நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
Статистикаநாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
- Последний пост
- 26 мая
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 15 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
🩺 உங்களுக்குள் ஒரு மருத்துவர்! – 2 நம் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு விளம்பரமும், ஒவ்வொரு விற்பனையும், ஒவ்வொரு “பரிந்துரையும்” — உண்மையில் எதன் மீது கட்டப்பட்டுள்ளது தெரியுமா? 👉 பயம். “பயம்” என்பது இன்றைய மிகப்பெரிய வியாபார ஆயுதம். ❌ இந்த சோப்பு இல்லையெனில் தோல் பாதிப்பு… ❌ இந்த பானம் இல்லையெனில் குழந்தை வளராது… ❌ இந்த எண்ணெய் இல்லையெனில் ஆரோக்கிய ஆபத்து… ❌ இந்த திரவத்தால் வீடு சுத்தம் செய்யவில்லை என்றால் குடும்பமே நோயாளிகள் ஆகிவிடும்… இப்படி மனிதனின் உடல்நல அச்சத்தை பயன்படுத்தியே இன்றைய சந்தை இயங்குகிறது. நாம் தினமும் பயன்படுத்தும் பல பொருட்கள் நமக்குத் தேவையா? அல்லது நமக்குள் ஒரு பயத்தை உருவாக்கி திணிக்கப்படுகிறதா? சிறிது சிந்தித்துப் பாருங்கள்… ஒரு காலத்தில் வீட்டில் இருந்த இயற்கை பொருட்களே போதுமானதாக இருந்தன. தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே எடுத்தார்கள். சிகைக்காய், பச்சைப்பயறு, மஞ்சள் — இவையே சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. குழந்தைகள் கம்பு, கேழ்வரகு, சத்து நிறைந்த இயற்கை உணவுகள் சாப்பிட்டு ஆரோக்கியமாக வளர்ந்தார்கள். ஆனால் இன்று? ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு “பிராண்டு”. ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு “பயம்”. ஒவ்வொரு பயத்திற்கும் ஒரு “விளம்பரம்”. 🌴 தேங்காய் எண்ணெய் பற்றியே சிந்தியுங்கள்… தேங்காய் விலை உயர்ந்தாலும் சில நிறுவனங்களின் “தேங்காய் எண்ணெய்” விலை மாறுவதில்லை. ஆனால் பெட்ரோல் விலை உயர்ந்தால் மட்டும் அதன் விலை ஏறுகிறது. ஏன்? இந்தக் கேள்வியைத்தான் கேரளாவின் ஆயுர்வேத வைத்தியர் மோகனன் அவர்கள் முன்வைக்கிறார். அவரின் விளக்கப்படி, கச்சா எண்ணெய் (Crude Oil) வேதியியல் முறையில் பிரிக்கப்பட்ட பின் கிடைக்கும் சில திரவப் பொருட்கள் பல்வேறு பெயர்களில் சந்தையில் பயன்படுகின்றன. அவற்றில் “Liquid Paraffin”, “Mineral Oil” போன்ற பெயர்களில் அழைக்கப்படும் பொருட்கள் அழகு சாதனங்கள், எண்ணெய்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டு பொருட்களில் இடம்பெறுகின்றன என்று அவர் எச்சரிக்கிறார். அதற்கு பின்னர்: ✔ மணம் சேர்க்கப்படுகிறது ✔ நிறம் மாற்றப்படுகிறது ✔ “இயற்கை” தோற்றம் கொடுக்கப்படுகிறது ✔ பின்னர் அது “தேங்காய் எண்ணெய்” என்ற பெயரில் நமக்கு விற்கப்படுகிறது நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் பின்னாலும் உண்மை என்ன? அது இயற்கையா? வேதியியலா? விளம்பரமா? வியாபாரமா? என்று கேட்கத் தொடங்கும் தருணமே விழிப்புணர்வின் தொடக்கம். ⚠ உடல்நலம் என்பது சந்தையின் கையில் ஒப்படைக்க வேண்டிய பொருள் அல்ல. அது நம் புரிதலின் மூலம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். 📌 எதை வேண்டுமானாலும் நம்பாதீர்கள். 📌 லேபிள்களை வாசியுங்கள். 📌 கேள்விகள் கேளுங்கள். 📌 இயற்கைக்கு அருகில் வாழ முயலுங்கள். ஏனெனில்… ✨ “உடல் பற்றிய அடிப்படை புரிந்துவிட்டால் ஆரோக்கியம் என்றும் இலவசமே!” — நன்றி அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் 🌿 கற்போம்… கற்பிப்போம்… ❤️ நல்லதே நினைப்போம்… நல்லதே நடக்கட்டும்…
மனதில் பயத்தை விதைக்கும் ஒரு பொய் மறுபடி மறுபடி சொல்லப்பட்டால் அந்த பயமே உடல் முழுவதும் வியாபித்து, உயிரணுக்களைக் கொல்லுகிறது என்பது மரபணு அறிவியல். தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த 👇முகநூல் பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare/ இப்படிக்கு, விழிப்புணர்வு வினீத்
(ஆய்வுகள் எதுவும் செய்யாமல் நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதை அறிந்திருந்தார்கள். "நம்பிக்கையே பலம். பலவீனமே மரணம்”) இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு நம்மைச் சுற்றி நடக்கும் மருத்துவச் செய்திகளைக் கூர்ந்து கவனியுங்கள். 🌱 ஆரோக்கியம் என்பது மருந்துகளில் மட்டும் இல்லை. அது நம் எண்ணங்களில், நம்பிக்கையில், வாழ்க்கை முறையிலும் உள்ளது. தொடரும்... — நன்றி அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் ✨ “உடல் பற்றிய அடிப்படை புரிந்துவிட்டால் ஆரோக்கியம் என்றும் இலவசமே!” கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம்… நல்லதே நடக்கட்டும் ❤️
🩺 உங்களுக்குள் ஒரு மருத்துவர்! - 1 உங்களுக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? நாம் உடல்நலக்குறைவு அடைந்தவுடன் உடனே வெளியில் உதவி தேடுகிறோம். ஆனால்… நம்முடைய உடலுக்குள் இயற்கையாகவே குணப்படுத்தும் ஒரு அற்புத சக்தி இருக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்? “உங்களுக்குள் ஒரு மருத்துவர்!” என்ற இந்த சிந்தனைக்கட்டுரை, நம்மை மருத்துவத்தின் மீது கண்மூடித்தனமான சார்பிலிருந்து விழிப்புணர்வுக்குக் கொண்டு செல்கிறது. 💭 பயம் எப்படி உடலை பலவீனப்படுத்துகிறது? நம்பிக்கை எப்படி உயிரை காக்கிறது? நோய்களை விட “நோய் பற்றிய பயம்” ஏன் ஆபத்தானது? மருத்துவ உலகம் இன்று சேவையா? வியாபாரமா? இந்த கேள்விகளுக்கு பதில் தேடும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது. ஒரு மருத்துவத்தை, ஒரு மருத்துவரை நாம் சார்ந்து இருந்தால் என்னவெல்லாம் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த நூற்றாண்டு நமக்கு உணர்த்துகிறது.”மருத்துவத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட்ஸ் சக மனிதர்கள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் ஆங்கில மருத்துவத்தை தொகுக்கவும், கற்றுத்தரவும் துவங்கினார். ஆனால் இன்றைய மருத்துவ உலகத்தின் நோக்கம் என்னவாக இருக்கிறது? மருத்துவத்தின் தந்தைக்கு இருந்த அதே நல்லெண்ணம் நம் மருத்துவர்களுக்கும், மருந்துக் கம்பெனிகளுக்கும் இருக்கிறதா என்ன? இன்று நாம் பின்பற்றும் மருத்துவத்தில் வியாபாரமும், அடிப்படைத் தவறுகளும் நிறைந்து காணப்படுகின்றன. வியாபாரம் என்றால் லாபம் முதல் நோக்கமாகத்தானே இருக்கும்? அதே போல இன்றைய மருத்துவ வியாபாரத்தில் லாப நோக்கம் முதல் இலக்காக மாறியிருக்கிறது. நோயாளிகள் சந்தைப்பொருட்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இந்த லாபவெறிக்கு இடம் கொடுக்கும் விதமாக மருத்துவத்தின் அடிப்படைத் தவறுகள் அமைந்திருக்கின்றன. இன்றைய மருத்துவ சூழலை விளக்கும் ஆங்கிலமருத்துவப் பேராசிரியர், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணே வேந்தர்.டாக்டர்.ஹெக்டே கூறுகிறார் “மருந்துக்கம்பெனிகள் புட்டியை விட்டு வெளியே வந்த பூதங்கள். அழித்து முடிக்காமல் அடங்காது போல் தெரிகிறது. சில மருந்துக் கம்பெனிகளின் வருமானம் அமெரிக்க அரசின் வருமானத்தை விடவும் அதிகம். ரத்தச்சுவை கண்ட இந்தக் காட்டேரிகள் நமது பிரார்த்தனைகளுக்கு மசிவதில்லை. நமது கற்றறிந்த மருத்துவப் பேராசிரியர்கள் மருந்துக் கம்பெனிகள் கொடுக்கும் ஸ்லைடுகளைப் போட்டு, கம்பெனி மொழியில் கம்பெனியின் கிளிகளாகவே அழகாகப் பேசுகிறார்கள்”. நம் உடல் குறித்து நாம் பார்ப்பதற்கு முன்னால் ஒரு சம்பவத்தை தெரிந்துகொள்ளலாம். இது அமெரிக்காவில் நடந்த ஒரு நோயாளியின் மரணம் பற்றியது. அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் இருந்த சாம் லாண்டி என்ற நபருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக அவருடைய மருத்துவரால் கண்டறியப்பட்டது. புற்றுநோய் கடைசிக்கட்டத்தை எட்டி விட்டதாக மருத்துவப் பரிசோதனைகள் கூறின. சிகிச்சையளிக்க முடியாத நிலைக்கு புற்றுநோய் போய்விட்டதாகக் கூறிய டாக்டர்.மெடர் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் லாண்டி இறந்துபோய் விடுவார் என்றும் கூறினார். அதே போல இரண்டு வாரங்களில் சாம் லாண்டி மரணமடைந்தார். புற்றுநோய் முற்றிப்போய் சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நோயாளி மரணமடைவதில் என்ன புதுமை இருக்கிறது? இப்படி நோயாளிகள் இறப்பது வழக்கமான விஷயம்தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்குதான் விஷயமே இருக்கிறது. அப்படி மரணமடைந்த சாம் லாண்டியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவருடைய உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்த தடயங்களோ, புற்றுநோய்க் கூறுகளோ சிறிதளவும் இல்லை. அப்படியானால் லாண்டி எப்படி மரணமடைந்தார்? அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர்.டாக்டர்.புரூஸ் லிப்டன் கூறுவதை கேளுங்கள். “புற்றுநோயே இல்லாத ஒரு நோயாளியை, அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சில தினங்களில் இறந்துபோவார் என்றும் நம்ப வைத்தால் அந்த நோயாளி மரணமடைவது சாத்தியமே. ஏனென்றால் பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை மரணத்தை நோக்கித் தள்ளும் மிகப்பெரிய ஆயுதம்” அப்புறம் என்ன? ஆரோக்கியமாக உள்ள நபரைச் சாகடிக்க விஷமா தேவைப்படுகிறது? ஒரு சிறிய பயமுறுத்தல் போதாதா? மனதில் பயத்தை விதைக்கும் ஒரு பொய் மறுபடி மறுபடி சொல்லப்பட்டால் அந்த பயமே உடல் முழுவதும் வியாபித்து, உயிரணுக்களைக் கொல்லுகிறது என்பது மரபணு அறிவியல். ⚠️ இதன் மூலம் என்ன புரிகிறது? மனதில் விதைக்கப்படும் பயம்… உடலை கூட அழிக்கக்கூடிய சக்தி கொண்டது. மேலே நாம் பார்த்த ஒரே ஒரு நபரின் மரணம் மட்டும்தான் இந்த ஆய்வின் ஆதாரம் என்று நினைத்து விடாதீர்கள். இதே போன்ற ஆயிரக்கணக்கான நோயாளிகளின் மனநிலையும், இறந்தவர்களின் உடல் நிலையும் ஆய்வு செய்யப்பட்டு, மனித உயிரணுக்களை ஆய்வுக்கூடங்களில் வளர்த்து, அதன் மூலம் நிரூபிக்கப்பட்டது தான் இந்த முடிவு.
நம்முடைய உடலுக்குள் இயற்கையாகவே குணப்படுத்தும் ஒரு அற்புத சக்தி இருக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்? தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த 👇முகநூல் பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare/ இப்படிக்கு, விழிப்புணர்வு வினீத்
💔 திருமண முறிவுகள் ஏன் நிகழ்கின்றன? உங்கள் கணிப்பு தவறாக இருக்கலாம்! திருமண முறிவுகளுக்குப் பணப் பற்றாக்குறை, வெற்றி தோல்விகள் அல்லது தம்பதிகளுக்கிடையேயான சண்டைகள் போன்றவையே முதன்மைக் காரணங்கள் என நாம் பொதுவாக எண்ணுகிறோம். ஆனால், அறிவியல் ரீதியான ஆய்வுகள் முற்றிலும் வேறுபட்ட உண்மையை வெளிப்படுத்துகின்றன! 🔬 ஜான் காட்மேனின் வாஷிங்டன் ஆய்வு (1986) புகழ்பெற்ற உளவியலாளர் ஜான் காட்மேன், ஆயிரக்கணக்கான தம்பதியினரைத் தனது ஆய்வகத்திற்கு அழைத்து, அவர்கள் உரையாடும்போது ஏற்படும் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், வியர்வை அளவு போன்ற உயிரியல் அளவீடுகளை நுட்பமாகப் பதிவு செய்தார். சரியாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களை மீண்டும் தொடர்புகொண்டு, யார் இன்னும் ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தார். அவர் கண்டறிந்த அதிர்ச்சியூட்டும் ஒரே உண்மை என்னவென்றால், விவாகரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான காரணி பணம் அல்ல... மாறாக, அது: அவமதிப்பு அல்லது அலட்சியம் (Contempt). 📌 உறவுகளில் 'அவமதிப்பு' என்றால் என்ன? உங்கள் துணையை உங்களுக்கு இணையானவராகப் பார்க்கும் மனநிலையை இழப்பதில் இருந்து இது தொடங்குகிறது. 👉 கணவனோ அல்லது மனைவியோ ஏதேனும் பேசும்போது, முகத்தைச் சுளிப்பது அல்லது எரிச்சலுடன் பதிலளிப்பது. 👉 அவர்கள் பேசுவதைக் கேலி செய்யும் விதமாக கண்களை உருட்டுவது (Rolling eyes). காட்மேன் குறிப்பிடுகிறார்: "உங்கள் துணையின் தவறுகளை மட்டுமே மிக நுட்பமாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டால், அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை நீங்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகிறீர்கள்." இந்த ஒற்றை குணாதிசயத்தை வைத்து மட்டுமே, எந்தத் தம்பதிகள் எதிர்காலத்தில் விவாகரத்துப் பெறுவார்கள் என்பதை அவரால் 94% துல்லியமாக கணிக்க முடிந்தது. 💡 ஆழ்ந்த புரிதல்: உறவுகள் என்பது ஏதோ ஒரு பெரும் சம்பவத்தால் ஒரே இரவில் சிதைந்துவிடுவதில்லை. நாம் அன்றாடம் காட்டும் சிறிய அலட்சியங்களும், ஒருவரையொருவர் அவமதிக்கும் செயல்களுமே ஒரு உறவின் தோல்விக்கு மெதுவாக அடித்தளமிடுகின்றன. “விவாகரத்து ஆகாமல் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் என்ன வித்தியாசமாக செய்கிறார்கள்?” என்று பார்க்கலாம்! திருமண உறவு வெற்றியடைய ஒரு சின்ன ரகசியம்! 🤫✨ உங்களோட கணவரோ அல்லது மனைவியோ உங்ககிட்ட வந்து, "அங்க பாரு... அந்தப் பறவை எவ்ளோ அழகா இருக்கு!" அப்படின்னு சொன்னா, நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க? 🤔 நீங்க என்ன பதில் சொல்றீங்க அப்படிங்கறதுதான் உங்க திருமண வாழ்க்கையோட எதிர்காலத்தையே தீர்மானிக்குது! "வாழ்வியல்" சார்ந்த விஷயங்கள்ல நாம் கவனிக்கத் தவறும் மிக முக்கியமான ஒன்று இது. உளவியலாளர் ஜான் காட்மேன் (John Gottman) புதிதாகத் திருமணமான 130 தம்பதிகளிடம் ஒரு மிகப்பெரிய ஆய்வை நடத்தினார். அதன்படி, பெரும்பாலான திருமணங்கள் விவாகரத்தில் முடியக் காரணம் பெரிய பெரிய சண்டைகள் அல்ல... துணை சொல்லும் சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதுதான்! இந்தச் சின்னச் சின்ன பகிர்தல்களை உளவியலில் 'Bids for Connection' என்று சொல்வார்கள். ஆய்வின் முடிவு என்ன தெரியுமா? 💔 பிரிந்து சென்ற தம்பதிகள், தங்கள் துணையின் பேச்சிற்கு 3 முறைக்கு 1 முறை மட்டுமே பதில் அளித்துள்ளார்கள். மற்ற நேரங்களில் கண்டுகொள்ளவே இல்லை. ❤️ இறுதிவரை மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள், தங்கள் துணை சொல்லும் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களுக்கும் காது கொடுத்து, ஆர்வத்துடன் ரெஸ்பான்ட் செய்திருக்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்? ✅ மனைவி பேசும்போது, கையில் இருக்கும் மொபைல் போனை சற்று கீழே வைத்துவிட்டு அவர் சொல்வதைக் கேளுங்கள். ✅ கணவர் ஒரு நல்ல செய்தியைப் பகிரும்போது, உண்மையான ஆர்வத்தோடு அதில் பங்கேற்று கொண்டாடுங்கள். இவ்வளவுதான் விஷயம்! நீங்கள் ஒருவரையொருவர் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது மட்டும் முக்கியமல்ல; அதைச் சின்னச் சின்ன செயல்களில் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அன்பும் அக்கறையும் ஒரு தசை (Muscle) போன்றது. அதை நாம் தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றால், அது காலப்போக்கில் வலுவிழந்துவிடும். உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளுக்கு இந்தப் பதிவை ஷேர் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்! 👇 நன்றி - சவுந்தர்யா பாலசுப்ரமணி 📌 கற்போம் கற்பிப்போம்! 🔥 நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
✨வாழ்க்கைத் துணையின் உறவை காப்பாற்ற வேண்டுமெனில்: ✨ எப்போதும் மதிப்புடன் பேசுங்கள் ✨ வாழ்க்கைத் துணையை சமமாக பாருங்கள் ✨ அவர்களிடம் உள்ள நல்லதை கவனியுங்கள் ✨ கிண்டல், அவமதிப்பு போன்றவற்றை தவிருங்கள்
Channel photo updated
🛑 நில்லுங்க! ரோட்டோரமா நீங்க சாதாரணமாகப் பார்க்கிற இந்தச் செடி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒரு தங்கச் சுரங்கம்னு உங்களுக்குத் தெரியுமா? 🌿💰 ஆமாங்க, இது வெறும் செடி இல்ல... ஒரு நடமாடும் மருத்துவமனை! நம்ம ஊர்ல 'தாத்தா பூ', 'தலைவெட்டி', 'வெட்டுக்காயப் பூண்டு' அல்லது 'கிணற்றுப்பாசான்' என்று அழைக்கப்படும் இந்தச் செடியோட தாவரவியல் பெயர் ட்ரைடாக்ஸ் ப்ரோகம்பன்ஸ் (Tridax procumbens). இதுல மறைந்திருக்கிற ஆச்சரியமான மருத்துவ ரகசியங்களை இப்ப பார்க்கலாம்: 1️⃣ வெட்டுக்காயத்தின் எதிரி: இதிலுள்ள டானின்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் இரத்தத்தை உடனே உறைய வைக்கும். இதிலுள்ள லூடியோலின் (Luteolin), தோலின் அடிப்படையான கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, தழும்பே இல்லாமல் காயத்தை ஆற்றும். 2️⃣ இயற்கை ஸ்டீராய்டு (Natural Steroid): வீக்கம் மற்றும் வலிக்கு இது ஒரு மந்திரம்! இதிலுள்ள பீட்டா சிட்டோஸ்டெரால் (Beta-sitosterol), உடலில் வலியை உண்டாக்கும் 'புரோஸ்டாக்லாண்டின்' உற்பத்தியைத் தடுத்து ஒரு நேச்சுரல் வலி நிவாரணியாக வேலை செய்யுது. 3️⃣ கல்லீரல் கவசம்: இதில் உள்ள குர்செடின் மற்றும் லூடியோலின், கல்லீரலை நச்சுக்களில் இருந்து பாதுகாக்கும் அபாரமான சக்தியைத் (Hepatoprotective) தருது. 4️⃣ முடி வளர்ச்சி ரகசியம்: முடி கொட்டுதா? இதிலுள்ள அராக்கிடிக் அமிலம் மற்றும் ஸ்டீரால்கள் வேர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிச்சு, புது முடி வளர வைக்கும். 5️⃣ சர்க்கரை & BP கட்டுப்பாடு: இதிலுள்ள மூலக்கூறுகள் இன்சுலினைச் சீராக்கும். மேலும், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்டி இரத்த அழுத்தத்தைக் (BP) குறைக்கும். 6️⃣ பாக்டீரியா வேட்டை: இதிலுள்ள பினாலிக் சேர்மங்கள், நவீன ஆன்டிபயாடிக்குகளுக்குக் கட்டுப்படாத சூப்பர்பக் (Superbug) பாக்டீரியாக்களைக் கொல்லும் அபாரத் திறன் கொண்டது. --- 💡 இதை நீங்க வீட்டிலேயே எப்படிப் பயன்படுத்தலாம்? 🩸 முதலுதவி: வெட்டுக்காயத்திற்கு இதன் இலையைக் கசக்கிச் சாறு பிழிந்து விடுங்கள்; இரத்தம் உடனே நிற்கும். 🦵 மூட்டு வலி: இலையுடன் மஞ்சள், கல் உப்பு சேர்த்து வதக்கி, மூட்டுகளில் பற்றுப் போடுங்கள். வலி பறந்துவிடும். 💆♀️ கூந்தல் தைலம்: தேங்காய் எண்ணெயில் இதோட சாற்றைக் கலந்து காய்ச்சித் தலையில் தேய்த்து வர, முடி அடர்த்தியாக வளரும். களைச்செடின்னு நாம ஒதுக்கிற பல விஷயங்கள்ல தான், இயற்கை ஒரு பெரிய மருத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்கு! இந்தத் 'தாத்தா பூ' இனிமே உங்க வீட்டு மருந்துப் பெட்டியில கண்டிப்பா இருக்கணும். 💯✨ இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஷேர் பண்ணுங்க! ↗️
களைச்செடின்னு நாம ஒதுக்கிற பல விஷயங்கள்ல தான், இயற்கை ஒரு பெரிய மருத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்கு! இந்தத் 'தாத்தா பூ' இனிமே உங்க வீட்டு மருந்துப் பெட்டியில கண்டிப்பா இருக்கணும். 💯✨ தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare இப்படிக்கு, விழிப்புணர்வு வினீத் ஆரோக்கியம் என்றும் இலவசமே!
"உணர்ச்சியை கட்டுப்படுத்தும் 5 வினாடி ஆயுதம்… வெற்றி பெறும் மனிதர்கள், தோல்வியை உணர்ந்து விடுவார்கள், ஆனால் அதில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்!" உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும், தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கும் தேவையான மிகச்சிறந்த அணுகுமுறையை இவை விளக்குகின்றன. குறிப்பு: தோல்வி என்பது ஒரு முடிவு அல்ல, அது ஒரு பாடம் என்பதை வெற்றியாளர்கள் நன்கு அறிவார்கள். "5 வினாடி ஆயுதம்" என்பது மெல் ராபின்ஸ் (Mel Robbins) என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் அறிமுகப்படுத்திய "5 Second Rule" என்பதாகும். 🛡️ 5 வினாடி ஆயுதம் (The 5-Second Rule) ஐந்து வினாடி உணர்ச்சி ரீசெட் மோசமான செய்தி வந்தாலும், விமர்சனம் எழுந்தாலும், நிராகரிப்பு நேர்ந்தாலும் உடனடியாக எதிர்வினை ஆற்றாதீர்கள். ஐந்து வினாடிகள் அமைதி காத்திடுங்கள். கண்களை மூடுங்கள். 5-4-3-2-1 என பின்னோக்கி எண்ணுங்கள். ஆழமாக மூச்சை உள்ளிழுங்கள். உள்ளே எழும் கோபம், துக்கம், விரக்தி – எதுவாக இருந்தாலும் அதை உணருங்கள். பிறகு, மூச்சை வெளியேற்றும்போது அந்த உணர்ச்சியையும் வெளியேற்றுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்: “இது என் பிரதான இலக்கை உண்மையிலேயே பாதிக்கிறதா?” பதில் ‘இல்லை’ என்றால், அதைப் புறந்தள்ளிவிட்டு முன்னேறுங்கள். அறிவியல்: இது உங்கள் மூளையின் 'Prefrontal Cortex' பகுதியைத் தூண்டி, பழக்கமான பயம் அல்லது தயக்கத்தை முறியடிக்க உதவுகிறது. எப்போதெல்லாம் உங்கள் மனம் ஒரு செயலைத் தவிர்க்கவே அல்லது ஒரு தேவையற்ற உணர்ச்சியில் (கோபம், பயம், சோம்பல்) சிக்கிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்த முறையைப் பயன்படுத்தலாம். --- இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? 👍 Like செய்யுங்கள் | 💬 Comment செய்யுங்கள் 📲 உங்கள் நண்பர்களுக்கும் share செய்ய மறக்காதீர்கள்! --- 🌱 கற்போம், கற்பிப்போம்! 🤝 ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்! ✨ நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கட்டும்!
எப்போதெல்லாம் உங்கள் மனம் ஒரு செயலைத் தவிர்க்கவே அல்லது ஒரு தேவையற்ற உணர்ச்சியில் (கோபம், பயம், சோம்பல்) சிக்கிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்த முறையைப் பயன்படுத்தலாம். தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare இப்படிக்கு, விழிப்புணர்வு வினீத் ஆரோக்கியம் என்றும் இலவசமே!
நோயும் மருத்துவமும் (உடல் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் தொடர்) 6. குடல் தூய்மை பெரும்பாலான நபர்களுக்கு உடலின் மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் குடலின் உள்ளேயே தேங்கிக் கிடைக்கும். ஆனால் பலர் அதனை உணராமல் இருப்பார்கள். மலச்சிக்கல் கடுமையான பிறகு, பல நாட்களுக்கு மலம் வெளியேறாமல் அடைத்துக் கொண்ட பிறகுதான் அதனை உணர்வார்கள். என்னதான் ஆரோக்கியமான உணவு முறை, சுகாதாரமான வாழ்க்கை முறை, முறையான உடற்பயிற்சி, இயற்கையைச் சார்ந்த வாழ்க்கை, என்று ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், மலம் மட்டும் குடலில் தேங்கத் தொடங்கினால் அத்தனை வகையான நோய்களும் சுயமாக உருவாகிவிடும். குடலில் மலம் தேங்கி இருப்பதை கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். மலம் முழுமையாக வெளியேறாமல் இருந்தால் பசியின்மையும் வயிற்றில் மந்தமும் உருவாகும். வயிறு உப்புசமாக காற்றடைத்ததைப் போன்று இருக்கும். காலையில் மலம் கழிக்க சிரமமாக இருக்கும். சிறிது வேலை செய்தாலும் உடலில் சோர்வும் அசதியும் உண்டாகும். சிறிது நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் தூக்கம் வரும். உடல் எப்போதும் சோர்வாக இருக்கும். வயிறு பாரமாக கல்லைப் போட்டதை போன்று இருக்கும். குறைவாக உணவை உட்கொண்டால் கூட தொப்பை உருவாகும். அடிக்கடி தலைவலி உண்டாகும். அடிவயிற்றில் வலி உருவாகும். தோலில் அரிப்பும், புண்களும் உருவாகும். மேலே அறிகுறிகளைக் குறிப்பிடப்பட்டவற்றைக் கொண்டு உடலில் மலம் தேங்கியுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்டவற்றில் இருந்து சில அறிகுறிகள் இருந்தால் கொஞ்சமாகவும், பல அறிகுறிகள் இருந்தால் அதிகமாகவும் மலக்கழிவு சேர்ந்துள்ளது என்று அர்த்தம். தொடரும்... நன்றி - ஹீலர் ராஜா முகமது காசிம் கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
குடலில் மலம் தேங்கி இருந்தால், குறைவாக உணவை உட்கொண்டால் கூட தொப்பை உருவாகும். தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த 👇 முகநூல் பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare/
நோயும் மருத்துவமும் (உடல் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் தொடர்) 5. நோய்களை உண்டாக்கும் காரணிகள்! “அஜீரணமும், மலச்சிக்கலும், சுடுகாட்டுத் தேரின் இரண்டு சக்கரங்கள்”என்று நம் முன்னோர்கள் குறிப்பிடும் அளவுக்கு அஜீரணமும், மலச்சிக்கலும், மனிதர்கள் அனுபவம் செய்யும் அத்தனை நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் மூல காரணமாக இருக்கின்றன. வயிறு மந்தப்பட, ஜீரணம் சீர்கேடு அடைய, மற்றும் மலச்சிக்கல் உருவாக பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். 1. ஜீரணம் சீர்கேடு அடைவதற்கு அடிப்படை காரணமாக இருப்பது பசி இல்லாத நேரத்தில் உணவை உட்கொள்ளும் பழக்கம். 2. உணவின் சுவைக்காக சமையலில் அதிகப்படியான மசாலா பொருட்கள், மற்றும் சுவையூட்டிகளைச் சேர்த்துக் கொள்வது. 3. அதிகப்படியான காரம், இனிப்பு அல்லது புளிப்புச் சுவைகொண்ட உணவுகளை உட்கொள்வது. 4. அதிகமாக மாமிசம் மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்வது. 5. சாப்பிடும் போது உணவை நன்றாக மெல்லாமல் விழுங்குவது. அவசர கதியில் சாப்பிடுவது. 6. பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒதுக்குவது அல்லது குறைவாக உட்கொள்வது. 7. சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் அருந்துவது. 8. சாப்பிடும்போது உணவின் மீது கவனம் செலுத்தாமல் மற்ற சிந்தனைகளில் மூழ்குவது, தொலைக்காட்சி பார்ப்பது, பாடல்கள் கேட்பது, வாசிப்பது, அரட்டை அடிப்பது, தொலைப்பேசியைப் பயன்படுத்துவது. 9. ரசாயனங்கள் கலந்த அல்லது புட்டியில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகப்படியாக உட்கொள்வது. 10. இரவு நேரத்தில் தாமதமாக உணவை உட்கொள்வது. 11. இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, தாமதமாக உறங்கச் செல்வது. காலையில் தாமதமாக எழுந்திருப்பது. 12. இரவில் அதிகப்படியாகக் குளிரூட்டப்பட்ட அறையில், அல்லது இயற்கை காற்றோட்டம் இல்லாத அறையில் உறங்குவது. 13. மனம் அமைதியற்று இருப்பது. அதிகப்படியான சிந்தனை, கவலை, மனக் குழப்பத்தில் இருப்பது. 14. ரசாயனம் கலந்த, அல்லது ரசாயனத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை உட்கொள்வது. 15. டீ, காப்பி, மதுபானம், புகையிலை, போதைப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் விசயங்களைத் திருத்திக் கொண்டாலே அஜீரணமும், மலச் சிக்கலும், மற்ற பிற தொந்தரவுகளும் உருவாகாமல் தவிர்த்துக் கொள்ளலாம். தொடரும்... நன்றி - ஹீலர் ராஜா முகமது காசிம் கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
அஜீரணமும், மலச்சிக்கலும், மனிதர்கள் அனுபவம் செய்யும் அத்தனை நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் மூல காரணமாக இருக்கின்றன. தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த 👇 முகநூல் பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare/
நோயும் மருத்துவமும் (உடல் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் தொடர்) 4. நோய்களின் தாக்கங்கள் உடலில் சேரும் கழிவுகளும், உண்டாகும் ஆற்றல் குறைபாடுகளும், தவறான வாழ்க்கை முறைகளும் மட்டுமே உடலில் உண்டாகும் அத்தனை தொந்தரவுகளுக்கும், நோய்களுக்கும், வலி வேதனைகளுக்கும், காரணமாக இருக்கின்றன. இவற்றைப் புரிந்துகொண்டு அன்றாட வாழ்க்கையில் என்னென்ன தவறுகளைச் செய்கிறோம் என்பதைக் கவனித்து மாற்றிக் கொண்டாலே அத்தனை தொந்தரவுகளும், நோய்களும், வலி வேதனைகளும் சுவடில்லாமல் மறைந்து போகும். இவற்றைப் புரிந்து கொள்ளாமல், வாழ்வியல் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், ரசாயன மருந்து மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொள்வதனால் உடலின் கழிவுகள் குறைவதில்லை, ஆற்றல் குறைபாடும் சரியாவதில்லை, மேலும் நோய்களின் விசக் கூறுகளும் மறைவதில்லை. மாறாக உடலில் நோய் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று உடல் காட்டும் அறிகுறிகள் மட்டுமே மறைக்கப்படுகின்றன. உடல் காட்டும் அறிகுறிகள் மறைக்கப்படுவதனால் சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலேயே நோய் வீரியமடையக் கூடிய ஆபத்து உள்ளது. ரசாயன மருந்து மாத்திரைகளை உட்கொள்வோருக்கு மேலும் அதிகமான கழிவுகள் உடலில் சேருகின்றன. அவற்றை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கு உடலின் இயக்கச் சக்தியும் விரயமாகிறது. வெளியேற்ற முடியாத ரசாயனக் கூறுகள் புதிய தொந்தரவுகளையும் நோய்களையும் உருவாக்குகின்றன. இவற்றால்தான் ரசாயன மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு நோய்கள் குணமாகாமல் நீடித்துக்கொண்டே போவதும், நோய்கள் மேலும் வீரியமடைவதும், புதிய புதிய நோய்கள் - தொந்தரவுகள் உண்டாவதும், திடீர் மரணங்கள் சம்பவிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. தொடரும்... நன்றி - ஹீலர் ராஜா முகமது காசிம் கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
உடலில் சேரும் கழிவுகளும், உண்டாகும் ஆற்றல் குறைபாடுகளும், தவறான வாழ்க்கை முறைகளும் மட்டுமே உடலில் உண்டாகும் அத்தனை தொந்தரவுகளுக்கும், நோய்களுக்கும், வலி வேதனைகளுக்கும், காரணமாக இருக்கின்றன. தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த 👇முகநூல் பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare/
நோயும் மருத்துவமும் (உடல் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் தொடர்) 3. நோய்களின் வகைகள் உடலை அதன் இயல்புடன் முழுமையாக இயங்கவிடாமல், உடலின் இயக்கத்தில் தடை உண்டாவதை நோய் என்று அழைக்கிறோம். நோய்கள் பல்லாயிரப் பெயர்களால் அழைக்கப்பட்டாலும் உண்மையான நோய்கள் என்பவை வெகுசிலதான். அனைத்து வகையான நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பவை, தவறான உணவுமுறை, தவறான வாழ்க்கை முறை, மற்றும் தவறான பழக்க வழக்கங்களினால் உடலில் சேரும் கழிவுகள், அவ்வளவு தான். தவறான உணவு முறையும், வாழ்க்கை முறையும், உடலில் சேரும் கழிவுகளும் மட்டுமே மனித உடலில் நோய்கள் உருவாகக் காரணமாகிவிடுமா? என்றால்; அவை எவ்வாறு நோய்களாக உருவாகின்றன என்பதைப் பார்ப்போம். தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளினால் அஜீரணம் உருவாகிறது. அஜீரணம் உருவானால் உடலில் ஆற்றல் குறைபாடு மற்றும் மலச்சிக்கல் உருவாகும். உடலில் ஆற்றல் குறைபாடு உருவானால் உடல் உறுப்புகளால் முழுமையாக இயங்கமுடியாது. உடல் உறுப்புகளில் இயக்கக் குறைபாடு உருவானால் சம்பந்தப்பட்ட உறுப்பு பாதிப்படையும். அஜீரணத்தின் காரணமாக உணவுக் கழிவுகள் முழுமையாக வெளியேற முடியாமல் குடலிலேயே தேங்கத் தொடங்கும். குடலில் தேங்கும் உணவுக் கழிவுகள், நாளடைவில் நச்சுத்தன்மை கொண்டவையாக மாறி, பலவீனங்களையும், உடல் உபாதைகளையும் உருவாக்கும். உடலில் கழிவுகளின் அளவு அதிகரித்தால், சில மாதங்களில் அவை இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தில் கலந்துவிட்ட கழிவுகள், இரத்த ஓட்டத்தின் மூலமாக உடலின் உறுப்புகளைச் சென்றடையும்; அவை கலந்துவிட்ட உறுப்புகளைப் பலவீனப்படுத்தி பழுதாக்கிவிடும். உடலின் உறுப்புகளிலும் இயக்கத்திலும் பலவீனம் உண்டாகும் போது வலிகள், வேதனைகள் மற்றும் நோய்கள் உருவாகும். இவ்வாறுதான் உடலில் நோய்கள் உருவாகின்றன. அஜீரணமும், மலச்சிக்கலும், உடலில் சேரும் கழிவுகளும் தான் உண்மையான நோய்க் காரணிகள். மேலே நான் குறிப்பிட்ட நோய் வகைகளையும் காரணிகளையும் வாசிக்கும் போது உங்களுக்கு எந்த அச்சமும் பதற்றமும் உண்டாகி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் மருத்துவர்கள் நமக்குப் புரியாத லத்தீன் மொழியில் தொந்தரவுக்கு ஒரு பெயர் சூட்டியதும் “எனக்கு அந்த நோய் உருவாகிவிட்டது, இந்த நோய் உருவாகிவிட்டது” என்ற அச்சம் உருவாகிவிடுகிறது. பெரும்பாலான மக்கள் நோயை விடவும் நோயின் பெயரைக் கண்டே அச்சப்படுகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசும் ஆங்கில மருத்துவர்கள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கில மருத்துவர்கள் உடல் உபாதைகளை லத்தீன் மொழியில் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கூறும் லத்தீன் மொழிப் பெயர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை, உடலின் தொந்தரவுகளுக்குப் பெயர் சூட்ட வேண்டிய அவசியமும் இல்லை. உடலில் உண்டாகியிருக்கும் உண்மையான பாதிப்பைப் புரிந்துகொண்டால் அச்சம் உருவாகாது. உடலில் உண்டாகும் அத்தனை தொந்தரவுகளும் குணப்படுத்தக் கூடியவைதான். உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றி, உடலின் ஆற்றலை அதிகரித்து, இயக்கத்தைச் சீர் செய்தால் அனைத்து வகையான நோய்களும் எளிதாகக் குணமாகிவிடும். தொடரும்... நன்றி - ஹீலர் ராஜா முகமது காசிம் கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
பெரும்பாலான மக்கள் நோயை விடவும் நோயின் பெயரைக் கண்டே அச்சப்படுகிறார்கள். பெயர்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை, உடலின் தொந்தரவுகளுக்குப் பெயர் சூட்ட வேண்டிய அவசியமும் இல்லை. உடலில் உண்டாகியிருக்கும் உண்மையான பாதிப்பைப் புரிந்துகொண்டால் அச்சம் உருவாகாது. தினசரி ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளை காண விரும்பினால் இந்த 👇முகநூல் பக்கத்துடன் இணைந்துகொள்ளுங்கள். https://www.facebook.com/ReghaHealthCare/