tgindex
Tamil Tajweed

This channel is all about Learning Quran with Tajweed rules and other Islamic Content Our other telegram channel To Get Daily Updates on Home products offers and deals Subscribe to 👇 https://t.me/homeproductoffers

Последний пост
7 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 036
−1 за 4 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
382
20 постов
Вовлечённость
36,9%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
216
1/48двое суток
247
1/72трое суток
266

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் "யா அல்லாஹ் இந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நாங்கள் உன்னிடம் கேட்கிறோம்: ​எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! ​எங்கள் குறைகளை மறைப்பாயாக! ​எங்கள் இதயங்களுக்கு அமைதியையும் மனநிம்மதியையும் தருவாயாக! ​எங்கள் காரியங்களை எளிதாக்குவாயாக! ​எங்கள் துன்பங்களையும் கவலைகளையும் நீக்குவாயாக! ​இரட்சகனே! எங்களை உனக்கு பயந்து வாழும் இறையச்சமுடைய (தக்வா உள்ள) அடியார்களில் ஆக்குவாயாக! ​நல்வார்த்தைகளைக் கேட்டு, அதில் சிறந்ததை பின்பற்றி நடப்பவர்களில் எங்களை ஆக்குவாயாக! ​எங்களுக்கும், முஸ்லிம்கள் அனைவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக!" ​ ​திருக்குர்ஆனை எங்கள் இதயங்களின் வசந்தமாகவும், ​எங்கள் நெஞ்சங்களின் ஒளியாகவும், ​எங்கள் துயரங்களைப் போக்கும் அரு மருந்தாகவும், ​எங்கள் கவலைகளையும் மனவருத்தங்களையும் நீக்கும் வழியாகவும் ஆக்குவாயாக! ​இறைவா! எங்களை திருக்குர்ஆனின் குடும்பத்தாராக (குர்ஆனை ஓதி அதன்படி வாழ்பவர்களாக) ஆக்குவாயாக — அவர்கள் உனக்கு நெருக்கமான சிறப்புமிக்க அடியார்கள்! ​எங்களுக்கும், வாழும் மற்றும் மரணித்த அனைத்து முஸ்லிம்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக!" ஆமீன் #subscribe_tamiltajweed #tamiltajweed #follow_tamiltajweed https://www.youtube.com/@tamiltajweed

  • பிள்ளைகளுக்கான துஆ ----- அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் யா அல்லாஹ்! நீ எங்களுக்கு பிள்ளைகளை வழங்கியுள்ளாய். நீ வாரிசுதாரர்களில் சிறந்தவன். அவர்களை பரிசுத்தமான சந்ததியினராக ஆக்குவாயாக! நீ எங்களின் பிரார்த்தனையை செவிமெடுப்பவனாகஇருக்கிறாய். அல்லாஹ்வே உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறோம் பாவத்திலிருந்து உன்பால் மீளுகிறோம் யா அல்லாஹ்! எங்கள் பிள்ளைகள், எங்கள் கண்களில் படாத இடங்களில் இருக்கும் போது தூங்காத உன் கண் கொண்டு அவர்களைப் பாதுகாப்பாயாக! அசைக்க முடியாத உன் கண்ணியத்தைக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பாயாக! இரவும் பகலும் அவர்களுக்கு உணவளிப்பாயாக! அவர்களுக்கு நல்வழி காட்டுவாயாக நேரிய பாதையில் செலுத்துவாயாக! அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவாயாக! அவர்களை குதூகலப்படுத்துவாயாக அவர்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக! அவர்களை மன்னிப்பாயாக நற்குணங்களை அருள்வாயாக! அவர்களை இறையச்சம், நல்லிணக்கம் ஆகியவற்றால் அழகுபடுத்துவாயாக! நல்லவைகளின் பால் அவர்களின் உள்ளத்தை ஒன்று படுத்துவாயாக! அனைத்துத் தீங்குகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பாயாக! தீய விதிகளை அவர்களைவிட்டும் திருப்பிவிடுவாயாக! அவர்களின் வாழ்நாட்களில் பரக்கத் செய்வாயாக! மார்க்கத்தின் மீதும் உன்னுடைய வணக்கத்தின் மீதும் அவர்களை உறுதிபடுத்துவாயாக! கருணையாளர்களில் மிகச் சிறந்த கருணையாளனே! அவர்களின் உள்ளங்களை உன்னுடைய திக்ரைக் கொண்டும் உன்னுடைய முஹப்பத்தைக் கொண்டும் நிரப்புவாயாக! ஆமீன் #follow_tamiltajweed #tamiltajweed #subscribe_tamiltajweed https://www.youtube.com/@tamiltajweed

  • Alhamdulillah Our Channel Reached 70k Subscribers... Jazakallah khair For you Love and Support ❤️❤️❤️

  • без подписи

  • https://youtube.com/shorts/p2lO-HZiF3k?feature=share

  • без подписи

  • без подписи

  • без подписи

  • https://youtu.be/pTLh7It78do

  • без подписи

  • без подписи

  • அருள்மறை குர்ஆன் கூறுகிறது: "அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள்”. (19:59) எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்த வசனம் இது. வாழ்கால சமூகத்தின் மனோநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது: சமூக வீழ்ச்சிக்கான அடிப்படை காரணங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மிகத் தெளிவாக இது எச்சரிக்கிறது. ஈமானும் பண்பாடும் ஒரு தலைமுறையோடு முடிந்துவிடக் கூடாது. அடுத்த தலைமுறைக்குச் சரியான வழிகாட்டுதலைக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இறைவனுக்கும் அடியானுக்கும் இடையிலான முதன்மைத் தொடர்பே தொழுகைதான். அதைத் துண்டிக்கும்போது ஒரு சமூகம் தனது ஆன்மீக பலத்தை இழந்து சீரழிகிறது. தொழுகையை எப்போது ஒருவன் அலட்சியப்படுத்துகிறானோ, அப்போது அவனுடைய உள்ளத்தில் மன இச்சைகள் (Desires) குடிபுகுகின்றன. மனோ இச்சையை பின்பற்றுகிறவன் ஆட்டுமந்தை போன்று யாருக்குப் பின்னால் வேண்டுமென்றாலும் செல்வான். அத்தகைய தீய செயல்களுக்கான தண்டனை மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும் கிட்டும். மன அமைதியற்ற வாழ்வு, சமூகச் சீரழிவு, முற்றிலும் தகுதியற்ற தலைமை போன்ற வடிவங்களிலும் வரும் என்பதை இது நினைவூட்டுகிறது. சுருக்கமாக… ஒரு சமூகம் சீரழிவதற்குக் காரணம் பொருளாதார வீழ்ச்சியோ தொழில்நுட்பக் குறைபாடோ அல்ல; மாறாக இறைத் தொடர்பை அலட்சியப்படுத்துவதும், தறிகெட்ட மன இச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமே ஆகும். இதனால் ஏற்படும் தீயவிளைவை வாழும் காலத்திலேயே மக்கள் சந்திப்பார்கள் என்ற எச்சரிக்கையும் இதில் உள்ளது. ✍️ நூஹ் மஹ்ழரி #subscribe_tamiltajweed #tamiltajweed #follow_tamiltajweed

  • без подписи

  • இனிய சொல்லும் இதயங்களை வெல்லும் வழியும் முகமது பின் ராஃபி அஸ்-ஸலாமி எழுதிய "தாரிக் உலமாஇ பக்தாத்" என்ற நூலில், அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: "எவருடைய சொல் மென்மையாக அமைகிறதோ, அவர் மீது அன்பு கொள்வது கடமையாகிவிடுகின்றது!" நண்பா! நீ ஒரு சொல்லைப் பேசுவதற்கு முன்னால், அதன் சுவையை நீயே முதலில் உணர்ந்து பார்! ஏனெனில், ஒரு விஷயத்தை ஆயிரம் வழிகளில் சொல்ல முடியும். எனவே, உனது கருத்துக்களை வெளிப்படுத்த மிக மென்மையான சொற்களைத் தேர்ந்தெடு; அது உனக்காகப் பல இதயங்களைத் திறந்து வைக்கும். இமாம் அல்-முஸனி அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஒருவரைப் பற்றி "அவன் ஒரு பொய்யன்!" என்று சொல்வதை இமாம் ஷாஃபிஈ அவர்கள் கேட்டார்கள். அப்போது அவர்கள் என்னிடம் கூறினார்கள்: "இப்ராஹீமே! உனது சொற்களுக்கு அழகான ஆடையை அணிவிப்பாயாக. 'அவன் ஒரு பொய்யன்' என்று சொல்லாதே; மாறாக, 'அவனுடைய செய்திகளில் நம்பகத்தன்மை ஏதுமில்லை' என்று சொல்!" நண்பா! இஸ்லாத்தைப் போன்ற உண்மையான மார்க்கமோ, ஏகத்துவப் பிரச்சாரத்தைப் போன்ற உயரிய அழைப்போ வேறில்லை. இவ்வளவு மகத்தான உண்மைகள்கூட மக்களைச் சென்றடைவதற்கு, "அழகிய அணுகுமுறை" அவசியம் என்பதை அல்லாஹ் நிபந்தனையாக்கியுள்ளான். அல்லாஹ் தனது நபியைப் பார்த்துக் கூறுகிறான்: "(நபியே!) நீர் கடுகடுப்பானவராகவும், கடின இதயம் கொண்டவராகவும் இருந்திருப்பின், அவர்கள் உம்மை விட்டுப் பிரிந்து சென்றிருப்பார்கள்." (அல்குர்ஆன் 3:159) #follow_tamiltajweed #tamiltajweed #subscribe_tamiltajweed

  • இன்று ஜுமுஆ நாள் தொழுகைக்கு செல்லும்முன் மறைந்த உங்கள் பெற்றோர்களுக்கு தான தர்மம் செய்து அவர்கள் மஃபிரத்திற்கு துஆ செய்யுங்கள் +++++++++++((((++ ஒரு நண்பரின் மாதாந்திர செலவு பட்டியலைப் பார்க்கும் சந்தர்ப்பம் நண்பர் ஒருவருக்குக் கிடைத்தது அதில் தன் தாய்,தந்தைக் கென ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு "உன் தாயும் தந்தையும் தான் மரணித்துவிட்டார்களே" பின் எதற்காக அவர்களுக்கு தொகை ஒதுக்கியுள்ளாய் எனக் கேட்டார் அந்த நண்பர் புன்னகையுடன் சொன்னார் "என் தாயும் தந்தையும் இப்பூமியிலிருந்து மறைந்துவிட்டார்கள் ஆனால் என் இதயத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். இப்பூமியில் வாழ்கின்றபோது என்ன என்னிடம் எதிர்பார்த்தார்களோ அதைவிட அதிகமாக அவர்கள் மண்ணறையிலிருந்து என்னிடம் எதிர்பார்க்கிறார்கள் எனவே மாதந்தோறும் அவர்களுக்கு நன்மை சென்றடையும் வகையில் சதகா- தர்மம் செய்து அவர்களின் பாவமன்னிப்புக்காக துஆ செய்துவருகிறேன் #பெற்றோர்கள் மரணித்துவிட்டாலும் #அவர்களுக்குநாம்செய்யவேண்டியநன்றிக்கடன்ஒருபோதும்மரணிக்காது" --#கணியூர்இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயீ #subscribe_tamiltajweed #tamiltajweed #follow_tamiltajweed

  • без подписи

  • без подписи

  • "ஏதேனும் ஒன்று நடப்பதற்கு முன்பே அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். கற்பனைகளில் மூழ்கிவிடாதீர்கள்; மறைவான விஷயங்களைப் பற்றிய கவலைகளிலிருந்தும், பயத்திலிருந்தும் உங்கள் சிந்தனையைத் திருப்புங்கள். ஏனெனில் அவை அனைத்தும் இறைவனின் ஞானத்திற்கு உட்பட்டவை. நிச்சயமாக அடியான் மீது ஒரு சோதனை இறங்கும்போது, அதனுடன் சேர்த்து அதைப் பொறுத்துக்கொள்ளும் அருளும் (லுத்ப்) இறங்குகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரு சோதனை நிகழும் முன்பே அதை நீங்கள் (பயத்தோடு) கற்பனை செய்தால், இறைவனின் அந்த அருளின்றி சோதனையை மட்டும் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள் என்று பொருள். இது உங்கள் ஆன்மாவை நீங்களே அழிப்பதற்குச் சமம். நிச்சயமாக உங்களுக்கு ஓர் இறைவன் இருக்கிறான் என்பதை நீங்கள் உறுதியாக நம்புவது கடமையாகும். அவன் அனைத்தையும் நிர்வகிப்பவன், உறக்கமற்றவன். எனவே அவனிடம் அமைதி காணுங்கள், அவனையே சார்ந்திருங்கள் (தவக்குல்), நற்செய்தி பெறுங்கள். நன்மையை எதிர்பாருங்கள், அதை நீங்கள் அடைவீர்கள்!" ~ டாக்டர் அத்ஹம் ஷர்காவி #follow_tamiltajweed #tamiltajweed #subscribe_tamiltajweed

  • без подписи

  • ஒருவரின் நெருங்கிய உறவினர் மோசமானவராகவோ மாற்றுக் கொள்கையிலோ இருக்கிறார் என்பதற்காக இவரைக் குறை கூறக்கூடாது. காரணம், அவரவர் செய்த நன்மையும் தீமையும் அவரவர்க்கே உரியது. ஒருவருடைய பாவச் சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார். அவ்வாறே ஒருவருடைய குறையை சுட்டிக் காட்டும்போது வார்த்தைகளில் கண்ணியம் தேவை. சகட்டு மேனிக்கு எதையாவது சொல்லி வார்த்தைகளால் குத்திக் கிழித்தால், பிடிவாதவாக அந்தத் தவறையே அவர் செய்யக்கூடும். அபூலஹப் இஸ்லாத்தின் பரம எதிரி. ஆனால் அவனுடைய மகள் துர்ரா (ரலி) புகழ்பெற்ற நபித்தோழி. தந்தை எதிரியாக இருப்பதால் இவர் இஸ்லாத்தை ஏற்காமல் இருக்கவில்லை. கணவருடைய எதிர்ப்பையும் மீறி பெரும் போராட்டத்திற்குப் பின்னர் இவர் ஹிஜ்ரத் செய்தார். கணவரோ ஒருபோரில் நிராகரிப்பாளராகக் கொல்லப்பட்டார். மதீனாவில்... சில பெண்கள். 'அல்லஹப்' எனும் (111-வது) அத்தியாயத்தை சுட்டிக் காட்டி துர்ரா (ரலி) அவர்களிடம், "நாசம் உண்டாவதாக என்று அல்லாஹ் சபிக்கும் அபூலஹபுடைய மகள்தானே நீ..? நீ ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வந்தாலும் உனக்கு எப்பயனும் கிட்டாது” என்றனர். துர்ரா (ரலி) அவர்களுக்கு இது பெரும் மன வேதனையைத் தந்தது. நபிகளாரிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ளுஹர் தொழுகைக்குப் பின் தோழர்களிடம் கூறினார்கள்: "மக்களே! எனது நெருங்கிய உறவினரை ஒருசிலர் வேதனைப் படுத்துகின்றனர். துர்ரா எனது நெருங்கிய ரத்த உறவு. அவரை வேதனைப்படுத்துவது என்னை வேதனைப்படுத்துவதாகும். என்னை வேதனைப்படுத்துவது அல்லாஹ்வை வேதனைப்படுத்துவதாகும். அறிந்து கொள்ளுங்கள்! இறந்துபோன ஒருவருக்காக உயிருடன் இருக்கும் ஒருவரை வேதனைப்படுத்துவது கூடாது" (அல்பிதாயா வந்நிஹாயா) துர்ரா (ரலி) மதீனாவில் சிறந்த நபித்தோழியாகத் திகழ்ந்தார். இவரை புகழ்பெற்ற நபித்தோழர் திஹ்யதுல் கல்பி (ரலி) மணந்தார். யார் இந்த திஹ்யதுல் கல்பி (ரலி)? வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) பெரும்பாலும் இவருடைய தோற்றத்தில்தான் பூமிக்கு வருவார். அதனாலேயே வீதியில் திஹ்யதுல் கல்பியை பார்த்தால் மக்கள் இப்படிக் கேட்பார்கள்: "உண்மையைச் சொல்லுங்கள்! இப்போது நீங்கள் யார்? ஜிப்ரீலா? திஹ்யதுல் கல்பியா?” ஆக.. குடும்ப உறுப்பினர் யாரேனும் மோசமானவராக இருக்கின்றார் என்பதற்காக நல்லவர்களை குறை கூறுவதும் கிண்டலடிப்பதும் கூடாது. அது அவர்களுக்கு மனவேதனையைத் தரும். ஏனெனில், "ஒருவருடைய பாவச் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்” (17:15) என்பது இறைவாக்கு ஆகும். மறுமையில் நாம் வெற்றி பெறுவோமா இல்லையா என்று நமக்கே தெரியாதபோது, அடுத்தவர் சுமையை வேறு சுமக்க வேண்டுமா என்ன? ✍️ நூஹ் மஹ்ழரி #subscribe_tamiltajweed #tamiltajweed #follow_tamiltajweed