Islamqatamil.com
Статистикаஎல்லா புகழும் இறைவனுக்கே, தமிழ் மக்களுக்காக மூத்த அறிஞர்களின் ஃபத்வாக்கள், தஃப்ஸீர்கள், விளக்க உரைகள், போன்றவற்றை மொழிபெயர்த்து தரவேண்டும் எனும் எண்ணத்தில் நாம் துவங்கிய islamqatamil.com எனும் இணையதளம், அல்லாஹ்வின் உதவியை கொண்டு தொடங்கி உள்ளோம்
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 10
- Всего постов
- 21
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 18
- 1/48двое суток
- 20
- 1/72трое суток
- 22
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
🟧 மறுமை நாள் தொடர்பான ஹதீஸ்கள் 🟧 ⏳ 47. சூரியன் மேற்கிலிருந்து உதயமாவது தொடர்பான ஹதீஸ் ⏳ 🗣️ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 🌅 “மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது. 👕 இரண்டு பேர் விற்பனைக்காகத் துணிகளை விரித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்கவுமாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். 🐪 மேலும், ஒரு மனிதர் தமது ஒட்டகத்திற்குப் பால் கறந்து, அப்போது தான் பால் நிறைந்த பாத்திரத்துடன் வீடு திரும்பியிருப்பார்; இன்னும் அதைப் பருகக்கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். 💧 ஒருவர் தமது நீர்த்தொட்டியை அப்போதுதான் கட்டிப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். 🍽️ உங்களுள் ஒருவர் தமது உணவை அப்போதுதான் வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.” 📖 ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி : 6506 & ஸஹீஹ் முஸ்லிம் : 157, 2954 📚 மஆலிமுஸ்ஸுன்னத்தின் நபவிய்யா : 140
без подписи
🤲 ஹதீஸில் வந்துள்ள அழகிய துஆக்கள் 🤲 🌟 27 : பசியிலிருந்தும், துரோகத்திலிருந்தும் பாதுகாப்பு தேடும் துஆ 💎 அரபு: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ، فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ، فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ 📢 அரபுத்தமிழ் உச்சரிப்பு: (சரியான உச்சரிப்பிற்கு வீடியோவினை பார்வையிடவும்) ✨ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஜூஃஇ, ஃபஇன்னஹூ பிஃஸத்-தஹிஉ, வஅஊது பிக மினல் கியானதி, ஃபஇன்னஹா பிஃஸதில் பிதானஹ். 📖 தமிழ் விளக்கம்: 🕌 "அல்லாஹ்வே! பசியிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நிச்சயமாக அது மிகவும் மோசமான துணையாகும். மேலும், துரோகத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நிச்சயமாக அது மிகவும் மோசமான உள்ளார்ந்த பண்பாகும்." 📜 ஆதாரம்: 📚 ஸுனன் அபூ தாவூத் – 1547 📚 ஸுனன் அந்நஸாஈ – 5469 🌷 இந்த துஆ நமக்கு கற்பிப்பது: 🔹 கடுமையான பசியிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். 🔹 பசி மனிதனுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதை இந்த துஆ உணர்த்துகிறது. 🔹 துரோகம் செய்வதிலிருந்தும், துரோகத்திற்கு உள்ளாவதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும். 🔹 ஒரு முஃமின் நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டும். 🌹🤲📖✨ https://youtube.com/shorts/YV2pQTcF5tk?si=CFFqHlG6sz8dcWtj https://www.instagram.com/reel/Db8g3a6sOV_/?igsh=dnhiMzFlN3U3cW5v&igsi=dnhiMzFlN3U3cW5v
без подписи
🟧 மறுமை நாள் தொடர்பான ஹதீஸ்கள் 🟧 ⏳ 46. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறக்கம் மற்றும் அடையாளங்கள் தொடர்பான ஹதீஸ் ⏳ 🗣️ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 🌿 “எனக்கும் அவருக்கும் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) இடையே எந்த நபியும் இல்லை. திண்ணமாக அவர் இறங்கி வரக்கூடியவர் ஆவார். நீங்கள் அவரைக் கண்டால், (பின்வரும் அடையாளங்களை வைத்து) அவரை அறிந்து கொள்ளுங்கள். நடுநிலையான உயரமும் சிவப்பான உடலமைப்பும் கொண்டவர். மஞ்சள் வண்ணம் கொண்ட இரண்டு ஆடைகள் அணிந்தவராக இருப்பார். அவருடைய தலையில் ஈரம் இல்லாவிட்டாலும் துளித் துளியாய் நீர் சொட்டுவதைப் போன்று இருக்கும். ⚔️ இஸ்லாமிய மார்க்கத்திற்காக மக்களிடம் போரிடுவார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; காப்புவரியை (ஜிஸ்யாவை) நீக்குவார். 🌿 அவருடைய காலத்தில் அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர ஏனைய எல்லா மதங்களையும் அழித்துவிடுவான். மேலும் மஸீஹுத் தஜ்ஜாலைக் கொலை செய்வார். ⏳ (பிறகு) பூமியில் அவர் நாற்பது ஆண்டுகள் தங்கியிருப்பார். பிறகு இறந்துவிடுவார். ஆகவே அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடத்துவர்.” 📖 ஆதாரம்: சுனன் அபூதாவூத் : 4324 ✅ ஹதீஸின் தரம்: ஸஹீஹ் 📚 மஆலிமுஸ்ஸுன்னத்தின் நபவிய்யா : 139
без подписи
அவர் போர்க்களத்தில் தயக்கம் ஏற்பட்டபோது தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொண்டார். அவர் கூறிய கவிதையின் கருத்து: "ஓ என் உள்ளமே! நீ சுவர்க்கத்தை விரும்பாமல் இருக்கிறாயா? நீண்ட காலம் வாழ்ந்தாலும் ஒருநாள் மரணம் வரும். இன்று நீ போராடவில்லை என்றால் நீயே அழிவாய்." என்று தன்னை உற்சாகப்படுத்தி எதிரிகளை எதிர்கொண்டார். 📚 ஆதாரம்: ஸீரத் இப்னு ஹிஷாம் 🕊️ அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹுவின் ஷஹாதத் அவர் போரில் வீரமாகப் போரிட்டு ஷஹீதானார். இவ்வாறு முஃதா போரில் மூன்று தளபதிகளும் ஷஹீதானார்கள். பின்னர்: 🌹 காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு படையை வழிநடத்தி முஸ்லிம்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வந்தார். 📚 ஆதாரம்: ✅ ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 4262 😭 நபிகளார் ﷺ அவர்கள் மதீனாவில் அறிவித்த செய்தி அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு உட்பட மூன்று தளபதிகளின் ஷஹாதத் செய்தியை நபிகளார் ﷺ அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள். அப்போது அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 📚 ஆதாரம்: ✅ ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 1246 ✅ ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 3630 🌟 அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹுவின் உயர்ந்த நிலை அவர்: ⚔️ போர்க்கள வீரர். 🖋️ இஸ்லாத்தை பாதுகாத்த கவிஞர். ⚖️ நீதியை நிலைநாட்டியவர். ❤️ அல்லாஹ்வின் சந்திப்பை விரும்பியவர். என்ற சிறப்புகளுடன் ஷஹீதானார். 🌟 அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சில ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அவரிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஒரு ஹதீஸ்: நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ, அவருக்கு மார்க்கத்தைப் புரிந்துகொள்ளும் அறிவை வழங்குகிறான்." 📚 ஆதாரம்: ✅ ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 71 🌹 நபிகளார் ﷺ அவர்களின் பாராட்டு அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: 🌿 உண்மையான முஃமின். 🌿 அல்லாஹ்வை அதிகம் நினைப்பவர். 🌿 இஸ்லாத்திற்காக தனது திறமையை பயன்படுத்தியவர். என்பதை அவரது வாழ்க்கை காட்டுகிறது. 🖋️ இமாம் அத்-தஹபி ரஹிமஹுல்லாஹ் கூறியது அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு: "பத்ரில் கலந்து கொண்டவர், கவிஞர், அன்ஸாரிகளில் சிறந்தவர், முஃதாவில் ஷஹீதானவர்." என்று குறிப்பிட்டுள்ளார். 📚 ஆதாரம்: ✅ ஸியர் அஃலாம் அந்நுபலா – அத்-தஹபி 🕌 இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர் கூறுகிறார்: "அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு நபிகளார் ﷺ அவர்களின் கவிஞர்களில் ஒருவர்; அகபா, பத்ர் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்." 📚 ஆதாரம்: ✅ அல்-இஸாபா ஃபீ தம்யீஸிஸ் ஸஹாபா – இப்னு ஹஜர் 💎 வாழ்க்கை சிறப்புகள் 🌿 ஈமான்: மரணத்தை பயப்படாமல் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்பினார். 🌿 அறிவு: மார்க்க அறிவை கற்றவர். 🌿 திறமை: கவிதையை இஸ்லாத்திற்காக பயன்படுத்தினார். 🌿 நீதி: எதிரிகளிடமும் அநீதி செய்யாதவர். 🌿 தியாகம்: முஃதாவில் உயிரை அர்ப்பணித்தார். 🕌 மறைவு 📅 ஹிஜ்ரி 8 📍 முஃதா (ஜோர்டான் பகுதி) ⚔️ முஃதா போரில் ஷஹீதானார். 💡 படிப்பினை அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை: ✨ "ஒருவரிடம் இருக்கும் திறமை எதுவாக இருந்தாலும், அதை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக பயன்படுத்தினால் அது உயர்ந்த இபாதத்தாக மாறும்." என்பதை நமக்கு கற்றுத் தருகிறது.
🔶 நபித்தோழர்கள் வரலாறு 🔶 ✨ 46. அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு ✨ ⚔️ பகுதி – 2 முஃதா போர் – வீரத்தியாகம் மற்றும் ஷஹாதத் : ⚔️ முஃதா போர் – பின்னணி 📅 ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு 📍 இடம்: முஃதா (இன்றைய ஜோர்டான் பகுதியில்) முஃதா போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போர்களில் ஒன்றாகும். இதற்கான காரணம்: பைசாந்திய (ரோம) பேரரசின் கீழ் இருந்த புஸ்ரா பகுதியின் ஆளுநரிடம் நபிகளார் ﷺ அவர்களின் தூதராகச் சென்ற ஹாரிஸ் பின் உமைர் அல்-அஸ்தி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டார்கள். தூதர்களை கொல்வது அரபு வழக்கிலும், சர்வதேச மரபிலும் மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது. இதனால் நபிகளார் ﷺ அவர்கள் ஒரு படையை அனுப்பினார்கள். 📚 - அர் ரஹீக் அல் மக்தூம் 🕌 நபிகளார் ﷺ நியமித்த மூன்று தளபதிகள் நபிகளார் ﷺ அவர்கள் கூறினார்கள்: முதலில் கொடியை ஏந்துபவர்: 🥇 ஸைத் பின் ஹாரிஸா ரழியல்லாஹு அன்ஹு அவர் ஷஹீதானால்: 🥈 ஜஅஃபர் பின் அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர் ஷஹீதானால்: 🥉 அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு என்று நியமிக்கப்பட்டனர். 📚 ஆதாரம்: ✅ ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 4262 😢 போருக்கு முன் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு படை புறப்படும் போது அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள். மக்கள்: "ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டனர். அவர் கூறினார்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு உலகத்தின் மீதான ஆசையால் அழுகை வரவில்லை. ஆனால் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒரு வசனத்தை நினைத்தேன்: 'உங்களில் ஒவ்வொருவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது...' (மர்யம்: 71) அதன் பிறகு நான் நரகத்தை கடந்த பிறகு மீண்டும் திரும்புவேனா என்று தெரியவில்லை." என கூறினார். அப்போது மக்கள் “அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக! அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக! வெற்றி பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக!” என்று வாழ்த்துகள் கூறி மக்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அதற்கு அப்துல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு ) கூறிய பதிலாவது: மன்னிப்பு, நுரை தள்ளும் பலத்த அடி அல்லது இரத்தவெறி கொண்ட ஒருத்தனின் கையால் குடல்களையும் ஈரலையும் ஊடுருவிச் செல்லும் குறு ஈட்டியால் நான் குத்தப்பட ரஹ்மானிடம் கேட்கிறேன். என் மண்ணறையருகே நடப்போர், “அல்லாஹ் நேர்வழி காட்டிய வீரரே! நேர்வழி பெற்றவரே!’ என்று சொல்ல வேண்டும். பின்பு நபியவர்களும் மக்களும் ‘ஸனியத்துல் விதா’ என்ற இடம்வரை சென்று படையை வழியனுப்பி விட்டு இல்லம் திரும்பினார்கள். 📚 ஆதாரம்: அர் ரஹீக் அல் மக்தூம் ⚔️ முஃதா போரில் வீரத்துடன் போராடுதல் முஸ்லிம் படை சுமார்: 👥 3,000 வீரர்கள் எதிரி படை: 👥 மிகப்பெரிய ரோம-அரபு கூட்டணி (கிட்டத்தட்ட 200000 பேர்) என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இதுபோன்ற பெரும் படையைச் சந்திக்க நேரிடும் என்று முஸ்லிம்கள் ஒருக்காலும் எண்ணவில்லை. 3000 பேர் கொண்ட ஒரு படை இரண்டு இலட்சம் வீரர்கள் கொண்ட படையை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமா? முஸ்லிம்கள் திகைத்து பயணத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்று எண்ணி நின்றுவிட்டனர். இப்போது என்ன செய்யலாம்? நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதுவோம் நமது எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்போம் அவர்கள் நமக்கு உதவ மேலும் பல வீரர்களை அனுப்பலாம் அல்லது வேறு யோசனைக் கூறலாம் நாம் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்தனர். இதே நிலைமையில் இரண்டு நாட்கள் கடந்தன. ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழியல்லாஹு அன்ஹு) இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்து மக்களுக்கு வீரமூட்டி உரையாற்றினார்: *“எனது கூட்டத்தினரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் இப்போது வெறுக்கும் வீரமரணத்தைத் தேடித்தானே மதீனாவிலிருந்து புறப்பட்டீர்கள். நாம் எதிரிகளிடம் போரிடுகிறோம். நமது ஆயுதங்களைக் கொண்டா? அல்லது ஆற்றலைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையைக் கொண்டா? இவற்றில் எதுவுமில்லை. பின்னர் ஏன் எண்ணிக்கையை வைத்து யோசிக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். எனவே, தயக்கம் வேண்டாம் புறப்படுங்கள்! இரண்டு பாக்கியங்களில் ஒன்று நிச்சயம் உண்டு. ஒன்று வெற்றி அல்லது வீரமரணம்.”* இப்னு ரவாஹாவின் இந்த வீர உரையை கேட்ட மக்கள் ரோமர்களை எதிர்த்து போரிட முடிவு செய்தனர். முதலில்: 🌹 ஸைத் பின் ஹாரிஸா ரழியல்லாஹு அன்ஹு கொடியை ஏந்தி போரிட்டு ஷஹீதானார். அடுத்து: 🌹 ஜஅ்ஃபர் பின் அபீ தாலிப் ரழியல்லாஹு அன்ஹு கொடியை ஏந்தினார். அவரும் வீரமாக போரிட்டு ஷஹீதானார். பின்னர்: 🌹 அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு கொடியை எடுத்தார். 🗡️ அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹுவின் வீர தருணம்
без подписи
🟧 மறுமை நாள் தொடர்பான ஹதீஸ்கள் 🟧 ⏳ 45. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தஜ்ஜாலை கொல்வது தொடர்பான ஹதீஸ் ⏳ 🗣️ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைத் தாம் செவியுற்றதாக முஜம்மிஉ பின் ஜாரியா அல்அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ⚔️ “மர்யமின் மைந்தர் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) தஜ்ஜாலை லுத் எனும் ஊரின் வாசலில் வைத்துக் கொலை செய்வார்.” 📖 ஆதாரம்: ஜாமிஉத் திர்மிதீ : 2244 ✅ ஹதீஸின் தரம்: ஸஹீஹ் 📚 மஆலிமுஸ்ஸுன்னத்தின் நபவிய்யா : 138
🤲 ஹதீஸில் வந்துள்ள அழகிய துஆக்கள் 🤲 🌟 26 : பாவமன்னிப்பு, வீட்டில் விசாலம் மற்றும் வாழ்வாதாரத்தில் பரக்கத்தை வேண்டி செய்யும் துஆ 💎 அரபு: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِي رِزْقِي 📢 அரபுத்தமிழ் உச்சரிப்பு: (சரியான உச்சரிப்பிற்கு வீடியோவினை பார்வையிடவும்) ✨ அல்லாஹும்மக்ஃபிர் லீ தன்பீ, வவஸ்ஸிஃ லீ ஃபீ தாரீ, வபாரிக் லீ ஃபீ ரிஸ்கீ. 📖 தமிழ் விளக்கம்: 🕌 "அல்லாஹ்வே! எனது பாவத்தை மன்னிப்பாயாக. எனது வீட்டை எனக்கு விசாலமாக்குவாயாக. எனது வாழ்வாதாரத்தில் எனக்கு பரக்கத் செய்வாயாக." 📜 ஆதாரம்: 📚 ஸுனன் அத்-திர்மிதி – 3500 📚 ஸுனனுல் குப்ரா – நஸாஈ – 9828 ⚠️ ஹதீஸ் தரம்: இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சில அறிஞர்கள் இதை ஸஹீஹ் எனக் கூறியுள்ளனர்; சிலர் அறிவிப்பாளர் தொடர்பின் அடிப்படையில் பலவீனமானது எனக் கூறியுள்ளனர். 🌷 இந்த துஆ நமக்கு கற்பிப்பது: 🔹 முதலில் நமது பாவங்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 🔹 வீட்டில் விசாலத்தையும் நிம்மதியையும் அல்லாஹ்விடம் வேண்ட வேண்டும். 🔹 வாழ்வாதாரம் அதிகரிப்பதை மட்டுமல்லாமல், அதில் பரக்கத்தையும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். 🔹 உலக வாழ்க்கையின் முக்கியமான தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். 🌹🤲📖✨ https://youtube.com/shorts/VO-rr6PkocA?si=9nv-RzIbAajtRkBd https://www.instagram.com/reel/Db3WDDYsqwa/?igsh=b2Y5NmRzd20zcHEw
без подписи
🟧 மறுமை நாள் தொடர்பான ஹதீஸ்கள் 🟧 ⏳ 44. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களுக்கு இமாமாக இருப்பது தொடர்பான ஹதீஸ் ⏳ 🗣️ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 🕌 “உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்குத் தொழுகை நடத்தும் இமாமாக இருக்க, மர்யமின் மைந்தர் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) உங்களிடையே இறங்குவாரேயானால், அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?” 📖 ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி – 3449 📚 மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா – 137
🤝 ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹுதைபிய்யா பயணத்தில் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு கலந்து கொண்டார். முஸ்லிம்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி சென்றபோது, குரைஷ்கள் அவர்களை தடுத்தனர். இந்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் நபிகளார் ﷺ அவர்களுக்கு முழுமையான கீழ்ப்படிதலை வெளிப்படுத்தினர். அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு நபிகளார் ﷺ அவர்களின் அருகில் இருந்து இஸ்லாத்திற்காக சேவை செய்தார். 📚 ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி – ஹுதைபிய்யா சம்பவங்கள் ஹதீஸ் எண்: 2731, 2732 ஸஹீஹ் முஸ்லிம் – ஹதீஸ் எண்: 1783 🏺 கைபர் சம்பவம் – நீதியின் முன்மாதிரி ஹிஜ்ரி 7-ஆம் ஆண்டு கைபர் வெற்றிக்குப் பிறகு, அங்குள்ள யூதர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களின் விளைச்சலை மதிப்பிடும் பொறுப்பு அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர் மிகுந்த நீதியுடன் அந்தப் பணியை செய்தார். யூதர்கள் அவருக்கு லஞ்சம் கொடுத்து மதிப்பீட்டை குறைக்க முயன்றனர். அப்போது அவர் கூறினார்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள்மீது எனக்கு வெறுப்பு இருக்கலாம். ஆனால் அந்த வெறுப்பு உங்களுக்கு அநீதி செய்ய என்னை தூண்டாது. நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எனக்கு ஹராம்." அவருடைய நீதியை பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டனர். 📚 ஆதாரம்: முஅத்தா இமாம் மாலிக் – ஹதீஸ் எண் 1389 🌟 அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹுவின் கவிதை சேவை அவர் தனது நாவை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக பயன்படுத்தினார். முஷ்ரிக்குகளின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலாக இஸ்லாத்தின் உண்மையை கவிதைகள் மூலம் விளக்கினார். நபிகளார் ﷺ அவர்களின் கவிஞர்களில் ஒருவராக இருந்தார். 🌹 நபிகளார் ﷺ அவர்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார்கள்: "அவர்களை (எதிரிகளை) பதிலடி கொடு. ஜிப்ரீல் உன்னுடன் இருக்கிறார்." 📚 ஆதாரம்: ஸஹீஹ் அல்-புகாரி – ஹதீஸ் எண் 3213 ஸஹீஹ் முஸ்லிம் – ஹதீஸ் எண் 2490 இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🔶 நபித்தோழர்கள் வரலாறு 🔶 ✨ 46. அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு | தொடர் 01✨ 👨👩👧👦 குடும்ப விபரங்கள் மற்றும் அறிமுகம் 👤 இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா பின் தஅ்லபா பின் இம்ரிஉல் கைஸ் பின் அம்ர் பின் இம்ரிஉல் கைஸ் அல்-அன்ஸாரி அல்-கஸ்ரஜி ரழியல்லாஹு அன்ஹு. 👨 தந்தை: ரவாஹா பின் தஅலபா. 👩 தாய்: கப்ஷா பிந்த் வாகித். 🏡 குலம்: அன்ஸாரிகளின் கஸ்ரஜ் கோத்திரம் – பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ். 🗣️ குன்யத்: அபூ முஹம்மத். 👦 பிள்ளைகள்: 🌟 முஹம்மத் பின் அப்துல்லாஹ். 🌟 சிறப்புகள் ▪️ இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர். ▪️ பத்ர் போரில் கலந்து கொண்ட பத்ரி ஸஹாபி. ▪️ நபிகளார் ﷺ அவர்களின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். ▪️ ஹஸ்ஸான் பின் ஸாபித், கஅப் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோருடன் இஸ்லாத்திற்காக கவிதை மூலம் சேவை செய்தவர். ▪️ கைபரில் நீதியை நிலைநாட்டியவர். ▪️ முஃதா போரில் நபிகளார் ﷺ நியமித்த மூன்றாவது தளபதி. ▪️ ஹிஜ்ரி 8-ல் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவர். 🏺 இஸ்லாத்திற்கு முன் வாழ்க்கை அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு மதீனாவில் அன்ஸாரிகளின் மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார். அரபு மொழி மற்றும் கவிதையில் சிறந்த திறமை பெற்றிருந்தார். இஸ்லாத்திற்கு முன்பே அறிவும், பேச்சாற்றலும் கொண்டவராக அறியப்பட்டார். 🌙 இஸ்லாத்தை ஏற்ற வரலாறு மதீனாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தபோது, முஸ்அப் பின் உமைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தஃவாவின் மூலம் இஸ்லாத்தை அறிந்தார். பின்னர் இஸ்லாத்தை ஏற்று, நபிகளார் ﷺ அவர்களின் உண்மையான ஆதரவாளராக மாறினார். 🤝 இரண்டாம் அகபா உடன்படிக்கை ஹிஜ்ரத்திற்கு முன்பு மதீனாவிலிருந்து வந்த அன்ஸாரிகள் மினாவில் நபிகளார் ﷺ அவர்களை சந்தித்து பைஅத் செய்தனர். அந்த 73 ஆண்களில் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹுவும் ஒருவர். அவர்கள்: ▪️ நபிகளார் ﷺ அவர்களை பாதுகாப்பதாகவும், ▪️ இஸ்லாத்திற்காக உயிரையும் செல்வத்தையும் அர்ப்பணிப்பதாகவும், உறுதி அளித்தனர். இந்த பைஅத் தான் பின்னர் மதீனாவிற்கு ஹிஜ்ரத்திற்கான அடித்தளமாக அமைந்தது. ⚔️ பத்ர் போர் ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போரில் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு கலந்து கொண்டார். அவர் முஸ்லிம்களின் முதல் பெரிய வெற்றியில் பங்கெடுத்த பத்ரி ஸஹாபி ஆவார். 🖋️ நபிகளார் ﷺ அவர்களின் கவிஞர் மக்கா முஷ்ரிக்குகள் நபிகளார் ﷺ அவர்களை இழிவுபடுத்தி கவிதைகள் பாடியபோது, அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை பாதுகாக்க தனது கவிதைகளை பயன்படுத்தினார். நபிகளார் ﷺ அவர்களின் மரியாதையையும் இஸ்லாத்தின் உண்மையையும் தனது கவிதைகள் மூலம் எடுத்துரைத்தார். 📚 ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் – ஹதீஸ் எண் 2490 அகழ் போரின் போது நபிகளார் அப்துல்லாஹ் (பின் ரவாஹா) (ரழி) அவர்களின் கவி வரிகளைப் பாடிக்கொண்டிருந்தார்கள் : அகழ் (போரின்) நாளன்று நபி (ஸல்) அவர்கள், தங்கள் மார்பு முடிகள் புழுதியால் மூடப்படும் வரை மண் சுமந்து கொண்டிருந்ததை நான் கண்டேன்; மேலும் அவர்கள் அடர்ந்த ரோமமுடைய மனிதராக இருந்தார்கள். அவர்கள் அப்துல்லாஹ் (பின் ரவாஹா) (ரழி) அவர்களின் பின்வரும் கவி வரிகளைப் பாடிக்கொண்டிருந்தார்கள்: "அல்லாஹும்ம லவ்லா அன்த்த மஹ்ததைனா வலா தஸ்ஸத்தக்னா வலா ஸல்லைனா ஃபஅன்ஸிலன் ஸகீனத்தன் அலைனா வஸப்பிதில் அக்தாம இன் லாகைனா இன்னல் அஃதாஅ கத் பகவ் அலைனா இதா அரதூ ஃபித்னத்தன் அபைனா" (இதன் பொருள்): "யா அல்லாஹ்! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். எனவே, (எதிரிகளை) நாங்கள் சந்திக்கும்போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! நிச்சயமாக எதிரிகள் எங்கள் மீது அக்கிரமம் புரிந்துவிட்டனர். அவர்கள் (எங்களை) குழப்பத்தில் ஆழ்த்த நினைத்தால், நாங்கள் (அதற்கு) இணங்கமாட்டோம்." நபி (ஸல்) அவர்கள் (இந்த வரிகளை ஓதும்போது) தங்கள் குரலை உயர்த்துவார்கள். ஸஹீஹுல் புகாரி : 3034 ⚔️ உஹுத் போர் ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டு நடைபெற்ற உஹுத் போரில் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு கலந்து கொண்டார். இந்தப் போரில் முஸ்லிம்கள் கடுமையான சோதனையை சந்தித்தபோதும், அவர் நபிகளார் ﷺ அவர்களுடன் உறுதியாக நின்றார். அவர் தனது கவிதைகள் மற்றும் பேச்சின் மூலம் முஸ்லிம்களின் மன உறுதியை அதிகரித்தார். ⚔️ கந்தக் போர் (அஹ்ஸாப்) ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு மதீனாவை பாதுகாக்க நடைபெற்ற கந்தக் போரிலும் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு கலந்து கொண்டார். அகழி தோண்டும் பணியிலும் மற்ற ஸஹாபாக்களுடன் இணைந்து பங்கேற்றார். இந்த காலத்தில் அவர் முஸ்லிம்களின் மன உறுதியை அதிகரிக்கும் கவிதைகளை பாடினார். அவருடைய கவிதைகள் முஸ்லிம்களுக்கு வீர உணர்வை ஏற்படுத்தின. 📚 ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண் 4101 ஸஹீஹ் அல்-புகாரி
без подписи
🤲 ஹதீஸில் வந்துள்ள அழகிய துஆக்கள் 🤲 🌟 25 : முதுமையிலும் வாழ்க்கையின் இறுதியிலும் விசாலமான வாழ்வாதாரத்தை வேண்டி செய்யும் துஆ 💎 அரபு: اللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي، وَانْقِطَاعِ عُمُرِي 📢 அரபுத்தமிழ் உச்சரிப்பு: (சரியான உச்சரிப்பிற்கு வீடியோவினை பார்வையிடவும்) ✨ அல்லாஹும்மஜ்அல் அவ்ஸஅ ரிஸ்கிக அலைய்ய இன்த கிபரி ஸின்னீ, வன்கிதாஇ உமுரீ. 📖 தமிழ் விளக்கம்: 🕌 "அல்லாஹ்வே! எனது வயது முதிர்ந்து, எனது வாழ்நாள் முடிவடையும் காலத்தில் உனது விசாலமான வாழ்வாதாரத்தை எனக்கு வழங்குவாயாக." 📜 ஆதாரம்: 📚 ஸுனன் அத்-திர்மிதி – 3563 🌷 இந்த துஆ நமக்கு கற்பிப்பது: 🔹 வயது முதிர்ந்த காலத்திலும் அல்லாஹ்வின் அருளையும் வாழ்வாதாரத்தையும் நாட வேண்டும். 🔹 மனிதனின் வாழ்வாதாரம் அவனது இளமை அல்லது உடல் வலிமையை மட்டும் சார்ந்ததல்ல; அல்லாஹ்வின் அருளையே சார்ந்துள்ளது. 🔹 வாழ்க்கையின் இறுதிக் காலத்திலும் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து துஆ செய்ய வேண்டும். 🔹 நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அல்லாஹ்விடம் நன்மையையும் பரக்கத்தையும் கேட்க வேண்டும். 🌹🤲📖✨ https://youtube.com/shorts/cpY8hIisVCY?si=wkULFKd5r2PDKePq https://www.instagram.com/reel/Db0mhmBsjmw/?igsh=OXZldWlyZ2dqYm03
без подписи
🟧 மறுமை நாள் தொடர்பான ஹதீஸ்கள் 🟧 ⏳ 43. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் சஜ்தாவின் சிறப்பு ⏳ 🗣️ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 🗣️ 🤲 “(ஈஸா அலைஹிஸ்ஸலாம் வரும்) அந்த நேரத்தில் ஒரேயொரு சஜ்தா செய்வது, இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகிவிடும்.” 🌿 இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 📖 “வேதம் வழங்கப்பட்டவர்களுள் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சியம் அளிப்பார்.” 📖 பின்னர் அவர்கள் அல்குர்ஆன் 4:159 வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். 📖 ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி – 3448 📚 மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா – 137