அம்மன் அருள்வாக்கு
Статистикаஉண்மையான 'அம்மன் அருள்வாக்கு' மிக எளிமையாக.. ஶ்ரீ சமயபுரத்தம்மனின் அருளால் இங்கு அருளப்பட்டு கொண்டிருக்கிறது.
- Последний пост
- 13 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 3
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 29
- 1/48двое суток
- 33
- 1/72трое суток
- 35
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
தர்ப்பண கிரியா !! https://youtu.be/hjZKs7RxNTk?si=IBSr6ns6uSl0YUhS 5 நிமிடத்தில்.. மக்களுக்கு தேவையான அரிய தகவல்கள் !! ~கருவூரான் ராஜன் - சிங்கப்பூர். Youtube Video by.. சிவா வின் "பாப்கார்ன்" நிகழ்ச்சி Popcorn Talks or Talk Show [பத்திரிகையாளர் – சிவராமன்] https://www.youtube.com/@sivaspopcorn
*ஒரு* *விளக்கம்* ..🍒
без подписи
வரும் புதன் (12.08.2026) ஆடி அமாவாசையை முன்னிட்டு, 18 சித்தர்கள் இன்றும் அரூபமாக நடமாடும், புனித மலையான *சதுரகிரியில்* மகாலிங்க கடவுளை நோக்கி மலையேற்றம் செய்ய உள்ளோம்... *தேனி* வருசநாட்டு உப்புத்துறை வழியாக மலையேறி, *விருதுநகர்* தாணிப்பாறையை தொட்டு பின் சுந்தர, சந்தான மகாலிங்க தரிசனத்திற்கு பிறகு குளிராட்டி அருவி வழியாக *மதுரை* சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக மலையிறங்க போகிறோம்...மூன்று மாவட்டத்தின் மலைப்பாதையும் ஆடி அமாவாசைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்... *மலையேற்ற தன்மை: கடினம் (22 கி.மீ)* ஒருங்கிணையும் இடம் - மதுரை இரயில்வே நிலையம், விடிகாலை 4 மணி.. சேரும் இடம்- மதுரை இரயில்வே நிலையம், இரவு 10 மணி. மேலும் தொடர்புக்கு, Trekking Pannalama - join our Whatsapp group (Together Self Trekking Group) +91 8124866178 கூட்டுச் சுய மலையேற்றக் குழு - ட்ரெக்கிங் பண்ணலாமா WhatsApp #: https://wa.me/918124866178
без подписи
*ஆத்ம வணக்கம்*
*தினம் ஒரு சித்தவேத சிந்தனை* *"ஜாதி என்பது இல்லவே இல்லை"* *ஆகஸ்ட் 7*
без подписи
без подписи
🪵🕊️ *சோர்வும்- இலக்கும்*🕊️🪵 இரு பறவைகள் தரும் .. *வாழ்வியல் -ஞானம்*🔆 *ஒரு மகான்* மரத்தடியில் அமர்ந்திருந்தார். *ஒரு பறவை* அவரிடம் சென்று பட்சி பாஷையில் பேசியது. *‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது. அவரும் பட்சி பாஷையிலேயே *‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் மகான். *தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* மகான். ‘சீடனே! *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் மகான். ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. *‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை. *‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* மகான். பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன. *‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை. மகான் சிறிது யோசித்தார்.. *கீழே கிடந்த ஒரு தடிமனான குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார். *‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் மகான். *பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு மகானிடம் வந்தன. *‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை. *‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் மகான். . . . . . . பறவை பேசியது. *‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.* ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.* மகானை பார்த்தான் சீடன். மகான் பேசினார். *‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.* அதற்குக் காரணம் *‘துணை'.* ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*. இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.* ஆனால், *அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது. *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. காடு-மலை தேடி தங்கி* திரியவேண்டியதில்லை. ‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கும் அறிவோடு.. கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த மகான்*. குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*. இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை தான் மட்டுமே நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை சுமந்து வழி நடத்தி துணையாக செல்கிறது.* அவ்வாழ்வின் நல்முறையே *வீடு பேறு* எனும் *முக்திக்கு*/ மோட்சத்திற்கு எளிமையான *கருவி* யாகிறது. *இதுவே இல்லறம்* எனும் எளிய *வாழ்வியலின் ரகசியம்*..!! 🌷நன்றிகள்🙏 பிரம்மஸ்ரீ. ★ ௧ருவூரான் ★ www.t.me/truthsofsivayoga
без подписи
🌺 *ஓம் ஸ்ரீ மகாலட்சுமி நம:* 🌺 ✨ *வரலட்சுமி விரதம் 2026* ✨ 🙏 *அன்பார்ந்த பக்தர்களே,* ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடத்தில் நடைபெறும் *வரலட்சுமி விரத சிறப்பு பூஜையில்* தாங்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு *ஸ்ரீ மகாலட்சுமி தாயாரின் அருளாசி* பெற அன்புடன் அழைக்கிறோம். 🗓 *நாள்:* 21.08.2026 (வெள்ளிக்கிழமை) 🕘 *நேரம்:* காலை 9.00 – 10.30 மணி 🌸 *சிறப்பு நிகழ்வுகள்:* 🪔 கனகதாரா சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை 📖 ஸ்ரீ சூக்தம் பாராயணம் 🌺 *முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு சங்கல்ப பூஜை செய்து மங்களப் பொருட்கள் வழங்கப்படும்.* 🍛 அன்னபிரசாதம் வழங்கப்படும். 📲 *கலந்து கொள்ள முன்பதிவு செய்யுங்கள்.* 📞 *முன்பதிவு & தொடர்புக்கு:* 📱 +91 8903504996 🙏 *அனைவரும் வருக!* 🌺 *ஸ்ரீ மகாலட்சுமி தாயாரின் அருளால் செல்வம், ஐஸ்வர்யம், ஆரோக்கியம் மற்றும் அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.* ✨ *தயவுசெய்து இந்த அழைப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பக்தர்களுடன் பகிர்ந்து அனைவரும் அருள்பெற உதவுங்கள்.* 🙏
без подписи
*நல்வினை... தீவினை...!* << *ஆன்ம ஞானத்திற்கு ஒரு கதை* >> - = *கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு..!* - = நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்? ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது? கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு. பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.. சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன. அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் குணமுடையவனாக அவனிருந்தான். அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்குசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது. கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக் கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான். போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி. இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான். அனைத்தையும் பொருமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது. என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும். வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும். அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.
без подписи
“ஏழாவது ஜென்மம்” – அமானுஷய கதை https://www.youtube.com/watch?v=FKFk2uMzhuc விஞ்ஞான உலகத்திலும் பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு பின்னால் பல்வேறு சக்திகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை நாம் நம்பலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு செல்வதற்கு முன்னால் அதை உணர்ந்தவர்கள் நம்பலாம்! உணராதவர்கள் நம்ப முடியாது !! தெய்வத்திரு.இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் எழுதிய அமானுஷயம் கலந்த ஒரு பரபரப்பான கதைதான் இந்த கதையான “ஏழாவது ஜென்மம்”. ~ டீப் தமிழ் ஆடியோ புக்ஸ் - தீபனுடைய குரலில்..!! ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். அடுத்து என்ன ஆகும் என்கின்ற ஒரு மிகப்பெரிய கேள்வியை எழுப்பி கொண்டே இருக்கும். சுவாரஸ்யமான அமானுஷ்ய நாவல் 👌🎧🤔
без подписи
без подписи
без подписи