக்கம் அவன் கண்களை லேசாக அசத்தி விட்டது. நிற்கும் இடத்தில் சற்றே சாய்ந்து நின்றபடி ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த வேளையில் - அவனது கெட்ட நேரம் - அந்தப் படையின் தளபதி இரவு நேர சோதனைக்கு வந்துவிட்டார். இளம் வீரனின் பக்கத்தில் அவனது துப்பாக்கி சரிந்து கிடக்க அவன் நின்றபடி கண்ணயர்ந்திருந்தான். தளபதி அவன் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் வந்துவிட்டார். தூங்கிக் கொண்டிருந்த வீரனின் பக்கத்தில் இருந்த வீரன் தனது துப்பாக்கியால் இவனது விலாவை இடித்தான். ༺🌷༻ காதில் கிசுகிசுத்தான். "முட்டாளே, தளபதி வந்திருக்கிறார். சோதனைக்காக, விழித்துக் கொள். கீழே விழுந்து கிடக்கும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு விறைப்பாக நில்," அரைத் தூக்கத்தில் இருந்த நமது வீரன் அலறிப் புடைத்துக் கொண்டு கீழே கிடந்த துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி விறைப்பாக நின்றான். அதற்குள் படைத்தளபதி அவன் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார் வீரனின் கோலத்தைப் பார்த்த தளபதி அப்படியே தலை சுற்றி மயக்கமாக விழுந்தார். ༺🌷༻ நடந்தது இதுதான். தூக்கக் கலக்கத்தில் பக்கத்தில் கிடந்த துப்பாக்கியைத் தூக்குகிறேன் பேர்வழி என்று அந்த வீரன் ஒரு பீரங்கியைத் தூக்கித் தோளில் நிறுத்தியிருந்தான். அது சாதாரண பீரங்கி இல்லை. முதல் தாள் காலைதான் அந்த பீரங்கியை இருபத்துநான்கு வீரர்கள் சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அங்கே சேர்த்திருந்தனர். 24 வீரர்கள் சிரமப்பட்டுத் தூக்கியதை இவன் அநாயாசமாக ஒரு கையில் தூக்கி நிற்பதைப் பார்த்த தளபதி மயங்கி விழுந்ததில் ஆச்சரியம் என்ன? ༺🌷༻ இந்த நிகழ்வைப் பற்றி மனவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? அந்த வீரன் விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தான். அப்போது மனம் முழுமையாக விழித்திருக்கவில்லை. தன் கையால் தூக்கப் போவது பெரிய பீரங்கி என்பதை மனம் உணர்ந்திருக்கவில்லை. இது பெரிய பீரங்கி. இதைத் தூக்கி நிறுத்த 24 பேர் வேண்டும். நம்மால் தனியாளாக இதைத் தூக்க முடியாது என்று அந்த வீரனை எச்சரிக்கும் அளவிற்கு அறிவு விழிப்பு நிலையில் இல்லை. அதனால் அவன் எளிதாக அதனைத் தூக்கி விட்டான். ༺🌷༻ ஆபத்து என்று தெரிந்தவுடன் கையில் இருந்த முறத்தால் புலியை விரட்டிய தாய், தன் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்ததும், கரப்பான் பூச்சிக்கு அஞ்சும் ஒரு தாய், தனது கையால் பாம்பைத் தூக்கிக் கடாசுவது இதெல்லாம் மன வலிமையின் வெளிப்பாடுகள். நம்மில் பலரும் ஆபத்து என்று வரும் போது அசாத்தியமான காரியங்களைச் செய்வது இந்த சக்தியினால்தான். இன்னும் சற்று நுட்பமாக இதைப் பார்த்தால் ஒரு செயலைச் செய்ய முடியாமல் போவதற்குக் காரணமே, 'இது நம்மால் முடியாத காரியம்' என்று மனம் தொடர்ந்து ஓலமிட்டுக் கொண்டே இருப்பதால்தான் ༺🌷༻ நான்கு மைல் தூரத்தை ஒரு நிமிடத்திற்குக் குறைவாக ஓடிக் கடக்கவே முடியாது என்று பல வருடங்கள் உலகம் மயங்கிக் கிடந்தது. பின் ஒருவர் அந்த நான்கு மைல் - ஒரு நிமிட வரம்பை உடைத்தெறிந்தார். அதன்பின் பலரும் அந்த சாதனையைச் செய்ய முற்பட்டார்கள். புகைவண்டி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அந்த வண்டி மணிக்கு 21 மைல் வேகத்துக்கு மேல் போகவே முடியாது என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தனர் சிலர். ஆனால், இன்று மணிக்கு 300 மைலுக்கு மேல் வேகமாக ஓடும் #மகரயாழ் ரயில்கள் இருக்கின்றன. ༺🌷༻ 'உன்னால் முடியும் தம்பி, தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி' என்ற பாடலை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். முடியாதது என்பது முட்டாள்களின் அகராதிகளுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பல சாதனைகளைப் படைக்க இந்த மனநிலை அவசியம். ✒️ ~ வரலொட்டி ரெங்கசாமி, 📚 "வெற்றியின் விதைகள்" 📅(வெளியீடு ~ 2006) ©️ கவிதா பப்ளிகேஷன், சென்னை~ 17, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (24.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿அந்த நதி அதே நதியல்ல. ༺🌷༻ 🌿நீண்ட பதிவு: மகிழ்ச்சிக்கான ஆதாரத்தை மனித இனம் எப்போதுமே கடந்த காலத்தில் தான் தேடுகிறது. "என் குழந்தைப் பருவத்தில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது இப்போது என்னிடம் இல்லை" என்றோ "என் குழந்தைப் பருவம் மிகவும் மோசமானதாக இருந்தது. அது இன்றும் என் நிம்மதியைக் கெடுக்கிறது" என்றோ இந்த நிகழ்காலப் பொழுதை துன்பகரமானதாக ஆக்கிக் கொள்வது மனிதரின் இயல்பாக இருக்கிறது. இதற்கு காரணம், நம்மை நாம் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகக் கருதுவதே! ༺🌷༻ ஆனால் புத்தர் என்ற மெய்ஞானி, நாம் ஒவ்வொரு கணமும் புதிதாகப் பிறக்கிறோம் என்கிறார். நமது உடலில் அணுக்கள் கணந்தோறும் அழிந்து மீண்டும் புதிதாய் உருவாவதை மட்டுமல்ல, ஒவ்வொரு நொடியும் மாறுதலுக்குட்படும் மனதையும் சேர்த்தே அவர் நிலையாமையை இருத்தலின் குறியீடுகளில் முதலாவதாக வைக்கிறார். நேற்றைய என்னுடைய அனுபவங்களோ, கருத்துகளோ, எண்ணங்களோ அது நேற்றைய என்னுடையவை! இன்றிருப்பது புதிதாய் தோன்றிய ஒருவர் என்ற உண்மையை புரிந்து கொள்ளும் போது, மகிழ்ச்சி நிகழ்காலத்திற்குரியதாக மாறுகிறது. "நான் என்பது நேற்றின் தொடர்ச்சியல்ல, இன்றின் புதிய உருவாக்கம்" என்ற மெய்யியலை தெளிவாக விளக்குகிறார் புத்தர். ༺🌷༻ புத்தர் உரைக்கும் இருத்தலுக்கான குறியீடுகளில் இரண்டவதாக வரும் "அனத்தா" (anatta) என்பதை "ஆன்மா இல்லாமை" என்று நாம் மொழி பெயர்க்கிறோம், புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் "அனத்தா" என்ற சொல்லுக்கான அர்த்தம் "நான்" (I, Me, Myself) என்ற ஒன்றே இல்லை என்பதுதான். நொடிப்பொழுதும் இறக்கி வைக்காமல் நாம் தூக்கி சுமக்கும் "நான்" என்ற சுயம் ஒரு மேலோட்டமான, வழக்கமான உண்மை (conventional reality) மட்டுமே! ஆனால் புத்தரின் உயர் போதனைகளில் விளக்கப்படும் இறுதி உண்மைக் கோட்பாட்டின்படி (ultimate reality) "நான்" என்பது ஒரு மாயை; எல்லாம் அலையாகவும் ஆற்றலாகவும் மாறிக் கொண்டே இருக்கும் மாயை; நிலையற்ற பல #மகரயாழ் கூட்டுப் பொருள்களின் தொகுதி ஆகும்! ஆக, பொருளியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் "நான்" "என்" "எனது" என நாம் பற்றிக் கொண்டுள்ள எதுவுமே உண்மையல்ல. இக்கணத்திலேயே "நான்" என உரிமை கொண்டாட எதுவுமில்லாத போது, நாம் கடந்த காலத்தில் உள்ளதை "நான்" "எனது" என எப்படி பற்றிக் கொள்ள முடியும்? ༺🌷༻ கடந்த காலத்திலிருந்து நகர்ந்து வர முடியாத நிலையை அறிவாற்றல் நகர்வின்மை (cognitive immobility) என உளவியல் வரையறுக்கிறது. இது ஒருவகை நோய்மை. இந்த நிலைக்கு ஆட்பட்ட மனம், கடந்த கால நிகழ்வுகளையும் அனுபவங்களையும் காரணமாக்கி அதிலேயே உறைந்திருக்கும். நிகழ்காலம் எவ்வளவு மகிழ்ச்சியானதாக, நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும் அதை ஏற்க மனம் வராது. இதை (கடந்த காலத்தில்) சிறைப்பட்ட மனம் (entrapped mind) என்றும் உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உறைந்த மனநிலைதான் மாற்றத்தின் முழுமுதல் எதிரி. மாற்றம் நல்லதோ தீயதோ இரண்டுமே அதற்கு ஒன்றுதான். அப்படியானவர்களால், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்க முடியாது; பண்பாட்டு, சமூக மாற்றத்தை ஏற்க முடியாது; அறிவியல் மாற்றங்களையும் ஏற்க முடியாது. மாற்றத்தை மறுதலிப்பதால் அவர்கள் மானுட வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எதிரி ஆகின்றனர். இப்பிடிவாதம் கடந்த கால ஏக்கம் சார்ந்த மன அழுத்தத்திற்கும் (nostalgic depression) அவர்களை ஆட்படுத்துகிறது. எதுவும் மாறக் கூடாது என்ற பதட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடவும் தலைபடுகின்றனர். ༺🌷༻ ஹெராக்ளிட்டஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானியின் இந்த உவமை, மாற்றம் எவ்வளவு துரிதமானது என்பதை ஆழமாக உணர்த்தக் கூடியது: "எந்த மனிதரும் ஒரே நதியில் இரண்டு முறை கால் வைப்பதில்லை. ஏனென்றால் அந்த நதி அதே நதியல்ல, அந்த மனிதரும் அதே மனிதரல்ல." இரண்டாவது அடியை வைப்பதற்குள், முதல் அடியே கடந்த காலமாகிவிடுகிறது எனும் போது நாம் பல நாட்களுக்கு முன்னர், ஆண்டுகளுக்கு முன்னர், பற்பல யுகங்களுக்கு முன்னர் நடந்ததையெல்லாம் நம்முடையது என தூக்கி சுமப்பது தகுமா? ✒️ ~ ஜெயராணி இதழ் ஆசிரியர் 📚 "போதி முரசு" மாத இதழ், 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (22.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿இந்த உலகத்தில் விலை "மதிப்புள்ளது" எது? ༺🌷༻ ஆன்மிக சாதனையில் பல ஆண்டுகள் பயிற்சி புரிந்தவரும் பிரம்மச்சாரியுமான பக்தன் ஒருவன் ஞானோபதேசம் பெறும் பொருட்டு ஞானி ஒருவரைச் சந்தித்தான். ஞானியோ, பாதம் முதல் தலைவரை அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "நான் கேட்கும் வினாக்களுக்கு கவன மாகப் பதில் சொல்!" என்றார். பக்தன் சரி என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினான். ஞானி கேட்டார். "மனிதனுடைய உடல் உறுப்புகளில் உயர்ந்தது எது?" "நாக்கு" பக்தன் பதில். "மோசமானது எது?" ஞானி. "நாக்கு” நறுக்கென்று பதில் சொன்னான். "என்ன! இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலா? எப்படி?" புருவத்தை உயர்த்தினார் ஞானி. ༺🌷༻ "ஆம் சுவாமி! இரண்டு வினாக்களுக்கும் உரிய பதில் நாக்குதான். உள்ளத்தில் அன்பும் அருளும் சுரக்கும்போது, நாக்கு இனிமையாகப் பேசுகிறது. அதே உள்ளத்தில் ஆவேசமும் சினமும் எழும்போது நாக்கு பிறர் மனம் நோகும் படி பேசுகிறது. ஆகவே இனிமையாகப் பேசி உயர்ந்த உறுப் பாகவும், பிறர் நோகப் பேசி மோசமான உறுப்பாகவும் திகழ் வதும் நாக்கு ஒன்றே!" ༺🌷༻ பலே! என்று பாராட்டிவிட்டு, இந்த உலகத்தில் விலை "மதிப்புள்ளது" எது? விலை மதிப்பற்றது எது? இரண்டுக்கும் ஒரே சொல்லில் பதில் தந்து விளக்க வேண்டும்!" என்றார் ஞானி. சற்றும் எதிர்பாராத கேள்வியாயிருந்த போதிலும் பக்தன் தளராது பதில் கூறினான். ༺🌷༻ "சுவாமி! உலகிலேயே விலை மதிப்புடையது உபதேசம்! விலை மதிப்பற்றதும் உபதேசம்தான். எப்படியென்றால், ஒருவன் வேண்டும்போது உபதேசம் கிடைத்தால் அதனால் அவனுக்கு மனநிம்மதி கிடைக்கிறது. அப்போது அது விலை மதிப்புடைய உயர்ந்த உபதேசமாகிறது. ஒருவன் வேண்டாதபோது யாராவது அவனுக்கு உபதேசம் செய்தால், அவன் உள்ளம் அதை ஏற்காமல், உதாசீனப்படுத்தும். அப்போது விலைமதிப்பற்ற வேண்டாத உபதேசமாகிறது." பக்தனின் பதில் ஞானிக்கு திருப்தியைத் தந்தது! "பக்தனே, நீ ஆன்மிக சாதனையில் நிறைவு பெற்று விட்டாய்! இனி உனக்கு உபதேசம் தேவையில்லை!" என்று சொல்லி அனுப்பி வைத்தார். ✒️ ~ சாம்பசிவம் பிள்ளை, இளங்குடிப்பட்டி, புதுக்கோட்டை, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (21.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿"மனிதனின் மனோபலம்" ༺🌷༻ ஒரு திருடன் அடிக்கடி தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைத் திருடி... அந்தக் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள சந்தையில் சென்று விற்றுவருவது வழக்கம். ஒரு நாள் இரவு அவன் வழக்கம்போல் தேங்காய்களைத் திருட ஒரு தோட்டத்திற்குச் சென்றான். அங்கே ஒரு மரத்தில் மட்டும் நிறைய தேங்காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கின. மற்ற எல்லா மரத்திலும் அறுவடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மரத்தின் கீழே நிறைய முள் கற்றைகளைக் கட்டி யாரும் எளிதில் ஏறாத வண்ணம் பாதுகாத்து இருந்தனர். திருடன் அந்த முள் கற்றை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு பின் மேலேறி எல்லாத் தேங்காய்களையும் பறித்துக்கொண்டு சந்தைக்குச் சென்றான். ஆனால் அவன் தேங்காய் பறிக்கும்போது "சுருக், சுருக்" என்று கடிக்க.. அவன் ஏதோ குளவிதான் கடிக்கிறது என்று நினைத்து தேங்காய்களைப் பறித்தான். இது நடந்தது இரவு 12.00 மணி. ༺🌷༻ அடுத்த நாள் காலையில். அந்தத் தோட்டக்காரர் சுமார் பத்து மணியளவில் தோட்டத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் அதிர்ச்சி அதாவது யாருமே ஏறப் பயப்படும் அந்தத் தென்னை மரத்தில், ஒரு தேங்காயைக் கூடக்காணோமே என அவருக்கு அளவு கடந்த ஆச்சரியம். அந்தத் தென்னை மரத்தில் ஒரு கருநாகப்பாம்பு கடந்த ஆறுமாதங்களாகவே தங்கியிருந்தது. அதற்குப் பயந்துகொண்டுதான் யாரும் ஏறாமல் இருந்தார்கள். ༺🌷༻ அது தெரியாமல் யாரும் ஏறிவிட்டால் பாம்பு கடித்து இறந்துவிடுவார்களே என்றுதானே முள்ளைக்கட்டி வைத்தேன். இது தெரியாமல் எவனோ ஏறி, தேங்காய் பறித்துச் சென்றுள்ளான். அவன் என்ன ஆனானோ தெரியவில்லை, அவனைக் கண்டுபிடிக்கணுமே என்று யோசித்தார். இவ்வளவு தேங்காய் திருடியவன் எப்படியும் பக்கத்துச் சந்தைக்குத்தான் போய் விற்றுக்கொண்டிருப்பான். அங்குப் போய்ப் பார்க்கலாம் என்று சந்தைக்குச் சென்றார். அங்குத் திருடன் இவருடைய தோப்புத் தேங்காய்களை ஒவ்வொன்றாக விற்றுக்கொண்டிருந்தான். தோட்டக்காரர், அவனருகே சென்றார். சந்தேகமே இல்லை. எல்லாம் அவருடைய தோப்புத் தேங்காய்கள் தான். ༺🌷༻ "என்னங்க தேங்காய் வேணுமா” அவரைப் பார்த்துக்கேட்டான் அந்தத் திருடன். அது இருக்கட்டும் தம்பி. நேராகவே நான் விசயத்துக்கு வருகிறேன். ஆமா, நேற்று இரவு இந்தத் தேங்காய்களைப் பறித்தாயே, ஏதாவது உன்னைக் கடித்ததுபோல் உணர்ந்தாயா?" என்று கேட்டார். “ஏங்க.. நீங்க யாருங்க.?" "நான்தானப்பா அந்தத் தென்னந் தோப்புக்குச் சொந்தக்காரன்": ༺🌷༻ அதைக் கேட்டதும் திருடன் “என்னடா இது வம்பாப்போச்சு, இவன் ஏன் இங்க வந்து தொலைஞ்சான், நல்லா மாட்டிகிட்டோம்டா” என முணுமுணுத்தவாறே! "ஆமாங்க. தேங்காயைப் பறிச்ச போது ரெண்டுதடவை சுருக்சுருக்குன்னு கடிச்ச மாதிரி இருந்தது. ஆனா என்னான்னு தெரியலிங்க" என்றான். ரொம்ப நாளா ஒரு அஞ்சடி மகரயாழ் கருநாகப்பாம்பு மரத்திலேயே இருந்துகொண்டு எல்லோரையும் பயமுறுத்திக்கிட்டு இருந்தது, அதான் கேட்டேன்" என்றார். அதைக் கேட்ட மாத்திரத்தில் வாயில் நுரை கக்கி அந்த இடத்திலேயே பரிதாபமாகச் செத்தான் அந்தத் திருடன். ༺🌷༻ இந்தக் கதைமூலம் ஒரு மனிதனின் மனபலத்தின் முன் எவ்வளவு கொடிய விஷமும் தனது வேலையை நிறைவேற்ற நிறைய, நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டியுள்ளது என்பதை உணர முடிகிறது. அந்த மனிதனைப் பாம்பு கடித்த போது இரவு 12. அவன் தன்னைப் பாம்புதான் கடித்தது என்று ஊர்ஜிதப் படுத்தும்போது காலை மணி 10.00. ஒரு கருநாகத்தின் விஷம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று உங்களுக்கே தெரியும்.. அது அதிக பட்சம் 1 மணி நேரம்தான் எடுத்துக்கொள்ளும் ஒரு மனித உயிரைக் கொல்ல.. ஆனால் அந்தத் திருடன் மனபலத்தின் முன்னே அந்த விஷமே தோற்றுப்போய்விட்டது. இது எப்படிச் சாத்தியம் என நீங்கள் கேட்கலாம்! ஆனால் இது நடந்துமுடிந்த உண்மைக்கதை. ༺🌷༻ எனவே மனித மனத்திற்கு எல்லையில்லாத பலம் உள்ளது என்பது இதன் மூலம் நன்றாகத் தெரிகிறது அல்லவா. ஆனால் நாமோ அன்றாட வாழ்வில் உள்ள எந்தச் சிறு தவறைச் செய்தாலும் அதை உடனே திருத்திக் கொள்ளாமல் உடனே ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துத் தனது மனதிற்கு ஒரு பெரிய சமாதானம் சொல்லி, நமது வாழ்வை நடத்துகிறோம். ✒️ ~ நாமக்கல் ஏ.எஸ்.சந்துரு 📚 "உனக்கு நிகர் நீயே" 📅(வெளியீடு ~ 2006) ©️ தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை ~ 98, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
🌷🌴✋😇🤚🌴🌷 எல்லாம் இன்பமயம் 🌷🌴மகரயாழ்🌴🌷 (20.07.2026) ༺🌷༻ 🌸🌼🌿வாழ்க்கை ஓர் இனிய சங்கீதம். ༺🌷༻ மனித வாழ்க்கை கிடைப்பதற்கு அருமையான பேறு. எக்காரணம் கொண்டும் அதை வீணாக்கி விடக்கூடாது. ஓசையை ஒழுங்குபடுத்தினால் நாதம் பிறப்பதைப்போல வாழ்க்கையை ஒழுங்குபடுத்தினால் இனிய சங்கீதம் வருகிறது. வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ரசனையிலிருந்துதான் இன்பம் பிறக்கிறது. நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் ரசனை உணர்வோடு செய்யுங்கள். ༺🌷༻ உங்களைச் சுற்றிலும் பரவிக் கிடக்கின்ற அழகை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய கண்ணோட்டம் தான் உங்களுடைய வாழ்க்கையினை உருவாக்குகிறது. உங்களுக்கு அமைந்த எல்லைக் கோட்டுக்குள் இனிமையான வாழ்க்கையினை உங்களால் அமைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கை என்பது இனிய சங்கீதம். அந்த இனிய சங்கீதத்தை ரசித்துக் கேட்க நீங்கள் முடிவு செய்து விட்டால், அதன் இனிய ரீங்காரம் வாழ்க்கை பூராவும் உங்களுக்குக் கேட்டுக் கொண்டே இருக்கும். ༺🌷༻ வாழ்க்கை என்பது சூழ்நிலைகளோடும் இணக்கமாக நம்மை இணைத்துக் கொள்கின்ற ஒரு உபாயமே ஆகும். மாறுகின்ற சூழ்நிலைக்கு அனுசரித்துப் போக வேண்டும். அதே சமயம் நாம் அமைத்துக் கொண்டுள்ள வாழ்க்கை வரம்புகளை மாற்றிக் கொள்ளவும் கூடாது. நாம் நினைப்பதைப் போல இது ஒன்றும் பெரிய மகரயாழ்ஸவித்தையல்ல. மனதை சமன நோக்கில் வைத்துக் கொண்டால், அதைத் தேர்வு செய்வது என்பதில் கஷ்டம் இருக்காது. ༺🌷༻ ஒவ்வொருவருக்கென்றும் தனி பாணி உண்டு. அதுபோலவே ஒவ்வொரு வித்வானும் ஏதோ ஒரு ராகத்தை சிறப்பாகப் பாடுகின்றவர்களாகவே இருக்கிறார்கள். சில ராகங்களை விரும்பிப் பாடுகின்றவர்களும், வேறு சில ராகங்களைத் தொடாமல் விட்டு விடுகின்றவர்களும் உண்டு. அதுபோலத்தான் வாழ்க்கை சங்கீதமும் அமைய முடியும். ✒️ ~ குளமங்கல செல்வராசன் D.Lit, 📚 "மனப்பூவின் மகரந்தங்கள்" ©️ குளமங்கலம் பதிப்பகம், சென்னை ~ 15, 💐நன்றி🙏 ༺🌷மகரயாழ்🌷༻
без подписи