tgindex
AL ILMUSH SHAREE

AL ILMUSH SHAREE

Статистика

இது குர்ஆன், ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்பதற்கான குழுமம்

Последний пост
6 июл.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
21
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
447
0 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
112
21 постов
Вовлечённость
25,1%
к подписчикам
Постов в день
0,0
всего 21
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • بسم الله الرحمن الرحيم உலகக்கோப்பை உள்ளிட்ட கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வது அல்லது அவற்றைப் பார்ப்பது குறித்த நிலையான குழுவின்(ஃபதாவா அல்-லஜ்னதித் தாயிமா) (اللجنة الدائمة) ஃபத்வா கேள்வி: உலகக்கோப்பை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதின் மார்க்க தீர்ப்பு (ஹுக்கும்) என்ன? பதில்: நிலையான குழு (اللجنة الدائمة) அளித்த பதில் வருமாறு: "பணமோ அல்லது அது போன்ற பரிசுகளோ வைத்து நடத்தப்படும் கால்பந்து போட்டிகள் ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். ஏனெனில், இது சூதாட்டத்திற்குள் அடங்கும். குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் மற்றும் வில்வித்தை ஆகியவற்றில் மட்டுமே மார்க்கம் பரிசுகளைப் பெற அனுமதித்துள்ளது. இதற்கல்லாத பிற விஷயங்களில் பரிசுகளைப் பெறுவது (பந்தயம் கட்டுவது) அனுமதிக்கப்படவில்லை. எனவே, இத்தகைய போட்டிகள் பரிசுகளுக்காக நடத்தப்படுகின்றன என்று தெரிந்தால், அங்கே நேரில் சென்று பார்ப்பதும், தொலைக்காட்சியில் பார்ப்பதும் ஹராம் ஆகும். ஏனெனில், அங்கே சென்று பார்ப்பது அந்தச் செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமையும். அதே சமயம், அந்தப் போட்டிகளில் எந்தவிதப் பரிசுகளும் (பணமோ பிற பொருட்களோ) இல்லாமல், தொழுகை போன்ற அல்லாஹ் கடமையாக்கிய காரியங்களுக்குத் தடையாக இல்லாமலும், மேலும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்கள் - அதாவது, மறைக்க வேண்டிய உடல் பாகங்களை வெளிப்படுத்துதல் (அவ்ரா), ஆண்கள் பெண்கள் கலந்திருத்தல், அல்லது இசைக்கருவிகள் போன்றவற்றின் பயன்பாடு - இல்லாமலும் இருந்தால், அப்படிப்பட்ட போட்டிகளில் கலந்துகொள்வதிலோ அல்லது அவற்றைப் பார்ப்பதிலோ எந்தத் தப்பும் இல்லை. அல்லாஹ்வே போதுமானவன். நம்முடைய நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்." இந்த ஃபத்வாவில் கையெழுத்திட்ட நிலையான குழுவின் உறுப்பினர்கள்: 1. அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் 2. அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் ஆலுஷ் ஷைக் 3. ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் 4. பக்ர் பின் அப்துல்லாஹ் அபூ ஸைத் ஆதாரம்: "ஃபதாவா அல்-லஜ்னதித் தாயிமா" (15/238) ◾

  • без подписи

  • بسم الله الرحمن الرحيم சத்தியத்தில் வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவனாகிய அல்லாஹ்வை வணங்காமல் மரணிப்பவரின் நிலை!! اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏ நிச்சயமாக நிராகரித்துவிட்டு, நிராகரித்தவர்களாகவே இறந்தும் விடுகின்றார்களே அத்தகையோர்-அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபம் உண்டு. (அல்குர்ஆன் : 2:161) خٰلِدِيْنَ فِيْهَا  لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏ (மேலும் அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கி இருப்பவர்கள்; (மறுமையில்) அவர்களை விட்டு வேதனை இலேசாக்கப்படமாட்டாது; அவர்கள் கால அவகாசம் கொடுக்கப்படவுமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:162) وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏ (மனிதர்களே!) மேலும், உங்கள் (வணக்கத்திற்குரிய) நாயன் ஓரே ஒரு (வணக்கத்திற்குரிய) நாயன்தான்; அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் உடைய அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. (அல்குர்ஆன் : 2:163) முஸ்லிம்களே! இத்தகைய அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்க தவ்ஹீதை கற்றுக்கொடுங்கள்!! ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • 23 июн.152из al_ilmush_sharee

    без подписи

  • 23 июн.143из al_ilmush_sharee

    بسم الله الرحمن الرحيم ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அன்று கர்பலாவில் துரோகம் செய்துவிட்டு இன்று ஒப்பாரி வைக்கும்  இஃக்வாணிய கூட்டாளிகளான "ஷிஆ துரோகிகள்"!! ஷிஆக்கள் உறுதியாக அழைத்ததால் ஷிஆக்களை நம்பி அவர்களுக்காக கூஃபா நகரத்தை (ஈராக்) நோக்கி சென்ற ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கர்பலாவை நெருங்கிய போது; ஷிஆக்களின் துரோகத்தை அறிந்த பிறகு கூறிய வார்த்தைகள் "ஷிஆக்கள் நம்மை கைவிட்டு விட்டனர்". [அல் பிதாயா வந் நிஹாயா 8/168-169] ♦️ இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டதை முன்னிட்டு கத்தியால் உடல்களை அடித்துக் கொள்ளும், கிழித்துக் கொள்ளும் ஷீஆக்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: (துன்பத்தின் போது) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்.' [ஸஹீஹ் புகாரி : 1298] ♦️கர்பலாவில் நடந்தது என்ன?   PDF -ஐ வாசிக்க, (ஆங்கிலம் English) t.me/al_ilmush_sharee/1889 ♦️ கர்பலாவில் இமாம் ஹூஸைன் படுகொலை சம்பந்தமாக ஷிஆக்களின் பொய்களுக்கு மறுப்பு!! 🎙️அஷ் ஷெய்க் இஹ்ஸான் இலாஹி தஹீர் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் விளக்கவுரை (உருது اردو) t.me/al_ilmush_sharee/1890 ♦️ ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்போதைய ஆட்சியாளராக இருந்த யஜீது அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவில்லை!! 🎙️அஷ் ஷெய்க் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரி ஹஃபிதஹுல்லாஹ் (அரபி, ஆங்கிலம் English العربية) t.me/al_ilmush_sharee/1891 ♦️யஜீது இப்னு முஆவியா இப்னு அபீ ஸுஃப்யான் சம்பந்தமான அஹ்லுஸ் ஸுன்னாவின் சரியான நிலைபாடு!! 🎙️அஷ் ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் (அரபி, ஆங்கிலம் English العربية) t.me/al_ilmush_sharee/1892 ♦️ இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பயணத்தின் வரைப்படம் t.me/al_ilmush_sharee/1894 ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • без подписи

  • எனவே இது மகத்துவமான கூலியைப் பெற்று தரக்கூடிய நோன்பாக இருக்கின்றது. எவ்வாறு அரஃபா தினத்தில் நோன்பு வைத்தால் சென்ற வருடத்திற்கும் வரக்கூடிய வருடத்திற்கும் பரிகாரமாக அது இருக்குமோ; அதே போன்று இந்த ஆஷூரா நோன்பை வைத்தால் கடந்த வருடத்திற்கு மட்டும் அது பரிகாரமாக அமைகின்றது. எனவே இந்த தினங்களில் நோன்பு பிடிப்பதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும். (ஸலஃபி உலமாக்களின் பாடங்களிலிருந்து) ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • بسم الله الرحمن الرحيم ♦️ஆஷூரா நோன்பு: ரமலான் மாதத்தில் நோன்பு கடமை ஆகுவதற்கு முன்பு முஹர்ரம் மாதத்தில் நோன்பு வைப்பது தான் கடமையாக இருந்தது.  ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ஜாஹிலிய்யா காலத்தில் குறைஷிகள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைத்து வந்தார்கள். ரசூலுல்லாஹ் ﷺ அவர்களும் அந்த காலத்தில் நோன்பு வைத்து வந்தார்கள். நபி ﷺ  அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு சென்ற பொழுது ரசூலுல்லாஹ் ﷺ தொடர்ந்தும் நோன்பு பிடித்து வந்தார்கள். நோன்பை பிடிக்குமாறு முஸ்லிம்களை ஏவினார்கள். ரமலான் உடைய நோன்பு கடமையாக்கப்பட்ட பொழுது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், ‘யார் ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்க விரும்புகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் யார் நோன்பு பிடிக்காமல் இருக்க விரும்புகிறாரோ அவர் நோன்பை விட்டு விடட்டும்’ என்று ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள். நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகவே இந்த ஹதீஸுக்கு பிறகு கடமையாக வைக்கப்பட்டு வந்த ஆஷூரா நோன்பு மன்சூக் (மாற்றம்) செய்யப்பட்டு முஸ்தஹப்பான நோன்பாக மாறுகிறது.  அதேபோன்று இந்த ஆஷூரா நாளில் நோன்பு வைக்குமாறு ரசூலுல்லாஹ் ﷺ ஏவியதற்கு காரணம் என்னவென்றால், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரசூலுல்லாஹ் ﷺ ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு சென்ற பொழுது யூதர்கள் ஆஷூரா* தினத்தில் நோன்பு வைத்து வந்தார்கள். அப்போது ரசூலுல்லாஹ் ﷺ யூதர்களிடம் ஏன் இந்த நாளில் நோன்பு வைக்கிறார்கள் என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இந்த தினம் மகத்துவமான தினமாகும். இந்த தினத்தில்தான் அல்லாஹ் மூஸாவையும் அவரைப் பின்பற்றிய மக்களையும் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும் அல்லாஹ் அழித்தான். எனவே மூஸா அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நாளில் நோன்பு வைத்தார்கள் ஆகவே நாங்களும் இந்த நாளில் நோன்பு வைக்கின்றோம் என்று யூதர்கள் கூறிய பொழுது ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் அதற்கு பதிலாக, "உங்களை விட நாங்கள் மூஸா நபிக்கு உரிமை உடையவர்கள்" என்று கூறி அந்த நாளில் ரசூலுல்லாஹ் ﷺ நோன்பு வைத்தார்கள், முஸ்லிம்களையும் வைக்குமாறு ஏவினார்கள்.  நூல்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் *ஆஷூரா என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளை குறிக்கின்றது. அரபியில் 10 என்பதை சொல்வதற்கு குறிப்பிடப்படும் அஷ்ர் (عشر) என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்ட சொல்தான் ஆஷூரா ஆகும். மேலும் இந்த ஆஷூரா தினத்தை யூதர்களும் கிறிஸ்தவர்களும் மகத்துவ படுத்துகிறார்கள் என்று ரசூலுல்லாஹ் ﷺ அவர்களிடத்தில் கூறப்பட்ட பொழுது வரக்கூடிய வருடத்தில் முஹர்ரம் 9 ஆவது நாளையும் சேர்த்து நாங்கள் நோன்பு பிடிப்போம் என்று ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்.இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு  அறிவிக்கக்கூடிய மேற்கண்ட ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் -ல் இடம் பெற்றுள்ளது. எனவே நாம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாறு செய்யும் விதமாக முஹர்ரம் ஒன்பதாவது தினத்திலும், ஆஷூரா தினத்திலும் நோன்பு வைப்பது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் வழிகாட்டுதல் ஆகும். மேலும் ஒரு அறிவிப்பு (أثر) ஸுனன் பைஹகி மற்றும் முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய புத்தகங்களில் ஸஹீஹான ஸனதுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் "நீங்கள் (முஹர்ரம் மாதத்தின்) ஒன்பதாவது மற்றும் பத்தாவது நாட்கள் நோன்பு வைத்து யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதுதான் ரசூலுல்லாஹவுடைய வழிகாட்டுதலாகும்; இதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டும். ♦️முஹர்ரம் மாதத்தின் 11வது நாள் நோன்பு வைக்க முடியுமா? இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கக்கூடிய ஹதீஸில் 9வது நாள் அல்லது 11வது நாள் நோன்பு வைக்குமாறு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறியதாக வரக்கூடிய அந்த ஹதீஸில் சில பலவீனங்கள் இருக்கின்றன. அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலகீனமானவர்கள் இருப்பதால் அது ளயீஃப் (பலஹீனமான) ஹதீஸ் ஆகும். எனவே மேற்கண்ட ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸில் குறிப்பிடப்பட்டது போல் முஹர்ரம் மாதத்தின் 9வது தினமும் மற்றும் 10வது தினமும் சேர்ந்து நோன்பு வைப்பது தான் சரியானதாகும். இது கடமையான நோன்பு அல்ல ஆனால் முஸ்தஹப்பான விரும்பத்தக்க அமலாகும். ♦️ஆஷூரா நோன்பின் சிறப்பு: இந்த ஆஷூரா நோன்பின் சிறப்பைப் பற்றி ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறும்பொழுது, ஆஷூரா தினத்தில் நோன்பு பிடிப்பது அது கடந்த ஒரு வருடத்துடைய பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் அல்லாஹ்விடத்தில் எதிர்பார்க்கிறேன் என்று ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம்

  • بسم الله الرحمن الرحيم ♦️ முஹர்ரம் மாதத்தில் செய்யப்படும் பித்அத்துகள் குறித்த எச்சரிக்கை முஹர்ரம் 9, 10 ஆகிய தினங்களில் நோன்பு வைக்க வேண்டுமே தவிர பித்அத்தான முறையில் அந்த தினங்களில் புது வருடம் என்று ரொட்டி சுடுவதும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் கூடாது. இத்தகைய காரியங்கள் குர்ஆனிலோ சுன்னாவிலோ சொல்லப்படவில்லை; ஸஹாபாக்களும் இவ்வாறாக செய்யவில்லை. பித்அத்வாதிகள் இத்தகைய நாட்களில் சில குறிப்பிட்ட பித்அத்களை உருவாக்கியுள்ளார்கள். ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஆஷூரா தினத்தில் கொல்லப்பட்டதால் ஷிஆ ராஃபிதாக்கள்  அந்நாளில் துக்கத்தை வெளிப்படுத்துவதாக கருதிக்கொண்டு ஒப்பாரி வைத்து, அழுது, உடைகளை கிழித்து கொண்டு, அவர்களை அவர்களே வெட்டிக் கொண்டு  இத்தகைய அட்டகாசங்களை செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்த நாட்களில் சஹாபாக்களை சபிக்க கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மறுபக்கத்தில் இவர்களுக்கு எதிராக நாஸிபியாக்கள் இந்நாளில் புத்தாடைகள் அணிந்து, சாப்பாடுகளை சமைத்து,  உதுஹியாவில் ஒரு பங்கை இந்த நாளுக்காக எடுத்துவைத்து இந்நாளை பெருநாளாக கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார்கள்.  அதேபோன்று ஸுன்னாவை சார்ந்தவர்கள் என்று கூறக் கூடிய சில மடையர்களும் இத்தகைய பித்அத்தான காரியங்களைச் செய்து வருகிறார்கள். ஆகவே நாம் இத்தகைய பித்அத்தான காரியங்களை விட்டு தவிர்ந்து இருந்து மேற்கூறப்பட்ட ரசூலுல்லாஹ்வுடைய வழிமுறையையும் சஹாபாக்களுடைய வழிமுறையையும் பின்பற்ற வேண்டும். இதுதான் அஹ்லுஸ் ஸுன்னாவின் நேர் வழியாகும். (ஸலஃபி உலமாக்களின் பாடங்களிலிருந்து) ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • بسم الله الرحمن الرحيم ♦️ஹிஜ்ரி காலண்டர் உருவாக்கப்பட்ட வரலாறு: ஹிஜ்ரி காலண்டர் ஸஹாபாக்களால் உருவாக்கப்பட்டது. ரசூலுல்லாஹ்வுடைய ஹிஜ்ரத்திற்கு பிறகு 17 ஆம் ஆண்டில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அபூ மூஸா அல் அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு, "உங்களிடமிருந்து எங்களுக்கு கடிதங்கள் வருகின்றது ஆனால் அந்த கடிதத்தில் எந்த நாள் எந்த மாதம் எந்த வருடம் என்பது குறிப்பிடப்படாமல் எங்களை வந்து அடைகிறது" என்று கடிதம் எழுதினார்கள். இன்னும் சில அறிவிப்புகளில் (آثار), யமனில் இருந்து வந்த சில நபர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் வந்து யமன் நாட்டில் இருக்கக்கூடிய நாட்காட்டி பற்றி கூறிய போது, இது நல்ல விடயம் நாங்களும் நாட்காட்டியை உருவாக்குவோம் என்று கூறி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபாக்களின் ஆலோசனைகளைப் பெற்று இந்த ஹிஜ்ரி நாட்காட்டியை உருவாக்கினார்கள். அந்த சமயத்தில் ஆலோசனை செய்த பொழுது அலி, உஸ்மான் மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் வருடத்தின் ஆரம்பத்தை முஹர்ரம் மாதத்திலிருந்து ஆரம்பிப்போம் என்று ஒன்றுகூடி அவர்கள் முடிவெடுத்தார்கள். அந்தக் காலத்தில் இருந்து தான் இந்த ஹிஜ்ரி வருடம் ஆரம்பித்தது. இதைக்குறித்து ஸஹ்ல் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'பாபு தாரிக்' என்ற தலைப்பின் கீழ் இந்த ஹதீஸை ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்துள்ளார். "ஹிஜ்ரியுடைய வருடத்தின் துவக்கத்தை முஹம்மது ﷺ நபியாக அனுப்பப்பட்ட காலத்தையோ அல்லது மரணித்த வருடத்தையோ ஸஹாபாக்கள் துவக்கமாக கருதவில்லை மாறாக எந்தக் காலத்தில் நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து சேர்ந்தார்களோ அந்தக் காலத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஸஹாபாக்கள் ஹஜ்ரி காலண்டரை உருவாக்கினார்கள்". எனவே சகோதரர்களே இந்த வகையில் தான் ஹிஜ்ரி காலண்டர் ஆரம்பமானது. இது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஸஹாபாக்களின் இஜ்மா (ஏகோபித்து செய்த முடிவு) ஆகும். கிறிஸ்தவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து அவர்கள் அவர்களுக்கான காலண்டரை உருவாக்கிக் கொண்டார்கள். எனவே உமர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் சஹாபாக்கள், நபி ﷺ அவர்கள் எத்தனையோ ஹதீஸ்களில் மற்றும் எத்தனையோ விஷயங்களில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஷ்ரிகீன்களுக்கு மாறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ள காரணத்தால், அவர்களுக்கு மாறு செய்யும் விதமாக அவர்களுக்கு முரணாக இந்த ஹிஜ்ரி காலண்டரை ஸஹாபாக்கள் இவ்வாறு அமைத்தார்கள். இதுதான் ஹிஜ்ரி காலண்டர் உருவாக்கப்பட்ட வரலாறு இது அல்லாமல் முஹர்ரம் மாத முதல் நாளை பெருநாளாக கொண்டாடுவதற்கும், வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இத்தகைய பித்அத்களிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும் மேலும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். (ஸலஃபி உலமாக்களின் பாடத்திலிருந்து) ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • ﷽ ♦️முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் பெருநாள் தினமா? சில மக்கள் முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் வந்துவிட்டால் அவர்கள் அந்த நாளை பெருநாளாக எடுத்துக்கொள்கிறார்கள். இது தவறாகும். அறிவின்மை காரணத்தால் சில மடையர்கள் அந்த முதல் நாளில் குறிப்பிட்ட சில இபாதத்துகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இவ்வாறாக குறிப்பிட்ட இபாதத்துகளை நிறைவேற்ற வேண்டும் என்று குர்ஆனிலோ அல்லது ஸுன்னாவிலோ அல்லது ஸலஃப் ஸாலிஹீன்களை தொட்டோ எந்தவொரு இபாதத்துகளும் குறிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஒரு பொழுதும் வரவில்லை. அதேபோன்று இந்த நாளை 'ஈத்' பெருநாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. (ஸலஃபி உலமாக்களின் பாடத்திலிருந்து) ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • ஜாஹிலியா காலத்திலும் கூட இந்த மாதங்கள் புனிதமான மாதங்களாக இருந்தன. ஹஜ்ஜுடைய அனைத்து இபாதத்துகளையும்  மக்கள் மகிழ்ச்சியாக மற்றும் பாதுகாப்பாக  செய்வதற்காக வேண்டி துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மாதங்களை அல்லாஹ் ஹராமாக்கினான். ஹஜ்ஜுடைய இபாதத்துகள் முடிந்தபிறகு மக்கள் பாதுகாப்பான முறையில் அவர்களது வீடுகளுக்கு அல்லது நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக துல்ஹஜ் மாதத்திற்கு பிறகு வரும் முஹர்ரம் மாதத்தையும் அல்லாஹ் ஹராமாக்கினான். அதேபோன்று ரஜப் மாதத்தை அல்லாஹ் எதற்காக ஹராமாக்கினான் என்பது குறித்து  இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் கூறும்போது, "அரபிகள் மற்றும் அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ய வேண்டும் என்பதற்காக அல்லாஹ் ரஜப் மதத்தை ஹராமாக்கினான்" என்று கூறுகிறார்கள். எனவே இந்த அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினை என்னவென்றால், இந்த புனிதமான நான்கு மாதங்களில் அதனுடைய மகத்துவத்தை உணர்ந்து அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும். (ஸலஃபி உலமாக்களின் பாடத்திலிருந்து) ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • ﷽ ♦️ புனித மாதங்கள்: அஷ்ஹுருல் ஹுரும் - ஹராமாக்கப்பட்ட மாதங்கள் - என்பதற்கு இந்த  புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் போரைத் தொடங்குவது தடுக்கப்பட்டுள்ளது என்பது ஒரு கருத்து. இப்னு கஸீர் மற்றும் பல உலமாக்கள் இந்த மாதங்களில் காஃபிர்களுக்கு எதிராக போரை முஸ்லிம்கள் ஆரம்பிப்பது தடுக்கப் பட்டுள்ளது என்ற கருத்தில் இருக்கிறார்கள். மேலும் இதுவே சரியான கருத்தாகவும் இருக்கிறது. ஆனால் காஃபிர்கள், முஷ்ரிகீன்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் நடத்தி தாக்குவதற்காக வந்தால் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக வேண்டி முஸ்லிம்கள் போர் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த புனிதமான மதங்களில் முக்கியமாக பாவங்களில் ஈடுபட்டு  அநியாயம் செய்து கொள்ள வேண்டாம் என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதேபோன்று அபூபக்கரா நுஸைப் இப்னு ஹாரிஸ் அஸ் ஸகஃபி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கக் கூடிய ஹதீஸில், ஹஜ் மாதத்தின் யவ்முந் நஹ்ர் என்ற பத்தாவது நாளான பெருநாள் தினத்தில் ரசூலுல்லாஹ் ﷺ குத்பா செய்த பொழுது கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையேயுள்ள "முளர்" குலத்தாரின் ரஜப் மாதமாகும்" என்று சொன்னார்கள். நூல்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகவே இந்தப் புனிதமான நான்கு மாதங்களில் போரைத் தொடங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பாவங்களில் ஈடுபடுவதும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த புனித மாதங்களில் அதனுடைய புனிதத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் தபாரக வ தஆலா கூறுகிறான்: ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏ அது இன்னும் எவர் அல்லாஹ்வின் (வெளிப்படையான) அடையாளச் சின்னங்களை (தொழுவது, ஜகாத் கொடுப்பது, உதுஹியா கொடுப்பது, அதுல் ஃபித்ர், ஈதுல் அத்ஹா, ஜும்ஆ, அதான் போன்றவற்றை) கண்ணியப்படுத்துகின்றாரோ அப்போது நிச்சயமாக அது இதயங்களிலுள்ள தக்வாவை காட்டுகிறது. (அல்குர்ஆன் : 22:32) எனவே யார் ஒருவர் இந்த மாதங்களை புனிதமாக கருதி அவைகளில் வந்துள்ள தடைகளை தவிர்த்துக் கொள்கிறாரோ அது அவருடைய தக்வாவை காட்டுகிறது. அவருடைய உள்ளத்தில் தக்வா இருப்பதால்தான் அல்லாஹ் எதை புனிதமாக்கினோ அதையே அவரும் புனிதமாக கருதி அவைகளில் வந்துள்ள தடைகளை தவிர்ந்து கொள்கிறார். இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்களை அல்லாஹ் எதற்காக புனிதமாக்கினான் என்று கூறும் பொழுது இவ்வாறு கூறுகிறார்: ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்களும் இந்த மாதங்களை புனிதமாகக் கருதினார்கள். இந்த மாதங்களில் எல்லையை மீறி ஒருவர் மற்றவரை தாக்கிக் கொண்டு அல்லது கொலை செய்து கொண்டு ரத்தம் சிந்துவதை தவிர்த்துக் கொள்வார்கள். ஆனால் சில கோத்திரங்கள் முஹர்ரம் மாதத்தை ஸஃபர் மாதத்திற்கு மாற்றி அமைத்து; முஹர்ரம் மாதத்தில் கடைபிடிக்க வேண்டியவற்றை ஹலாலான ஸஃபர் மாதத்தில் கடைப்பிடிப்பார்கள். அதாவது அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி முஹர்ரம் மாதத்தை ஹலாலாகவும் ஸஃபர் மாதத்தைப் ஹராமாகவும் கருதுவார்கள். இதை அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா சூரா தவ்பாவில் கூறுகிறான்: اِنَّمَا النَّسِىْٓءُ زِيَادَةٌ فِى الْكُفْرِ‌ يُضَلُّ بِهِ الَّذِيْنَ كَفَرُوْا يُحِلُّوْنَهٗ عَامًا وَّيُحَرِّمُوْنَهٗ عَامًا لِّيُوَاطِـــٴُـــوْا عِدَّةَ مَا حَرَّمَ اللّٰهُ فَيُحِلُّوْا مَا حَرَّمَ اللّٰهُ‌ (சிறப்புற்ற மாதங்களை அவர்கள் விருப்படி) முன்பின் ஆக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும், அதனால் நிராகரித்துக் கொண்டிருப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர்,  ஒரு வருடத்தில் அ(வ்வாறு முன்பின் ஆக்குவ)தை ஆகுமாக்கிக் கொள்கின்றனர், மற்றொரு வருடத்தில் அதை ஆகாதாக்கி விடுகின்றனர்,  (இவ்வாறு செய்வதெல்லாம்,) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்கு (அவர்களின் எண்ணிக்கையை) சரியாக்குவதற்காகத்தான், (பின்னர்) அல்லாஹ் தடுத்தவற்றை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்கின்றனர் (அல்குர்ஆன் : 9:37) ஜாஹிலிய்யா காலத்தில் சிலர் போர்களை செய்வதற்காக வேண்டி ஹராமான முஹர்ரம் மாதத்தை ஹலாலாக்கிக் கொண்டார்கள்; மேலும் அல்லாஹ்விற்கு உடன் படுவதற்காக வேண்டி ஹலாலான ஸஃபர் மாதத்தை ஹராமாக்கி கொண்டார்கள். இத்தகைய பித்அத்தை உருவாக்கி அவர்கள் வழிகேட்டிற்கு சென்றார்கள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு காட்டுகிறான்.

  • без подписи

  • بسم الله الرحمن الرحيم ஹபீபி திரைப்படம் உட்பட சினிமா என்ற வழிகேட்டை ஆதரிக்கும் வழிகேடர்களுக்கான எச்சரிக்கை!! அல்லாஹ் ஸுபஹானஹூ வதஆலா கூறுகிறான் وَاِنَّ كَثِيْرًا لَّيُضِلُّوْنَ بِاَهْوَآٮِٕهِمْ بِغَيْرِ عِلْمٍ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِيْنَ‏ 🔘 وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ‌ اِنَّ الَّذِيْنَ یَکْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ‏ 🔘 மேலும், நிச்சயமாக (மனிதர்களில்) பெரும்பாலோர் அறிவின்றியே தங்கள் மன இச்சைகளின்படியெல்லாம் (மக்களை) உறுதியாகவே வழிகெடுத்து விடுகிறார்கள் நிச்சயமாக உமதிரட்சகன் - அவனே வரம்பு மீறியவர்களை மிக்க அறிந்தவன். 🔘 (விசுவாசிகளே!) நீங்கள் பாவத்தில் வெளிப்படையானதையும், அதில் இரகிசயமானதையும் விட்டு விடுங்கள். (ஏனென்றால்) நிச்சயமாக பாவத்தைச் சம்பாதிக்கின்றனரே அத்தகையோர் - தாங்கள் சம்பாதித்தவற்றுக்கு (மறுமையில்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள் 🔘 [அல்குர்ஆன்: சூரா அல் அன்ஆம்: 6:119, 120] ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • без подписи

  • بسم الله الرحمن الرحيم ஈதுடைய நாட்கள் துல்ஹஜ் பிறை 09-13 ~•~•~•~•~ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: يَوْمُ عَرَفَةَ وَيَوْمُ النَّحْرِ وَأَيَّامُ التَّشْرِيقِ عِيدُنَا أَهْلَ الإِسْلاَمِ وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ‏ யவ்மு அரஃபா (துல்ஹஜ் பிறை 09), யவ்முந் நஹ்ர் (துல்ஹஜ் பிறை 10), அய்யாமுல் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 11, 12, 13) ஆகிய நாட்கள் முஸ்லிம்களாகிய நம்முடைய ஈத்-பெருநாள் தினங்களாகும். மேலும் இது உண்பதற்கும்,  பருகுவதற்கும் உள்ள நாட்களாகும். நூல்: திர்மிதீ 773, அபூ தாவூது 2419, நஸாஈ 3004 ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • بسم اللــــه الرحمـــــــــن الرحيم நரக விடுதலையளிக்கும் தினம் அரஃபா தினம் عَنْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ، وَإِنَّهُ لَيَدْنُو، ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةَ، فَيَقُولُ : مَا أَرَادَ هَؤُلَاءِ " أخرجه مسلم: ١٣٤٨ ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்து பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: 1348 قال الإمام الحافظ ابن رجب رحمه الله: يوم عرفة هو يوم العتق من النار، فيعتق الله من النار: من وقف بعرفة، ومن لم يقف بِها من أهل الأمصار من المسلمين، فلذلك صار اليوم الذي يليه عيدا لجميع المسلمين. لطائف المعارف: ٢/٤٦٠ இமாம் இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்: அரஃபாவுடைய நாள் அது நரகத்தில் இருந்து விடுதலை பெறும் நாள் ஆகும். அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி இருப்பவர்களையும் மேலும் அங்கு கூடாமல் உலகத்தின் ஒவ்வொரு பாகங்களிலும் உள்ள முஸ்லிம்களையும் நரகத்தில் இருந்து அல்லாஹ் (தான் நாடியோரை) விடுதலை செய்கிறான். எனவேதான் அதற்கு பிறகு வரும் நாள் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் தினமாக இருக்கிறது. நூல்: லதாஇபுல் மஆரிப்: 2/460 ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي

  • ▪️அரஃபா தினம் - மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்ட தினம்▪️ அரஃபா தினம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இருக்கிறது. அன்றைய தினத்தில் தான் அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான். உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: 'யூதர் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்" என்று கூறினார். அப்பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "அது எந்த வசனம்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதன் (ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَیۡكُمۡ نِعۡمَتِی وَرَضِیتُ لَكُمُ ٱلۡإِسۡلَـٰمَ دِینࣰا) இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். [சூரா அல் மாயிதா: 3] என்ற வசனத்தை ஓதிக் காட்டினான். அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த வசனம் எப்பொழுது ரஸுலுல்லாஹி ﷺ மீது அல்லாஹ் இறக்கி வைத்தான் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக இந்த வசனமானது ரஸுலுல்லாஹி ﷺ அரஃபா தினத்தன்று அரபாவில் நின்று கொண்டு இருந்த பொழுது அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா நபி ﷺ மீது இறக்கி வைத்தான். அந்த அரஃபா தினம் ஜும்ஆ தினமாக இருந்தது" என்று கூறினார்கள். நூல்கள்: (ஸஹீஹ் அல்-புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஆகவே இந்த அரஃபா தினம் என்பது முஸ்லிம்களுக்கு பெருநாள் தினமாக இருக்கின்றது. நாம் அந்த நாளில் நோன்பு வைத்தாலும் சரி அந்நாளை பெருநாள் தினமாக கருத வேண்டும். உக்பத் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில், 'நிச்சயமாக அரஃபா தினம் ( ஒன்பதாவது தினம்), யவ்முந் நஹ்ர் (பத்தாது தினம்), அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13 வது தினம்) ஆகிய இந்த அனைத்து தினங்களும் பெருநாள் தினங்களாகும். மேலும் இந்த நாட்களில் உணவுகளை பெற்று சந்தோஷமாக இருக்க கூடிய நாளாகவும் இருக்கிறது என்று ரஸுலுல்லாஹி ﷺ கூறினார்கள். நூல்கள்: (ஸுனன் அபுதாவூத், திர்மிதி, நஸாஈ) அஷ்ஷெய்க் அல்-அல்பானி, அஷ்ஷெய்க் முக்பில் ரஹிமஹுமுல்லாஹ் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். எனவே அரஃபா தினம் என்பது பெருநாள் தினமாக இருக்கின்றது. மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நாளாகவும் இருக்கின்றது என்பதை மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகின்றது. ~•~•~•~•~•~ குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்று!! அமல் செய்து!! நன்மையை ஏவி!! தீமையை தடுத்து!! இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபடுவோம்!! Join & Share: t.me/al_ilmush_sharee 🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي