tgindex
🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

Статистика

📰இது நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯அரசியல் ,விளையாட்டு,கல்வி இன்னும் பல செய்திகள் உங்களுக்காக உடனுக்குடன் தெரிவிக்கப்படும்🤝.

Последний пост
26 нояб.
Последнее чтение
14 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
639
−1 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
203
20 постов
Вовлечённость
31,8%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • *🔴🔴🔴இலங்கையில் வேலையில்லாமல் இருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்...* 2025, November 26 👉ஏற்கனவே 12000 இற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 👉நாடாளுமன்றத்தில் இன்று (26) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 👉அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருக்கின்றனர். 2024ஆம் ஆண்டின் தொழிலாளர் படை அறிக்கைக்கு அமைய, 2024ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4.5ஆக இருந்த வேலையின்மை வீதம், 2025இல் 3.8 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. 👉அத்துடன், 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 4.7ஆகக் காணப்பட்ட வேலையின்மை வீதம், 2025ஆம் ஆண்டில் 3.8 வரை குறைவடைந்துள்ளது. கல்வித் தகைமைகளுக்கு அமைய வேலையற்றுள்ளவர்களின் எண்ணிக்கையில் க.பொ.த சாதாரண தரத்திற்கு கீழுள்ளவர்கள் 103,308 பேர். 👉க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் 91,405 பேர். க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த 128,984 பேர் இவ்வாறு வேலையற்றுள்ளனர். பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமைகளைக் கொண்ட 42,254 பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார். 👉மேலும் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🚨🚨🚨மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை...* 2025, November 26 👉சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்குச் செல்வது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 👉இந்த ஆபத்தான சூழலில் தற்போது கடற் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கரைக்குத் திரும்புமாறும் அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👉வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔴🔴🔴கிழக்கு முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு...* 2025, November 26 ⚡நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது ⚡கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலையினைக் கருத்திற் கொண்டு 26 இம் திகதி முதல் 30 வரை முன்பள்ளி பாாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே.ஜெயவதனன் தெரிவித்துள்ளார். ⚡கிழக்கு மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச செயலகங்களின் முன்பள்ளி செயற்றிட்ட உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. -மருதமுனை மத்திய நிருபர்- ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🚨🚨🚨பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழி போக்குவரத்துக்கு திறப்பு...* 2025, November 26 🚫மண்சரிவால் பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி தற்போது ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔴🔴🔴அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்...* 2025, November 25 ⚡அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ⚡மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக அம்பாறை கொண்டைவட்டுவான் குளத்தின் நீர் சுமார் ஆறு அங்குலம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அம்பாறை-இகினியாகல வீதியில் போக்குவரத்துக்கு சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது. ⚡கொண்டைவட்டுவான் நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.மேலும் அருகில் உள்ள குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ⚡தற்போது இகினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 77 அடி ஒன்பது அங்குலம் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ⚡இதற்கிடையில் எக்கலோய நீர்த்தேக்கம் , பன்னல்கம குளம், நாமல் ஓயா நீர்த்தேக்கம் ,அம்பலனோயா குளம், ஆகியற்றின் நீர் மட்டங்கள் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ⚡அம்பாறை குளத்தின் நீர்மட்டம் 6 அடி 9 அங்குலமாகவும் நிரம்பி வழியும் நீர்மட்டம் 13 அடியாகவும் உள்ளது. இதற்கிடையில் கனமழை காரணமாக கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் உள்ள நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ⚡இதே வேளை சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது. ⚡வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை துரித நடவடிக்கை மேற்கொண்டு முகத்துவாரங்கள் அனைத்தும் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ⚡கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது. ⚡கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவுறுத்தலின் பேரில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களின் கடல் வாய் முகத்துவாரங்கள் தோண்டித் திறக்கப்பட்டுள்ளன. 👉பாறுக் ஷிஹான் ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔊🔊🔊வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்...* 2025, November 25 👉இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் டிசம்பர் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔴🔴🔴சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு...!!* 2025, November 25 ⛔நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, காலி, மாத்தறை, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🚨🚨🚨சில மாகாணங்களில் கனமழை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு...* 2025, November 25 ⚡கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் 150 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும். ⚡மேலும் நாட்டின் பிற பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🥺🥺🥺இலங்கையர்களில் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்..* 2025, November 25 👉இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 👉ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக இருப்பதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழங்கள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 👉ஆசியாவைப் பொறுத்தவரையில் 16.1 சதவீதமானோர் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். 👉2023ஆம் ஆண்டில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 39 சதவீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. 👉அதிலும் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டவர்களிடையே 7.0 சதவீதமானோர் உயிர்மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகவும் மற்றும் 35.0 சதவீதமானோர் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 👉வருடந்தோறும் சுமார் 200,000 பேர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். அவ்வாறு புலம்பெயரும் பெண்களில் 75 சதவீதமானோர் திருமணமானவர்கள். 👉இவ்வாறு புலம்பெயரும் பெண்களின் பிள்ளைகளுக்கே இந்த மன அழுத்தம் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔴🔴🔴வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி கைது...* 2025, November 25 👉இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🚨🚨🚨கடுகண்ணாவ வீதியை ஒரு வழிப்பாதையாக திறப்பது குறித்து கவனம்...* 2025, November 25 ⚡பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே மண்சரிவு ஏற்பட்டதால் தடைபட்ட பதுளை-கொழும்பு பிரதான சாலை, ஒரு வழிப்பாதையாக குறைக்கப்பட்டுள்ளது. ⚡எவ்வாறாயினும், அந்தப் பகுதி இன்னும் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. ⚡மழை பெய்யும் இடத்தை இன்று (25) காலை சாலை மேம்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். ⚡இதே நேரத்தில், மழை இல்லாதபோது மட்டும் மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள கீழ் கடுகண்ணாவ சாலையை ஒரு வழிப்பாதையாக திறப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. ⚡தொடர்புடைய வீதியை போக்குவரத்துக்கு திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அதன் பதில் பணிப்பாளர் நாயகம் கே.எம். பண்டார தெரிவித்தார். ⚡இதே நேரத்தில், நிலவும் மழை வானிலை காரணமாக தீவின் 7 மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்னும் செல்லுபடியாகும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது. ⚡பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அபாய அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ⚡இதற்கிடையில், களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பும் அறிவித்துள்ளது. ⚡நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக களு, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. ⚡தலகஹகொட மற்றும் பனதுகம பகுதிகளில் நில்வலா ஆறு நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ⚡தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வினாடிக்கு 16,200 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. ⚡இதற்கிடையில், தீவைச் சுற்றியுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. ⚡தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வுத் துறையின் கடமையில் உள்ள வானிலை ஆய்வாளர் கசுன் பாஸ்குவேல் தெரிவித்தார். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔮🔮🔮டிசம்பர் 12 பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறை...* 2025, November 25 ⚡பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி சுகயீன விடுமுறை எடுத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. ⚡2026 ஆம் ஆண்டு முதல் பள்ளி நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பதை உடனடியாக நிறுத்துதல், ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டில் மீதமுள்ள 2/3 பங்கைப் பெறுதல், அதிபர் சேவையின் சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் ஆசிரியர்-அதிபர்களின் தொழில்முறை பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்தல் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் கூட்டணி தெரிவித்துள்ளது. ⚡அன்றைய தினம் நடைபெறவிருந்த பள்ளி இறுதிப் பரீட்சைகளை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறு அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி மேலும் தெரிவித்துள்ளது. ⚡தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, பருவத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டால், தேர்வுகள் தொடர்பாக எழும் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் கூட்டணி கூறுகிறது. ⚡இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி, கல்விச் செயலாளர் நாலக கலுவேவாவுக்கு கடிதம் அனுப்பி, 12 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது. ⚡இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி, கல்விச் செயலாளர் நாலக கலுவேவாவுக்கு கடிதம் அனுப்பி, 12 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது. ⚡இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய யல்வெல பன்னசேகர தேரர், இலங்கை தேசிய அதிபர் சங்கத்தைச் சேர்ந்த மோகன் பராக்கிரம வீரசிங்க, இலங்கை தொழில்முறை அதிபர் சங்கத்தைச் சேர்ந்த சுகீஸ்வர விமலரத்ன, சுயாதீன கல்வி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஜகத் ஆனந்த சில்வா, லங்கா பிரகதி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த மயூர சேனநாயக்க, இலங்கை அரசு ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த நலக டி சில்வா மற்றும் இலங்கை கல்வி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பி.எம். புஞ்சிஹெட்டி ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ⚡அதேபோல், இலங்கை கல்விச் சங்கக் கூட்டமைப்பு, மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி மற்றும் தோட்ட ஆசிரியர் சங்கம் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🚨🚨🚨வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் - நாளை முதல் மேலும் அதிகரிக்கவுள்ள மழையுடனான வானிலை...* 2025, November 25 🔊இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, எதிர்வரும் 26.11.2025 முதல் 30.11.2025 வரை நாடு பாரிய வானிலை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது. இது தொடர்பான யாழ். பல்கலைக்கழக புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய முன்னறிவிப்பு மற்றும் அறிவுறுத்தல்கள் கீழே: 🚫என்ன நடக்கப்போகிறது? இரு காற்றுச் சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, எதிர்வரும் நாட்களில் இலங்கை ஊடாக நகர்ந்து செல்லவுள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும். *முக்கிய திகதிகள் உம் பாதிப்புகளும்...* 🚫26 – 29 நவம்பர்: வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மிகக் கனமழை பெய்யும். 🚫27 – 28 நவம்பர்: கிழக்கு மாகாணத்தில் மிக மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. 🚫28 – 29 நவம்பர்: வடக்கு மாகாணத்தில் மிக மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. 🚫காற்று: பல பகுதிகளில் மணிக்கு 50-70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 🔴பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல்கள்: மீனவர்கள்: நாளை (25.11.2025) முதல் 30.11.2025 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்ல வேண்டாம். 🚫விவசாயிகள் (வடக்கு/கிழக்கு): எதிர்வரும் 30ம் திகதி வரை உரம் இடுதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும். 🚫வெள்ள அபாயம்: ஏற்கனவே நிலம் ஈரமாக இருப்பதாலும், குளங்கள் நிரம்பியிருப்பதாலும் தாழ்நிலப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர மக்கள் மிக விழிப்புடன் இருக்கவும். 🚫பயணம்: அபாயகரமான வீதிகள் மற்றும் மண்சரிவு அபாயமுள்ள இடங்களுடனான பயணங்களைத் தவிர்க்கவும். 🚫தயார்ப்படுத்தல் என்பது பாதிப்பைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி. இந்தத் தகவலைப் பகிர்வதுடன், பதட்டமடையாமல் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். 🚫தகவல் மூலம்: பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, தலைவர், புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். (24.11.2025 – மாலை 4.00 மணி) ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🚨🚨🚨பதுளை - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு....* 2025, November 24 🚫பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 🚫இதனால் பதுளை - கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 🚫இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *⛔⛔⛔தீர்வுகளை அறிவிக்க 48 மணித்தியால கால அவகாசம் வழங்கிய GMOA...!!* 2025, November 24 ⚡சுகாதார அமைச்சிலுள்ள பிரச்சினைகளுக்கு முன்மொழியப்பட்ட தீர்வுகளை அறிவிக்க பொறுப்பதிகாரிகளுக்கு 48 மணித்தியால கால அவகாசம் வழங்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ⚡48 மணித்தியாலத்துக்குள் தீர்வுகளை வழங்க முடியாவிட்டால், 26ஆம் திகதி நடைபெறவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று சங்கத்தின் செயலாளர் டொக்டர். பிரபாத் சுகததாக தெரிவித்துள்ளார். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🚨🚨🚨மின்னல் தாக்கம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை...!!!* 2025, November 24 👉நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 👉இதன்படி மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணிவரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 👉அத்துடன் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔮🔮🔮பெண்கள் பாதுகாப்புக்கு மூன்று அவசர தொலைபேசி இலக்கங்கள்....* 2025, November 24 ⚡பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார். ⚡நாட்டில் வாழும் அனைத்து பெண்களும் சம உரிமையுடன் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுத்தல், சமூக ஆரோக்கியத்துடனும் சமூக பாதுகாப்புடனும் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ⚡மேலும், பெண்களை இழிவுபடுத்தல், அவதூறுகளை எழுப்புதல், அவமானம் மிக்க பேச்சுகளுக்கு வழிவகுத்தல் போன்ற விடயங்களை கருத்தில்கொண்டு அவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அத்தோடு, இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் முறைபாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ⚡அதன்படி, சமூகத்தில் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள், பொலிஸ் திணைக்கள பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் 109 என்ற இலக்கம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய உதவி சேவையின் 1938 என்ற இலக்கம், இலங்கை கணினி அவசர ஆயத்த அணியின் 101 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு தெரியப்படுத்த முடியும். ⚡மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின், 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி உலகம் முழுவதும் சுமார் 315 மில்லியன் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔴🔴🔴இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை...* 2025, November 24 🚫இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையைத் தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மோசடியான வியாபாரங்கள் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் மத்திய வங்கி தெளிவூட்டலொன்றை விடுத்துள்ளது. 🚫அதில், மோசடியான வியாபாரங்கள் எவற்றுடனும் இலங்கை மத்திய வங்கிக்கு தொடர்பு இல்லை. இத்தகைய மோசடியான வியாபாரங்களுக்கு அகப்பட்டு உங்களுடைய எஞ்சியுள்ள பணத்தை இழக்காதீர்கள். இது இலங்கை மத்திய வங்கி வழங்கும் செய்தி” என குறிப்பிடப்பட்டுள்ளது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *⛔⛔⛔ஜனவரி முதல் பாடசாலை வாகனங்களில் சிசிரிவி...* 2025, November 24 ⚡ஜனவரி முதல் பாடசாலை வாகனங்களுக்கு சிசிரிவி கட்டாயமாக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ⚡ஜனவரி முதல் பாடசாலை மற்றும் அலுவலக வாகனங்களுக்கு வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும். ⚡மேலும், பாடசாலை வாகனங்களுக்கு சிசிரிவி கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த சிசிரிவி காட்சிகள் உறவினர்கள் பார்க்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510

  • *🔊🔊🔊அத்தனகலு ஓயா - வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு...* 2025, November 24 🚫அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகைக்கு நேற்று (23) காலை 6.00 மணிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளாதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 🚫இதன் காரணமாக இப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் அவ் வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 🚫ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதும் தாழ்வான பகுதிகளில் பயணிப்பதை தவிர்ப்பதும் சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 🚫வெள்ள அபாயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. ⛔Join plz https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d ⭕️Join WhatsAppy groups https://chat.whatsapp.com/CtIofwAFo22IMcZUlYLbEo?mode=wwt 👉Instagram link https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA== 👉Website link.. https://wakeupsrilankans.lk/ 🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                         ✍️NEWS EDITOR         👉 NALIR WAHID             📞 074 007 8510