VOICE OF QURAN TAMIL
Статистикаhttps://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12
- Последний пост
- 13 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 2
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- ta
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 26
- 1/48двое суток
- 29
- 1/72трое суток
- 32
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
*மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை, தன் மகனை விட்டும் (தண்டனையை) தடுக்க மாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (தண்டனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். இன்னும், ஏமாற்றக் கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்.....* *QURAN 31:33-34* _ *https://t.me/voiceofqurantamil* https://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12 https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனிக்காதவனாக இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவன் அவர்களை பிற்படுத்துவதெல்லாம், பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும் ஒரு நாளுக்காகத்தான்.(அந்நாளில்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக... (வருவர்.) அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) சூனியமாகிவிடும்.* *QURAN 14:42-43* ____ *VOICE OF QURAN TAMIL* https://t.me/voiceofqurantamil https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுங்கள், (எதிரிகளைவிட) அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள், (எதிரியை எதிர்க்க) தயாராக இருங்கள், அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நீங்கள் வெற்றியடைவதற்காக.* *QURAN 3:200* ____ *VOICE OF QURAN TAMIL* t.me/voiceofqurantamil https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவரை இழிவுபடுத்துகிறாய்; நன்மை உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ எல்லாப் பொருளின் மீதும் பேராற்றலுடையவன்.* *QURAN 3:26* _ *https://t.me/voiceofqurantamil* https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*பிறகு நிச்சயமாக நீங்கள் இதற்குப் பின்னர் இறப்பவர்கள் தான். பிறகு நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்படுவீர்கள்.* *QURAN 23:15-16* _ *https://t.me/voiceofqurantamil* https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*நிச்சயமாக அவரது (நூஹ் நபியின்) வழியைப் பின்பற்றியவர் தான் இப்ராஹீம். அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ்வை அன்றி பல பொய்யான தெய்வங்களை (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்களா? அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?* *QURAN 37:83-87* _ *https://t.me/voiceofqurantamil* https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*(நம்பிக்கையாளர்கள்) அவர்கள் தங்கள் அமானிதங்களையும் தங்கள் உடன்படிக்கையையும் பேணக்கூடியவர்கள். அவர்கள் தங்கள் தொழுகைகளை பாதுகாப்பார்கள் (நேரம் தவறாமல் தொழுவார்கள்). அவர்கள்தான் (சொர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். ஃபிர்தவ்ஸ்(என்னும்) சொர்க்கத்தை அனந்தரங் கொண்டு, அவர்கள் அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.* *QURAN 23:8-11* _ *https://t.me/voiceofqurantamil* https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு ஞானத்தை தருகிறான். ஞானம் தரப்படுகிறவர், திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். அறிவாளிகளைத் தவிர உணர்வு பெறமாட்டார்கள்.* *QURAN 2:269* ____ *VOICE OF QURAN TAMIL* https://t.me/voiceofqurantamil https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*.....அவன்தான் அல்லாஹ். படைப்பவன், உருவாக்குபவன், உருவம் அமைப்பவன். மிக அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன. வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவை அவனையே துதித்து தொழுகின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.* *QURAN 59:22-24* _ *https://t.me/voiceofqurantamil* https://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12 https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்.(இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (அலங்கரித்தோம்). மிக உயர்ந்த கூட்டத்தினரின் (வானவர்களின்) பேச்சை அவர்களால் செவியுற முடியாது. (வானத்தை விட்டு தடுக்கப்படுவதற்காக) எல்லா பக்கங்களில் இருந்தும் அவர்கள் (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்.* *QURAN 37:6-8* ____ *VOICE OF QURAN TAMIL* https://t.me/voiceofqurantamil https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*கல்வி இன்றி அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற் காகவும், அதை (அல்லாஹ்வின் பாதையை) பரிகாசமாக எடுத்துக் கொள்வதற் காகவும் வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மனிதர்களில் இருக்கின்றான். இத்தகையவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.* *QURAN 31:6* _ *https://t.me/voiceofqurantamil* https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான் இரவு, பகல், சூரியன், சந்திரன் இவை அனைத்தும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அவனை (உண்மையான இறைவனை) வணங்குபவர்களாக இருந்தால்.* *QURAN 41:37* ____ *VOICE OF QURAN TAMIL* t.me/voiceofqurantamil https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்து, அதற்குப் பகரமாக சொற்பத் தொகையை வாங்குகிறார்களோ; அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (எதையும்) சாப்பிடுவதில்லை. மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான், அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான், அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு.* *QURAN 2:174* _ *VOICE OF QURAN TAMIL* t.me/voiceofqurantamil https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*....தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (எமது அடியார்களுக்கு தொடர்ந்து நாம் அனுப்பினோம்). இன்னும், அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.* *QURAN 4:163-165* _ *https://t.me/voiceofqurantamil* https://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12 https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*....இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக ஆக்கினோம். அவர்களில் சிலர் சிலருக்கு அலங்காரமான சொல்லை ஏமாற்றுவதற்காக அறிவிக்கின்றனர். உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்...* *QURAN 6:110-113* _ *https://t.me/voiceofqurantamil* https://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12 https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*எவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத் தான். சுமக்கக்கூடியது மற்றொன்றின் (பாவச்) சுமையை சுமக்காது. நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) வேதனை செய்பவர்களாக நாம் இருக்கவில்லை.....* *QURAN 17:15:17* _ *https://t.me/voiceofqurantamil* https://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12 https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*மக்களுக்கு அவர்களின் விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ அலட்சியத்தில் இருந்துகொண்டு புறக்கணிக்கின்றனர். அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய அறிவுரை வரும்போதெல்லாம், பரிகாசம் செய்துகொண்டே அதை கேட்கின்றனர்.* *QURAN 21:1-2* ____ *VOICE OF QURAN TAMIL* https://t.me/voiceofqurantamil https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனின் பயத்தால் அச்சம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள். அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்காதவர்கள். இன்னும் அவர்கள் கொடுப்பதை (தர்மத்தை) கொடுப்பார்கள் (இவற்றையெல்லாம் அவர்கள் செய்வார்கள்) அவர்களுடைய உள்ளங்களோ நிச்சயம் தாங்கள் தங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் என்று பயந்தவையாக இருக்கும்.* *QURAN 23:57-60* _ *https://t.me/voiceofqurantamil* https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*அவன்(அல்லாஹு) உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது. நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது.* *QURAN 35:39-40* _ *https://t.me/voiceofqurantamil* https://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12 https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi
*நிராகரித்தவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மறுமையில் மரணம்) தீர்ப்பளிக்கப்படாது. ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள். அதன் தண்டனை அவர்களை விட்டும் இலேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம்...* *QURAN 35:36-38* _ *https://t.me/voiceofqurantamil* https://whatsapp.com/channel/0029VaAi8OWKrWQtsIgkcm12 https://chat.whatsapp.com/BanHkowij9U7ocxEPqeSVi